🛕 Temple History

பேரளசேரி முருகன் கோவில்

கேரளத்தின் வடக்கு மலபார் பகுதிகளுக்கு இணையான 

இயற்கை அழகு கடற்கரைகள், 

பழங்காழ வழிபாட்டு முறைகள், 

நாக்கில் எச்சில் ஊற வைக்கும் உணவு வகைள் 

வரலாற்றி சின்னங்கள் என 

மண் சார்ந்த ஒரு கலாச்சாரத்தை 

வேறு எங்கும் காண முடியாது.

 

ஆனால் இந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானோர் 

 

வட மாவட்ட பகுதிகலான கண்ணூர், காசர்கோடு, தலசேரி கங்கன்னாடு போன்ற ஊர்களுக்கு பலரும் செல்வதில்லை.

 

ஆனால் இந்த பகுதிகளில் தான் இந்த மண்ணின் சாராம்சமே அமைந்துள்ளது 

 

கேரளத்தின் மிகப் பழங்கால கோவில்களான 

பெரல சேரி முருகன் கோவில்., 

Trichambaramகிருஷ்ணன கோவில், 

மாடாயி காவு பகவதி கோவில், 

Thaliparambu இராஜராஜேஸசர் கோவில், 

Kootiyur சிவன் கோவில், 

மிருதங்க சைலேஸ்வரி கோவில், 

பரசினிக்காவு முத்தப்பன் கோவிலல் 

மற்றும் 

யோகி ராம் சரத்குமாரின் குருமார்களுள் ஒருவரான 

பப்பா இராமதாஷர் ஆசிரமம்

கனேஷ்புரி பகவான் நித்தியானந்திரின் ஆசிரமம்

அவர் உருவாக்கிய குருவனம்

மற்றும் வடகரை சிவானந்த பரமஹம்சரின் ஆசிரமம் 

என பல சக்திவாய்ந்த இடங்கள் அமைந்துள்ளன.

 

மேலும் தெய்யம் எனப்படும் ஒரு தனித்துவமிக்க ஆன்மீகம் நடனமும்இங்கே பிரசித்தம்.

 

தெய்யம் என்பது சமீபத்தில் வெளியான காந்தார படத்தில் வரும் பஞசுருளி தெய்வத்தை

போலவே 

 

அப்பகுதி காவல் தெய்வங்கள் தெய்வத் தோற்றம் தரித்தவரின் உடலில் ..உட்புகுந்து அருள்வாக்கு செல்வதாக ஐதிகம் 

 

இதில் ….பக்தர்கள் நேரடியாக தெய்வத்திடம் தங்களின் குறையை கூறி அதற்கான ஒரு தீர்வை 

 

அத்தெய்வத்திடம் இருந்தே பெற்றும் கொள்ளும் ஒரு தனித்துவ முறையாகும் .

 

இதிலும் பரிசினிக்காவு முத்தப்பன் கோவில் காலை மாலை இருவேளையும்

 

இந்த சம்பிரதாயம் பின்பற்ற படுகிறது.

 

இதில் பக்தர்கள் நேரடியாக அந்த முத்தப்பனுடன் பேசும் பாக்கியத்தை பெறுகிறார்கல் 

 

அதனடிப்படையில் கண்ணூர் சுற்று வட்டார பகுதியின் முதல் கோவிலாக, 

 

இன்று நாம் பார்க்க இருப்பது பெரலசேரி சுப்ரமணியர் கோவில்.

 

இராமயன காலத்தோடு தொடர்புடைய இந்த கோவில் முருக பக்தர்களுக்கு ஒரு கனவு கோவில் என்றே செல்லலாம்.

 

இந்த இடத்தில முருகன் சிலகாலம் தவத்தில் இருந்துள்ளார் என்னும் பொது 

 

இவ்விடத்தின் பெருமையை நாம் புரிந்து கொள்ளலாம்

 

தமிழகத்தில் பெரும்பாலான முருகன் கோவில்கள் மலை உச்சியில் தான் இருக்கும்

 

ஆனால் இந்த பேரலைசேரி முருகன் கோவில் 

அங்கு ஓடிகொண்டியூர்க்கும் அஞ்சரகண்டி ஆற்றின் கரையில் அமைந்து உள்ளது.  

 

தமிழ்நாட்டின் பழனி கோயிலைப் போலவே, கேரளத்தில் பேரள சேரி கருதப்படுகிறது.

 

‘நாக வழிபாட்டுக்குப் பெயர் பெற்ற இந்த கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.  

 

பொதுவாக மேற்கு நோக்கி அமைக்கபடித்திருக்கும் கோவில்களுக்கு சக்தி அதிகம் என்றும் 

 

மேற்குப் பார்த்த நிலையில் உள்ள முருகக் கடவுளைத் தரிசிப்பது மும்மடங்கு பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்

 

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடத்தப்படும் 7 நாள் திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள். 

 

இந்த கோவிலை தரிசிப்பவர்களின் மனதைவிட்டு  மூன்று இடங்கள் என்றும் அகலாது.

