🧘 Siddhas & Yogis

ஆனந்தமாயி மா

மனித புரிதல்களுக்கு எட்டாத வாழ்க்கை வாழ்ந்தவர்கள்  சித்தர்கள

 

மதம் மொழி இனம் ஆகிய பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட இவர்களின் 

 

இருப்பே அந்த சூழ்நிலைக்கு ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும். 

 

படித்தவர் படிக்காதவர் பணக்காரர் எளியவர் என அணைத்து தரப்பு மக்களுக்கு 

 

தாயாக, தந்தையாக, சகோதரியாக குருவாகா, நண்பனாக வழிகாட்டியாக விளங்கிய எண்ணற்ற குருமார்களில்  

 

வாழும் காளி என்று வணக்கபட்ட பெண் சித்தர் ஆனந்தமாயி மா. 




பிருந்தாவனத்தில் கிருஷ்ண பகவான் வாழ்ந்த காலத்தில் 

 

அந்த ஊரே ஒருவித பரவசத்தில் இருந்ததாக சொல்வார்கள் , 

 

அப்படி ஒரு சூழ்நிலையை தான் ஆனந்தமயி வெளிப்படுத்திவந்தார். 

 

மனிதர்களுடன் மட்டுமல்லாமலம் 

 

செடி கொடிகள் , பறவைகள் , விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்கு 

 

அவரின் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது.

 

இவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் இவரை தங்களில் ஒருவராகவே பார்த்தார்கள் 

 

யாரும் அவருக்கு அந்நியராககவே இருந்ததில்லை

 

அதனால் இவர் பயணப்பட்ட  இடங்கள் எல்லாமே அவரின் வாழ்விடம் போலவே விளங்கியது 

 

இந்திய  எல்லையை தாண்டி வசித்த மக்களின் இதயங்களில் ஆனந்தமாயி குடிகொண்டிருந்தார். 

 

அவர் வங்காளத்தை விட்டு வெளியேறி மற்ற மாகாணங்களுக்குச் சென்றபோது, 

 

அவரது இருப்பு அந்தந்த ஊர்களின் தெய்வத்தன்மையே வெளியப்படுத்தியது. 

 

புனித நர்மதையின் கரையில், அவர்  “தேவி நர்மதா” என்று அழைக்கப்பட்டார் . 

 

மதுரையில் மினாக்ஷி தேவியாகப் உணரப்பட்டார், 

 

பஞ்சாபில் புனித கிரந்த நூலுக்கு உண்டான மரியாதையை அவருக்கு கொடுக்கபட்டது , 

 

இஸ்லாமிய பக்தர் தன் தியானத்தில் அன்னையின் தலையில் பிரை இருப்பதாய் கண்டிருக்கிறார், 

 

இனி கடவுளுக்கு ஒரு முகம் உள்ளது என்று நாம் கூறிக்கொள்ளலாம் என்று அன்னையை காண்பித்தார் ஒரு கிறிஸ்துவர்.

 

அல்மோரா மலைவாழ் மக்கள் “நீங்கள் எங்களோடு இருப்பதால் இனி நங்கள் கோவிலுக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது என்று போற்றினர்.  

 

ஸ்ரீ மா ஆனந்தமயி அவதரித்த ஊரான தாக்காவில் அவரை மனுஷ காளி அதாவது உயிருடன் வாழும் காளி என்றே அழைத்தனர் 



ஸ்ரீ மா ஆனந்தமயி, ஏப்ரல் 30, 1896 இல், 

 

தற்போதைய வங்காளதேசத்தில் உள்ள கியோரா என்ற சிறிய கிராமத்தில் ஒரு எளிமையான பிராமன குடும்பத்தில் பிறந்தார்.

 

பெற்றோர் அவருக்கு நிர்மலா சுந்தரி தேவி எனப் பெயரிட்டனர்.

 

சிறுமி நிர்மலா தேவி துடிப்பான துள்ளி திரியும் மான்குட்டியைப் போல   இருந்தார்.

 

அக்கம்பக்கத்தில் இருக்கும் அனைவரின் பிரியத்தை பெற்றவர்.

 

அவரால் அந்த வயதிற்கு என்ன வேலை செய்ய முடியுமே அதனை செய்து கொடுப்பார்.

 

அக்கிராமத்தில் அதிக அளவில் இஸ்லாமிய குடும்பத்தினர் வாழ்ந்தாலும் அனைவருக்கும் 

 

நிர்மலா தேவி என்றால் அதிக பிரியம்.

 

ஸ்ரீ மா ஆனந்தமயின்  தந்தை வைஸ்வை சம்பிரதாயத்தை கடைபிடிப்பவர், 

 

பக்தி பாடல்கள் பாடுவதில் வள்ளுனர் , 

 

அவரின்  பாடலுக்கு கள்நெஞ்சமும் கரையும் 

 

அவர் மனம் உருகி பாடினால். 

 

அந்த தெய்வமே நேரில் இறங்கி வந்திடும் அளவிற்கு அவரின் குரலில் கருணை இருக்குமாம்.

 

அவரின் தாயாரே அன்பும் பாசமும் கொண்டு குடும்பத்தை கவனிக்கும் ஒரு வீட்டு தெய்வம்,

 

மிகச் சாமானிய குடும்ப பெண் என்றாலும் அவரை கடந்து வந்தவர்கள் யாரும் அவரை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.





அன்னைக்கு ஒரு 13 வயது இருக்கும் போது அக்கால வழக்கப்படி அவருக்கு ரமணி மோகன் சக்ரவர்த்தி என்பவருடன் திருமணம் நடந்தேரியது.

 

 திருமணத்திற்கு பிறகு தனது கனவரின் முத்த .சகோதரரான ரேவதி மோகன், . பிரமோதா தேவி தம்பதியரோடு வாழ்ந்து வந்தார்.

 

கணவர் அப்புராவில் பணியாற்றிக்கு கொண்டிருந்தார்.

