🧘 Siddhas & Yogis

சிவகாமி அம்மையார்



பக்தி மார்க்கத்தில் சென்று அடியார்கள் இறைவனை இறைவன் என்றும் அம்மை அப்பன் என்றும் வணங்கி அவர் திருவடியை அடைந்தார்கள் .

 

ஆண்டாள் கண்ணனை காதலனாகவே போற்றி அவருடன் ஐக்கியமானார்.

 

அறுபத்தி மூவரும் சிவதொன்றாற்றியே  திருவருள் பெற்றார்கள்.

 

சிவானந்தர் , ரமணர், பரமஹம்சர், அரவிந்தர் வள்ளலார் போன்ற மகான்கள் 

 

யோக சாதனையாலும்  தவ வலிமையாலும் கடவுளை உணர்ந்தார்கள்.

 

இப்படி பலரும் தங்களின்  தெய்வங்களை பலவாறாக பாவித்து பக்தி செலுத்தி வந்தாலும்  

 

யாரும் இறைவனை தான் பெற்றுடுத்த குழந்தையாக உணர்ந்து தொண்டாற்றிய வரலாறை கடந்து இல்லத்தில்.



ஆனால் கலியுகவரதன் கந்த பெருமானை  தான் பெற்றெடுத்த குழந்தை என்று 

அன்போடும் தாய்மை உணர்வோடும் போற்றி 



அல்லும் பகலும் அவரை எண்ணி எண்ணி உருகி அவரின் திருவடியில் ஒடுங்கிய ஒரு பெண்

 

சிவகாமி பரதேசி அம்மையார்.

 

பல பிறவிகள் எடுத்தாலும் ஒரு செல்வா சீமானால் செய்து முடித்திருக்க  முடியாத அறிய திருத்தொண்டுகளை.

 

இப்பெருந்துறவியர் சில வருடங்களில் செய்து முடித்தார் என்றால் அது  

பண்பொழி  திருமலை  முருகனின் திருவருல் துணையால் மட்டுமே சாத்தியமாயிருக்க முடியும் என்பது உறுதி .

 

தென்காசி வட்டத்தில் அமைந்திருக்கும் நெடுவயலில் 

 

பெரிய பண்ணையார் என்று அழைக்கப்பட்ட முத்துசாமி தேவர் வாய்மொழி அம்மையாருக்கு 

 

17 ஆம் நூற்றாண்டில் தெய்வீகத்தின் பேரொளியாய் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 

 

அக்குழந்தைக்கு சிவகாமி என்று பெற்றோர் பெயர் சூட்டினர்.

 

சிவகாமி இளமை பருவத்தை அடைந்ததும்,  

 

பெற்றோர் அவரை கங்க முத்து தேவருக்கு மணமுடித்து வைத்தனர்.

 

சிவகாமி  சிறந்த குடும்ப பெண்ணாக விளங்கியதோடு தெய்வ பக்தியில் ஈடுபட்டு மனமாசற்று வாழ்ந்தார்.

 

அடியார்களுக்கு தொண்டு செய்வது 

 

அவர்களுக்கு அன்னமிட்டு உபசரிப்பது முதலிய அறச்செயல்களை தன் கணவருடைய ஒத்துழைப்போடு நிறைந்த மனதோடு செய்துவந்தார்.

 

ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் இவர்களுக்கு மகப் பேறு கிடைக்கவில்லை.

 

குழந்தை பாக்கியம் வேண்டி பல தெய்வ கைங்கர்யங்களை செய்ததார்கள் . 

 

அவர்கள் கிராமத்தில் அடியார்களும் அகதிகளும் தங்குவதற்கு தம் சொந்த செலவில் கல் மண்டபம் கட்டி வைத்தார்.

 

இன்றும் அந்த மண்டபம் அங்குள்ளது.

 

ஒருநாள் சிவகாமியின் மண்டபத்தில் வாலர் மஸ்தான் என்ற இஸ்லாமிய துறவி வந்து தங்கினார்.

 

இறை அருள் நிறைந்த மிகப்பெரிய ஞானி, சித்துக்கள் அனைத்தும் கைவரப்பெற்றவர்.

