🛕 Temple History

மடப்புரம் காளி

மதுரை நகரம் இன்று வானளாவிய உயர்ந்த கட்டடங்கள் நிறைந்த, 

நாகரிக நகராய்க் காணப்பட்டாலும். 

உள்ளூர அதன் குருதியோட்டமாக இருப்பது 

அதன் கிராமியப் பண்பாடுதான். 

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நடைபெறுவது மதுரையில் தான்

அகிழம் போற்றும் கள்ளழகர் திருவிழா நடைபெறுவதும் மதுரையில் தான்,

அனைத்து விதமான பாரம்பரிய உணவு பதார்தங்களுக்கு பெயர் பெற்ற இடம் மதுரை தான்

இப்படி வீரம், ஆன்மிகம், உணவு என தொன்மையான கலச்சாரத்தின் அடையாளமாக திகழும் மதுரையின்

முக்கிய அம்சமாக மினாட்சியம்மன கோவில் திகழ்ந்தாலும்

இங்கே சிறு தெய்வங்களுக்கு இருக்கும் மதிப்பே தனிதான்.

அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பு, பாண்டி மூனிஸ்வரன், கோச்சடை முத்தையா மடப்புரத்து காளி என ஊர்த்தெய்வகங்களின் எல்லை தெய்வங்களின் வாழ்விடமாகவும் திகழ்வது தான் மதுரை மண்ணின் மரபு.

.

இதில் தெற்கத்தி சிமையின் காவல்கரியாக நிதிபதியாக வெட்ட வெளியில் வலக்கையில் சூலம் ஏந்தி அக்னி கிரீரத்தோடு ஆவேசமாக அநீதியை அழிக்கும் அரசியாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் மடப்புரத்து காளியின் அருமை பெருமைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

மதுரையின் கிழக்கு எல்லையின் காவல் தெய்வமாக 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்துக்கு அருகிலிருக்கும்  மடப்புரத்தில் தான் பத்ரகாளி கோவில் அமைந்துள்ளது.

இங்கு வளைந்தோடும் வைகையின் விளிம்பில் ஆக்ரோஷ அவதாரமாக நிற்கிறாள் பத்ரகாளி.

தன் ராஜ்ஜியத்தின் கிழக்கு எல்லையில் காவல் தெய்வமாக நின்று 

இந்த மண்ணையும் மக்களையும் காக்க வேண்டும் எண்ணத்தில் 

சரியான இடத்தை தேர்வு செய்து தரும்படி  சிவபெருமானிடம் வேண்டினர் 

பார்வதிதேவியான மதுரையின் அரசி மீனாட்சி

சிவபெருமான் ஆதிசேஷனை அழைத்து 

மதுரை எல்லை முழுவதையும் வட்டமாக வளைத்து  நிற்க செல்ல 

ஆதியவசனும் அப்பாறே செய்தார்.

பாம்பின் படமும் அதன் வாலும் ஒன்றையன்று தொட்டுக்கொண்டு நின்ற இடம்தான் படப்புரம் எனப்பட்டது. 

இதுவே மருவி மடப்புரமாக ஆனது.

எத்த இடத்தில் அவரின் தலைப்பகுதியும் வால் பகுதியும் சந்திக்கின்றதோ அந்த இடத்தில் காளியாக நிற்க பணித்த கோடு

அக்கோவில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் ஓடிக்கொண்டிருக்கும் வைகையாற்றில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும்! என்று வரம் கொடுத்தாராம் சிவபெருமான்.

 

அதன்பின்தான் மடப்புரத்தில் காளிவடிவில் தங்கினாள் சக்தி. 

 

காளிக்குத் துணையாக இருந்த அய்யனார் அடைக்கலம் காத்த அய்யனாராக இங்கே ஆட்சி செலுத்தினாலும், 

 

சக்தியின் வடிவமாக நின்றுகொண்டிருக்கும் பத்ரகாளிக்குத்தான் பிரதான வழிபாடு!

 

சிவபெருமான் அருளிய வரத்தின்படி மடப்புரத்திலிருந்து மூன்று மைல் தொலைவுக்குள் வைகையில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றும் தொடர்கிறது. 