 

தனது பிறந்த வீட்டில் துள்ளித்திரியும் மான் குட்டியை போல பாடி ஆடி திருந்த வருக்கு 

 

புகுந்த வீட்டின் கடமைகள் அணி வகுத்து நின்றது

 

சமைப்பது, வீட்டு கூட்டுவது துணி துவைப்பது, குழந்தைகளை பராமரிப்பது என அனைத்து வேலைகளும் இவரின் மேல் விழுந்தன.

 

இருந்தும் முகத்தில் சிறிதும் வெறுப்போ களைப்போ காட்டாமல் தன்னால் முடிந்ததையும்  தனக்கும் மீறிய அனைத்து வேலைகளையும் 

 

இழுத்து போட்டு செய்தார் அன்னை

 

அவருடைய கரிசனமான போச்சும் சிரிப்பும் அன்பும் கணவரின் குடும்பத்தையும் வெகுவாக கவர்ந்தது.

 

ஆனால் எவ்வளவு வேலை கொடுத்தாலும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு நடந்து கொள்ளும் அன்னையின் இந்த மணப்பான்மை

 

அவரது புதிய குடும்பத்தில் சில கவலைகளை ஏற்படுத்தியது

 

எப்படி இச்சிறு பெண்ணால் இவ்வளவு பெருந்தன்மையோடு நடந்து கொள்ள முடிகிறது என்று அவர்களுக்கு தோன்றியது.

 

அன்னையின்  குழந்தைப் பருவத்திலும் அவரின்  பெற்றோரின் எண்ணங்களில் இதே பயம் இருக்கத்தான் செய்தது. 

 

சாதாரண சிறுமிகளை போல ஒரு விளையாட்டே குறும்புத்தனமே இல்லாமல் இருப்பது எப்படி சாத்தியம் என்று எண்ண வைத்தது.

 

அன்னை யோடு நெருங்கிய பழகிய தோழிகளுக்கு கூட அவரின் நிலையை உணர்ந்து கொள்ள சில வருடங்கள் ஆனது.

 

அன்னையிடம் பல ஆண்டுகள் பழகிய வானியிடம் அன்னை அடிக்கடி “எது கடந்து போகிறதே அதை அப்படியே விடு” என்று கூறுவாராம்.



அன்னையின் சேவை மனப்பான்மையின் சுற்றுப்பாதையில் யார் வந்தாலும் அவருடைய எல்லையற்ற இரக்கம் நிரம்பி வழிந்ததை 

 

யாரும் காணத்தவறவில்லை

 

குடும்பம், அயலவர்கள், வேலையாட்கள் விலங்குகள் மற்றும் தாவரங்கள் கூட 

 

தங்கள் நலனில் அன்னை கொண்டிருந்த உள்ளார்ந்த ஆர்வத்தின் மாயத் தொடுதலை உணர்ந்தன.

 

அன்னயிடம் அசாத்தியமான நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தது 

 

தன் நண்பர்கள் செய்யும் தவறுகளை நகைச்சுவை போடு அதே சமயம் யார் மனதும் புண்படாதபடி வெளிப்படுத்துவார்.

 

அன்னை எப்போதும ஒரு ஒழுக்கத்தை விருப்புவார்.

 

தன்னை சுற்றியிருப்பவர்கள் அதனை தவறவிடும் போது 

 

அவர் வெளிப்படுத்தும் ஒரு மென்மையான புன்னகை வைத்த தோ உடல் அசைவை வைத்தோ மற்றவர்களுக்கு புரிய வைப்பார்.

 

இது யாருக்கும்  ஆதிக்கம் செலுத்துவதாகவே தோன்றாது..




1915 திரு மோகன் சக்ரவர்த்தி மரணமடைந்த பின் 

 

தனது 18 வயதில், இரு குடும்பத்தாரின் பரஸ்பர சம்மதத்துடன் 

 

அன்னை தனது கணவருடன் அவர் வேலை செய்யும் இடத்தில் தங்குவதற்காக அஷ்டகிராமத்திற்கு வந்தார்.  

 

அன்னை தன் கணவரை போலேநாத் என்றே அழைப்பார்.

 

அன்னை அஷ்டகிராமத்திற்கு வரும் நேரத்தில் அவருடைய தாய் இவரிடம், 

 

நீ உன் தந்தைக்கு கொடுத்த அதே மரியாதையையும் பணிவையும் கணவனுக்கும் கொடுக்க வேண்டும் என்று கூறினர்.  

 

தாயாரின் இந்த வேண்டுகோளை அன்னை தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார்.

 

போலாநாத் அன்னையிடமிருந்து  ஒரு நட்பு கலந்த மரியாதையை பெற்றார். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

 

போலேநாத்தும் ஒரு விலை மதிப்பற்ற பொக்கிஷத்தை பாதுகாக்கும் பெறுப்பை தன் தோள்களில் அப்படியே வாங்கிக் கொண்டார்.

 

1938 இல் அவர் சமாதியடையும்  வரை அன்னையை கவனமாகவும் கருணையோடும் கவனித்து கொண்டார்.

 

அன்னை போலாநாத்ஜியின் திருமண வாழ்க்கையின் குறித்து நிறைய எழுதப்பட்டுள்ளது. 

 

அவர்களின் நட்உறவு , சாதனா பிரம்மச்சரியம் குறித்து வார்த்தைகளால் விவரிக்க முடியாது 

 

ஏனெனில் இதனுள் அவர்களுக்கு எந்த கருது வேறுபாடும் வந்ததில்லை 

 

இது ஏன் அவரோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு கூட எந்த  இடத்திலும் ஒருபோதும் எழவில்லை. 




போலாநாத்ஜிக்கு பஜித்பூருக்கு பனி இடமாற்றம் செய்யப்பட்டதால் 

 

அவரும் அன்னையும்  அஷ்டகிராமில் இருந்து பஜித்பூருக்கு வந்துவிட்டார்கள்.