 

சிவகாமி அவருக்கு பயபக்தியுடன் பணிவிடைகளைச் செய்து அன்னமிட்டு வந்தார்.

 

அம்மையாரின் உபசாரங்களை துறவி ஏற்றுக் கொண்டாரே தவிர 

 

அம்மையாருடைய மனக் குறையைப் பற்றி கேட்கவோ அக்குறையை நீக்கும் வழிகள் பற்றி ஏதும் சொல்லவில்லை.

 

இந்த சமயத்தில் அம்மையார் இப்படி அடியார்களுக்கு செய்யும் தொண்டினை பணவிரையம் எனக்கருதிய அவரின் உறவினர்கள்

 

அவரை பல இன்னல்களுக்கு ஆளாகினார்கள்.

 

இல்லாததும் பொல்லாததும் சொன்னார்கள்.

 

சிவகாமி அனைத்தையும் பொறுத்துக் கொண்டார். 

 

ஆனால் அவரது கற்பை பற்றி அவதூறாகப் பேச 

 

வெகுண்டெழுந்தார் சிவகாமி அம்மையார்.

 

கற்புநிலை தவறாது 

களங்கமற்ற மனதோடு 

குலமகள் நிலைகடவாது அறத்தொண்டு புரிந்திருப்பேன் என்றால் 

 

நான்  மேலகோடி  திரும்பும் முன் இங்கு இடி விழட்டும் என்று சபித்து விட்டார் .

 

சில வினாடிகளில் பட்டப்பகல் நேரத்தில் முன் அறிகுறி இன்றி வெள்ளிடி இடித்து ஒரு வீடு நாசம் ஆனதை கண்டு

 

அவரின் உறவினர்கள் அவரை பற்றி பொய் பேசுவதை நிறுத்தினர்..

 

 இடி விழுந்து சேதமடைந்த வீட்டை புதுப்பிக்கப்பட்ட தன்மை நிலையில் இன்றும் அங்கு காணலாம்.

 

இந்த நிகழ்ச்சிக்குப் பின் மிகுந்த மனவேதனையுடன் தான் போற்றி வணங்கும் மஸ்தன் சுவாமிகள் முன்னிலையில் தன் கணவருடன் சென்று தலைவணங்கி நின்றார்.

 

அம்மகான்    சிவகாமி அம்மையாரை பார்த்து

 

 உன் மனக்குறை எனக்கு தெரியும்

 

ஆனால் கரு தாங்கி குழந்தை பெறும் பாக்கியம் உனக்கில்லை, 

 

மேற்கு திசையில் குன்றின் மேல் கோலாகலத்துடன் வீற்றிருக்கும் திருமலை குமரன் தான் உனது குழந்தை,

 

நீ அவனிடம் சென்று அவனைப் போற்றி அவனது உடமைகளை பாதுகாக்கும் உனது சேவை அங்கு தேவை என்று சொல்லி .

 

மனம் போல் வாழ்வு என்று வாழ்த்தி 

 

அவர்களை திருமலைக்கு அனுப்பி வைத்து அவரும் அந்த ஊரை விட்டு அகன்றார் .

 

மஸ்தான் சாமிகளின் கட்டளையை ஏற்று சிவகாமி அம்மையார் திருமலை முருகனை தரிசிக்க

 

 அவர் கணவர் மற்றும் பண்னையால் சங்கிலி மாடனுடன் சென்றார்.

 

அக்காலத்தில் முட்செடிகளும் மூங்கில் புதர்களும் நிறைந்த காடுகளால் சூழப்பட்ட பொல்லாத விலங்குகளின் புகலிடமாக இருந்தது அம்மலை. 

 

போக்குவரத்துக்கு நேரான சீரான பாதைகள் இல்லை .

 

பகல் நேரத்திலும் கூட அங்கு போவதற்கு சற்று பயமா இருக்கும் .

 

இருந்தும் இவர்கள் மிகுந்த பக்தியோடு மலைமேல் ஏறிச் சென்று 

 

கவனிப்பாரற்ற நிலையில் தனிமையில் தவித்து கொண்டிருந்த திருமுருகனை கண்டு மனம் உருகினார்கள்.

