🛕 Temple History

தமிழகத்தின் தாந்த்ரீக

 

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கோவில்

ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு வரலாறு… ஒரு தெய்வ ஆற்றல்…  ஒரு தனித்துவம்  

 ஆனால்…

 அந்த ஆயிரங்களுக்குள் சில கோவில்கள் மட்டும் பொது வழிபாட்டு கோவில்கள் அல்ல.

அவை குறிப்பிட்ட சக்தியோடு விளையாடும் ரகசிய மையங்கள்.

இவையும் பார்ப்பதற்கு பொது வழிபாட்டு கோவில்கள் போல தான் இருக்கும் 

ஆனால் உன்னிப்பாக கவனித்தால் 

ஆலய வடிவமைப்பு ,தெய்வத்தின் அமைப்பு , பூஜை முறைகள் பூஜை நேரங்கள் , பூசாரிகள் என 

அனைத்திலுமே சில வித்தியாசங்கள் இருக்கும்.

இந்த கோவில்களை தான் தாந்த்ரீக கோவில்கள் என்று அழைக்கின்றனர்.

பொது வழிபாடு கோவிலுக்கும் தாந்த்ரீக வழிபாடு கோவிலுக்கும் என்ன வித்தியாசம் 

எதற்காக இந்த வித்தியாசங்கள் 

தமிழகத்தில் தாந்த்ரீக கோவில்கள் எங்கு உள்ளன

அங்கு சென்றால் என்ன பலன் கிடைக்கும் 

இது அனைத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

 

பொது வழிபாட்டு கோவிலுக்கும்  தாந்த்ரீக கோவிலுக்கும் உள்ள வேறுபாடு மிக ஆழமானது. 

பொது வழிபாட்டு கோவில்களில் ஆகம விதிகளும் வேத மந்திரங்களும் அடிப்படையாக இருக்கும்; 

ஆரத்தி, அபிஷேகம் போன்ற பூஜைகள் பொதுவாக எல்லோருக்கும் திறந்தவெளியில் நடைபெறும். 

பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து தரிசனம் செய்யலாம். 

அங்கு தெய்வங்கள் பெரும்பாலும் சாந்தமான ரூபங்களில்—முருகன், விஷ்ணு, மகாலட்சுமி போன்ற குடும்ப தேவதைகளாக—அமைந்திருக்கும். 

இந்தக் கோவில்களின் நோக்கம் பக்தருக்கு நலன், சமாதானம், ஆரோக்கியம், வாழ்வில் விருப்பங்கள் நிறைவேற்பது போன்ற பொதுவான ஆசீர்வாதங்களை அளிப்பதே.

ஆனால் தாந்த்ரீக கோவில் முறையே வேறுபட்ட உலகம். 

இங்கு தந்திரம், யந்திரம், மந்திரம் ஆகியவை முக்கிய அஸ்திவாரங்கள். 

பூஜைகள் பல நேரங்களில் வெளியில் தெரியாதபடி, நிசப்தமாகவும் ரகசியமாகவும் நடைபெறும். 

சில சடங்குகளுக்கு பொதுமக்கள் அனுமதி கூட இருக்காது. 

இத்தகைய கோவில்களில் காணப்படும் தெய்வங்கள் சக்தியின் உச்ச ரூபங்கள்—

காளி, துர்கை, பைரவி, பைரவர், உக்ரநரசிம்மர் போன்ற உக்ர வடிவங்கள். 

சில சமயம் தெய்வம் லிங்கம், மந்திரம், யந்திரம் போன்ற வடிவங்களிலேயே இருக்கும். 

இங்கு நடக்கும் சடங்குகளின் நோக்கம் பக்தரை ஆசீர்வதிப்பதற்காக மட்டுமல்ல; 

அவர்களின் உள்ளார்ந்த ஆற்றலை எழுப்புவதற்கும், ஆன்மீக மாற்றத்திற்கும், தபஸ் சக்தியை உயர்த்துவதற்கும். 

