We believe Apple Will announce iPhone.
பகவான் ரமணர் அற்புதங்கள்!
மகான்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ,
தனக்கென வரையறைகள் வகுத்து கொண்டு ஒரு குறுகிய வட்டத்தில் வாழாமல்
ஒரு மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கு என்ன தேவையோ அதை செய்வதில் தயக்கம் காட்டாதவர்கள் ,
இப்படி வாழ்ந்த மகான்களில் பகவான் ரமணர் முக்கியமானவர்
திருவண்ணாமலையில் உள்ள விருபாக்ஷ குகையில்
1899 முதல் 1916 வரை ரமண மகரிஷி தங்கியிருந்தபோது
அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சுவாரசியமான சம்பவம் இது.
ஒரு நாள் குகையில் அமர்ந்திருந்தபோது,
சிருங்கேரி சங்கராச்சாரியாரின் சீடரான ஒரு துறவி ரமணரைப் பார்க்க வந்திருந்தார்.
ரமண மகரிஷி முறையாக சன்னியாசம் பெறவேண்டுமென்று அவரைச் சம்மதிக்க வைக்க முயன்றார்.
இளம் சுவாமியான ரமணர்,
வெள்ளைக் கௌபீனம் அணிவதை விடுத்து காவி உடை அணியவேண்டுமென்று
சாஸ்திரங்களை உதாரணம் காட்டி வாதாடவும் செய்தார்.
ரமணர், பிராமணர் என்பதால் சாஸ்திரங்களில் என்ன சொல்லப் பட்டிருக்கிறதோ
அதன்படியான நியமங்களைப் பின்பற்ற வேண்டு மென்றார் அந்தத் துறவி.
ரமணர் சம்மதித்தால், சன்னியாசத்தை ஏற்பதற்கான நடைமுறைகள் அனைத்தையும் தானே செய்துதருவதாகவும் வாக்களித்தார்.
அவர் சொன்ன அனைத் தையும் கேட்டுவிட்டு,
இல்லையென்று ரமணர் மறுத்தார்.
சிருங்கேரியிலிருந்து வந்த துறவியோ மனம் தளரவில்லை.
இளம் ரமணருக்கு அவர் கடைசியாக ஒரு நிபந்தனை விதித்தார்.
தான் ஊருக்குள் சென்று ஒருமணி நேரத்தில் திரும்பி வருவேன் என்றும்
அதற்குள் ரமணர் சன்னியாசத்துக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்றும் கூறிச் சென்றார்.
சிருங்கேரியைச் சேர்ந்த சாது ஊருக்குள் சென்றதும்,
ரமணர் மீண்டும் தனியாக இருந்தார்.
அப்போது அந்த இடத்துக்கு வந்த பட்டிக்காட்டான் ஒருவர்,
புத்தகங்கள் அடங்கிய மூட்டை ஒன்றை ரமணர் முன் வைத்துவிட்டு,
ஒரு இடத்துக்குப் போய்விட்டு வருவதாகவும்
புத்தக மூட்டையைப் பார்த்துக்கொள்ளுமாறும் சொல்லிவிட்டுப் போனார்.
பட்டிக்காட்டான், சிருங்கேரி சாது இருவருமே சொன்ன நேரத்துக்குத் திரும்பவில்லை.
இளம் ரமணர் மூட்டையிலிருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தார்.
அதில் கிடைத்த ஒரு புத்தகம் அருணாசல மகாத்மியம்.
அந்தப் புத்தகத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டி ஒரு சுலோகத்தைப் படித்தார்.
தான் படித்த சுலோகத்தை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதிவைத்துக்கொண்டார்.
பின்னர், கண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார்.
ரமணர் கண்களைத் திறந்து பார்த்தபோது புத்தக மூட்டையைக் காணவில்லை.
அந்தக் கிராமத்தான் எங்கே போனார் என்றும் தெரியவில்லை.
தன் வேலையை முடித்துக்கொண்டு சிருங்கேரி சாது, ரமணரிடம் திரும்பினார்.
தான் எழுதிவைத்த சுலோகத்தை ரமணர் அவரிடம் காண்பித்தார்.
“புனிதமான அருணாசல குன்றிலிருந்து மூன்று யோஜனை தூரத்துக்குள் (முப்பது மைல்) வாழும் யாருக்கும் தீட்சை தேவையில்லை.
இருப்பினும், அவர்கள் மோட்சத்தை அடைவார்கள்.” என்பதுதான் அந்த சுலோகத்தின் பொருள்.
சாது, சிருங்கேரிக்குத் திரும்பி மடத்திலிருந்த சங்கராச்சாரியாரிடம் இந்தச் சம்பவத்தைச் சொன்னார்.
சங்கராச்சாரியார் அதைக் கேட்டுவிட்டு,
ரமண மகரிஷி ஒரு ‘அத்யாச்ரமி’ என்றார்.