 

கண் கலங்கினார்கள்.

 

 பக்தியும் அன்பும் தாய்மை உணர்ச்சியும் சிவகாமி அம்மையாரை ஆட்கொண்டது.

 

 தன் செல்வ மகன் இக்கடுங்காநகத்தில் தன்னந்தனியே இருக்கிறானே என்று அம்மையார் வேதனையுற்றார்.

 

 முருகனை பார்த்தவுடனே முதலில்

 

 என் மகனே என்று தான் கூறினார் .

 

இந்த கோவில் திருவாங்கூர் பந்தள மகாராஜாவால் கட்டப்பட்ட சிறிய மண்டபமாக  இருந்தது.

 

 பின் யாராலும் கவனிக்கப்படாமல் இக்கோவிலில் பூஜைகள் முதலிய தெய்வப் பணிகள் முடங்கிப் போயின .

 

இந்நிலையில் திருமலை குமரனை தரிசித்த சிவகாமி அம்மையார் அன்று முதலே சிவகுமாரனை தான் பெற்ற தவ குழந்தையாகக் கருதி 

 

அவரை பேணுவதும் அவரது உடமைகளை பாதுகாப்பதயே தன் தலையாய கடமை என செயல்படத் துவங்கி .

 

திருமலை அடித்தளத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் உள்ள வண்டாடும் பொட்டல் என்னும் இடத்தில தங்கி இருந்து

 

திருக்கோயிலை விரிவுபடுத்தும் பணியில் தன் கணவருடைய ஒத்துழைப்புடன் ஈடுபடலானார் .

 

காவி உடுத்தி கருத்தையெல்லாம் முருகன் பால் நிறுத்தி வேல் கை  கொண்டு உலகப்பற்றை அறவே மறந்து துறவியானார்.

 

இன்று நாம் திருமலைகுமாரனுடைய திருக்கோவிலில் காணும் விசாலமான வசந்த மண்டபம் சிவகாமி அம்மையாரால்  நிர்மாணிக்கப்பட்டது .

 

இதற்கான செலவில் பெரும்பகுதியை தனது சொந்த உடமைகளை விற்பனை செய்து நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .

 

தவிர குமாரன் வீற்றிருக்கும் திருமலை

 

முருகனின்  திருவுருவம் எனக் கருதி அதிலிருந்து திருப்பணிக்காக ஒரு பாறை  துண்டைக்கூட வெட்டி எடுக்ககாமல் .

 

அடுத்துள்ள மலைகளிலிருந்து கல்வெட்டி பணி செய்து முடிக்கப்பட்ட பிரம்மாண்ட உத்திரங்ளையும்  தூண்களையும்

 

சுமார் 400 அடிக்கும் அதிகமான உயரமுள்ளதும் பல இடங்களில் மிகவும் செங்குத்தான மலையில் ஏற்றிய விந்தையை 

 

இன்னும் அப்பகுதி மக்கள் பக்தி பரவசமாய் பேசிக்கொள்கிறார்கள்.

 

கல்தூண் களையும் உத்திரங்களையும்  மலை உச்சிக்கு இழுத்துச் செல்ல இரண்டு யானைகளுடன் நூற்றுக்கணக்கான ஆட்களும் அரும்பாடு பட்டனர்.

 

கனத்த மணிலாக் கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில் பனை நாறுகளால் முருக்கப்பட்ட வடங்களை உபயோகித்தனர்.

 

இவ்விதம்  நூற்றுக்கணக்கான ஆட்களும் யானைகளும் சேர்ந்து தூண்களை இழுக்கும் போது 

 

சில நேரங்களில் பிடி நழுவியும்  கட்டுக்கள் அவிழ்ந்து  விழுவது உண்டு.

