கந்தகோட்டம் முருகன்
சென்னையில் இருக்கும் முக்கியமான கோவில்களில் கந்தகோட்டம் முருகன் கோவில் தனித்துவம் மிக்கது
எப்போதுமே குன்றின் மீது அமர்ந்திருக்கும் முருக பெருமான் இங்கே நகரத்தின் நெருக்கடி மிகுந்த பகுதியில் குடிகொண்டுள்ளார்
அதுவும் அவராகவே விரும்பி வந்த அமர்ந்த இடம் என்பது மேலும் சிறப்பு
ஒரு கோவில் சக்திமிக்க கோவிலாக விளங்குவதற்கு அதன் மூலவ விக்ரகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்
கந்தகோட்டத்திலும் அப்படித்தான் என்றாலும் இங்கே மூலவருக்கு என்ன சீர்பொ அதே சிறப்பு உட்சவருக்கும் அமைந்திருப்பது தான்
வள்ளலார் ஸ்வாமிகள் துவங்கி வண்ணசரப சாமிகள் , பாம்பன் ஸ்வாமிகள் என பல மஹான்களில் பாடல்பெற்ற மற்றும்இந்த கந்தகோட்ட முருகனின் உருவாக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்
இரு நண்பர்கள்.
ஒருவர் வேலூர் மாரி செட்டியார். மற்றவர் கந்தப்ப ஆசாரி.
இருவரையும் இணைத்தது தெய்வ பக்தி. அதுவும் முருக பக்தி.
இருவரும் போரூர் முருகனின் அத்யந்த பக்தர்கள்.
(போரூர் என்ற திருப்போரூர் சென்னையிலிருந்து ஐம்பத்தாறு கிலோ மீட்டர் தூரத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது.
ஆண்டு முழுவதும் ஆயிரக் கணக்கான பக்தர்களை அழைத்து அணைத்துக் காக்கும் அழகிய தலம்.
சென்ற நூற்றாண்டில் ஆன்மிக ஒளியாக வாழ்ந்து மறைந்த சிதம்பர சுவாமிகள் இருந்த தலம்).
நண்பர்கள் இருவரும் தங்கள் மாதாந்திர தரிசனத்திற்காகப் போரூர் போய்க் கொண்டிருந்தார்கள்.
அன்று அவர்களுடைய அதிர்ஷ்டம் அருகிலிருந்த ஒரு எறும்புப் புற்றில் ஏதோ பளபளத்தது.
இருவரும் அதைக் குனிந்து பார்த்தனர்.
அங்கே பாதி மறைந்திருந்தது ஒரு உலோகச் சிலை.
ஆவலோடு அதைக் கையிலெடுத்தால் அது திருமுருகனின் அழகிய சிலையாக இருக்கக் கண்டு பெரு மகிழ்ச்சியும் மிக வியப்பும் அடைந்தனர்.
போரூரிலிருந்து கண்டெடுத்த மாணிக்கமாக அச்சிலையைச் சென்னைக்குக் கொண்டு வந்தனர்.
அவர்களுக்குத் தெரிந்த நண்பர் முத்தயாலு நாயக்கர் என்பவர் பெத்த நாயக்கன் பேட்டையில் அவரது தோட்டத்தில் ஒரு சிறிய பிள்ளையார் கோவில் வைத்திருந்தார்.
அவரது அனுமதியுடன் அந்தப் பிள்ளையார் கோவிலில் முருகனையும் பாதுகாப்பாக வைத்தனர்.
முருகனுக்கு நிரந்தரமாக ஓரிடத்தைத் தேடியபோது, நல்ல உள்ளம் படைத்த முத்தையாலு நாயக்கரே சென்னை பார்க் டவுனிலிருந்த தனது மனையை அவர்களுக்குத் தானமாக வழங்கினார்.
அங்கே தானாக வந்த அந்தத் தெய்வத்திற்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்ற விருப்பம் மாரிச் செட்டியாருடைய உள்ளத்தில் எழுந்தது.
