குருவாயூர் அற்புதங்கள்
அண்டங்கள் அனைத்துக்கும் ஆதிமூலமான பரம்பொருள்,
தன் பக்தர்களுக்கு எளிதில் வசப்படும் விதம்
ஒரு குழந்தையாய் அருளும் புண்ணிய க்ஷேத்திரம் தென் துவாரகை என்று போற்றப்படும் குருவாயூர்.
நாராயண பட்டத்திரி சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாராயணீயம்,
பூந்தானம் மலையாளத்தில் எழுதிய ஞானப்பானை போன்ற நூல்கள்
குருவாயூரப்பனது மகிமைகளை அழகுற எடுத்துரைக்கின்றன.
தவிர கேரளத்தின் மகான்களாகிய வில்வமங்களம் சுவாமியார் ,குருர் அம்மா, வாசுதேவன் நம்பூதிரி போன்ற அடியார்கள் பலரும் போற்றிக் கொண்டாடிய திருத்தலம் இது.
குருவாயூரில் நடக்கும் முக்கியமான சம்பிரத்யங்ள் ,
செய்ய வேண்டிய வழிபாடுகள் அதனால் நடக்கும் நன்மைகள்
எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் இக்கோவிலில்
எளிதில் குருவாயூரப்பனை தரிசிப்பது எப்படி,
போன்ற அனைத்து தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாரத புராணத்தின் ‘குருபாவனபுர மகாத்மியம்’ குருவாயூர் தலத்தின் வரலாற்றை விவரிக்கிறது.
அதில் துவாபர யுகத்தில், ‘துவாரகையை ஏழு நாள்களில் கடல் கொள்ளும்.
அந்த வெள்ளப் பரப்பில் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும்.
அதை தேவகுரு பிருகஸ்பதி மூலம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்!’ என்று உத்தவரிடம் அருளினார் கிருஷ்ண பகவான்.
அதன்படியே அனைத்தும் நடந்தன.
வெள்ளத்தில் கண்டெடுத்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய குருவும் வாயு பகவானும் சரியான இடத்தை தேடினர்.
அப்போது கேரளத்தில் தற்போதைய குருவாயூர் கோவில் அமைத்திருக்கும் இடத்திற்கு அருகில்
தாமரைக் குளக்கரை ஒன்றில் சிவபெருமான் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
அவரிடம் ஆலோசித்து அவரின் வழிகாட்டல்படி, விஸ்வகர்மா நிர்மாணித்த கோயிலில், அந்த விக்கிரகத்தை குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்தனர்.
இவ்வாறு குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்ததால் இந்தத் தலம் ‘குருவாயூர்’ ஆனது.
அந்த விக்ரகம் தான் இன்று நாம் தரிசிக்கும் குருவாயூரப்பன்.
கருவறையில், அணையாமல் எரியும் நெய் விளக்கு ஒளியில் ஜோதியாக மின்னுகிறான் குருவாயூரப்பன்.
குருவாயூரப்பனை, உண்ணி கிருஷ்ணன் அதாவது குழந்தை கிருஷ்ணன் என்கிறார்கள் பக்தர்கள்.
இந்த விக்கிரகம் வைகுண்டத்தில் மகாவிஷ்ணு வால் உருவாக்கி வணங்கப்பட்ட பின் பிரம்மன், கண்ணன் ஆகியோரால் பூஜிக்கப் பட்டது.
இந்த விக்கிரகம் ‘பாதாள அஞ்சனம்’ என்ற உயர் தரக் கல்லில் வடிவமைக்கப்பட்டது.
குருவாயூரப்பனது உற்சவர் விக்கிரகம் பொன்னால் ஆனது.
மேலிரு கரங்களில் சங்கு-சக்கரமும், கீழிரு கைகளில் கதாயுதம்- தாமரையும் திகழ்கிறது.