 

அத்தூண் அல்லது உத்திரம் நினைக்க முடியாத வேகத்தில் கீழ்நோக்கி உருண்டு வரும் பொது

 

சிவகாமி அம்மையார் தன் உயிரை துச்சமென மதித்து

 

முருகா முருகா என்று அலறிக்கொண்டு ஓடோடி  வந்து

 

தன் தலையைக் கொடுத்து தடுத்து நிறுத்தி

 

 உத்திரம்  மீண்டும் இழுக்கப்படும் வரை அவைகளை  தன் தலையிலே தாங்கித் கொண்ட அற்புத சாதனையை

 

 இன்றும் அப்பகுதி வாழ் மக்கள் பயபக்தியுடன் பேசி பரவசம் அடைகிறார்கள்.

 

 மெய்யடியாரின்  பெருமையை என்னவென்று சொல்வது.

 

வசந்த மண்டபம்  தவிர வண்டாடும் பொட்டலில் அன்னதான சத்திரம் ஒன்றைக் கட்டி அங்கு தினமும் அகதிகளுக்கு அன்னமிட்டும் , கோடைகாலத்தில் நீர்மோர் தானமும் செய்து வந்தார் .

 

இக்காலத்தில் திருமலைக்குமாரசுவாமினுடைய  உடைமைகளை பாதுகாப்பதிலும்

 

அவைகளை விருத்தி செய்வதிலும்

 

திருக்கோயிலில் நித்திய பூஜை திருவிழா வைபவம் சிறப்பாக நடைபெறுவதில் சிவகாமி அம்மையார் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

 

கோயிலுக்கு வடக்கு  திசையில் கோயலின் ல் பாழடைந்து கிடந்த நிலங்களை பயன்படுத்தி நெல் வவிளையும் காலணிகளாக மாற்றிவிட்டார்.

 

இந்த நிலங்களுக்கு நீர் பாசன வசதிக்காக தாமரைக் குளத்தை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தி நிரந்தரமான பலன் கொடுக்கும் வகையில் அவ்விடத்தை  உருவாக்கினார்.

 

இவ்விதம் தன் உடல் பொருள் எல்லாம் திருமலை குமாரனுக்கே அர்ப்பணம் செய்த அம்மையாரின் பெருமையும்   கீர்த்தியும் திருவருள் மாட்சியும் எங்கும் பரவ அன்பர்கள் கூட்டம் கூட்டமாய் அவரை தரிசிக்க வர துவங்கினர்.

 

அம்மையாரின் கையில் விபூதி வாங்கி ஆசிர்வாதம் பெருவதை பெரும்  பாக்கியமாக கருதினர். 

 

அவ்விதம் தன்னை அடைந்த பக்தர்களுக்கு திருநீறு கொடுக்கும் போது தன் குரு வாளர்  மஸ்தான் சொல்லி அருளிய

 

 மனம்போல் வாழ்வு என்ற மந்திரத்தைச் சொல்லி ஆசீர்வதித்தார்.

 

காவி உடையோடு கழுத்திலே உத்திராட்சம் தரித்து கைகளில் வேலாயுதமும் தாங்கி திருக்கோலத்தில் அம்மையார் பக்தர்களுக்கு  காட்சியளித்து வந்தார்.

 

மனித சஞ்சாரமற்ற காடாய் கிடந்த வண்டாடும்  பொட்டலும் திருமலைக்கோவிலும்  மெய்யன்பர்கள் மொய்க்கும் திருத்தலமாக மாறியது.

 

அம்மையார் வைத்திருந்த வேலாயுதத்தை இன்றும் வண்டாடும் பொட்டல் சத்திரத்தில் தரிசிக்கலாம்.

 

திருமலைக் கோயில் வசந்த மண்டபத்தில் பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு பல சிக்கல்களை சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது .

 

அத்தருணங்களில் முருகப்பெருமானே உற்ற துணையாய் இருந்துள்ளார்..

 

திருமலைக்குமாரனுடைய உடமைகளை விருத்தி செய்தும்,

 

அவரது உடமைகளை கைப்பற்றியவர்களிடம் இருந்து அதை போராடி கைப்பற்றியும், 

 

அவர் திருக்கோவிலை விரிவுபட கட்டியும் , 

 

நித்திய பூஜைகள், உற்சவங்கள் நிலையாய் நடைபெற நிலையான திட்டங்களையும் வகுத்தார்.