அதைத் தன் மனைவியிடம் சொன்ன போது அந்த அம்மையார் தன்னிடமிருந்த நகைகளையெல்லாம் கோயில் கடடுவதற்காகக் கொடுத்தாள்.
மாரிச் செட்டியார் மெல்ல மெல்ல அங்கே ஒரு கோயிலைக் கட்டினார்.
அதுதான் தற்போது உள்ள கோயில்.
கட்டி முடிந்ததும் கோவிலையும், அதன் சொத்துக்களையும் அப்போதிலிருந்த பதினெட்டு குழுக்களைக் கொண்ட பேரிச் செட்டியார்கள் சமூகத்தினரிடம் ஒப்படைத்தார்.
இன்று வரை அக்கோவில் அச்செட்டியார் சமூகத்தினரின் நிர்வாகத்திலேயே இருந்து வருகிறது.
கோவில் நிர்வாகிகள் கோயிலுக்குள்ளேயே அதன் ஸ்தாபகரான மாரிச்செட்டியாருக்குச் சிலை செய்து அதற்காக ஒரு சந்நிதியையும் கட்டி,
அதில் சிலையைப் பிரதிஷ்டை செய்து மாரிச் செட்டியார் சிலைக்கு நனறியுடன நித்ய பூஜை செய்து வருகிறார்கள்.
மேலே சொன்ன நூகழ்வுகளை அப்படியே சிலை ரூபமாகவும் கோவிலுள் தரிசிக்கலாம்
முருகன் சிலை கி.பி. 1673ல் முதலில் பெத்த நாயக்கன்பேட்டை முத்தையாலு நாயக்கரது தோட்டத்துப் பிள்ளையார் கோவிலிருந்து 1700க்குள் இன்றுள்ள பார்க் டவுனுக்கு வந்திருக்கும்.
எனவே இன்று கந்த கோட்டத்தின் வயது முந்நூறு ஆண்டுகளாக இருக்கலாம்.
பதினேழாம் நூற்றாண்டில் அப்போது சென்னைப் பட்டணம் என்றழைக்கப்பட்ட பழைய சென்னையின் வரைபடம் எழுதிய எஃப்.எல். கான்ராட்
இன்று கந்த கோட்டம் உள்ள இடத்தையும் பெயர் தெரியாத கோயில் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மாரி செட்டியாருக்கு புற்றில் இருந்து கிடைத்த விக்ரம் முதலில் திருப்போரூர்கோவிலின் மூலவக விக்ரகம் என்ற ஒரு கருத்தும் உள்ளது.
அதன் வரலாற்றை பார்க்கலாம்
மதுரை மீனாட்சியின்யின் திருவருள் பெற்று அவள் ஆணையின்படி யுத்தபுரி எனும் திருப்போரூரைத் தேடி வந்தார் சிதம்பரம் என்னும் அடியார்.
சென்னை மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் பனைமரக் காடாகத் திகழ்ந்த திருப்போரூரில்,
அந்த அடியாருக்குச் சுயம்பு மூர்த்தியாக காட்சி தந்தார் கந்தபெருமான்.
அங்கேயே அவருக்கு அற்புதமாகக் கற்கோயில் கட்டி இன்புற்றார்.
திருப்போரூர் முருகனை வழிபட வரும் அன்பர்கள் பெருமான் சந்நிதியில் முறையிட்டுத் தொழ `திருப்போரூர்ச் சந்நிதி முறை’ என்னும் அற்புதப் பாமாலையையும் சூட்டிப் போற்றினார்.