 

பஜித்பூர் நகரமானது அன்னையின் வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது, 

 

அங்கு வாழ்ந்த காலத்தில் அன்னை பல்வேறு தீவிர சாதனா செயல்முறைகளைக் கடந்து சென்றார் என்றாலும் 

 

சிறந்து குடும்ப தலைவியாகவும் நிகரில்லா துணைவியாகவும் விளங்கினார் 

 

பணியிலிருந்து திரும்பிய போலாநாத்ஜியின் தேவைகளை அன்னை கவனித்துக் கொள்வர் . 

 

அவரது இரவு உணவிற்குப் பிறகு 

 

புகைபிடிப்பதற்கு ஒரு ஹூக்காவை தயாரிப்பது பற்றிய விஷயங்கள் கூட அன்னை தான் செய்து வைப்பார் 

 

போலாநாத்ஜி உறங்க செல்லும் போது அவரிடம் தான் சிறிது சாதனாவில் ஈடுபட அனுமதி கேட்பார் . 

 

அவரும் இதை, உடனடியாக அனுமதித்தார். 

 

அன்னை அறையின் ஒரு மூலையில் தரையில் அமர்ந்து,

 

 ‘ஹரி, ஹரி, ஹரி’… என்ற வார்த்தையை ஜெபிக்க துவங்குவார் 

 

இந்த நாமங்களை அவரது சிறுவயதில் தன் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டார் . 

 

நாம ஜெபம் ஆரம்பித்த சில நிமிடங்களில் அன்னை மகிழ்ச்சியின் உலகில் படிப்படியாக உள்வாங்கப்படுவதைக் போலாநாத்ஜி கண்டார். 

 

நாளாக நாளாக அன்னை ஒரு குறிப்பிட்ட யோகா ஆசனத்தில் அமர்ந்து இந்த ஜெபத்தை செய்வதை போலோநாத் கண்டார் 

 

அது  அநேகமாக சித்தாசனமாக இருக்கும் . 

 

ஆனால் அன்னைக்கு  யோக ஆசனங்கள் பற்றி எந்த விஷயங்களும் தெரியாது என்பது 

 

போலநாத்ஜி நிச்சயமாக அறிந்திருந்தார். 

 

ஆனாலும் அந்த அமானுஷ்யங்கள் அங்கு நடக்கும் . 

 

இப்படி இருக்கையில் ஒரு நாள் போலோநாத் ஜி அன்னையிடம் 

 

நீ , “ஏன் ‘ஹரி’ என்கிறாய்? நாங்கள் வைஷ்ணவர்கள் அல்லவே ”.  என்றார் 

 

உடனே அன்னை அதற்கு  “அப்படியானால் நான் சிவா, சிவா என்று சொல்லட்டுமா?” என்று கேட்டார். 

 

போலாநாத்ஜி ஒத்துக்கொண்டார் 

 

ஆனால் நாமத்தில் மாற்றம் சாதனாவின் கிரியாக்களில் எந்த மாற்று விளைவையும் ஏற்படுத்தவில்லை.

 

அன்னை இந்த நாம ஜெபத்தை செய்யும் சமயங்களில் அவர் எதையும் காட்சிப்படுத்துவதில்லை என்று கூறியுள்ளார் 

 

ஆனால் அவரது  உடல் இந்த பிரபஞ்ச இசைக்கு ஒரு கருவியாக மாறியிருக்கும் 

 

அவர்  உச்சரித்த எழுத்துக்களின் ஓசையோடு அவர் ஒன்றிவிட்டது போல தோன்றும் ;

 

அவருக்குள்  நாட்டிய சாஸ்திரங்களின் அதிபதி அமர்ந்து 

 

அவரது உடல் உறுப்புகளை இயக்கி ஆட வைப்பது போல பார்ப்பவர்களுக்கு தோன்றும் 

 

சில சமயங்களில் அவர் பல மணி நேரம் அசைவற்று அமர்ந்திருப்பார். 

 

அப்படிப்பட்ட சமயங்களில் அவரது உடலில் ஒரு ஒரு பிரகாசமான வெளிச்சம் வெளிப்படும்

 

இதுவும் பார்ப்பவர்களுக்குத் நன்றாக தெரியும், 

 

அந்த வெளிப்பாட்டின் உண்மைத்தன்மையை ஒருபோதும் சந்தேகிக்காமல் அவர் ஆட்கொள்ளப்படுவதை போலநாத்ஜி உணர்ந்தார் ; 

 

ஒரு சாதகர் என்ற நிலையை கடந்து அடுத்த பரிமாணத்திற்கு சென்று விட்ட அன்னை 

 

இன்னமும் தான் ஒரு சாதகர் தான் என்று நடிப்பது போல அவருக்கு தோன்றும் 

 

இதன் காரணமாக சில அண்டை வீட்டாரின் எதிர்மறையான கருத்துக்களை அவரால் ஒதுக்கித் தள்ள முடிந்தது.

 

அடுத்த ஆறு ஆண்டுகள் அன்னையின் ஆன்மீக பயிற்சிகல் முழு தீவிரத்தில் இருந்தன 

 

தன் வாழ்க்கையையே  ஒரு ஆன்மீக யாத்திரை போல வாழ்ந்தார் 

 

இந்த நேரத்தில் தான் அவர் தன்னைத்தானே தீக்ஷை கொடுத்துக்கொண்டு    

 

ஒரு குறிப்பிட்ட ஆன்மீக முறைகை பின்பற்ற துவங்கினர்

 

போலாநாத்ஜி தெய்வீக சக்தியின் மிகவும் சிறப்பான அரவணைப்பில் தான் இருப்பதாய் உணர்ந்து கொண்டார். 