தீய ஆற்றலை நீக்குதல், குலபரிகாரம், சக்தி சாத்தனம் போன்ற சக்தி மைய சடங்குகளும் அதிகம்.

 

பொது வழிபாட்டு கோவில்களில் காலை–மாலை வழக்கமான பூஜை நேரங்கள் இருக்கும்; 

நாதஸ்வரம், கூட்டம், திறந்த வெளி போன்ற சாதாரண சூழல் தான் எப்போதும் நிலவும்

ஆனால் தாந்த்ரீக கோவில்களில் அதிகமாக இரவு நேர சடங்குகள்—அமாவாசை, பௌர்ணமி, ராகுகாலம் போன்ற விசேஷ நேரங்களில்—மிக அமைதியாக நடைபெறும். 

சூழல் சில நேரங்களில் இருட்டானதாகவும், மிக ரகசியமானதாகவும் இருக்கும். 

 

பொது வழிபாட்டு கோவில்களில் ஆகம பயிற்சி பெற்ற ஆர்ச்சகர்கள் பூஜை செய்வார்கள்; 

ஆனால் தாந்த்ரீக கோவில்களில் தாந்த்ரீகர், சாதகர், குரு பரம்பரையில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே ரகசிய தாந்த்ரீக சடங்குகளை நடத்துவார்கள்.

 

இந்த இரு கோவில்களும் தரும் பலனிலும் வேறுபாடு உண்டு. 

பொது வழிபாட்டு கோவில் மன அமைதி, நம்பிக்கை, குடும்ப நலன் போன்ற வாழ்க்கையை சமநிலைப்படுத்தும் ஆசீர்வாதங்களை அளிக்கும். 

தாந்த்ரீக கோவில் அதைவிட ஆழமான விளைவுகளை உருவாக்கும் — உள்ளுணர்வு மாற்றம், உள்சக்தி எழுச்சி, தைரியம், 

சில நேரங்களில் மிகவும் வலிமையான ஆன்மீக அனுபவம் போன்றவற்றை வழங்கும்.

 

நீங்கள் ஒரு பொது வழிபாட்டு கோவிலுக்குள் நுழையும் போது, 

பல வருடங்களாக மனத்தில் இருந்த சுமை மெதுவாகக் கரைந்து விடும் அனுபவம் உங்களுக்கும் கிடைக்கும். 

கருவறை முன் நின்ற அந்த நொடியில் உள்ளே ஏதோ ஒன்று லேசாகும். 

வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும்… 

அந்த தரிசனத்திலிருந்து வெளியே வரும் போது, “இது கூட சரியாகி விடும்” என்ற ஒரு நம்பிக்கை மனத்தில் எழும். 

அதுவே பொது வழிபாட்டு கோவில் தரும் சக்தி — அது மென்மையாகத் தொடும், ஆனால் ஆழமான அமைதியை தரும்.

அதுவே நீங்கள் ஒரு தாந்த்ரீக கோவிலுக்குள் நுழையும் போது, 

அந்த கதவை கடந்த நொடியில் உடல் முழுவதும் ஒரு வேறுவித அதிர்வை உணரலாம். 

காலடியில் நிலம் நுட்பமாக நம் நரம்புகளைத் தொடுவது போல இருக்கும். 

அங்குள்ள காற்றே கூட சாதாரண கோவிலின் காற்றாக இல்லாமல் — அதில் ஒரு அடர்த்தி, ஒரு சக்தியின் நிறைமை இருக்கும். 

கருவறைக்கு அருகே சென்றுகொண்டிருக்கும் போது மூச்சு கனமாகிறதுபோல் தோன்றலாம்; 

இதற்க்கு பயப்பட தேவையில்லை , இது சக்தி இயங்கும் தொழிநுட்பம் . 

தாந்த்ரீக கோவில் அப்படித்தான் — அது உடலைத் தொடுவதில்லை; நேராக ஆன்மாவையே உசுப்பேற்றும் ஒரு ஆழமான அனுபவத்தை தரும்.