 

அம்மையாரின் தெய்வீக தொண்டினை பற்றி கேள்விப்பட்ட மக்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து அம்மையார் தரித்த அவரிடம் ஆசி பெற்று சென்றனர்.

 

ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று சிவகாமி அம்மையாரையும் திருமலை முருகனையும் தரிசித்து அருள் பெற வந்த பக்தர்கள் கூட்டம் அதிகமாகியது 

 

அடிவாரத்தில் இருந்து கொண்டு தன்னை வணங்கிய வர்களுக்கெல்லாம் மனம் போல் வாழ்வு என்று வாழ்த்தி அருள் புரிந்து வந்தார் .

 

திருவருள் மிகுதியால் அறம்பல செம்மையாய் நடந்தி வந்த சிவகாமி அம்மையார்

 

 தான் முருகனது திருவடிகளில் ஐக்கியமாக வேண்டிய காலம் நெருங்குவதை உணர்ந்தார்.

 

 திருமலைக்குமார் சந்நிதிக்கு எதிரே வண்டாடும் பொட்டலில் தனக்கு என சிறிய சமாதியை எளிய முறையில் நிர்மாணித்தார்.

 

தான் சமாதியாகப்போகும் நாளை தன் பக்தர்களுக்கும் அன்பர்களுக்கும் முன்கூட்டியே அறிவித்தார் 

 

அதன்படி ஜூன் 9, 1854 ,  

 

அன்றைய பொழுது மெதுவாக மலையேறி முருகனை தரிசித்து அவரிடம் பிரியாவிடை பெற்று மலையை விட்டிறன்கை சமாதியை அடைந்தார்,

 

திரண்டு நின்ற பக்தர்கள் அம்மையாரை கடைசி முறையாக வணங்கி கண் கலங்கி நின்றனர்.

 

அவர்களை மனம் போல் வாழ்வு என்று ஆசீர்வதித்து அம்மையார் நிலவறையில் இறங்கி பத்மாசனத்தில் அமர்ந்து அந்த கருணை கடவுளின் திருவடியில் ஐக்கியமானார்.

 

தன் உடமைகளையும் வாழ்நாளையும், அந்த திருமலைக்குமாரனுக்காகவே அர்ப்பணித்து கொண்டவர    சிவகாமி அம்மையார் 

 

தன் பெயர் என்றும் நிலைத்து நிற்க வேண்டும்  என்ற ஆசை கொள்ளவில்லை. 

 

தான் கட்டிய கோவில் மண்டபங்களில் தன்னை பற்றி யாதொரு குறிப்பும் பொறித்துக்கொள்ளவில்லை .

 

தன் பெயரையும்  மறந்து தன்னையும் மறந்து காணுமிடமெல்லாம் முருகவேளை கண்டு மெய்மறந்து வாழ்ந்த ஒரு தவப்புதல்வி சிவகாமி அம்மையார்.



சிவகாமி அம்மியரின் திருசமாதியில் நித்ய பூஜைகளும் வைகாசி விசாக நன்னாளில் குருபூஜையும் நடந்து வருகிறது .

 

திருமலை உச்சியிலும், அடிவாரத்திழும், வண்டாடும் பொட்டலிலும் அம்மையாரின் திருவடிகள் தீண்டாத இடமே இல்லை.

 

வசந்த மண்டபத்தின் ஒவொரு களும் அம்மையாரின் உழைப்பையும் பக்தியையும் கதை கதையாய் பேசுகொண்டே இருக்கிறது.





Adiguru

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

🧘 Siddhas & Yogis

Sri Seshadri Swamigal- ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

தமிழில் வாசிக்க கீழே செல்லவும்  Sri Seshadri Swamigal – The Saint Once Called Mad, Later Revered by the World Was He
🧘 Siddhas & Yogis

We believe Apple Will announce iPhone.

பகவான் ரமணர் அற்புதங்கள்!   மகான்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ,    தனக்கென வரையறைகள் வகுத்து கொண்டு ஒரு குறுகிய வட்டத்தில் வாழாமல்    ஒரு மனிதனின்