உக்ர தெய்வங்கள்
இன்றை சூழலில் நாம் ஏன் உக்கிர தெய்வங்களையும் அவசியம் வழிபட வேண்டும் ?
அவர்கள் நம் வாழ்க்கையில் ஆற்றும் பங்கு என்ன?
அவர்களின் அருள் இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு உதவும் என்பதை
இந்த பதிவில் பார்க்கலாம்.
“நாம் யாரை பார்த்தாலும்
அவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருப்பது போன்றும்
ஏதோ நமக்கு மட்டும் தான் வாழ்க்கையில் தோல்வி, பயம், பதட்டம் , வெறுமை ஏமாற்றம் எல்லாம்
இருக்கிறது என்று நினைக்கிறோம்.
ஆனால் உண்மை அதுவல்ல
நாம் பார்க்கும் அந்த ஒவ்வொரு புன்னகைக்குப் பின்னால்
மறைந்து கிடப்பது என்னவே
அதே தோல்வி,பதட்டம், பயம், தனிமை தான்.
நாம் பார்க்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும்
வெளியில் ஒளியில் மின்னுவது போல் தெரிந்தாலும்…
உள்ளுக்குள் இருள் தான் ஆட்சி செய்கிறது.
பலருக்கும் பெரும் கல்வி இருக்கிறது.
உயர்ந்த தொழில் இருக்கிறது.
செல்வமும், புகழும் கிடைத்திருக்கிறது.
ஆனால்… அமைதி இருக்கிறதா என்று கேட்டால் இல்லை…
தைரியம் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை
.
ஏன் இப்படி?
ஏனென்றால் –
நமது தலைமுறை,
தன் வாழ்க்கையில் வரும் இடர்பாடுகளை விரட்டியடிக்கும் சக்தியை உடன் வைத்திருப்பதில்லை.
இது எப்படியென்றால் ஒரு குழந்தைக்கு தன்னால் முடியாத காரியங்களை தனது அன்னையை கொண்டோ தந்தையை கொண்டோ செய்து கொள்ளும்
அதாவது தன்னை காட்டிலும் அதிக சக்தி கொண்டவர்களின் துணையோடு தன் காரியங்களை செய்து கொள்ளும்.
அதனை போலவே நம்மால் முடியாத காரியங்களை நமக்காக செய்து தரும் நம்மை விட அதிக சக்தி கொண்ட
அன்னை தந்தையை நாம் உதவிக்கு அழைக்க மறந்து விடுகிறோம்.
இங்கே நம்முடைய அன்னை தந்தை என்று நாம் குறிப்பிடுவது தெய்வங்களை.
குழந்தை கூப்பிட்டால் தாய் தந்தை வருவார்கள் நாம் கூப்பிட்டால் தெய்வங்கள் வருவார்களா என்று கேட்டல்
நிச்சயமாக வருவார்கள்
தெய்வங்கள் நம்மை பிள்ளைகளாகத்தான் நினைக்கிறார்கள்
ஆனால் நாம் தான் அவர்களிடம் இருந்து நம்மை அந்நியப்படுத்திக்கொண்டுவிட்டோம்
ஆனால் நம் அழைப்பிற்காக தெய்வங்கள் காத்து கொண்டுதான் உள்ளன.
எனக்கான வேலைகளை கடமைகளை நானே செய்து கொள்ளும் பொது எதற்காக எனக்கு தெய்வத்தின் துணை வேண்டும் என்று சிலர் நினைக்கலாம்
இப்படி சிந்துது பாருங்கள்.
இரவில் ஒருவர் காட்டில் நடந்து செல்கிறார்.
நிலவின் ஒளி இருக்கிறது
ஆனால் அந்த அடர்ந்த காட்டில் பயனிக்க நிலவொளி மட்டும் போதுமா?
சுற்றிலும் கொடிய மிருகங்கள் பாம்பு பூச்சிகள் என எக்கச்சக்க அபாயங்கள் உள்ளன
வெறும் சந்திர ஒளி மட்டும், அந்த ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்றுமா?
நிச்சயமாக இல்லை
அங்கே நமக்கு தேவை –
இருளை விரட்ட நல்ல ஒளி மிகுந்த மின்சார விளக்கும் ஆயுதமும் தான்.
இந்த இரண்டும் தான் காட்டில் நம்மை பாதுகாக்கும்.
அப்படித்தான் வாழ்க்கை.