அந்த அடியவரே திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்னும் மஹா ஞானி
இப்படி முருகனே சுயம்புவாக தோன்றி உருவான கோவில் தோராயமாக 11 ஆம் நூற்றாண்டில் அந்நிய படையெடுப்பை சந்தித்தது
வேற்றுமதத்தினரின் படையெடுப்பில் இருந்து மூலவ முருகனை காப்பாற்ற நினைத்த கோவில் அன்பர்கள்
சிலையை ஒரு துணியில் சுற்றி அருகில் இருந்த ஒரு வெப்ப மரத்தின் அடியில் புதைவிட்டனர்
இவர்கள் புதைத்தாய் வேறு யாருக்கும் தெரியாது ,
இந்த அமளி அடங்க வெகு காலம் ஆகியதால்
சிலையை மறைத்துவைத்தவர்களும் முருகன் திருவடியை அடைந்தனர்
போரெல்லாம் முடிவடைந்த இயல்பு நிலைக்கு திரும்பியபின் ,
கோவிலில் மூலவர் சிலை இல்லாததால்
அன்றைய அன்பர்கள் வேறொரு சிலை பிரதிஷ்டை செய்தனர்.
அன்று திருப்போரூர் அன்பர்களால் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட திருப்போரூர் முருகன் தான்
மாரி செட்டியார் மூலம் சென்னை கந்தகோட்ட முருகன் முருகனா திருவவதாரம் ஈடுத்துள்ளார் என்றும் சொல்லப்படுவதுண்டு
மூலவர் தான் இப்படி சுவாரஸ்யமாவரலாறு கொண்டவர் என்றால் உற்சவரில் கதையோ அதைவிட சுவாரசியம்
17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த வரலாறு
இது கந்தகோட்ட கோவிலில் கோவிலுக்கு உற்சவர் சிலை செய்ய வேண்டும் என்று நிர்வாகத்தினர் விரும்பினார்
சிற்ப வல்லுநர்கள் மூலம் பஞ்சலோக திருமேனி வாரக் க்கப்பட்டது
வார்ப்புடை சூடு அடங்கும் முன் சிலை வெளியே எடுக்கப்பட்டது
தகதகவன சிலை பிரகாசித்தாலும் அங்கும் எங்குமாக பிசிர்கள் நீட்டி கொண்டிருந்தன
அவற்றை நீக்கி தூய்மை செய்யலாம் என்ற எண்ணத்தில் தலைமை சிற்பியை அழைத்தனர்
சிற்பி வந்த வேலையை துவங்கும்போது திடீரென அவர் உடம்பெங்கும் தீப்பற்றியது போல எரிச்சல் பரவியது
வலியால் துடித்த அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்
பார்த்தவர்கள் பதறினர்
முகத்தில் தண்ணீர் தெளிக்க சிற்பி கண் விழித்து
அவர் எழுந்தாரே தவிர கண்களில் இருந்தால் பயம் அப்படியே இருந்தது
கைகளை கூப்பி பெரியோர்களே இந்த சிலை சாதாரணமானதல்ல தெய்வ சாணித்தியம் நிறைந்தது
இதனை தொடவே எனக்கு பயமாக இருக்கிறது
மன்னியுங்கள் பிசிர்களை போக்கி தூய்மைப்படுத்தும் சக்தி எனக்கு இல்லை என்றார்
தலைமை சிற்பியே இப்படி சொல்கிறாரே என நிர்வாகிகள் திகைத்தனர்
அதன்பின் பிசிருகளுடன் உள்ள சிலையை வைத்து திருவிழா நடத்தக் கூடாது என கருதி அதை அறையில் பூட்டி வைத்தனர்
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் வேதத்தில் கரைகண்ட பண்டிதர் ஸ்ரீ சாம்பயர் காசியில் இருந்து கந்தகோட்ட முருகனை தரிசிக்க வந்தார்.