 

காசு, பணம் செலவு செய்து காசிக்குப் போக முடியாதவர்கள் மடப்புரத்தை ஒட்டியுள்ள திருப்புவனத்துக்கு வந்து தங்களின் முன்னோர்களுக்குக் காரியங்கள் செய்து புண்ணியம் சேர்த்துக்கொண்டு போவது இன்றும் நடக்கிறது.

 

கோயில் வளாகத்துக்குள் வெட்டவெளியில் கூரைகூட இல்லாமல் நாக்கைத் துருத்தியபடி ஆக்ரோஷமாக நிற்கிறாள் பத்ரகாளி. 

 

காளியின் இரண்டு பக்கமும் பிரமாண்டமாக இரண்டு பூதங்கள். 

 

பதின்மூன்றடி உயரம் கொண்ட காளியின் தலைக்குமேல் ராட்சதக் குதிரை ஒன்று தாவியபடி நிற்கிறது.

 

காளியை மனமுருகி வேண்டி நின்ற யோகி ஒருவர் எந்த நேரமும் உனக்குப் பக்கத்திலேயே இருக்க எனக்கு வரம் கொடுக்கவேண்டும் என்றாராம். 

 

அவரது பக்தியை மெச்சிய காளி அவரைக் குதிரையாக மாற்றி, தனக்கு நிழல்தரும் குடையாக வைத்துக்கொண்டாராம். 

 

தன்னை நாடிவரும் பக்தர்களைத் தாமதமின்றிக் காப்பாற்றவும்

 

அநீதியை அழிக்கத் திரிசூலம் ஏந்திநிற்கும் காளி, 

 

.அழித்தவற்றை மீண்டும் எழவிடாமல் எரித்துச் சாம்பலாக்குவதற்காகத் தலையில் அக்னி கிரீடத்தைச் சுமந்து நிற்கிறாள்.

 

காளிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டுவந்தால் நினைத்த காரியம் கைகூடி வரும். 

 

காளிக்குப் பிடித்தமான காணிக்கைப்பொருள் எலுமிச்சம்பழ மாலைதான். 

 

காளிக்கு மட்டும் போடக்கூடிய மாலையில் நூற்றியோரு பழங்கள் கோக்கிறார்கள். 

 

குதிரைக்கும் சேர்த்து மாலை போடுவதென்றால் ஆயிரத்தோரு பழங்களைக் கோக்கவேண்டியிருக்கும்.

 

மடப்புரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாருக்காவது கொடுக்கல், வாங்கல் பிரச்னை என்றால் பெரும்பாலும் கோர்ட்டுக்கோ போலீஸக்கோ போவதில்லை. 

 

அவர்கள் நாடிவரும் நீதிமன்றம் இந்த பத்ரகாளி கோயில்தான்.

 

காளிக்கு வலப்புறத்தில் சின்னதாக ஒரு திண்டு. இதன் பெயர் சத்தியக்கல். 

 

இரண்டு நபர்களுக்கிடையே பிரச்னை என்றால், இந்தத் திண்டில் இருவரும் சூடத்தை ஏற்றி, அணைத்து நாங்கள் தப்புச் செய்யவில்லை என சத்தியம் செய்யவேண்டும். 

 

பின்னர் கழுத்தில் அரளிமாலை போட்டுக்கொண்டு காளிக்கு வலப்புறமாக நிற்கும் பூதத்தைக் கட்டிப் பிடிதபடி, 

 

நாங்கள் தப்பு செய்யவில்லை என வாக்குக் கொடுக்க வேண்டும்.

 

இங்கு யாராவது பொய்ச் சத்தியம் செய்தால் முப்பது நாட்களுக்குள்ளாக அந்த நபரைக் குறைகேட்டுவிடுவார் காளி. 

 

சில நேரம் பொய்ச் சத்தியம் செய்தவர்கள் மடப்புரத்து எல்லையைத் தாண்டுவதற்குள்ளாகவே காளியால் தண்டிக்கப்படுவதுண்டு. 

 

இப்படித் தண்டிக்கப்படுபவர்கள் மறுபடியும் காளியிடம் வந்து காணிக்கை செலுத்திப் பரிகாரம் தேடிக்கொண்டு போவது இப்போதும் நடக்கிறது.

 

இங்கு நடக்கும் இன்னொரு முக்கியமான வேண்டுதல் காசு வெட்டிப் போடுவது. 