 

முதலாவது கோயிலின் கிழக்குப் பகுதியில் அமைதியாக பாயும் அஞ்சரகண்டி ஆற்றுக்கு மேலே அமைக்கப்பட்டு இருக்கும் தொங்கும் பாலம்,

 

இரண்டாவது கோவில் வாசலில் அமைக்கப்பட்டு இருக்கும் விசித்திரமான படிக்கட்டுகளை கொண்ட  மிக பிரம்மாண்ட குளம். 

 

கட்டிக்கலையில் ஒரு மைல் கல் என்றே இதனை குறிப்பிடலாம்.

 

வாஸ்து முறைப்படி நுணுக்கமான படிக்கட்டுக் கிணறுகளின் வடிவமைப்பைப் பின்பற்றி இந்தக் குளம் கட்டப்பட்டது.  

 

மிகப்பழையமான இக்குளத்தை அயனிவயல் குளம் என்று அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர் 

 

மிக மிக பழமையான இந்த குளத்தை தேவசம்போர்டின் முயற்சியில் இந்த குளம் 2001 ஆம் ஆண்டு புதுப்பித்துள்ளார்கள்,

 

இந்தியாவின் 75 நீர் பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இக்குளம் இடம்  பெற்றுள்ளது. 

 

இது தொடர்பான அறிவிப்பை ஜல் சக்தி அமைச்சகம் 2023 ல் வெளியிட்டுள்ளது.

 

மலையாள மாதமான துலாம் மாதத்தில் அதாவது அக்டோபர்-நவம்பர்) வரும் ‘துலா சங்க்ரமம்’ மிக முக்கிய நாளாகும்.  

 

துலா சங்கரமத்தின் போது காவேரி நதியில் இருந்து நீர் குளத்தில் பாய்கிறது என்று நம்பப்படுகிறது, 

 

இது ‘காவேரி சங்க்ரமம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

 

இது நம் தமிழ்நாட்டில் ஒடும் காவிரி அல்ல அங்கும் காவேரி பெயர் கொண்ட நதி ஒன்று ஓடுகிறது.

 

பேராலசெர்ரி முருகன் கோவில் இராமயன காலத்தோடு தொடர்புடைய கோவில்

 

அதனடிப்படையில் இது மிக பழமையான கோவில்.

 

பழமையான கோவில் என்றாலே அது ஒரு சக்திவாய்ந்த யோகியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக இருக்கும் 

 

மிகப்பழமையான கோவில் என்றால் அது ஒரு தேய்வதாலே பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிலாக இருக்கும்.

 

ஆம் பேரலைசேரி முருகனை பிரதிஷ்டை செய்தவர் ராம பிரான் 

 

மகாராஷ்ரத்தின் தண்டகாருன்ய காட்டில் சிதை இராவணன் தூக்கி சென்ற பின் 

 

சீதையை தேடி தெற்கு நோக்கி வருகையில் இராமன் இங்கே வந்திருக்கலாம்.

 

அல்லது 

 

வனவாசம் முடித்து சீதையுடன் அயோத்திக்கு திரும்பி செல்கையில் இராமன் இங்கே வந்திருக்கலாம்.

 

ராமன் இங்கே வரும் சமயத்தில் தற்போதைய முருகன் கோவில் இருக்கும் இடத்தில் 

 

ஒரு ஐயப்பன் கோவில் தான் இருந்துள்ளது. 

 

அந்த ஐயப்பனின் அனுமதியோடு இராமர் இங்கே முருகனை பிரதிஷ்டை செய்த பின்னர்

 

கேரளத்தின் மிகப்பெரிய முருகன் கோவிலாக மாறியுள்ளது.

 

கோவில் தல புராணத்தின் படி, பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை சிறைபிடித்ததற்கு பிராயச்சித்தமாக 

 

பேரளச்சேரி ஐயப்பன் கோவிலின் வறண்ட கிணற்றில் பாம்பு வடிவில் சுப்ரமணியர் இங்கே தியானத்தில் இருந்துள்ளார்.

 

வெயில் மற்றும் மழையின் வெப்பத்திலிருந்து சுப்பிரமணியரை நாகங்கள் படமெடுத்து பாதுகாத்துள்ளன.

 

பின்னர் ராமர் அனுமன் மற்றும் லட்சுமணருடன் பேரளச்சேரியை அடைந்தபோது 

 

இங்க முருகனின் இருப்பை உணர்ந்துள்ளனர். 

 

இதனால் ராமர் இப்விடத்தில் முருகள் சிலையை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்து அனுமதி அளிக்குமாறு ஐயப்பனைக் கேட்க

 

ஐயப்பனும் ஒப்புக்கொண்டார்.

 

ஐயப்பன் ஸ்ரீராமரிடம் சுப்ரமணியர் சிலையை நிறுவ தனது பிரதான கருவறையை தருவதாகக் கூறி, 

 

கோவிலின் தெற்குப் பகுதியில் தனக்கு இடம் தரும்படி கேட்டார்.  