மூலவரை வரி தரிசித்து பின் உற்சவரை தரிசிக்க விரும்பினார்
அவரிடம் கோயில் பணியாளர்கள் உற்சவர் சிலை குறித்த ரகசியங்களை விவரித்தனர்
பின்னர் சாம்பியரின் வற்புறுத்து வற்புறுத்ததால் அரை கதவு திறக்கப்பட்டது
சிலையை கண்டு மெய்சிலிர்க்க பண்டிதர்
நிர்வாகிகளிடம் நீங்கள் அனைவரும் புண்ணியசாலிகள்
இங்குள்ள மூலவர் அருள் புரிவதில் முதல்வராக விளங்குகிறார் அதே சாணித்தியம் உற்சவர் சிலைகளும் இருக்கிறது
அருளை அள்ளித்தரும் இந்த சிலையை தியானிக்கலாமே தவிர ஒளியால் செதுக்க கூடாது
ஆத்ம சக்தியால் இவரை தான் தூய்மை செய்கிறேன் என்று கூறி
சிலையை சுற்றிலும் திரையிட்டு உள்புறம் அமர்ந்த பண்டிதர் மந்திரங்களை சுரத்துடன் சொல்ல சொல்ல சிலையில் இருந்த பிசிறுகள் உதிர்ந்தன
சிலை முன்பை விட பளபளப்புடன் காட்சி அளித்தது
அவரே இன்று நாம் தரிசிக்கும் கந்தகோட்டத்தின் உற்சவ மூர்த்தி
இனி இக்க கோவிலை குறித்து பாடல்கள் பாடியது யார் போன்ற அபரங்களை பார்க்கலாம்.
பற்பல ஸ்தல புராணங்களை வசன நடையில் அற்புதமாக எழுதியவர் குக ரசபதி அடிகள்.
வள்ளலார் பாடல்களுக்கு இவர் எழுதிய உரை அற்புதமானது.
அன்பர்கள் இவரை ‘பிரசங்க பூஷணம்’ எனும் போற்றும்படி உரை நிகழ்த்துவதிலும் வல்லவர்.
இவரின் சொற்பொழிவில் நுணுக்கமான தகவல்களைக் கேட்டு வியந்த அன்பர்கள், வள்ள லாரின் திருவருட்பா முதலான நூல்களுக்கு உரை எழுதும் படி, அடிகளிடம் வேண்டினார்கள்.
அடிகளும் உடன்பட்டு உரை எழுதத் தொடங் கினார்.
சந்தேகம் உண்டாகும் இடங்களில், அனுபவசாலிகள் பலரையும் கேட்டே எழுதினார்.
ஒரு தருணத்தில், அடிகளுக்கு ஒரு நூலில் ஓரிடத்தில் சந்தேகம் உண்டானது. பலரிடமும் கேட்டுப் பார்த்தார்.
விளக்கம் கிடைக்கவில்லை.
இதனால் மனதில் வருத்தமும், எடுத்த காரியத்தைச் செம்மையாகச் செய்யமுடியாமல் போய்விடுமோ என்று கலங்கினார்.
கந்தகோட்டம் கோயிலுக்குச் சென்று முருக னைப் பிரார்த்தித்துவிட்டு வந்தார்.
இரவு வெகுநேரம் கழித்தே உறங்கினார்.
அதிகாலை வேளையில் அடிகளின் கனவில் ஐந்து வயது சிறுவனின் தோற்றத்தில் தோன்றிய ஆறுமுகப்பெருமான்,
“அன்பனே வருந்தாதே! நீ தேடும் உரை, மயிலைக்கு அடுத்துள்ள மந்தை வெளியில் ஒரு பாட்டியிடம் உள்ளது” என்று சொல்லி, முகவரியையும் கொடுத்து மறைந்தார்.
மறுநாள் விடிந்ததும்,
கனவில் முருகன் அளித்த முகவரிக்கு ஓடினார். அங்கிருந்த குடிசையில் மூதாட்டி ஒருவர், வெந்நீர் அடுப்பில் தாள்களைக் கிழித்துப் போட்டுக்கொண்டிருந்தார்.
அடிகள்,“பாட்டி! இது என்ன?’’ எனக் கேட்டார்.