 

உங்கள் தேவையும், உங்கள் விருப்பமும் என்னவோ… அதற்கேற்ற கோவிலுக்குச் செல்ல வேண்டும். 

ஒவ்வொரு கோவிலும் ஒரே சக்தியை தாங்கினாலும், அது வெளிப்படும் வடிவம் மட்டும் வேறுபடும். 

மன அமைதி, சமாதானம், குடும்ப நலன், வாழ்வில் சீர்திருத்தம் போன்ற எளிய ஆசைகளை நாடுபவர்கள் — 

பொது வழிபாட்டு கோவிலின் சாந்தமான உலகில்தான் தங்கள் பதிலை காண்பார்கள். 

அங்கு மந்திரத்தின் ஒலி மென்மையாக உள்மனதைத் தொடும்; 

கருவறையின் ஒளி, நம் உள்ளிருக்கும் குழப்பத்தைக் கரைத்து, ஒரு நிம்மதி உணர்த்தும்.

ஆனால் உங்களது தேடல் அதைவிட ஆழமாக இருந்தால்… 

உள்ளே மறைந்திருக்கும் சக்தியை எழுப்ப வேண்டும் என்ற நோக்கம் இருந்தால்… 

பயமும் பெருமையுமான ஒன்றின் முன் நிற்கத் தயார் என்றால் — 

தாந்த்ரீக கோவிலின் தீவிர உலகமே உங்களை அழைக்கும். 

அங்கு அமைதி கொஞ்சம் கனமாக இருக்கும்; 

காற்று கூட வேறுவிதமாக அதிரும். 

காரணம் அவை சாதாரண கோவில்கள் அல்ல… 

சித்தர்கள், சாதகரின் தடங்கள் இன்னும் நிழலாக நிற்கும் சக்தி மையங்கள்.

இதில் எது சரி, எது தவறு என்று பகுத்து சொல்ல முடியாது. காரணம் — ஆன்மீகம் ஒரே பாதையில் நடப்பதில்லை. 

அது ஒவ்வொருவரின் உள்ளத்திலிருந்தே வழி காட்டும். உங்கள் உள்ளம் எதை நாடுகிறதோ, எந்த சக்தி உங்களை இழுக்கிறதோ… 

அந்த கோவில்தான் உங்களுக்கானது.

இறுதியில், கோவில் என்பது கல், கோபுரம், கருவறை மட்டும் அல்ல — 

அது உங்கள் பயணத்தை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. உங்கள் பாதை அமைதியை நோக்கியா அல்லது … சக்தியை நோக்கியா 

 அதைத் தீர்மானிப்பது நீங்கள் அல்ல, உங்கள் உள்ளுணர்வே.

தாந்த்ரீக வழிபாட்டை இன்னும் ஆழமாக பார்க்கலாம் 

 

“தாந்த்ரீகம்” என்ற வார்த்தைக்கு இன்றும் பலரிடம் தவறான நிழல்கள் ஒட்டிக் கிடக்கின்றன.


உயிர்பலி… இருட்டில் சடங்கு… பயங்கர பூஜைகள்… இவை தான் தாந்த்ரீகம் என்று நம்புகின்றனர்

ஆனால் உண்மை அதுவல்ல

தாந்த்ரீகம் என்றால் சக்தியை இயக்கும் அறிவியல்.

மனித உடலில் நரம்புகள் எப்படி பின்னப்பட்டிருக்கிறது,
மனதில் எண்ணங்கள் எப்படி உருவாகிறது,
எந்த எண்ணம் எத்தனை நேரத்தில் எவ்வளவு சக்தி உண்டாக்குகிறது—
இந்த ரகசிய இணைப்பை புரிந்துகொள்ளும் உயர்ந்த அறிவு தான் தாந்த்ரீகம் .

 சுவாசத்தால் ஆற்றலை எழுப்புவது,
மந்திரத்தின் அதிர்வால் உள்ளத்தை மாற்றுவது,
யந்திரத்தின் கோணங்களால் சக்தியை நிலைநாட்டுவது—
இதெல்லாம் பயமூட்டும் சடங்குகள் இல்லை…
இது ஒரு பூரண ஆன்மீக தொழில்நுட்பம்.

