🛕 Temple History

தில்லை காளி

ஐம்பூதங்களில் 

 

சூட்சும நிலையில் இருக்கும் பூதமான ஆகாய சக்தியை மையாக கொண்டு விளங்கும் கோவில் தில்லை நடராசர் கோவில் 

 

இங்கு சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியது அனைவரும் அறிந்தது

 

அந்த ஆனந்த தாண்டவத்தை தொடர்ந்தது ஊர்த்துவ தாண்டவத்தையும் சிவபெருமான் ஆடி 

 

தில்லை காளி என்ற தெய்வத்தை தில்லையில் அதாவது சிதம்பரத்தில் நிலைநிறுத்தியுள்ளார்.

 

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வடபுறம் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயம் 

 

சோழ மன்னன் கோப்பெருஞ்சினால் 1229 மற்றும் 1278 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

 

தமிழகத்தில் இருக்கும் அஸ்டகாளி கோவில்களில் தில்லை காளி கோவிலும் ஒன்று. 

 

தவிர சிதம்பரத்தில் சேத்ர பலரும் அதாவது காவல் தெய்வமும் இந்த தில்லை காளி  தான் 

 

தன் உடலின் வகிர்பாகத்தை உமையாளுக்கு அளித்த மாதொருபாகனை விட்டு இந்தக் காளி ஏன் ஊரின் எல்லைக்குச் சென்றாள்?

 

தில்லை காளியம்மனை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன

 

தில்லை காலி கோவிலை ஏன் சோழ 

 

மன்னா கோப்பெருஞ்சங்கேன் காட்டினார் போன்ற விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்  




 ஒரு சமயம் அரக்கர்கள் தேவர்களையும் முனிவர்களையும் பலவாறாக துன்புறுத்தி வந்தார்கள்

 

 அதனால் பாதிக்கப்பட்ட அவர்கள் பிரம்மாவிடமும் விஷ்ணுவிடமும் சென்று முறையிட்டனர்

 

 அவர்கள் ஆலோசனைப்படி அனைவரும் சிவனிடம் சென்றனர்

 

பார்வதி தேவி காளி அவதாரம் எடுத்தால் தான் அந்த அரக்கனை அழிக்க முடியும் என்பது விதியாக இருந்தது

 

பார்வதி தேவி சிவபெருமானை விட்டு பிரிந்து செல்லவில்லை என்றால் 

 

உக்ரகுணத்தை கொண்ட காலி அவதாரத்தை எடுக்க முடியாது 

 

மேலும் பார்வதி தேவி முன்னர் ஒரு கட்டத்தில் பெற்றிருந்த சாபத்தினால் சிவபெருமானை பிரிந்து சில காலம் வாழ வேண்டும் 

 

ஆகவே அதற்காக ஈசன் ஒரு திருவிளையாடல் நடத்தினார்

 

கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது 

 

அதில் யார் பெரியவர் என துவங்கிய சண்டை சத்தி இல்லையில் சிவனும் இல்லை என பார்வதி வாதாடும் நிலைக்குப் போக 

 

சினமுற்ற சிவபெருமான் உக்கிர காலியாக உருமாறும்படி அவரை சபித்து விட்டார் 

 

உரு மாறிய காலி தன் தவறை உணர்ந்து சிவபெருமானிடம் மன்னிப்பும் சாப விமோசனமும் அருளும்படி வேண்டினார். 

 

சிவபெருமானும் தேவியை நோக்கி என்னுள் பாதியான உன்னை கொடிய அரக்கர்களை அழிக்கவே உக்கிரகாலியாக உருமாறும்படி சபித்தேன் 

 

அதற்காகவே எக்கோலம் கொண்டாய் 

 

காளி உருவில் போரிட்டு அசுரர்களை அழிப்பாய் 

 

உன் கடமைகள் முழுவதும் நிறைவேற்றிய பிறகு 

 

நீ தில்லை மரங்கள் சூழ்ந்த இடத்தில் என்னை நோக்கி தவம் செய்வாயாக 

 

தக்க தருணம் வரும்போது மீண்டும் என்னுடன் இணைவாய் என்று   உரைத்தார்

 

 காலங்கள் ஓடியது காளி உருவில் இருந்த பார்வதி  கொடிய அரக்கர்கள் அனைவரையும் அழித்து வெற்றி அடைந்தார் 

 

பின்னர் சிவபெருமானை அடியும் பொருட்டு கடுமையான தவத்தை மேற்கொண்டார் 

 

அந்த நேரத்தில் அதே சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர் மற்றும்  வியாக்ரபாதருக்காக சிவா பெருமான் ஆந்த தாண்டவத்தை காட்டி அருளினார் 

 

ஏற்கனவே உக்ரம் தணியாமல் இருந்த காளிக்கு சிவபெருமானின் இந்த செயல் மேலும் கோபத்தை உண்டாக்கியது 

 

பல கால மாக நான் உங்களை நினைத்து தவத்தில் இருக்கிறேன் 

 

எனக்கு முதலில் கட்சி கொடுக்காமல் உங்கள் பக்தர்களுக்கு கட்சி கொடுப்பது என்ன நியாயம் என்று கூறி 