அவர் எல்லா ஆஸ்ரமங்களையும் கடந்தவர் என்றும்
அவருக்கு எந்த விதிகளும் பொருந்தாது என்றும் கூறினார்.
ஆம் யாரிடமும் சந்நியாசம் பெறாமல் குரு நிலையி வாழ்ந்த ஒரு மகத்தான யோகி பகவான் ரமணர்
மகான்களுக்கு தன் கடைக்கண் பார்வையால் ஒருவரின் கர்மா வினைகளை கரைக்கும் சக்தி உள்ளது
ஒருவர் எதோ காரணத்தால் துன்பப்படுகிறார் என்ன்றால் அது அவருடைய கர்மா வினையில் பயன்
அந்த கர்மா வினையால் ஏற்படும் துன்பத்தை அவர் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது விதி
ஆனால் இந்த துன்பத்தின் கால அளவை குறைக்கும் சக்தி யோகிகளிடம் இருந்து
அதோடாது தொடர்புடைய நிகழ்வு தான் இது
தேன் இருக்கும் இடத்தைத் தேனிக்களுக்கு யாரும் சொல்லி அனுப்ப வேண்டியதில்லை.
அதேபோன்று மகான்கள் இருக்கும் இடத்தை பக்தர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.
காற்றில் பூவின் வாசனை பரவுவதைப்போல மகான்களின் மகிமை பக்தர்களை நாடிச்செல்லும்.
அப்படித்தான் விருபாக்ஷி குகையில் கௌபீனத்தோடு தனித்து அமர்ந்த ரமணரைத் தேடி பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
அப்படி அவரை நாடி வந்த பக்தர்களில் ஒருவர் ராமசாமி.
பொதுப்பணித்துறையில் நல்ல வேலை
ஒருமுறை விருபாக்ஷி குகைக்கு வந்தார்.
ரமணரின் பார்வை என்னவோ செய்தது.
அடிக்கடி வந்து ரமணரின் முன் வந்து அமர்ந்து செல்லத் தொடங்கினார்.
ராமசாமிக்கு வயிற்றில் ஒரு பிரச்னை இருந்தது.
எந்த உணவும் ஜீரணம் ஆகாது.
தூக்கம் தொலைந்தது.
தலைவலி நிரந்தரமானது.
வேலையில் கவனம் செலுத்த இயலாத நிலை.
அலுவலகத்திலும் வீட்டிலும் அவர் மேல் குறைபட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
ராமசாமியால் ஒருகவளம் உணவுகூட நிம்மதியாக சாப்பிடமுடியாத அளவுக்கு உடம்பு படுத்தியது.
நோய் தாங்காமல் நேராக ரமணரின் குகைக்குச் சென்றார்.
“உங்களை நம்பித்தானே வந்துபோகிறேன். என் நோயைத் தீர்க்கக் கூடாதா?” என்று உரிமை யோடு சண்டையிட்டார்.
உடனே ரமணர், “நான் என்ன மருத்துவனா இல்லை மந்திரவாதியா… என்னால் எதுவும் முடியாது… போ” என்று கூறினார்.
இதைக்கேட்டதும் ராமசாமிக்குக் கோபம் வந்திருக்க வேண்டும்.
ஆனால் இத்தனை நாளும் மகானின் சந்நிதிக்கு வந்துசென்ற புண்ணியம் அவரைப் பக்குவப் படுத்தியிருந்தது.
ராமசாமி ரமணரின் கால்களில் விழுந்தார்.
“ஐயா… நீங்கள் என்ன வேண்டுமானலும் சொல்லுங்கள்.
ஆனால் நான் உங்களைச் சரண் அடைந்து விட்டேன்.
என்னைக் காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு” என்று சொல்லிக் கண்ணீர் சிந்தினார்.
ரமணர் சிறிதுநேரம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.
சரணாகதி அடைந்தவரைக் காப்பதுதானே இறைத்தன்மை.
பிறகு “உன் வியாதி தீர்ந்துபோனது. எழுந்து போ” என்றார்.
ராமசாமிக்கு உள்ளூர ஏதோ செய்தது.
பெரும் நிம்மதி பிறந்தது.
அங்கேயே ஓர் ஓரமாகப் படுத்து உறங்கிவிட்டார்.
மறுநாள் ஆடிப்பெருக்கு.
பக்தர் ஒருவர் ரமணருக்கு நிறைய சித்ரான்னங்கள் தயார் செய்து எடுத்து வந்தார்.
ரமணர் ராமசாமியை அமரவைத்து, “இலை போட்டு இவனுக்கு சாப்பாடு போடுங்கள்” என்றார்.
அப்படியே செய்தனர் அணுக்கர்கள்.
ராமசாமி உண்ண ஆரம்பித்தார்.