வெளியில் சிரிப்பு, அழகு போன்றவாய்க்கு நிலா வெளிச்சம் இருந்தாலும்…
உள்ளுக்குள் நம்மைத் தடுக்க வரும் இருள், பொறாமை, தீய நண்பர்கள், தவறான ஆசைகள், சாபம் போன்ற மிருகங்கள் ஒளிந்திருக்கின்றன.
அவற்றை வெல்ல,
சாந்தமான ஒளி மட்டும் போதாது.
உக்கிரத்தின் தீயே தேவை!
அந்த உக்கிரம்
பைரவரின் எரியும் திரிசூலத்தில் இருக்கிறது.
காளியின் கூர்மையான வாளில் இருக்கிறது.
வராஹியின் கர்ஜனையில் இருக்கிறது.
.தாராவின் கருணைமிகு உக்கிரத்தில் இருக்கிறது.
இவர்கள் யாரும் நம்மை அச்சப்படுத்தும் தெய்வங்கள் அல்ல.
இவர்கள்
நம்மை சுற்றியுள்ள இருள் சக்திகளை அச்சப்படுத்தும் தெய்வங்கள்.
நம்முடைய வாழ்வின் மனத்தின் காவலர்கள்.
“இன்றைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் சவால்கள், நம்
முன்னோர்கள் சந்தித்தவைகளைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டவை.
சிந்தியுங்கள்…
ஒரு இளைஞன் கடலைக் கடக்கப் புறப்படுகிறான்.
கையில் படகு இருக்கிறது,
கண்களில் கனவு இருக்கிறது.
ஆனால் அந்தக் கடலில் –
🌊 சில அலைகள் அவனை வழிதவறச் செய்கின்றன.
அவை தான் கல்லூரியில் இழுக்கும் தவறான நண்பர்கள்.
🌊 சில சுழற்சிகள் அவன் படகை இழுத்துச் சிக்க வைக்கின்றன.
அவை தான் வாழ்க்கையை வீணாக்கும் தவறான உறவுகள்.
🌊 சில இருண்ட புயல்கள், அவன் படகின் பாதையை மறைத்து நிற்கின்றன.
அவை தான் நம் வளர்ச்சியை தடுக்க முயலும் பொறாமை கொண்டவர்கள்.
🌊 மேலும் சில மறைமுக பாறைகள் , நீரில் தெரியாமல் படகைத் தட்டுகின்றன.
அவை தான் சாபம் போல நம் முன்னேற்றத்தை அடைக்கும் மறைமுக சக்திகள்.
இவையெல்லாம் தான்,
இன்றைய தலைமுறையின் மிகப் பெரிய எதிரிகள்.
வாழ்க்கை என்னும் கடலைக் கடக்கும்போது,
இந்த அலைகள், சுழற்சிகள், புயல்கள், மறைமுகக் பாறைகள் —
எப்போது, எங்கே தாக்கும் என்று சொல்ல முடியாது.
இந்த சமயத்தில் உந்திர தெய்வத்தின் பங்கு அலப்பரியது.
அதில் முதலில் பைரவர் – இவர் நேரம் மற்றும் பாதையின் காவலன்
“வாழ்க்கை என்னும் கடலில் வரும் முடிவற்ற இருளை அகற்றுபவர பைரவர்
அதாவது கடலில் படகில் பயனிக்கும் போது கலங்கரை விளக்கம் எப்படி சரியான பாதையை காட்டுமே அதே போல நம் வாழ்க்கை பயணத்தில் சரியான பாதையில் பயனிக்க பைரவரின் அருள் மிக முக்கியம்.
ஏனென்றால் பைரவர் – காலத்தின் காவலன்.
அவர் வெளிச்சம் தருவதால்,
இளைஞன் தவறான பாதையில் செல்லாமல் திசை அறிந்து பயணிக்கிறான்.
கல்லூரியில் தவறான நண்பர்கள் அழைத்தாலும்,
அந்த வழி இனி அவனுக்கு கவர்ச்சியாகத் தெரியாது.
ஏனெனில், பைரவர் ஒளி அவனை முன்னேற்றப் பாதையில் நடத்துகிறது.”
—
இரண்டாவது காளி
பயணத்தின் நடுவில் திடீரென புயல் எழுகிறது.
மிகப்பெரிய அலைகள் படகை கவிழ்க்க முயல்கின்றன.
அது போலவே,
வாழ்க்கையில் வரும் தவறான உறவுகள், ஆசைகள், அடிமைகள் –
நம்மை மூழ்கடிக்க நினைக்கும்.