வடஇந்தியாவில் இது காளி–பைரவர் வழியாக வளர்ந்தது.
ஆனால் 

 தமிழகத்தில் தாந்த்ரீகம் இருட்டில் இல்லாமல்
ஆகமத்தின் உள்ளேயே , வெளிச்சம் தெரியாத இடங்களில் அமைதியாக  வாழ்ந்து வந்ததுள்ளது.

அங்கே யந்திரம்—மந்திரம்—தியானம்—சுவாசம்…
இவைகளின் ஆழமான பரிசோதனை
ஆயிரம் ஆண்டுகளாக அக் கோவில்களின் கருவறையில் நடைபெற்றது.

  தமிழகத்தின் பல புகழ்பெற்ற கோவில்கள்
  தாந்த்ரீக மரபின் மிகப் பெரிய மையங்கள்.
ஆனால் அவைகள் அதை உலகுக்கு காட்டுவதில்லை—
அதை ரகசியமாக வைத்திருக்கின்றன.

**சித்தர்கள். அகோரிகள். ஸ்ரீவித்யா உபாசகர்கள். கபாலி மரபு யோகிகள்…**

இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் தங்கியதே
ஒரு காரணத்திற்காக.

 இந்த நிலம்சக்தியை ஏற்றுக்கொள்ளும் திறன் கொண்ட நிலம்.
அதனால் தான் தமிழகத்தின் பெரிய கோவில்களுக்கு
உள்ளே நுழைந்தவுடன் 

ஒருவித நிசப்தம் நம்மைத் தொட்டுவிடும்.
அந்த நிசப்தம் தான் தாந்த்ரீக வழிபாட்டின் முதல் படிநிலை …

இனி
தமிழகத்தில் இருக்கும்  தாந்த்ரீக மரபில் இயங்கும் ஐந்து முக்கிய கோவில்களை பார்க்கப் போறோம்.

வெளியில் பார்ப்பதற்கு அவை நமக்குப் பழக்கமாக இருக்கும்
பொது வழிபாட்டு கோவில்கள் போலத்தான் தோன்றும்.

ஆனால் உண்மையில்…
அவை அதை விட மிக ஆழமானவை.

 ஒவ்வொரு கோவிலும் வழக்கமான பூஜைகளுக்குள்
மறைந்த ஒரு தாந்த்ரீக துடிப்பு உள்ளது.
அது வெளியில் காட்சியளிக்காது…
அது சத்தமாக தன்னை காண்பித்துக்கொள்லாது
காரணம் அது கருவறையின் நிசப்தத்தின் சக்தி செயல்படுகிறது.

இவைகள் “சாதாரண கோவில்கள்” அல்ல.
ரகசியமாக, மிக மென்மையான முறையில்,
யந்திர-மந்திர-தியான செயல்முறைகலால்
சக்தியை எழுப்பிக் கொண்டிருக்கும் இடங்கள்.

இவை வெறும் வழிபாட்டு மையங்கள் மட்டுமல்ல…
சக்தி இயக்கப்படும் தாந்த்ரீக தளங்கள்.



1. காஞ்சிபுரம் – காமாட்சி அம்மன் கோவில்

காமாட்சியின் பெயரே ஒரு யந்திரம்.
“கா” — பிரபஞ்சம்
“மா” — விசாலம்
“அச்சி” — விழிப்பு

இங்கு செய்யப்படும் ஸ்ரீச்சக்ர பூஜை
தமிழகத்தின் மிக உயர்ந்த தாந்த்ரீக மரபு.

 இங்கு பூஜை என்பது
வேப்பிலை, தீபம், வேதம் மட்டும் அல்ல—
ஒவ்வொரு பிரார்த்தனையும்
யந்திரத்தின் வழியாக சக்தியைச் செயலில் ஈடுபடுத்தும்
ஒரு மிகத் துல்லியமான ஆன்மீக அறிவியல்.