கழுத்தில் துளசி, முத்து மாலைகள் தவழ,
கிரீடம், மகர குண்டலம், கேயூரம், கங்கணம், உதர பந்தனத்துடன்
வலப்புற மார்பில் வத்ஸம் என்ற சந்தனமும், வைஜயந்தி மாலையும், கௌஸ்துபமும் அணிந்து
‘ஸ்தானகம்’ எனும் நின்ற நிலையில் அருள்புரிகிறான் குருவாயூரப்பன்.
சிறைச்சாலையில் கிருஷ்ண பகவான் இந்த கோலத்தில் தான் பிறந்தாராம்
இந்த தெய்வ கோலத்தை கம்சன் கண்டுவிட்டால் உடனே அனைவரையும் கொன்று விடுவான் என்று தந்தை வசுதேவர் வேண்டிக் கொண்டதை ஏற்று
கிருஷ்ணன் ஆபரணங்களை மறைத்து சாதாரண குழந்தை போன்ற உருவத்தை பெற்றாராம்.
கிருஷ்ணர் அவதரிக்கும் போது அவரது தந்தை வசுதேவர் கண்டு அந்த மகா ரூபத்தை
நாம் இப்போது கலியுகத்தில் தரிசிக்க என்ன பேறு பெற்றிருக்க வேண்டும்.
குங்குமப்பூ, கஸ்தூரி, கோரோசனை, அகோவனம், செஞ்சந்தனம் ஆகிய ஐவகைத் திரவியங்களைப்
பன்னீரில் கலந்து அரைத்த நறுமணச் சந்தனத்தையே குருவாயூரப்பனுக்குப் பூசுகிறார்கள்
அதை கலபம் என்று பிராசதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.
இந்த குறிப்பிட்ட கலபம் வேண்டுமென்றால்
கருவறையில் குருவாயூரப்பனை தரிசித்து விட்டு சுற்றி வந்தால்
இடது புறத்தில் ஒரு சயன கோல பெருமாள் விக்ரகம் இருக்கும்
அதற்கு அருகில் சில நம்பூதரிகள் இருப்பர்
அவர்களிடம் எட்சனை கொடுத்தால் இந்த கலபத்தை பெற்றுக்கொள்ளலாம்
சிவபெருமானின் வழிகாட்டுதல் படி அமையப்பெற்ற கோவில் என்பதால்
இவரை தரிசித்த பின்னர் மம்மியூரில் குடிகொண்டிருக்கும் சிவபெருமானையும் அவசியம் தரிசிக்க வேண்டும்
அப்போதுதான் குருவாயூர் யாத்திரை நிறைவடையும் –
எனவே குருவாயூரப்பன் தரிசித்து பின்னர் மம்மியூர் சிவனையும் தரிசித்தல் தான் குருவாயூர் யாத்திரை நிறைவடையும்.
குருவாயூர் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் தான் மம்மியூர் அமைந்துள்ளது
அங்கு செல்ல குருவாயூர் கோவில் வாசலில் இருந்தே நிறைய ஆட்டோக்கள் kidaikum
குருவாயூரில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளில் ஆணையோட்டம் தனித்துவம் மிக்கது
குருவாயூரப்பனின் புறப்பாடின் பொது திடம்பு தூக்கிச் செல்லும் யானைக்கான போட்டியே ஆணையோட்டம்.
தேவஸ்தான பராமரிப்பில் உள்ள அனைத்து யானைகளும் போட்டியில் கலந்து கொள்ளப்படும்.
ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து அனைத்து யானைகளையும் கோவிலை நோக்கி ஓட விடுவார்கள்.
அதில் எந்த யானை முதலில் கோவிலை வந்து அடைகின்றதோ அந்த யானையின் மீது தான்
அந்த ஆண்டு முழுவதும் குருவாயூரப்பனின் திடம்பு ஏற்றப்பட்டு ஸ்ரீவேலி நடைபெறும்.
ஸ்ரீ வேலி என்பது உற்சவ விக்ரகத்தின் புறப்பாடு.