 

இந்த வெளிப்பாட்டின் முதல் வருடத்தில் அன்னையிடமிருந்தும் போலோநாத் ஜியும் தீக்கை ஏற்றுக்கொண்டார் 

 

அதன்பிறகு அவர்களது உறவு ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றது – குரு மற்றும் சீடரின் உறவு போன்று அமைந்தாலும் 

 

போலாநாத்ஜியின் விருப்பத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிதல் மற்றும் மரியாதை என்ற அணுகுமுறையில் அன்னை  ஒருபோதும் மாறவில்லை.

 

அன்னை தனது வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில்,

 

“ஒரு மனிதன் தன்னை உணர்ந்து கொள்ள முயற்சிக்கும் சாதனங்களில் பல வகை உண்டு . ஒவ்வொன்றும் தனித்தனி வழிமுறைகளை கொண்டது 

 

இது அனைத்தும் சேர்ந்து தான் என்னை உருவாக்கியது என்பர்  

 

பிந்தைய ஆண்டுகளில், துறவிகள், அறிஞர்கள் அல்லது ஆன்மீக தேடுதலில் உள்ளவர்களின்  கூட்டங்களில் 

 

தனது அனுபவங்களைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. 

 

அச்சமயங்களில் அவர் வெளிப்படுத்தும் விஷயங்கள் பண்டிதர்களை கூட ஆச்சயப்பட வைக்கும் , 

 

இப்படி ஒரு பரிமானம் இருப்பதை அப்போது அவர்கள் உணர்ந்து கொள்வர் 

 

அப்படியிருந்தும் தனது பல வருட தீவிர சாதனாவின் போது 

 

தனக்குத் தெரிந்தவற்றில் ஆயிரத்தில் ஒரு பகுதியைப் பற்றி தான் இப்பொது நான் பேசுகிறேன் என்பார் 

 

அன்னையின் அதிசயங்கள் தொடரும் ,,,,,,,,,,,,,,,,






முதல் பாகத்தில் ஸ்ரீ மா அனந்தமயி யின் பிறப்பு அவருடைய குழந்தை பருவம் திருமணம் கணவர் குடும்பம் அன்னையின் சாதனா போன்ற செய்திகளை பார்த்தோம் 

 

இனி இரண்டாம் பாகம் 

 

1922ல் அன்னை மௌனத்தை கடைபிடிக்க துவங்கினர் 

 

இந்த மௌனம் அவரது சாதனா நிறைவேறியதன் அடையாளமாக வந்தது. 

 

மௌன காலத்திற்குப் பிறகு  அவரை சந்திக்க வரும் பக்தர்களிடம் ஆன்மிகம் சம்பந்தமாக உரையாட துவங்கினர் அன்னை 

 

இரண்டு வருடங்கள் கழித்து பஜித்ப்பூரில் இருந்து டாக்காவிற்கு இருவரும் இடம் பெயர்ந்தனர் 

 

அங்குள்ள ஷாபாக் தோட்டத்தின் மேலாளராக ஸ்ரீ போலோநாத் பணிபுரிந்தார்.

 

அஷ்டகிராமிலும் பஹஜித்ப்பூரிலும் அன்னையை பற்றி அறிந்தவர்களின் சொந்தக்காரர்கள் நிறயை பேர் தாக்கவில் இருந்தனர் 

 

இதனால் டாக்கா மக்களுக்கு அன்னை ஆன்மீக சக்தி படைத்தவர் என்ற செய்து பரவலாக பரவியது 

 

அப்படி அன்னையை தரிசிக்க  வந்தவர்கள் அவருடைய நீண்ட கால அன்பர்கள் ஆகிப்போனார்கள் 

 

வைதீக வழக்கங்களை பின்பற்றிய அன்னை பொது இடங்களில்  தன்னை வெளிப்படுத்திக்கொண்டதில்லை 

 

தனது கணவர் யாரிடமாவது பேச சொன்னால் மட்டும் பேசுவார் 

 

ஆனால் பெண்கள் அவரை தரிசிப்பதற்கு எந்த தடையும் இருந்ததில்லை 

 

சுற்றி எப்போதும் ஒரு பெண்கள் கூட்டம் இருந்தது 

 

ஆண்களுக்கு இது சாதகமாக இல்லையென்றாலும் சமூக கட்டமைப்பிற்கு அவர்கள் மதிப்பு கொடுத்தனர் 

 

இந்த பக்த கூட்டம் நாளடைவில் ஒரு குடும்பமாக வடிவெடுத்ததற்கு ஸ்ரீ போலோநாத்தின்  பங்கு அளப்பரியது 

 

அவரின் தன்மையை அறிந்து கொண்ட மக்கள் அவரை பாபா போலோநாத் என்று அழைக்க துவங்கினார் 

 

 ஸ்ரீ போலோநாத்தின் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் பல வருடங்களுக்குப் பிறகு டாக்காவில் ஒன்று கூடினர். 

 

தங்களின் குடும்பம் தகப்பனாரின் மரணத்திற்கு பிறகு சிதறடிக்கப்பட்டு எல்லாரும் வேறு வேறு இடங்களில் வாழும் சூழல் ஏற்பட்டது 

 

ஆனால் தங்களது சகோதரரின் மனைவியின் கருணையால் அந்த குடும்பம்  ஒன்று சேர்ந்தது அக்குடும்பத்தினரிடையே அன்னையின் மீதிருந்த மதிப்பு அதிகமானது  




இந்த சமயங்களில்  அன்னை  ஒரு அதிசயமான சூழ்நிலையில் வாழ்ந்தார். 

 

அவருடைய ஆசீர்வாதம் பலரை குணமடைய செய்தது.

 

கீர்த்தனையின் போது அவர் பாவசமாதி நிலைக்கு போய்விடுவார்.

 

அவரது உடலில் உயிர் உள்ளதா இல்லையா என்ற சந்தேகம் கூட எழும் 

 

அபப்டிப்பட்ட நிலையில் இருப்பார் .