 

சிவபெருமான் ஆந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த இடத்திற்கு சென்று 

 

நானும் உங்களோடு சேர்ந்து ஆடுகிறேன் 

 

முதலில் யார் ஆட்டத்தை நிறுத்துகிறார்களோ அவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்வதோடு 

 

ஊர்க்கு எல்லையில் சென்று அமரவேண்டும் என்று கூற 

 

போட்டி துவங்கியது 

 

இருவரும் ஒருவருக்கொருவர் சலித்தவர் அல்ல என்ற வகையில் நடனம் இருந்தது 

 

வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அனைவரும் திகைத்து நின்ற போது 

 

நடனத்தின் உக்ரத்தால் இருவர் உடலில் இருந்தும் சில நகைகள் கழன்று கீழே விழுந்தன 

 

காளி இதனை பொறுப்படுத்த வில்லை 

 

ஆனால் சிவபெருமான் தன் குண்டலத்தை கால் கொண்டு எடுத்து தன காதில் மாட்டி ஊர்த்தாண்டவம் ஆடினார் 

 

ஒரு பெண் என்பதால் இந்த மாதிரி நடனத்தை கலியால் ஆட முடியவில்லை 

 

போட்டியில் தோற்றார் 

 

மேலும் உக்கிரமாக ஊர் எள்ளேரியில் பொய் அமைந்தார் 

 

அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள் சக்தி இல்லையேல் சிவனுமில்லை 

 

இருவரும் இணைந்து இல்லாத பொழுது பிரபஞ்சம் எப்படி இயங்கும் என கவலைப்பட 

 

அனைத்து தேவர்களும் திருமாலும் பிரம்மாவும் ஒன்று சேர்ந்து காலியிடம் சென்று அவரை சாந்தமடையுமாறு கேட்டுக் கொண்டனர் 

 

அவரது கோபத்தை போக்கும் வகையில் பிரம்மா அவரை தேவநாயகி எனப் புகழ்ந்து பாடி 

 

நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு முகங்களுடன் உரு கொள்ள வேண்டினார் 

 

அதன்படி காலி பிரம்ம சாமுண்டீஸ்வரி என்ற பெயரில் பிரம்மனைப் போல நான்கு முகத்துடன் காட்சி தந்தார் 

 

பின்னர் அந்த ரூபத்தில் காளி சாந்தநாயகி ஆக மாய் அதே இடத்தில் இன்னொரு சந்நிதியில் சென்று அமர்ந்தார் 

 

ஆக அந்த ஆலயத்தில் ஒரு சன்னதியில் உக்கிரமாக எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி தில்லை காலியாகவும் 

 

இன்னொரு சன்னதியில் சாந்தமாக நான்முக பிரம்ம சாமுண்டீஸ்வரி ஆகவும் காட்சி தந்தவாறு பக்தர்களை காத்து வருகிறார்

 

மன்னர் கூப்பெரும் சிங்கன் தன் ஆட்சியை நிறுவுவதில் ஏற்பட்ட இடையூறுகளை களைந்து வெற்றியெருள வேண்டும் என்று காளி தேவியை வேண்டினார் 

 

அதை தில்லை காளியம்மன் நிறைவேற்றிக் கொடுத்ததனால் இந்த ஆலயத்தை கட்டியதாகவும் 

 

பின்னர் ஜடாவர் சுந்தரபாண்டிய மன்னரால் கோயில் திருப்பணி செய்யப்பட்டது என்றும் ஆலய கல்வெட்டு தெரிவிக்கிறது

 

பொதுவாக சூரியன் வழிபடும் சிவாலயங்களை பாஸ்கர சேத்திரம் என்பர் 

 

இந்த தில்லை காளியம்மன் கோயில் சூரியன் மற்றும் சந்திரன் இருவருமே வழிபடும் அபூர்வ தளமாக திகழ்கிறது

 

 ஒவ்வொரு ஆண்டும் மாசி பௌர்ணமி திதியின்போது காலை 6 மணிக்கு சந்திர கதிர்கள் அம்மன் திருமேனியில் படர்கிறது 

 

பின்னர் சில நாட்கள் கழித்து திருதியை திதியில் மாலை ஆறு முதல் ஆறு பதினைந்து மணிக்குள் சூரியனும் 

 

தன் பொன்னொளியை பரப்பி அம்பிகையை தரிசிக்கும் அரிய காட்சி காணக் கிடைக்காத ஒன்றாகும் 




மேற்கு நோக்கி திருக்கோவிலுக்கு கம்பீரமான ராஜகோபுரம் அழகு சேர்க்கிறது கோபுரத்துக்கு முன்னால் சிவப்பிரையை தீர்த்தம் உள்ளது 

 

இவ்வாளயத்திற்க்கான தீர்த்தமாகவும் நடராஜப் பெருமானின் 10 தீர்த்தங்களின் ஒன்றாகவும் திகழ்கின்றது 

 

கோபுரத்துக்கு உள்ளே மகா மண்டபமும் அதன் பின்புறத்தில் பிரசன்ன விநாயகர் வடபுறத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சந்நிதிகளும் இருக்கின்றன

 

 மகா மண்டபத்தை அடுத்த பிரகார வாசலில் இரு புறமும் துவார சக்திகள் உள்ளனர். 