 

காளியின் முகத்துக்கு எதிரே தரையில் ஒரு பட்டியக்கல் பதித்து வைத்திருக்கிறார்கள். 

 

அதற்குப் பக்கத்திலேயே உளியும் சுத்தியலும் வைத்திருக் கிறார்கள். 

 

அநியாயம் பண்ணுபவர்களைத் தட்டிக்கேட்க திராணி இல்லாதவர்கள் ஈரத்துணியுடன் இங்கு வந்து காளிக்கு எதிரே உட்கார்ந்து காசை வெட்டிப் போட்டு, 

 

அவங்களை எதுத்துக் கேக்க எனக்கு சக்தியில்லை. 

 

நீதான் எனக்கு கேட்டுக் கொடுக்கணும் என்று கண்ணீரும் கம்பலையுமாக முறையிடுகிறார்கள். 

 

இந்தக் கண்ணீருக்கு மனமிரங்கிவரும் காளி, அநியாயக்காரர்களை அடித்து எழுப்பி இம்சை பண்ணி அவர்களையும் தன்னுடைய வாசலுக்கு வரவழைத்து விடுகிறாள்.

 

நீதி வழங்குவதில் மட்டுமல்ல; வேண்டியவருக்கு வேண்டியதைக் கொடுப்பதிலும் இவள் வான்மழை போன்றவள். வணங்கி நிற்பவர் வீட்டில் எந்தக் கெடுதலும் நடக்காமல் இவள் பார்த்துக்கொள்வாள்.

 

காளிக்குப் பின்னால் பிராகாரத்தில் வேப்பமரம் ஒன்று உண்டு. 

 

இதற்கும் தெய்வசக்தி இருக்கிறது. 

 

நீண்டநாட்களாகத் திருமணம் தடைப்பட்டு நிற்கும் பெண்கள் இந்த மரத்தின் மடியில் மஞ்சள் தாலியைக் கட்டி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்குகின்றன. 

 

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தங்களின் முந்தானையைக் கிழித்து வேப்பமரக்கிளையில் தொட்டில் கட்டி விட்டால் தாமதிக்காமல் அவர்களது குறை நீங்குகிறது.

 

வேப்பமரத்தில் கட்டப்பட்டுள்ள தாலி மற்றும் தொட்டில்களின் எண்ணிக்கை இதையெல்லாம் பறைசாற்றுகின்றன.

 

தீய சக்திகளுக்கு அஞ்சுபவர்கள், மனநலம் சரியில்லாமல் தவிப்பவர்கள், வழக்குகளில் சிக்கியவர், வியாபாரத்தில் லாபம் வேண்டுபவர்கள், வீட்டில் மாற்றி மாற்றி துன்பங்கள் நிகழ்ந்து அவதிப்படுபவர்கள் இங்கு வந்து விளக்கேற்றிக் காளியை வணங்கினால், நிலைமை மாறும். நல்லது நடக்கும்.

 

 இந்த நவீன காலத்திலேயும் நீதிக்குக் காவலாக நிற்கிற இந்தக் காளியம்மனை ஒருமுறை தரிசனம் செய்தால், எல்லாக் குறைகளும் நீங்கும்” என்கிறார்கள் ஊர் மக்கள்.

 

காலை 6 முதல் இரவு 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும். மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் வழியில் 18 கி.மீ தொலைவில் (திருப்பூவணம் தாண்டி 2 கி.மீ தொலைவில்) மடப்புரம் உள்ளது. 

 

பேருந்து, ஷேர் ஆட்டோ வசதிகள் உள்ளன.

 

எல்லா நாட்களும் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை கோயில் திறந்திருக்கிறது.

Adiguru

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

🛕 Temple History

Thiruvanamalai Girivalam- திருவண்ணாமலை கிரிவலம்

தமிழில் படிக்க கீழே செல்லவும்..  Every month, whenever we read in the newspapers that lakhs of devotees visit  Tiruvannamalai to perform 
🛕 Temple History

பூம்பாறை முருகன்

ஆன்மீக தேடலில் உள்ளஅனைவர்க்கும்  ஆதிகுரு சேனல் சார்பாக என் பணிவான வணக்கங்கள்    கடந்த பதிவில்    எவ்வளவோ தெய்வ வடிவங்கள் இருக்க, போகர் ஏன் முருகப்பெருமானின்