 

அவருடைய கீர்தனைகளுக்கு ஏற்றவாறு அவரது உடலின் உறுப்புக்கள் அசைந்து கொடுக்கும்

 

இதை பார்ப்பதற்கு எப்படி இருக்குமென்றால்

 

ஒரு இலை காற்றின் வேகத்திற்கு அசைந்து கொடுத்து அங்குமிங்கும் மேலும் கீழுமாக பறந்து செல்வது போல தோன்றும்.

 

இந்த அசைவுகளுக்கு பிறகு அவர் அசைவற்ற நிலைக்கு அதாவது சமாதி நிலைக்கு சென்று விடுவார் 

 

பல மணி நேரம் அதேலையே இருப்பார் 

 

அவரை அந்நிலையில் இருந்து இயல்பு நிலைக்கும் கொண்டு அவரும் பொறுப்பை போலோநாத் ஏற்றிருந்தார்.

 

அவர் ஒருவரின் குரல் மட்டும் தான் அன்னையை சுயநினைவுக்கு கொண்டு வரும்   

 

போலாநாத்ஜி.அன்னையை  கூப்பிட்டதும்

 

அன்னை எப்படியாவது கண்களைத் திறந்து, “நான் எழுந்திரிக்கட்டுமா?” என்று என்று மயக்க நிலையில் கேட்பார். 

 

அப்போது சார் போலோநாத்  அவர் அருகில் இருக்கும் பெண்களிடம் கை, கால்களை மெதுவாகத் தேய்க்கச் சொல்லி 

 

அன்னையிடம்  பேசிக் கொண்டே சில கேள்விகளுக்குப் பதில் சொல்லச் செய்வார். 

 

இந்த வழியில் மெதுவாக அன்னை  இயல்பு உலகத்திற்கு இழுக்கப்படுவார். 



அன்னையின் சீடர்களில் மிக முக்கியமானவர் Sri Gurupriya Ananda Giri  என்ற தீதீ  

 

அன்னையின் பக்தர்கள் அனைவர்க்கும் தீதீயை தெரியும் 

 

கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் அன்னையுடன் வாழ்ந்து அவருக்கு தொண்டு புரிந்தவர் 

 

அவர் அன்னையின் இந்த சமாதி நிலையை பற்றி குறிப்பிடும்போது 

 

அன்னை இயற்கையாகவே ஒரு கடவுள் மயக்க நிலைக்கு சென்று விடுவார் 

 

இந்த நிலையில் இருக்க தான் எல்லா சாதகர்களும் விரும்புவர் , 

 

ஆனால் இதனை போதை என்றோ மயக்கம் என்றோ சொல்ல கூடாது 

 

இது அதை எல்லாம் தாண்டிய ஒரு நிலை 

 

அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது 

 

அநேரத்தில் அவர் கம்பீரமாகவும் எளிமையாகவும் கணவப்படுவர் 

 

அன்னையிடம் இயல்பான நிலை  அல்லது உச்சநிலை இவ்விரண்டும் பிரிக்கமுடியாத தன்மைகளாக விளங்கின

 

இது எப்படி என்றால்  “ ஒருவர் சூரிய ஒளியையும் நிலவொளியையும் ஒரே நேரத்தில் அனுபவிப்பது போல் இருக்கும் . 

 

சூரியனின் அந்த வெப்பமும் சந்திரனனின் அந்த குளிர்ச்சியும் ஒரே நேரத்தில் ஒருவரை தாக்குவது போல இருக்கும். 

 

அன்னை திருமணம் முடிந்து தனது மைத்துனர் வீட்டில் வசிக்கும்  கூட சில நேரங்களில் இந்த பரவச நிலையில் இருப்பார் 

 

ஆனால் அந்த காலகட்டத்தில் இது அனைத்தும் யாராலும் புரிந்துகொள்ள முடியாமல் போனது.

 

இச்சமயங்களில் எல்லாம் அவருக்கு எதோ வலிப்பு நோய் உள்ளது என்றும் 

 

அவர் வளர்ந்து பெரியவளானதும் இது தானாக மாற்றிக்கொள்ளும் என்று அவர்கள் கருதினர் 



இந்த மகிழ்ச்சியான கால கட்டங்களின் ஆயுள் மிக குறைவாகவே இருந்தன 

 

ஆம் அன்னை தாக்காவை விட்டு வெளியேற முடிவு செய்திருந்தார் 

 

அவரது கணவரும் அவரும் பல தலங்களுக்கு புனித யாத்திரை செல்ல விரும்பினார் 

 

என்னதான் பக்தர்கள் தாக்கவில் அவருக்கு ஒரு ஆஸ்ரமம் கட்டி வைத்தாலும் அன்னை அங்கு தங்கப்போவதில்லை 

 

என்பதை டாக்கா பக்தர்கல் புரிந்துகொண்டு 

 

எனவே அந்த பிரிவிரிக்கு தங்களை தயார்படுத்தி கொண்டனர்





அன்னையின் எண்ணப்படி அவரும் கணவரும் மற்றும் ஒரு சீடரான பாய்ஜியும்  ஜூன் 2, 1932 அன்று டாக்காவிலிருந்து புறப்பட்டனர்.

 

அன்னையின் சீடர்களில் தலைசிறந்தவர் என்ற பெருமையை பெற்றவர் பாய்ஜி 

 

அன்னையின் எண்ணங்களையும் பாவங்களையும் பாய்ஜியை போல யாரும் புரிந்துகொள்ள முடியாது என்றி பெயர் பெற்றவர் 

 

தீவிரமான ஆன்மீக தேடுதலில் இருந்த பாய்ஜி 1924 ஆம் ஆண்டு அன்னையை  முதன்முறையாக தரிசித்த மாத்திரத்திலேயே  சரண்டைந்தவர் 

 

நிர்மலா தேவி என்ற பெயர் கொண்ட  அன்னைக்கு ஆனந்த மயி மா என்றி பெயர் கொடுத்தவர் பாய்ஜி என்பது குறிப்பிடத்தக்கது

 

இமூவரின் யாத்திரை கடினமான வழிகளை கடந்து டேராடூனை வந்தடைந்தனர் . 