 

பின்னர், ராமர் முருகனை சிலையாக பிரதிஷ்டை செய்ய ஒரு சிறந்த கல்லை கொண்டு வருமாறு அனுமனை வேண்டினார்.

 

அனுமனும் உடனே புறப்பட்டார்.

 

ஆனால் நல்ல தருணத்திற்கு முன் அனுமன் திரும்பத் தவறியதால், 

 

பகவான் ராமர் தனது ‘பெருவாளை’ அதாவது தனது பெரிய வளையலை கழற்றி, 

 

தனது யோகி சக்தி மூலம் அதை சுப்ரமணியரின் சிலையாக பிரதிஷ்டை செய்து முடிந்தார்.

 

சற்று நேரம் கழித்து வேறு ஒரு புனித கல்லுடன் ஹனுமான் அங்கு வந்தார்.

 

எனவே கல் கிடைத்து விட்டமையால் அனுமன் வளையலை அகற்றி கல்லை சிலையாக நிறுவ முயன்றார், 

 

ஆனால் ‘பெருவாளையை’ பலசாலியான அனுமனால் நகற்ற முடியவில்லை

 

அந்த நேரத்தில்  எங்கிருந்தோ வந்த ஒரு பாம்பு, ‘பெருவாளை’க்கு மேலே தன் படத்தை விரித்து நின்றது.  

 

பாம்பு வடிவில் வந்திருப்பவர் சுப்ரமணியர் என்பதை உணர்ந்த ராமர் சிலை பிரிஷ்டை முடிந்ததாக அறிவித்தார்.  

 

அப்படித்தான் ராமரின் ‘பெருவள’ நிறுவப்பட்ட இடம் ‘பெருவளச்சேரி’ என்று அழைக்கப்பட்டது, 

 

பின்னர் அப்பெயர் பெரளச்சேரி என்று மறுவியது.

 

கொண்டு வந்த பிரதிஷ்டை கல்லை என்ன செய்வது என்று யோசித்த ஹனுமான் 

 

அவைதத்திற்கு சற்று அருகில் ஒரு கோயிலைக் கட்டி, 

 

அவர் கொண்டு வந்த கல்லை அங்கே சிலையாக நிறுவினார்.  

 

மார்கடனான (ஆன ஹனுமான் சிலையை நிறுவியதால், அந்த இடம் ‘மார்கடசேரி’ என்று அழைக்கப்பட்டது, 

 

பின்னர் அது மக்ரேரி ஆனது.  

 

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பெரளச்சேரியை தரிசித்து விட்டு 

 

மக்ரேரிக்கு சென்றால் தான் யாத்திரை நிறைவடையும் என்பது ஐதிகம்.

 

இராமர் காலத்திற்கு பிறகு ஆறு அடி உயரத்திற்கு கல்லாலான முருகன் சிலை அங்கே நிறுவப்பட்டுள்ளது.

 

திப்பு சுல்தான் படையெடுப்பின் போது இக்கோவில் மூலவ சிலை சேதப்படுத்தப்பட்டது.

 

அதனால் தற்போது வெள்ளி கலத்துடன் முருணை தரிசிக்கலாம்.

 

கோவிலில் நுழைந்தவுடன் இடது புரத்தில் பாம்பன் ஸ்வாமிகள் இயற்றிய குமாரஸ்தவம் கல்லில் செதுக்கி நிறுவப்பட்டுள்ளது 

 

அதனை தாண்டி வலதுபுறத்தில் ஒரு அசோகா மரமும் அதன் கீழ் நாக விக்கிரகமும் பிரதிஷ்டை ஆகி உள்ளது 

 

முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் நாகருக்கு முட்டை வாங்கி சமர்ப்பிக்கின்றனர் 

 

இதனால் அணைத்து விதமான  தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

 

திருமணத்தடை , நாகா தோஷம், புத்திரபாக்கியம் ஆகிய குறைகளை நிவர்த்தி செய்யும் தெய்வமாக முருகன் இங்கே அருள்பாலிக்கிறார்.

 

பேராலசெர்ரி முருகன் கோவில் 

 

கண்ணூர் பஸ் நிலையத்தில் இருந்து 15 கிம் தொலைவிலும் , கண்ணூர் ரயில் நிலையத்தில் இருந்து 16 கிம் தொலைவிலும் கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து 18 கிம் தொலைவிலும் அமைந்துள்ளது ,

 

https://g.co/kgs/3ZXuPVd









Adiguru

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

🛕 Temple History

Thiruvanamalai Girivalam- திருவண்ணாமலை கிரிவலம்

தமிழில் படிக்க கீழே செல்லவும்..  Every month, whenever we read in the newspapers that lakhs of devotees visit  Tiruvannamalai to perform 
🛕 Temple History

பூம்பாறை முருகன்

ஆன்மீக தேடலில் உள்ளஅனைவர்க்கும்  ஆதிகுரு சேனல் சார்பாக என் பணிவான வணக்கங்கள்    கடந்த பதிவில்    எவ்வளவோ தெய்வ வடிவங்கள் இருக்க, போகர் ஏன் முருகப்பெருமானின்