🧘 Siddhas & Yogis

பாம்பன் சுவாமிகள்

“எல்லா துன்பங்களையும் தாங்கி, எல்லா வாஞ்சைகளையும் வென்று, 

 

முருகன் திருவடியே அன்னைத்தும் ஒரே ஒரு நோக்கத்துடன் வாழ்ந்தவர்…

 

பாம்பன் சுவாமிகள்!”

 

எல்லா யோகிகளுக்கும் தீக்ஷை வழங்கிய குரு ஒருவர் இருப்பார்

 

அவர் ஒரு மனிதனாகதான் இருப்பார்.

 

ஆனால் பாம்பன் சுவாமிகலுக்கு நேரில் வந்து தீக்ஷை கொடுத்து குருவாக விளங்கியவர் 

 

சாத் சாத் அந்த முருக கடவுளே 

 

கலியுகத்தில் இந்த பெருமையை  பெற்ற ஒரே  சித்தர் பாம்பன் சுவாமிகள் மட்டுமே.




பாம்பன் சுவாமிகள் முருகனை காண 35 நாட்கள் தவத்தில் இருந்தார்

 

அந்த சமயத்தில் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொண்டார்.

 

கடைசியில் முருகனின் காட்சியை எவ்வாறு பெற்றார் போன்ற அரிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.





முருக பெருமானை நேரில் கண்டால் மட்டுமே இனி வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்த பாம்பன் சுவாமிகள்.

 

தன் தவ பூமிக்கான இடத்தை தேர்வு செய்ய முற்பட்டார்.

 

“தினம் தினம் கடலின் கண்களால் பரிசோதிக்கப்படும் ஒரு இடம்…

 

அந்த இடம் தான்… பிரப்பன் வலசை!

 

அன்று “பிரப்பன் வலசை… ஒரு சிறிய மீனவர் கிராமம் போலத் தெரிந்தாலும்,

 

இன்று அது ஒருவரின் ஆன்ம பரிணாமத்துக்கான பெரும் அரங்கம்!” என்றே சொல்லாம்.

 

இங்கேதான், பாம்பன் சுவாமிகள், 

 

தமது ஆத்ம ஞானத்தைக் அடைய…

முருகனை நேரில் காண…

பிரபஞ்சத்தையே மறந்துவிட்டு…

தவஞ் செய்தார்!”

 

இந்த இடத்தை தேர்வு செய்ததற்கும் ஒரு காரணம் உண்டு 

 

பொதுவாக தவம் செய்ய சித்தர்கள் வனத்தையே விரும்புவர்

 

ஆனால் சுவாமிகள் வாழ்ந்தது கடல் சூழ்ந்th ராமநாதபுரம் மாவட்டத்தில் 

 

எனவே அவரால் வனத்திற்கு செல்ல முடியவில்லை.

 

அதேசமயம் 

 

தவம் செய்ய விரும்பும் இடம்  ஆள்நடமாட்டம் இல்லாமல்  எந்த நேரமும் நிசப்தத்தில் உராயும் பூமியாக இருக்க வேண்டும்.

 

இந்த அனைத்து  சட்டங்களும் பொருந்தும் ஒரே இடம் மயானம் மட்டுமே. 

 

அங்கு தான் ஆள் நடமாட்டம் இருக்காது எப்போதும் நிசப்தமாக இருக்கும். 



மேலும் மயானம் சமரசம்‌ உலவும்‌ இடம்‌, ஜாதியில்‌ மேலோரென்றும்‌, தாழ்ந்தவர்‌ கீலோரென்றும்‌ பேதமில்லாத இடம்‌. 

 

ஆண்டியும்‌ அரசனும்‌, அறிஞனும்‌ அசடனும்‌, யோகியும்‌ போகியும்‌, ஞானியும்‌ உயிர்‌ போன போது கூடும்‌ ஒரு பொது இடம்‌. 

 

மொத்தத்தில் எல்லோரும்‌ உறங்குமிடம்‌ மயானம்‌. 

 

தேடிய மாடு, நீடிய செல்வம்‌, மாட மாளிகை, கூட கோபுரம்‌ ஆகியவை மயானம்‌ போகும்‌ போது கூட வருவதில்லை. 

 

சமய நூல்‌ அறிஞர்கள்‌ கருத்துப்படி மயானம்‌ மலமாய கன்மங்களைச்‌ சுட்டு நீறாக்கும்‌ குறிப்பை உடையது. 