இங்கிருந்து தொலைதூர கிராமமான ராய்பூருக்குச் சென்றனர். 

 

அக்கிராமத்திலிருந்த பாழடைந்த சிவன் கோவிலில் தங்கியிருந்தனர். 

 

இந்த காலகட்டம் அன்னைக்கும் அவரது கணவருக்கும் ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமாக இருந்தது. 

 

ஸ்ரீ போலோநாத் முழுமையாக தன்னை சாதனாவில் ஈடுபடுத்தி கொண்டார்

 

பாய்ஜி அவர்கள் தங்கி இருக்கும் இடத்தை துடைப்பதும் சுத்தம் செய்வதும், துணி துவைப்பதும், உணவு சமைப்பது போன்ற பணிகளை ஏற்றார் 

 

அதுவரை சேவகர்களிடம் இருந்த கிடைத்த உதவியில் எதுவும் இப்பொது இல்லாமல் 

 

அனைத்தையும் அவரே செய்வது கொஞ்சம் கடினமான வேலையாக இருந்தது. 

 

சில நேரங்களில் அன்னை அவருக்கு உதவுவார், 

 

மற்ற நேரங்களில் அன்னை தனியாக அந்த  பகுதியில் சுற்றி திரிவர் அல்லது கிராம பெண்கள் சூழ அமர்ந்து பேசிக்கொண்டிருப்பர். 

 

அன்னை  டேராடூனுக்கு திரும்பியதும் அன்னையும்  பாய்ஜியும்  ஆனந்த சவுக்கில் உள்ள மனோகர் கோயிலில் தங்கினர். 

 

ஸ்ரீ போலோநாத் மட்டும்  3 ஆண்டுகள் சாதனா செய்வதற்கு  உத்தரகாசி சென்றுவிட்டார் 

 

அச்சயமத்தில் டேராடூனில் அருகில் வசிக்கும் அனைத்து காஷ்மீரி குடும்பங்களும் அன்னையை சரணடைந்தனர். 

 

இச்சமயத்தில் தான் ஜவார்ஹரல் நெர்ஹருவின் மனைவி கமலா தேவி அன்னையின் கருணையால் ஈர்க்கப்பட்டார், 

 

கமல் நேருவின் மூலமாகத்தான் மஹாதம காந்தி அன்னையை பற்றி தெரிந்துகொண்டு அன்னையை தரிசித்தார் 

 

பின்னர் நேருவும் இந்திராகாந்தியும் கூட அணையை தரிசித்து மகிழ்ந்துள்ளனர் 

 

டெஹ்ராடூன் மற்றொரு டாக்கா ஆனது. 

 

அன்னையின் ஆனந்த  அலை டெஹ்ராடூன் அல்லாது டெல்லி, மீரட், லக்னோ, சோலன் மற்றும் சிம்லா போன்ற பிற நகரங்களுக்கும் பரவியது. 

 

சிம்லாவில் ஹரி சபாவின் கீழ் ஹரி-கீர்த்தனை விழா ஸ்ரீமாவின் முன்னிலையிலும் நடந்தது 

 

அன்னையின் இருப்பு நிகழ்விற்கு புது பரிணாமத்தை கொடுத்தது , 

 

ஸ்ரீ போலாநாத் தன் சாதனாவை முடித்து  

 

உத்தர்காசியில் இருந்து  கீழே வந்து அன்னையுடன் மீண்டும் சேர்ந்தார்  

 

அவர் புதிய பக்தர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் 

 

பக்தர்களும் முழு மனதுடன் அவரை தந்தையாக  ஏற்றுக்கொண்டனர்.

 

அன்னையின் அரவணைப்பை  ஆனந்தத்துடன் கழித்து வந்த பக்தர்களுக்கு 

 

இந்த காலகட்டம் ஒரு சோதனை  காலமாக அமைந்தது. 

 

அன்னைக்கு தொண்டுசெய்து வாழ்வதே பனி எண்டிருந்த பாய்ஜி அல்மோராவில் 1937 ஆகஸ்ட் முக்தி அடைந்தார், 

 

 அதனை தொடர்ந்து 1938 மே அன்னையின் கணவர் ஸ்ரீ போலேநாத் கிஸேன்பூர் ஆஸ்ரமத்தில் முக்தி அடைந்தார் 

 

அன்னைக்கும் அவரது கணவர் ஸ்ரீ போலெனத்திற்கு இருந்து உறவு மிக புனிதமானது 

 

கணவன் மனைவி என்ற நிலைகளை கடந்த ஒரு பரிமாணம் அது 

 

அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது 

 

அன்னை மிகவும் அர்ப்பணிப்புள்ள மனைவியாக இருந்தார், 

 

ஸ்ரீ போலேநாத்  வாழ்க்கையின் கடைசி நொடிகளில் அன்னை தான் உடன் இருந்தார். 

 

அவரின் உயிர் உடலை விட்டு சமயத்தில் அன்னையின் தூய கரம் அவரின் தலையை வருடி கொடுத்த வண்ணம் இருந்தது 

 

ஸ்ரீ போலேநாத்  ஆனந்தா என்று கூறு உடலை விட்டு பிரிந்தார் 

 

அன்பான கணவர் பிரிக்க முடியாத சிஷ்யர் இருவரின் 

மறைவு அன்னைக்கு ஒரு புதிய புரிதலை ஏற்படுத்தியது. 

 

கணவரின் மரணத்தால் அன்னை  கலங்கிவிடுவாரோ என்று பெரும்பாலான பக்தர்கள் நினைத்தார்கள் 

 

ஆனால் அன்னையிடம் துக்கத்தின் அறிகுறிகள் எதுவும் தென்படாததைக் கண்டு வியந்தனர். 

 

அவர் எப்போதும் போல் அமைதியாக இருந்தாலும் . 