ஒரு வாய் சோறு உள்ளே போனதும் ஏற்படும் வயிற்றுவலி இல்லை.
சில பருக்கைகள் சாப்பிட்டதும் எழும் ஏப்பமும் வயிற்றுப் பிறட்டலும் இல்லை.
எலுமிச்சை சாதம், தயிர்சாதம், சர்க்கரைப்பொங்கல் என பக்தர் கொண்டுவந்த உணவில் பெரும்பான்மையை காலிசெய்தார் ராமசாமி
. பிறகுதான் அவருக்குத் தான் இவ்வளவு சாப்பிட்டுவிட்டோமே என்கிற நினைப்பே தோன்றியது.
ஆனால் அவருக்கு எந்த உபாதையும் ஏற்படவில்லை.
பின்பு அவர் வாழ்வில் வயிற்றுக்கோளாறு வந்ததே இல்லை .
தன் நோயை நீக்கியது மகானின் கருணை என்பதை உணர்ந்து காலெமல்லாம் ரமணரைத் துதித்துக்கொண்டேயிருந்தார் ராமசாமி
பக்தர் ராமசாமிக்கு மட்டுமல்ல இன்றைக்கும் கூட ரமணரின் சூரசுமாமான அருட்பார்வையில்
தன் துன்பங்களில் இருந்து விடுபட்டு கொண்டிருப்பவர்கள் எத்தனை எத்தனையோ
இது மூன்றாவது சம்பவம்
திருவண்ணாமலையில் வாழ்ந்த அந்த முரடர் இறந்துவிட்டார்.
அங்கிருந்த ஜனங்களுக்கு எல்லாம் ஒரே சந்தோசம்.
இத்தனை மக்களை மிரட்டி, பொருள் பறித்து வாழ்ந்த தீயவன் ஒழிந்தான் என்று நிம்மதியால் மகிழ்ந்தார்கள்.
ஊர் மக்கள் எல்லோரும் அதுபற்றி ரமணரிடம் வந்து சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.
நிஷ்டையில் இருந்த ரமணர் இதுபற்றி எந்த எதிர்வினையும் ஆற்றாது இருந்தார். நேரம் கடந்தது.
மாலையில் இறந்த நபருடைய பூத உடல் மயானத்திற்குச் செல்லும்பொருட்டு ரமணரின் ஆஸ்ரமத்தைத் தாண்டிச் சென்றது.
அப்போது ரமணர் எழுந்து நின்றவாறு கைகூப்பி அந்த உடலுக்கு மரியாதை செய்தார்.
இதுகண்டு அவர் பக்தர்களுக்கு கோபம் வந்துவிட்டது.
‘அயோக்கியனுக்கு ஏன் மரியாதை’ என்று பொங்கிவிட்டார்கள்.
ரமணர் ஒன்றும் சொல்லவில்லை.
பக்தர்களின் ஓயாத நச்சரிப்பால் ரமணர் தன் மெளனத்தைக் கலைத்தார்.
‘இறந்தவர் என்னுடைய குரு’ என்றார்.
எல்லோரும் வியந்தார்கள்.
‘வாழவே தகுதி இல்லாத இந்த கொடியவனா, இந்த மகானுக்கு குரு’ என்று குழம்பினர்.
ரமணர் சோகத்தோடு சொன்னார்.
‘நான் திருவண்ணாமலைக்கு வரும்போது என் வயது 12.
அதுவரை என் அம்மாதான் எனக்கு முதுகுத் தேய்த்து, தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டுவார்.
தன்னாலே குளிக்கும் விதம் எனக்குத் தெரியாது.
அதனால் இங்கு வரும்வரை எப்படி குளிக்க வேண்டும் என்பது கூட எனக்குத் தெரியவில்லை.
இங்கு ஒருமுறை கிரிவலப் பாதையில் இருந்த ஒரு குளத்தில் இவர் குளித்ததைப் பார்த்தேன்.
எப்படி நாமே முதுகைத் தேய்ப்பது, கை-கால் விரல்கள், காது மூக்கு என ஒவ்வொரு இடத்தையும் எப்படி அழுக்குப் போக சுத்தம் செய்வது என்று இவரிடம் கவனித்தேன்.
நானும் அதுபோலவே குளிக்க இவரைப் பார்த்துத்தான் கற்றுக்கொண்டேன்.
எனக்கு உடல் சுத்தம் பற்றி கற்றுக் கொடுத்த குரு இவர்.
அதனால் இவரை வெறுக்க மனம் விரும்பவில்லை’ என்றார்.
எல்லோரும் தீயவராகப் பார்த்த ஒருவரை ரமணர் மட்டுமே குருவாகப் பார்த்தார்.
அதனால்தான் அவர் இன்றும் எல்லோர் மனதிலும் மகானாக நிலைத்தார்.