கேரளத்தில் பிணி தீர்க்கும் கோவில்கள் எத்தனையோ இருந்தாலும் அனைத்திற்கும் தலைமை கோவில் என்றால் அது குருவாயூர் தான்
உடலில் ஏற்படும் நோய்கள் ,திருமண பாக்கியம், குழந்தை பேரு, குழந்தைகள் ஆரோக்கியம் போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கு இங்கே வழிபாடுகள் உண்டு
இதற்கான சாட்சி நிகழ்வுகள் சிலவற்றை பார்க்கலாம்
முதலில் அர்ஜுனன் பேரனனும் அபிமன்யுவின் மகனான பரிக்ஷித்து மன்னனின் மகன் ஜனமேஜயன்.
தனது தந்தையின் மரணத்துக்குக் காரணமான தட்சகன் என்ற பாம்பைப் பழி வாங்கும் பொருட்டு,
வேள்வி வளர்த்து உலகில் உள்ள பாம்புகளைக் கொன்று குவித்தார்.
இது அவருக்கு பெரிய கர்மா வினையாக மாரி
அதன் வெளிப்பாட்டில் அவருக்கு அந்த பிறவியிலேயே குஷ்ட நோய் ஏற்பட்டது.
எத்தனையோ மருத்துவங்கள் எடுத்தும் வியாதி குணமாகவில்லை
பின்னர், தத்தாத்ரேயரின் வழிகாட்டல்படி, குருவாயூரப்பனின் திருவடி தொழுது நோய் நீங்கப்பெற்றார் என்கின்றன புராணங்கள்.
16 ஆம் நூற்றாண்டில் மேப்பத்தூர் நாராயண பட்டத்திரியால் இயற்றப்பட்ட நாராயணீயம் பிறந்த இடம் குருவாயூர்.
18 புராணங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் பாகவத புராணத்தில் 18000 ஸ்லோகங்கள் உள்ளன,
அதை சுருக்கி 1306 ஸ்லோகங்களாக்கி உருவாக்க பட்டது தான் நாராயணீயம்.
மேப்பத்தூர் நாராயண பட்டத்திரியின் குருவான அச்சுத பிஷாரடிக்கு வாத நோய் ஏற்பட்ட சிரமப்பட்டார்
அவரின் வேதனையை கண்டு பொறுக்காத சிஷ்யன் நாராயணப்பட்டதிரி
தன் குரு பக்தி மூலம் குருவின் நோயை தன் உடம்பில் ஏற்று கொண்டார்,
காலங்கள் கடந்தாலும் நோய் விடவில்லை
எனவே மிகசிறந்த ஞானியான ராமானுஜ எழுத்தச்சனின் ஆலோசனைப்படி
குருவாயூர் சென்று குருவாயூரப்பன் போற்றி பாடி நோயிலிருந்து குணமடைவது என்று முடிவெடுத்து
குருவாயூர் சென்று பாகவத புராணத்தை மூலமாக கொண்டு
தினமும் 10 ஸ்லோகங்கள் வீதம் 100 நாட்களில் 1000 ஸ்லோகங்களை குருவாயூரப்பன் முன் பாடி முடித்தார்
அவர் அனைத்து ஸ்லோகங்களை பாடி முடித்த அடுத்த தருணம் அவருடைய வாத நோய் முழுவதுமாக நீங்கியது
அப்படி குருவாயூரப்பன் முன் பாடப்பட்ட ஸ்லோகங்களே நயணீயமாகும்
குருவாயூரப்பனின் புகழ் பெருமைகள் தமிழகத்தில் பரவலாக அறியப் படுவதற்குக் காரணமானவர் அனந்தராம தீட்சிதர்.
இவர் தஞ்சாவூரில் பிறந்தவர் மஹாஞானி
இவருடைய நாரயணீய சொற்பொழிவை கேட்க லட்சணக்கான மக்கள் கூடுவர்
ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்,
குருவாயூரப்பன் மீது “குருவாதபுரிஷ பஞ்சரத்னம்” எனப்படும் சமஸ்கிருத ஸ்லோகத்தை இயற்றியுள்ளார்.