 

பக்தர்களின் மனநிலையை புரிந்துகொண்ட அன்னை இவ்வாறு கூறினார் 

 

“உங்கள்  வீட்டில் ஒருவர் ஒரு அறையில் இருந்து அடுத்த அறைக்கு சென்றால் நீங்கள் துக்க பட துவங்குவீர்களா

 

மரணம் மனித வாழ்க்கையில் பிரிக்க முடியாத நிகழ்வு 

 

 முக்தி பயணத்தில் மரணம் இழப்பு பற்றிய கேள்வி இடமுமில்லை 

 

யாரும் யாரையும் இழப்பதுமில்லை .” என்றார்.

 

அன்னையின் பற்றற்ற நிலையையும்  அதே நேரம் அணிவரிடத்தும் கொண்டிருந்த முழு ஈடுபாடும் 

 

அவரது தன்மையை பக்தர்களுக்கு எடுத்துரைத்தது. 

 

வருடங்கள் செல்ல செல்ல அவரது இருப்பின் அர்த்தம் ஆழமடைந்தது; 

 

பல்வேரு காலகட்டங்களில் பல்வேறு சாதனாக்களில் ஈட்டுபட்டு ஒவ்வொரு பரிமாணத்தையும் கடந்து சென்று கொண்டே இருந்தார் , 

 

அவரை சுற்றி இருந்தவர்கள் இத்தகைய  கண்கூடாக கண்டனர் , 

 

பொதுவாக ஒரு சாதகருக்கு ஒரு நிலையை கடக்க  பல ஆண்டுகாலம் தேவைப்படும் 

 

ஆனால் அன்னைக்கு அவையனைத்தும் வெகு சீக்கிரத்தில் நிகழ்ந்தது  

 

அவர் ஒரு ஆசிரியராக இருக்கவில்லை,

 

 ஆனால் பல சிக்கலான ஆன்மீக கேள்விகளுக்கு அவர் கூறிய தெளிவான விளக்கங்களிலிருந்து 

 

மக்கள் அவர் யார் என்பதை புரிந்து கொண்டனர் 

 

இதன் காரணமாக  பக்தர்களை தாண்டி படித்த மேதைகளும் அறிஞயர்களுக்கும் கூட அன்னையிடம் ஈர்க்கப்பட்டனர் 



மேலும் கற்றறிந்த பண்டிதர்களுடனான உரையாடல்களில்  அனைத்து கோட்பாடு வேறுபாடுகளையும் அவர் முழுமையாக அறிந்திருந்தார் .

 

இத்தனைக்கும் அவர்  எந்த ஒரு குறிப்பிட்ட மத சம்பிரதாயங்களையும் பின்பற்றவில்லை 

 

யாரும் அவருக்கு இதுபோன்ற பயிற்சிகளையும் கொடுத்ததில்லை 

 

முக்கியமாக அவர் வாழ்க்கையில் அவரின் குரு என்று கூட யாரும் ஆதிக்கம் செயலுத்தவில்லை .

 

பாரம்பரியத்தில் பொதுவாகப் செய்யப்படும் சாதனாவை அவர்  செய்யவில்லை, 

 

ஆனால் ஆன்மீக தேடலின் அனைத்து அம்சங்களிலும் அவரால் அதிகாரத்துடன் பேச முடிந்தது . 

 

அதனால் தான் அவரை விவரிப்பதற்கு ‘தனித்துவம்’ என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டது.

 

Episode 3

 

அன்னை  தனது பயணங்களை எல்லாம் உட்கார்ந்து திட்டமிடுபவர் அல்ல தன் உள்ளுணர்வு படி நடப்பார் , 

 

அதுபோலவே அவருடன் யார் வரவேண்டும் என்றாலும் அவர் தீர்மானிப்பது கிடையாது 

 

ஆனால் அவரை சுற்றி எப்போதும் ஒரு வண்ணமயமான பக்தர்கள் கூட்டம்  இருக்கும், 

 

பல சமயங்களில் 

வெவ்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள், வெவ்வேறு வாழ்க்கைத் தரப்பு மக்கள், பல்வேறு  மொழி பேசும் மக்கள் என பல்தரப்பட்டோர்



அன்னையின் மகிழ்ச்சியான கூட்டங்களில் ஒன்றாகக் கலந்துகொள்வர்  

 

சக்திவாய்ந்த பூஜைகளில் அன்னை கலந்து கொள்வர் விருப்பப்படுவார் 

 

எனவே பக்தர்கள் அவரவர் ஊர்களில்  பகவத் சப்தம், துர்கா பூஜை, சந்திபாதம் போன்றவற்றை அன்னையின் தலையின் கீழ் நடத்துவார்கள். 

 

அன்னை  எங்கிருந்தாலும், அந்த இடம் உடனடியாக ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் மையமாக மாறி விடும். 

 

அங்கு  கூட்டம் கை மீறி  போன பின் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் அன்னையை  கைகூப்பி வணங்கி விலகி நிற்பர் 

 

அங்கிருக்கும் தன்னார்வலர்கள் சிலர் கூட்டத்தை கட்டுப்படுத்துவர் 

 

பின் அன்னையின் கருணையால் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும் ,  

 

இது போன்ற நிகழ்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது 

 

யாரொருவர் அந்த இடத்தில இருக்கிறார்களோ அவர்களுக்கு அங்கே என்ன நடக்கிறது என்று புரியும், 

 

அன்னை சென்ற நகரங்களில் எல்லாம் பக்தர்கள் அவர் நினைவாக அங்கங்கே ஆசிரமங்களை கட்டினார் 

ஆனால் அது அவரது நடமாட்டத்தை கட்டுப்படுத்தவோ அல்லது அவர் சில வசதிகளை வழங்கவோ அவை யாவும் உதவவில்லை. 