 

உயிர்களின்‌ மல மாசுகளை ஒழிக்கவல்ல கூத்தப்‌ பெருமானது நடனசாலை மயானமே. 

 

ஆகவேதான்‌ சுவாமிகள்‌ மயானத்தைத்தவச்சாலையாக ஏற்றார்‌. 

 

“தவமும்‌ தவமுடையார்க்கு ஆகும்‌: என்பார்கள்‌. 

 

பல நல்வினைப்‌ பயனால்‌ இந்த தவநிலை நமது பாம்பன்‌ சுவாமிகளுக்குக்‌ இட்டியது. 

 

அதனால்தான்‌ சுவாமிகள்‌ தம்முடைய உயிரையும்‌ சிறிதும்‌ பொருட்‌ படுத்தாமல்‌ தம்‌ மனத்தை அடக்கி, 

 

மயில்‌ வாகனனை வழிபடுகின்ற மாபெரும்‌ முயற்சியில்‌ இறங்கினார்‌. 

 

இதில்‌ தனிச்‌ சிறப்பு என்ன வென்றால்‌ இதனை சுவாமிகள்‌ இல்லறத்திலிருந்தே செய்தார்கள்‌ என்பது. 

 

அப்போதைய மாவட்ட கலெலக்டர்‌ ஆணைப்படி மயான வெளியில்‌ ஒரு கொட்டகை போடப்பட்டது. 

 

அதன்‌ நடுவிலே 

 

ஒருவர்‌ நன்கு உட்காரக்‌ கூடியதாக ஒரு சதுரக்‌ குழி வெட்டப்பட்டது. 

 

இதற்கு நிலாவரை என்று பெயர் 

 

நாற்புறமும்‌ வேலியிடப்‌ பட்டது. 

 

சுவாமிகள்‌ நிட்டைக்குப்‌ புறப்படுவதற்கு முன்பாக தம்‌ அன்பர்களுக்கு வாழ்த்துக்களைத்‌ தெரிவித்துக்‌ 

 

குமரக்‌ கடவுளை மறவாதிருங்கள்‌ என்று உபதேசித்து 

 

நல்லோர்களை வணங்கி கொட்டகைக்குள் புகுந்தார் 

 

பின்‌ குழியில் வடக்கு நோக்கி எட்டி மரத்தால்‌ ஆன யோகத்‌ தண்டுடன்‌ அமர்ந்தார்‌. 

 

பக்தர்கல் குமரகுரு, குமரகுரு என்று கூறிக்‌ கைகூப்பி வணங்கியவண்ணம்‌ இருந்தார்‌கள்.

 

இவ்வாறு சுவாமிகள்‌ தம்முடைய சித்தத்தில்‌ செவ்வேளையே சிந்தித்து அமர்ந்து இருந்தார்‌. 

 

முருகப்பெருமான்‌ திருநாமங்களில்‌ பலவற்றுள்‌ ‘குமரகுரு’ என்ற நாமம்‌ முன்நின்று காட்ட வல்லது.

 

“மறையாயிரங்களும்‌ குமரகுரு என வலிய சேடன்‌ அஞ்சவந்திடுவோனே என்றுள்ளார்  அருணகிரியார்‌ 

 

தவம் துவங்கியது 

 

“கடலின் ஓசை… நம்மை பொறுத்தவரையில் ஒரு இயற்கையின் சத்தம் மட்டுமே 

 

ஆனால் பாம்பன் சுவாமிகளுக்கு அது… 

 

இறைவனின் மூச்சாக இருந்தது!”

 

அவர் 

 

சுழலும் உலகத்தை விட்டு விலகி…

 

தன்னை முழுவதும் ஈர்த்த அந்த கடல் ஒலிக்குள்ளே…

 

தன்னை இறைவனிடம் அர்ப்பணம் செய்தார்.”

 

பாம்பன் ஸ்வாமிகள் மேற்கொண்ட தியான யோக சாதனையில்‌ வேதனை விளைவிக்கும்‌ பல சோதனைகளும்‌ ஏற்பட்டன. 

 

ஒரு நாள்‌ பாம்பொன்று சுவாமிகளின் நிலவறைக்குள் புகுந்தது 

 

வாய்தோறும்‌ நெருப்பு உமிழும்‌ வாசுகி என்ற பாம்பை மிதித்து ஆடும்‌ வண்ண மயிலோன்‌ திருவருளால்‌, 

 

சுவாமிகளது சித்தம்‌ அதனால்‌ சிறிதும்‌ கலங்கவில்லை. 