குருவாயூரப்பனை தரிசனம் செய்யும் போது தீக்ஷிதருக்கு இந்த ஸ்லோகம் நினைவுக்கு வந்தது,
பின்னர் அவர் தனது சீடர்களிடம் இந்த ஸ்லோகத்தை முறையாகக் கற்று ஜபித்தால் மன அமைதியையும் நித்திய செழிப்பையும் பெறலாம் என்று கூறினார்.
பூங்குன்றத்தில் மிகவும் கடவுள் அன்பு கொண்ட குடும்பத்தில் பிறந்த ஒரு சிறு பையன்
தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்தான்.
அவன் சாப்பிட்ட மருந்துகளெல்லாம் பயனில்லை.
ஸ்ரீ அனந்தராம தீட்சிதரை என்று அறிந்த அவனுடைய தாத்தா அவரை குருவாயூர் அழைத்துச் சென்றார்,
இருவரும் மூன்று நாட்கள் அங்கேயே தங்கி தினமும் இந்த ஸ்லோகங்களை குருவாயூரப்பன் முன் நின்று படி வர
சரியான மூன்றாவது நாள் அவனுடைய தீராத தலைவலி முற்றிலுமாக நீங்கியது
இன்றைக்கும் எந்த நோயாக இருந்தாலும் வீட்டில் இருந்த படியே குருவாயூரப்பனை மனதார பிரார்த்தித்து
ஸ்ரீ அனந்தரம தீட்சிதர் எழுதிய
குருவாதபுரிஷ பஞ்சரத்னம் தொடர்ந்து மூன்று நாட்கள் படித்தால்
நோய் குணமையும் என்பது நம்பிக்கை.
குருவாயூர் நோய் பிணி தீர்க்கும் தலம் என்பதற்கு
இப்படி எத்தனையோ சாட்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம்
விடியற்காலை கருவறை திறந்தவுடன், முன்தினம் சாத்தப்பட்ட சந்தனக் கலவையைக் கண்டுகளிக்கலாம்.
குருவாயூரப்பனுக்கு நல்லெண்ணெயில் தைலாபிஷேகம் செய்யப்படுகிறது.
விக்கிரகத்தில் இருந்து அபிஷேக எண்ணெயை வாகை மரப் பட்டையால் ஆன கலவையால் அகற்றுவர்.
இதை `வாகை சார்த்து’ என்பர்.
அதிகாலை 3 மணிக்கு குருவாயூரப்பன் நிர்மலா தரிசனத்தில் இருப்பார்,
இந்த அலங்காரத்தில் அவரை தரிசிப்பது மிக மிக விசேஷமானது
இந்த நேரத்தில் குருவாயூரப்பனை தரிசிப்போருக்கு கோயில் செக்கில் ஆட்டிய அபிஷேக எண்ணெயுடன் அபிஷேக தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
குருவாயூரில் துலாபாரம் பிரசித்தமானது.
தங்களது வேண்டுதலையொட்டி எடைக்கு எடை தங்கம், வெள்ளி, நாணயங்கள், பழங்கள், சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் சேனை கிழங்கு போன்ற எண்ணற்ற பொருட்களை அர்பனிக்கலாம்..
தங்களின் பிரச்னை என்னவோ வேண்டுதல்கள் என்னவோ அதுகுறித்து சங்கல்பித்துக்கொண்டு குருவாயூரப்பனை மனதார வேண்டி வழிபட்டு,
துலாபாரம் செலுத்தினால் சகல துன்பங்களும் நீங்கும்;
மன பாரம் தீரும். வீட்டில் சந்தோஷமும் சுபிட்சமும் நிலைத்திருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆனால் இந்த பிரார்த்தனையை முழுமனதோடு செய்ய வேண்டும்
அதற்கு சாற்றான ஒரு நிகழ்வு நடந்தது.