“எல்லாம் பழைய பொத்தகங்க தம்பி! செல்லரிச்சு வீணாப் போவுது. அதான், அக்னி பகவானுக்கு அர்ச்சனை பண்ணிக்கிட்டு இருக் கேன்” என்றார் மூதாட்டி.
அவர் தாள்களை நெருப்பில் போடுவதைத் தடுத்த அடிகள், அங்கிருந்த பழைய நூல்களை யெல்லாம் எடுத்துப் பார்த்தார்.
அடிகள் உரை தேடி அலைந்த நூலும், அவற்றில் ஒன்றாக இருந்தது. பிரித்துப் பார்த்து அங்கேயே தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார்.
மேலும் மூதாட்டிக்கு ஐந்து ரூபாய் பணம் கொடுத்து, அங்கிருந்த பழைய புத்தகங்களை எல்லாம் தான் எடுத்துக்கொண்டார்.
நேரே கந்தக்கோட்டம் சென்று, முருகன் திருமுன்னால் நூல்களை வைத்து, நெகிழ்ச்சியோடு அவரை வணங்கி வழிபட்டு திரும்பினார்.
இதுமட்டுமா
திருவருட்பிரகாச வள்ளலார் கந்தகோட்டத்து முருகனை தரிசித்துப் பாடியுள்ள தெய்வமணிமாலை 31 பாடல்களும், கந்தர் சரணப் பத்து பாடல்களும் பிரசித்திபெற்றவை
அதிலும்
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்கவேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே
என்ற திருஅருட்பாவின் ஒரு பாடல் போதும் இக்கோவிலை பெருமையை சொல்ல
மேலும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிள்ளைத்தமிழ், கலம்பகம், திரிபந்தாதி, சந்தத் திருப்புகழ், சண்முகர் வகுப்பு, வேல் வகுப்பு, திருவருள் வினோத வகுப்பு, பதிற்றுப்பத்தந்தாதி, விமான மிசை கண்ட பதிகம், சண்முக தரிசன பதிகம், சிவகுரு தரிசன பதிகம் மற்றும் சில பதிகங்களுடன் ஏறக்குறைய 750 பாடல்களைப் பாடியுள்ளார்.
பாம்பன் மத் குமரகுருதாச சுவாமிகள்… கந்தசாமிப்பா, கந்தர் இரட்டை மணிமாலை, கந்தர் ஒருபா ஒரு பஃது, கந்தர் திரு அவதாரம், கந்தர் நான்மணிமாலை, கந்தவேள் வேட்கை, சென்னைசேய முதலான பாடல்களை அருளிச் செய்துள்ளார்.
குளத்தூர் வரகவி கிருஷ்ணப்ப செட்டியார்… செல்வக்கந்தர் தலப் புராணம், வேதாந்த விருத்தம், கந்தர் திருப்புகழ், கந்தர் கீர்த்தனை முதலானவற்றை இயற்றியுள்ளார்.
இத்திருக்கோவில் பெரிய கடை தெரு நடுவில் இருப்பதால், வணிகர்களுடைய பேராதரவு எப்போதும் உண்டு.
உதாரணமாக வருடாந்திர உற்சவங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு வர்த்தகர் குழு மண்டகப்படியை ஏற்றுக் கொள்கிறது.
6வது நாள் காசுக்கடை வியாபாரிகள், 16வது நாள் நாட்டு மருந்துக்கடைக்காரர் என்று வணிகர்களின் பேராதரவு பெட்ரா கோவில் கந்தகோட்டம்
300 ஆண்டுகளுக்கு முன் துவங்கி இன்று வரை தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டல் எதுவாக இருந்தாலும் அந்த பக்தரின் பக்தி உம்மை என்னும் பட்சத்தில் கருணையை வரி வலை வருகிறான் நம் கடந்தகோட்ட முருகன்