அப்போது காளி தேவியின் தேவை அங்கே வருகிறது
காளி தன் அருளால் இருண்ட அலைகளை தன் வாள் கொண்டு சிதறிச் சாம்பலாக்குகிறார்..
காளி – நம்முள் அச்சமின்றி தேவையான தருணத்தில் ‘இல்லை’ முடியாது இதை நான் செய்ய மாட்டேன் இது பண்பு அல்ல இது தர்மம் அல்ல என்று சொல்லும் தைரியத்தை ஊற்றுபவள்.
அன்பு என்ற பெயரில் வாழ்க்கையை அழிக்கும் பாசவலைகளைத் தகர்க்கும் வீரத் தாயார்.
அவள் அருகில் இருந்தால்,
எந்த தீய உருவுகளும் நம்மை விழுங்க முடியாது.”
—
அடுத்தது வராஹி – பாதுகாப்பின் கவசம்
“இளைஞன் தனது படகை முன்னோக்கி தள்ளிக்கொண்டு போகிறான்.
ஆனால் நீரில் தெரியாமல் மறைந்து கிடக்கும் கூர்மையான பாறைகள் ,
அவனது படகை அடித்து சிதைக்க முயல்கின்றன.
அவை தான் –
பொறாமை, சாபம், தீய சிந்தனை போன்றகுவை.
அந்த வேளையில்,
வராஹி தேவி தனது உக்கிர வடிவில் தோன்றுகிறார்.
அவளது கர்ஜனைக்கே பாறைகளும் நொறுங்குகின்றன.
அவளது சக்கரத்தில், மறைந்து கிடக்கும் அனைத்து தீய சக்திகளும் சிதைந்து போகின்றன.
வராஹி –
நம் வீடு, குடும்பம், தொழில், கல்வி – அனைத்தையும் பாதுகாக்கும் கவசம்.
அவர் அருகில் இருந்தால்,
பொறாமையின் பார்வை எவ்வளவு கடுமையானாலும்,
அது எப்போதும் நம்மைத் தாக்க முடியாது.”
இறுதியாக தாரா இவர் பராசக்தியின் அம்மசம் உத்தரணத்திற்கு நம் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை எடுத்து கொள்ளலாம் சொல்லப்போனால் இவரும் வராகியின் தன்மை கொண்டவர் தான் ஆனால் இவர் – நம்பிக்கையின் தாயார்
“இப்போது பயணத்தின் முடிவில்,
இளைஞன் சோர்வடைந்து நிற்கிறான்.
புயல்களோ, கற்களோ இல்லாவிட்டாலும்…
அவனது மனம் தடையாய் நிற்கிறது.
என்னால் முடியாது… நான் வெற்றி பெற முடியாது…’ என்ற குரல் உள்ளத்திலே எழுகிறது.
அந்த நேரத்தில் –
தூய ஒளியில் புன்னகையுடன் தோன்றுகிறாள் தாரா தேவி.
அவள் தனது கரத்தை நீட்டி,
சோர்வடைந்த இளைஞனைத் தூக்கி நிறுத்துகிறாள்.
‘பயப்படாதே… உன்னால் முடியும்.
உனக்குள் தான் உன் சக்தி இருக்கிறது’ என்று அவர் சொல்லும்போது,
அவனது உள்ளம் மீண்டும் தீப்பொறியாக எரிகிறது.
தாரா –
நமக்கு நம்பிக்கை கொடுக்கும் தாயார்.
அவள் அருகில் இருந்தால்,
நம்மை யாராலும் நிறுத்த முடியாது.”
—
“நாம் அனைவரும் வாழ்க்கை கடலின் நடுவே நிற்கிறோம்…
சில நேரங்களில் புயலால் தடுமாற்றங்களும் சோதனைகளும் வரும்
அந்த நேரத்தில் ஒரு கேள்வி மட்டும் நம் உள்ளத்தில் எழ வேண்டும் –
“இந்த தடைகளை நான் தனியாகச் சமாளிக்க வேண்டுமா…
அல்லது தெய்வங்களின் கையைப் பிடித்து தைரியமாக கடக்க வேண்டுமா?”
பதில் உங்கள் கையில்தான்.
ஏனெனில் –
உங்கள் பக்கத்தில் பைரவர், காளி, வராஹி, தாரா போன்ற தெய்வங்கள் இருக்கும்போது,
வெற்றி தள்ளிப் போகாது.
அமைதி தொலைந்து போகாது.
அன்பும் பாதுகாப்பும் என்றென்றும் உங்களையம் உங்கள் குடும்பத்தியும் தழுவிக் கொள்ளும்.”
நன்றி