 

அவர்களை கடந்து உள்ளே செல்ல பிரம்ம சாமுண்டீஸ்வரி எனப்படும் தில்லை அம்மன் 

 

நான்கு முகங்களும் நான்கு திருகரங்களும் கொண்டு சாந்த சுருபியாக காட்சியளிக்கிறார் 

 

வலது மேற்கரத்தில் ருத்ராட்ச மாலையும் கீழ்கரத்தில் குங்குமம் கிண்ணமும் இடது மேல் கரத்தில் சூலமும் கீழ்கரத்தில் அமலோர்பவமும் தாங்கி 

 

அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார் 

 

இந்த அன்னையை நான் முகி என்றும் குறிப்பிடுகிறார்கள்



வைகாசி மாதம் அமாவாசைக்கு முந்தைய சஷ்டியில் காப்பு கட்டி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் 

 

ஆடி மாதம் முழுவதும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன 

 

தவிர நவராத்திரி மற்றும் தைப்பொங்கல் அன்றும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன

 

 தில்லை காளியம்மனுக்கு வெள்ளை புடவை மட்டுமே சாத்துகிறார்கள் தினமும் அவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகமே நடைபெறுகின்றது 

 

உடம்பு முழுவதும் மஞ்சளினால் ஆன குங்குமம் கொட்டப்பட்டு வெள்ளை புடவையால் உடல் மறைக்கப்பட்டுள்ளது 

 

கண்கள் மட்டும் ஜொலிக்கும் வகையில் வெள்ளி நிறத்தில் காட்சி தருகிறது

 

ஆடி மாதம் முழுவதுமே எந்த நாளிலும் இங்கு வந்து தில்லை காளியம்மனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வெள்ளை நிற வஸ்திரம் சாத்தி 

 

குங்கும அர்ச்சனை செய்து மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் 

 

நோய் நொடிகள் தீரும் திருமண தடை விலகும் தொட்டில் கட்டி பிரார்த்தித்தால் பிள்ளை வரவும் கிடைக்கும்

 

மேலும் செய்வினை பில்லி சூனியத்தால் அவதிப்படுபவர்கள் இத்தளத்திற்கு வந்து வழிபட்டால் அதிலிருந்து விரைவில் விடுபடுவார்கள் 

 

கடன் தொல்லையிலிருந்து மீள்வார்கள் 

 

எதிரிகள் தரும் இன்னல்களில் இருந்து வழிபட விடுபட வழி  தெரியாமல் தவிப்பர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை

 

மனக்குழப்பம் தேவையற்ற பயம் ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து தில்லையம்மனை வழிபட்டால் 

 

அனைத்து பிரச்சனைகளும் விலகி அவர்கள் வாழ்வும் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்

 

சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் வழியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தில்லை காளியம்மன் கோவில்

 

 காலை ஆறு முப்பது காலை ஆறு முப்பது முதல் பகல் 12 வரையிலும் மாலை 4:30 முதல் இரவு 8:30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும் thilai

 

ஒரு கடமையை நிறைவேற்ற தன் கணவனை பிரிந்து , அவருடனேயே சண்டையிட்டு , ஊர் எல்லையில் அமைந்தார்வாய் இந்த தில்லை காளி,

 

இதனால் ஒரு பெண்ணின் பிரிவு வேதனை என்ன என்பதை நன்கு உணர்வதவால் இந்த தாய் ,

 

எனவே பிரிந்து இருக்கும் தம்பதியர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ

 

இந்த தில்லை காளியை வழிபட்டால் இன்ச்சாயம் அவர்களுக்கு புது வாழ்க்கையை இந்த அம்மன் அமைத்து கொடுப்பார் 

 

மேலும் தண்ணியே நம்பி வந்த மன்னனை கைவிடாமால் காத்து ரக்ஷித்த்வர் இந்த தெய்வம் 

 

யாரொருவர் முழு நம்பிகையோடு தில்லை கலையை வழிபடுகிறார்களோ அவர்களின் பிரார்த்தனை எதுவாக இருந்தாலும் 

 

இந்த அம்மன் அதனை நிறைவேற்றி கொடுப்பார் 

 

வாய்ப்பிருக்கும் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒரு ஆலயம் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் 



Adiguru

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

🛕 Temple History

Thiruvanamalai Girivalam- திருவண்ணாமலை கிரிவலம்

தமிழில் படிக்க கீழே செல்லவும்..  Every month, whenever we read in the newspapers that lakhs of devotees visit  Tiruvannamalai to perform 
🛕 Temple History

பூம்பாறை முருகன்

ஆன்மீக தேடலில் உள்ளஅனைவர்க்கும்  ஆதிகுரு சேனல் சார்பாக என் பணிவான வணக்கங்கள்    கடந்த பதிவில்    எவ்வளவோ தெய்வ வடிவங்கள் இருக்க, போகர் ஏன் முருகப்பெருமானின்