 

பாம்பு வந்தே வழியே திரும்பி சென்றது 

 

தவம் துவங்கி சரியாக 5 ஆம் நாள் உடலற்ற உயிர்கள் சில அவரை சூழ்ந்து தொல்லை விளைத்தன. 

 

ஆயினும்‌ அவைகளில்‌ ஒன்று கூட சுவாமிகளைத்‌ தீண்டவே இல்லை. 

 

பின்‌அவை மெல்ல மறைந்தொழிந்தன. 

 

மற்றொரு முறை ஒரு சமயம்‌ ஒரு பெரிய ஆவிபோன்ற ஒன்று சுவாமிகளை அணுகியது. 

 

பின்‌ அது இவரைத்‌ தன்னுள்‌ அடக்கிக்‌ கொண்டு, 

 

‘வா’ என்ற குரல்‌ கொடுத்து மேலே தூக்கியது. 

 

ஆனால்‌ சுவாமிகள் தம்‌ அருகிலிருந்த எட்டிமர யோகதண்டத்தால்‌ அதனை அடித்தார். 

 

இவர்‌ அடித்த அடி மேலே தூக்கிய ஆவியின்‌ மேல்‌ படவில்லை. 

 

உடனே சுவாமிகள்‌ இருநான்கேழுத்தைச்‌ ஜெபித்தார் . 

 

கொஞ்சநேரத்தில்‌ பேய்த்தலைமை சான்ற அந்த முனி, தெற்கே நெடுந்தொலைவு சென்று மறைந்தது. 

 

அடுத்த நாள் இரவு, 

 

நீஎழுத்துவிடு என்ற குரல்‌ கேட்டது. 

 

உடனே பாம்பன்‌ முனிவரும்‌, 

 

”ஐயனே/ இக்காலத்து மனிதருள்‌ யாரையும்‌ ஞானாசிரியனாக அடைய எனக்கு விருப்பமில்லை 

 

 கரவாகிய கல்வியுளார்‌ கடைசென்று தான்‌ இரந்து இடருறாதவாறு கூறத்தக்க மெய்ப்‌ பொருள்‌ எதுவாயினும்‌ நீயே அருள்‌ செய்க. 

 

பின்னர்‌ தான்‌. எழுந்து விடுவேன்‌” என வேண்டினார்‌. 

 

ஏழாம்‌ நாளிரவில்‌ ஒரு காளைக குமரர்‌ இவர்கண்‌ முன்‌ தோன்றினார்‌. 

 

அவரது தலையோ மொட்டை அடித்து) இருந்தது. 

 

இடுப்பில் தூய கோவணமொன்று மட்டுமேதுலங்க இருந்தது. 

 

அவ்விளைஞருடன்‌ சடைமுடிதரித்த இரண்டு முனிவர்கள்‌ இருந்தனர்‌. 

 

வந்த இளைஞர்‌ நம்‌ சுவாமிகளைக்‌ கண்ணெடுத்தும்‌ பார்க்கவில்லை. 

 

௮ம்‌ முனிவர்கள்‌ அவ்விளைஞைரை நோக்கி , 

 

ஐயா! இவருக்கும்‌ உமக்குள்ன கல்வித்திறம்‌ உண்டு. 

 

இவர்‌ உம்மைக்‌ காணுமாறு இங்கே தவத்தில் இருக்கிறார் எனப்‌ பரிவுரை வழங்கி அறிமுகப்படுத்தினர்‌. 

 

உடனே அக்குமரர்‌ இவர்‌ பக்கமாகத்‌ இரும்பினார்‌; 

 

திருதீற்றை அள்ளி அடிகள்‌ திருமேனி எங்கணும்‌ பூசினார்‌; 

 

கண்கள்‌ இரண்டித்குமிடையான புருவநடுவைக்‌ கைகாட்டி, 

 

மிக்க அருளோடும்‌ இரகசியமான ஒன்றைக்‌… கூறிவிட்டு

 

 மேற்குத்‌ திக்கு நோக்கி மெல்ல நடை கொண்டார்‌. 

 

இரு முனிவர்களும்‌ அவரைப்‌ பின்‌ தொடர்ந்து சென்றனர்‌. 