ஸ்ரீவித்யாவின் 64 ரகசிய அங்கங்கள்
ஆசார்யர்களுக்கே தெரியும்.
பொதுமக்களுக்கு அது தெரியவே கூடாது.

காமாட்சி கோவிலில் பூஜை செய்வோர்
தெய்வத்தை வேண்டுவதில்லை—
அவர்கல் சக்தியை இயக்குகிறார்கள்.

அவர்களது மந்திரம் ஒரு சத்தம் அல்ல;
அது அதிர்வாக கருவறையை நிரப்பும் ஒலி அலை.

இங்கு நடப்பது வழிபாடல்ல…சக்தி தொழில்நுட்பம்.

அந்த தெய்வத்தின் கருணை நமக்கு கிடைத்தால் அந்த தொழிநுட்பத்தை இயக்கும் ரகசியம் நமக்கு தெரியவரும்.

2. திருவண்ணாமலை – அருணாசலேஸ்வரர்

அருணாசலம் என்றாலே அக்கினி தத்துவம்.

அக்னி இல்லாமல் தாந்த்ரீகம் இல்லை 

அருணாசலம் என்பது ஒரு கோவில் அல்ல.
அது ஒரு உயிரோடும் இருக்கும்  ஒரு யந்திரம்.

அந்த யந்திரத்தை பாதுகாக்க எட்டு திசைகளிலும் எட்டு லிங்கங்களைக் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்

இது ஒரு அற்புதமான படைப்பு
அங்கே நடக்கும் கிரிவலம் என்பது அந்த யந்திரத்தை சுற்றி வருவது

 அதனால் தான் கிரிவலம் செய்யும் ஒவ்வொருவரும்
ஒரு அறியாத சக்தியால் தள்ளப்படுகிறார்கள்.
கிரிவலம் வரும் பொது சிலருக்கு திடீரெனெ கண்களில் நீர் வரும்,
சிலருக்கு திடீரெனெ  மனம் லேசாகி விடும்.
இதல்லாம் சக்தி எழுச்சியின் நிலை.

 யோகிகள் சொல்வது போல
“அருணாசலம் கற்றுக் கொடுப்பதில்லை…
அது மௌனமாய் நம்மை எழுப்பிவிடும்.

இங்கு பைரவருக்கு செய்யப்படும் பூஜைகளில்
அக்நி தந்திரத்தின் ஆழமான ரகசியங்கள் உள்ளன.

அருணாசலம் ஒரு மலை இல்லை—
அது ஒரு தகவல் மையம்.
நீங்கள் தயாரா இருந்தால் அது உங்களை தொடும்.
தயாரா இல்லையெனில் அது உங்களை அருகே வர விடாது.

 

3. படவேடு – ரேணுகாம்பாள்

ரேணுகாதேவி மரபு தந்திரத்தின் மிகப் பழமையான குடிகளில் ஒன்று.

படவேட்டில் நடைபெறும் பூஜைகளில் சில உக்ர வடிவங்கள் இருக்கும்;
ஆனால் அது பயமுறுத்துவதற்கல்ல—மனிதனின் இருள் பக்கத்தை அகற்றுவதற்கே.

ரேணுகாம்பாள் பூஜையில் பயன்படுத்தப்படும்
யந்திரங்கள், தாள ஒலிகள்,
சில சமயங்களில் நடைபெறும் ஹோமங்கள்—
இவை அனைத்தும் உள் சக்தியை வெளியில் இருந்து எழுப்பும் செயல்முறைகளே.

அங்கு சென்று இதனை உன்னிப்பாக கவனித்தால் அந்த மாற்றத்தை கட்டாயம் உணரலாம்

4. சிதம்பரம் – நட்டராசர்

சிதம்பரம்  வெளியில் சிவன் கோவில்.
ஆனால் உள்ளே?

நாதாந்த தந்திரத்தின் உச்ச மையம்.

இங்கு இருக்கும் “சூன்யம்”—
ரூபமற்ற சிவன்—
தந்திரத்தின் பரம உபதேசம்.