ஒருமுறை, பக்தர் ஒருவர் வாழைப் பழங்களை துலாபாரம் செலுத்தச் சென்றார்.
அப்போது அவர் கட்டியிருந்த பட்டு வேஷ்டி வீணாகி விடும் என்பதால் வேறு வேஷ்டியைக் கட்டச் செய்தாராம் அவரின் தாய்.
ஆனால், வாழைப் பழங்கள் எவ்வளவு வைத்தும் தராசுத் தட்டுகள் சமமாகவில்லையாம்.
அனைவரும் திகைத்தனர். அர்ச்சகர் ஒருவர், பக்தரது பட்டு வேஷ்டியையும் தராசில் வைக்கச் சொன்னார்.
பின்னரே தட்டு சமமாயிற்று!
துலாபாரம் தினமும் 5 காலை மணிக்கு துவங்கி 1 மணி வரையிலும், மாலை 5 மணிக்கு துவங்கி இரவு 8.30 மணி வரைக்கு முடிவடையும்
இதற்கு முன்பதிவு அவசியம் இல்லை, அங்கு சென்று பதித்து அப்போது கொடுத்து கொள்ளலாம்.
அதற்கான விலைபட்டியிலும் அங்கே வைக்கப்பட்டு இருக்கும்.
இங்கு குழந்தைகளை சார்ந்து செய்யப்படும் மூன்று வழிபாடுகள் முக்கியமானவை
முதலாவது அன்னப் பிராசனம் எனப்படும் சோறு ஊட்டும் வழிபாடு !
குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்குக் குழந்தை பிறந்தால், குழந்தையின் முதல் திட உணவை இங்கு வந்து ஊட்டுவதாக வேண்டிக் கொள்கிறார்கள்.
ஆறு மாதம் கழித்து குழந்தையை கோவிலுக்கு கொண்டு வந்து அங்கே மடியில் அமரவைத்து குருவாயூரப்பனின் பிரசாத்தை ஊட்டி விடுவார்கள்
இதனால் குழந்தைகள் நோய் நொடி இன்றி ஆரோக்கி யமாக வளர குருவாயூரப்பன் அருள் புரிவார் என்பது ஐதீகம்
இந்த பிரார்த்தனையையும் கோவிலில் தினமும் செய்யலாம்.
இரண்டாவது அடிமை கிடத்தல் அல்லது நடை தள்ளுதல் என்ற வழிபாடும் குழந்தைகள் சம்பந்தபட்டதே
குழந்தைகளின் நோய் நொடி தீரவும் நீண்ட ஆயுள் பெறவும்
குழந்தைகளை பகவானின் குழந்தையாக பாவித்து, நடையில் கிடத்திவிட்டுத் திரும்புவர்.
பின் மற்றொருவர் மூலமாகக் குழந்தையை எடுத்து வரச் செய்வர்.
அதற்கான காணிக் கையை உண்டியலில் செலுத்துவர்.
மூன்றாவது பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திய பின்,
கொடிமரத்திற்கு வலதுபுறத்தில் வாணலி போன்ற பெரிய பாத்திரத்தில் குந்துமணிகள் இருக்கும்.
தங்கள் குழந்தைகளை அந்த குந்துமணிகளை வாரி எடுத்து, மீண்டும் அதிலேயே போடச் செய்வர்.
இதனால் குழந்தைகள் துறுதுறுப்புடன் திகழ்வர் என்பது ஐதிகம்
மேலும் அங்கங்களில் நோய் நொடி உள்ள பக்தர்கள் தங்களது குறை தீர்ந்தால் குறிப்பிட்ட
கண், கை, கால் போன்ற அங்கங்களை மரம், வெள்ளி மற்றும் தங்கம் போன்றவற்றில் செய்து சமர்ப்பிப்பதை `ஆள் ரூபம் சமர்ப்பித்தல்’ வழிபடும் செய்யலாம்
இது தவிர உருண்டு கொடுக்கும் வழிபாடும் அதிக அளவில் செய்யப்டுகிறது.