 

விரைவில்‌ அம்மூவரும்‌ மறைந்துவிட்டனர்‌. 

 

அவ்‌ விளைஞரது அருள்வாக்கே உபதேசமென்று உணர்ந்த சுவாமிகள் , 

 

அவ்விடத்தை நீங்க மனமின்றி மறுபடியும்‌ யோக நிட்டையில்‌ அமர்ந்தருளினார்‌. 




தவம் தொடங்கி 35ஆம்‌ நல்ளிரவு 26 நாழிகை அளவில்‌, 

 

இவர்‌ தலைக்கு மேலுள்ள வெளியிலிருத்து ஒரு பேரொளி வந்தது. 

 

உடனே மண்ணும்‌ விண்ணும்‌ நடுங்குவன போல இவருக்குத்‌ தோன்றிது. 

 

விண்‌ முழுவதும்‌ ஒரே ஜோதிமயமாகக்‌ காட்சியளித்து,

 

 ”ஏகாதசருத்திரர்‌ வருகின்றனர்‌ விரைவில்‌ எழுத்து விடுக” என்ற கட்டளை இவர்‌ காதில்‌ விழுத்தது. 

 

அஞ்சா நெஞ்சு படைத்த தம்‌ அடிகளார்‌ சற்றும்‌ தயங்காமல்‌,

 

 ”எவர்‌ கூறினும்‌ நான்‌ எழ மாட்டேன்‌. 

 

என்‌ செவ்வேட்பிரான்‌ ஆணை கிடைத்தால்‌ தான்‌ எழுவேன்‌:’ என்றார்‌. 

 

”செவ்வேன்‌ கட்டளை தான்‌ எழுத்திரு” என்று அவ்வேள்‌ கட்டளையும்‌ அவ்வாறே கிடைத்தது. 

 

உடனே அடிகள்‌ குவித்த கையுடன்‌ எழுந்து மும்முறை தவக்குழியை வலஞ்செய்து விழுந்து படியுத வணங்கினார்‌. 

 

பிரியமானமின்றி ஒருவாறு அவ்விடத்தை விட்டு வெளியே வந்தார் .

 

வெளியில் நல்ல நிலவொளி இருந்தாலும் “அவரது கண்களில் இருந்த ஒளி…நிலவே  சற்று மெலிதாய்த் தெரிந்தது!” 

 

ஸ்வாமிகள் வெளியே வந்த செய்தி கேட்டு கிரமாமே கூடி நின்றது 

 

அனைவர்க்கும் திருநீறு கொடுத்து ஆசி வழங்கினார் 





பாம்பனார்‌ செய்த யோகம்‌ பல வகைகளில்‌ சிறப்புடையது. 

 

அவர்‌ யோகம்‌ பயிலத்‌ தொடங்கி சிலநாள்  வரையில்‌, 

 

பிசைந்து வைக்கப்பட்ட உணவை ஒரு துவாரத்தின்‌ வழியே பெற்று உண்டார்  

 

சுவாமிகள்‌ நிட்டை கூடியது மொத்தம்‌ 35 நாட்கள்‌. 

 

அந்த குமாரனையே குருவாக பெற்ற பேரு  வேறு யாருக்கு கிடைக்கும்  

 

அன்று பிறப்பன் வலசையில் 

“அவரின் அந்த தவ நிமிடங்கள்…
இன்று ஒரு கதையாக இருக்கலாம்…
ஆனால் உண்மையில் அது…
ஒரு பிரளயத்தை தாங்கிய மௌனத்தின் சத்தம்!”

பிரபன் வலசையில் 

“அவரது பாதச் சுவடுகள் இன்று அங்கு இல்லை…

 ஆனால் அவர் நடந்த பாதை இன்றைக்கும் நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது …….




Adiguru

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

🧘 Siddhas & Yogis

Sri Seshadri Swamigal- ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

தமிழில் வாசிக்க கீழே செல்லவும்  Sri Seshadri Swamigal – The Saint Once Called Mad, Later Revered by the World Was He
🧘 Siddhas & Yogis

We believe Apple Will announce iPhone.

பகவான் ரமணர் அற்புதங்கள்!   மகான்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ,    தனக்கென வரையறைகள் வகுத்து கொண்டு ஒரு குறுகிய வட்டத்தில் வாழாமல்    ஒரு மனிதனின்