 நடனம் ஆடுவது
ஒரு உருவம் அல்ல…
ஒரு அதிர்வு.
அந்த  அதிர்வு தான் தெய்வம்

அட்னஹா தெய்வம் தான் தாந்த்ரீகத்தின் ஆதி தேவன் 

சிதம்பரம் ஒரு கோவில் அல்ல—
அதிர்வின் ஆய்வகம்.

5. பரியூர் – கொண்டத்து காளியம்மன்

அம்மன் இங்கே காட்டும் ரூபம்
உக்ர சக்தியின் நேரடி வெளிப்பாடு.

 தீக்கிரீடம்,
வடக்கு நோக்கி இருக்கும் நிலை,
அசுரனை மிதிக்கும் ஆற்றல்—
இவை அனைத்தும்
அகோர சக்தியின் வடிவங்கள்.

பரியூர் காளியம்மன் கோவில்
பொது ஆலயம் போல தோன்றினாலும்
அங்குள்ள சில பூஜைகள்
தமிழ்நாட்டின் பழைய “தஞ்சிர் முறைமை”—
அக்னி தந்திரம் + உக்ர சக்தி உபாசனை—
எனும் ரகசிய மரபுகளோடு
ஆழமாக இணைந்தவை.




இந்த கோவில்களுக்கு நீங்கள் செல்லும் போது…
  ஒரு விஷயம் மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்:

 அங்கே பேச வேண்டாம்.
அங்கே விளக்கம் தேட வேண்டாம்.
அங்கே வெளி உலகத்தைக் கொண்டு வர வேண்டாம்.

 அந்த இடம்…
உங்கள் சொற்களை கேட்க  விரும்பாது
உங்கள் நிசப்தத்தை தான் விரும்பும் 

கோவிலின் உள்ளே நுழைந்தவுடன்
உங்கள் கவனத்தை வெளியிலிருந்து எடுத்து
உங்களின் உள்ளே வைத்து மூச்சை கவனிக்க வேண்டும்

அப்போது தான் உங்களின் உள்ளுணர்வு பேசத் தொடங்கும்.
அந்த மெல்லிய குரலைக் கேட்க
நீங்கள் மிகவும் மென்மையாக,
சத்தமில்லாமல்,
கவனமாய் இருக்க வேண்டும்.

 உங்கள் மனம் திறந்திருந்தால்—
இந்த கோவில்கள் உங்களோடு பேசும்.
உங்கள் உள்ளம் விழித்திருந்தால்—
அவை உங்களை ஆழமாக தொடும்.

இல்லையென்றால் 

அவை வெறும் கல்கட்டிடங்களாக அமைதியாக சரியான சாதகருக்காக காத்து நிற்கும் 



Adiguru

About Author

3 Comments

  1. Saxon Matney

    July 23, 2022

    Grursus mal suada faci lisis Lorem ipsum dolarorit more a ametion consectetur elit. Vesti bulum nec odio aea the dumm ipsumm.

    • Dorothy Finley

      July 23, 2022

      Grursus mal suada faci lisis Lorem ipsum dolarorit more consectetur elit. Vesti bulum nec odio aea the dumm ipsumm.

  2. Imogene Martin

    July 23, 2022

    Grursus mal suada faci lisis Lorem ipsum dolarorit more a ametion consectetur elit. Vesti bulum nec odio aea the dumm ipsumm.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

🛕 Temple History

Thiruvanamalai Girivalam- திருவண்ணாமலை கிரிவலம்

தமிழில் படிக்க கீழே செல்லவும்..  Every month, whenever we read in the newspapers that lakhs of devotees visit  Tiruvannamalai to perform 
🛕 Temple History

பூம்பாறை முருகன்

ஆன்மீக தேடலில் உள்ளஅனைவர்க்கும்  ஆதிகுரு சேனல் சார்பாக என் பணிவான வணக்கங்கள்    கடந்த பதிவில்    எவ்வளவோ தெய்வ வடிவங்கள் இருக்க, போகர் ஏன் முருகப்பெருமானின்