ஒரு மூலவர் தினமும் 12 அலங்காரத்தில் அருள் பாலிக்கும் ஒரே கோவில் குருவாயூர் என்று சொல்லலாம்
ஆம் குருவாயூரப்பன் தினமும் 12 திவ்ய நாமங்களுடன் பக்தர்களுக்கு அருள்செய்கிறார்.
நிர்மால்ய தரிசனக் காலத்தில் – விசுவரூபன்;
தைலாபிஷேக தருணத்தில் – வாத ரோகாக்னன்;
வாகை சார்த்தல்- கோகுலநாதன்;
சங்காபிஷேகம்- சந்தான கோபாலன்;
பால அலங்காரம்- கோபிகாநாதன்;
பால் முதலிய அபிஷேகம்- யசோதா பாலன்;
நவகாபிஷேகம்- வனமாலா கிருஷ்ணன்;
உச்சிகால பூஜை- சர்வாலங்கார பூஷணன்;
சாயங்கால பூஜை- சர்வமங்கள நாயகன்;
தீபாராதனை- மோகன சுந்தரன்;
அத்தாழ (இரவு) பூஜை – விருந்தாவனசரன்;
திருப்பள்ளி பூஜை- சேஷசயனன்.
இதனை விசேஷங்கள் கொண்ட குருவாயூர் கோவில் கண்ட சோதனைடும் பல பல
1716 இல் கி.பி. டச்சுக்காரர்கள் கோவில் நகைகள் பணத்தை கொள்ளையடித்து கோயிலுக்கு தீ வைத்தனர்.
பின்னர் கி.பி 1747 இல் மீண்டும் கோவில் கட்டப்பட்டது.
பின்னர் 1789 ஆம் ஆண்டில், ஹைதர் அலியின் மகனும் வாரிசுமான திப்பு சுல்தான் குருவாயூர் கோவிலை சூறையாட முப்பாட்டன் அச்சமயத்தில்
கோவிலின் மூலவ விக்ரகம் மறைக்கப்பட்டு உட்சவ விக்ரகம் அலப்புழாவிற்கு கொண்டு செல்லப்பட்டது
இதனை அறிந்த திப்பு சுல்தான் செத்துக்களை கொள்ளயடித்து கோவிலுக்கு தீ வைத்து சென்றான்
ஆங்கிலேயர்கள் திப்புவை விரட்டிய பின், இரண்டு விக்ரஹங்களும் (தெய்வங்கள்) மீண்டும் நிறுவப்பட்டன.
1875 முதல் 1900 வரை, பக்தர்களின் நன்கொடை பங்களிப்பினால் கோவிலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பாளை நிலைக்கு வந்தது
அதன் பின்னர் நாராயண பட்டத்திரி ,பூந்தானம்,வில்வமங்களம் சுவாமியார் ,குருர் அம்மா, வாசுதேவன் நம்பூதிரி போன்ற மஹான்களின் உபன்யாசம் மூலம் மேலும் மேலும் பிரபலமடைந்தது
இத்தனை பெருமை வாய்ந்த குருவாயூரப்பனை தரிசிப்பது அவ்வளவு எளிதல்ல.
பொது தரிசனத்தில் நின்றாள் கூட்டத்தை பொருத்து தரிசனம் நேரம் அமையும் குறைந்தது ஒரு மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் வரை கூட ஆகலாம்
ஆனால் சீக்கிரமாக குருவாயுரப்பானை தரிசிக்க 1000 ருபாய் சிறப்பு தரிசனம் உண்டு .
இதற்கு அங்கே ஒரு நபருக்கு 1000 ருபாய் சீட்டு வாங்கி சென்றால் தனி வழியில் உள்ளே சென்று குருவாயூரப்பனை சீக்கிரமாக தரிசிக்கலாம்
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து சுமார் 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
வாய்ப்பிருக்கும் அனைவரும் தாசிங்க் வேண்டிய ஆலயம் ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயம்
நன்றி