 

அவரது பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது, 

 

1940 ல் மிக உயர்ந்த ஞானியான Jhunsiயை சேர்ந்த ஸ்ரீ பிரபு டாட்டா ஜி மஹாராஜை அன்னை சந்தித்தார் 

 

1944 ல் நடந்த சாதுக்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து அன்னைக்கு ஸ்ரீ பிரபு டாட்டா மகாராஜ்  அழைப்பு விடுத்தார்

 

அன்னையும் அழைப்பிற்கு மரியாதையை கொடுத்து மனதில் கலந்துகொண்டு  அங்கு  வந்த பல மகான்களை சந்தித்தார்

 

முக்கியமாக சக்ரபனாஜி மாற்று  சரானந்தஜி ஆகியிரையும் சந்தித்தார் 

 

அன்னை ஒரு பெண் என்பதால் அதுவரையில் சாதுக்கள் கூட்டங்களுக்கு அவருக்கு அழைப்பு வந்ததில்லை 

 

ஆனால் ஸ்ரீ பிரபு டட்டஜி மஹராஜ்  இந்த மாதிரியான செயற்கைத்தனமான விதிகளை உடைத்தெறிந்தார் 

 

அந்த கூட்டத்தில் அன்னையின் தன்மையையும் உபநிசத்துக்களில் மெது அவர் கொண்டிருந்த ஆழந்த ஞானத்தையும் கண்டு பல சாதுக்கள் ஆச்சர்யம் அடைந்தனர் 

 

1947 ஜனவரி 14 அன்று வாரணாசியி புதிதாக கட்டப்பட்ட ஆசிரமத்தில் அன்னை பெரிய சாவித்ரி யாகம் ஒன்றை ஆரம்பித்தார் 

 

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நாட்டில் பெரும் பதற்றம் நிலவியது. 

 

இத்தனை எதிர்மறையான காரணிகள் இருந்தபோதிலும்,மூன்று யாகம் தடையின்றி நடந்து, ஜனவரி 14, 1950 அன்று முடிவடைந்தது .

 

புகழ்பெற்ற மஹான்களின் பெரும் கூட்டமே இவ்விழாவில் கலந்து கொண்டது. 

 

இந்த யாகத்தில்  இளவரசர்கள், கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 

 

பொதுவாக அன்னையின்  முன்னிலையில் அனைத்து செயல்பாடுகளும் ஒரு அசாதாரண கவர்ச்சியைப் பெறும் . 

 

அதனை அந்த யாகத்திற்கு வந்த அனைவரும் உணர்த்தனர் .

 

அன்னையின் வகுப்புகளில் சம்யம் சப்தா என்பது விசேஷமானது 

 

உங்களின் உள்நிலை வளர்ச்சிக்காக வாரதுக்கு  ஒரு நாள் அல்லது மாதத்தில் ஒரு நாள் ஒதுக்குங்கள் எறு அன்னை எப்போதும் கூறுவார் 

 

அதனுடைய வெளிப்பாடு தான் சம்யம் சப்தா வகுப்பு 

 

இந்த நிகழ்ச்சி வெகு பிரபலமாக இருந்தது, 

 

எங்கிருந்து எல்லாமோ இருந்தது சாதுக்கள் சாமானிய மக்கள் பக்தர்கள் என பலதரப்பட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வருவார் 

 

இதில் இசை தியானம் சொற்பொழிவு என பல விஷயங்கள் இருந்தாலும் 

 

இரவு 9.30 மணிக்கு பக்தர்களின் கேள்விக்கு அன்னை பதிலளிக்கும் 

மாத்ரி சத்சங்கம் தான் அனைத்திலும் உச்சம் 

 

இந்த ஒரு நிகழ்ச்சிக்கு தான் அனைவரும் நாள் முழுவதும் காத்திருப்பர் 

 

இந்த ஒரு வாரம் கிரஹஸ்தர்கள் கூட துறவிகள் போல் சிரமமின்றி வாழமுடியும் என்று பங்கேற்பாளர்கள் வியந்து போவார்கள் .



அன்னையை  புரிந்துகொள்வதற்கான சிறந்த வழி, அவரை யாரோடும் ஒப்பிடாமல் பார்ப்பது தான் 

 

சூரியன் பிரகாசித்து கொண்டிருக்கும் பொது அதனை தன்மைகளை பற்றி யாரும் விவரிக்க வேண்டிய அவசியம் இருக்காது 

 

அது போன்றவர் தான் ஸ்ரீ மா ஆனந்தமாய் என்றார் 

 

சின்மய மிஷன் நிறுவனர் யோகி சின்மயானந்த 

 

1952 அன்னை தென்னிந்திய பயணம் மேற்கொண்டார் 

 

அச்சமயத்தில் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம், திருவண்ணாமலை ராமாஸ்ரமம் மாற்றும் ராமேஸ்வரம் ஆகிய தளங்களை தரிசித்துள்ளார் 



அன்னையின் வாழ்க்கை முழுவதுமே அவர் எப்போதுமே உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை 

 

பல ஆண்டுகள் அவர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் உணவு உட்கொண்டார் 

 

அன்னையிடம் இதனை பற்றி கேட்டல் 

 

“உடலைப் பாதுகாக்க சாப்பிடவே தேவையில்லை.

 

நீங்கள் என்னுடன் இருக்கும் பொது அசௌகரியமாக உணரக்கூடாது என்பதால்  

 

இயல்பின்  சாயல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் சாப்பிடுகிறேன். என்பார்.

 

உண்மையில் பட்டினி அவரை பலவீனப்படுத்தவில்லை ஆரோக்யத்தைத்தான் கொடுத்தது 

 

ஆனாலும்  எல்லாருக்கும் வரும் வியாதிகள் தமக்கென ஒரு தாளத்தை பின்பற்றி அவருக்குள் வந்து பின் சென்றன.

 

சுதந்திரத்திற்குப் பிறகு அதிகாரத்திற்கு வந்த ஏறக்குறைய அனைத்து அரசியல் பிரமுகர்களையும்  அவரவர் காலத்தில் அன்னை சந்தித்தார். 

 

ஆனால் யாருடனும் அரசியல் பேசவில்லை மாறாக ஆன்மீகத்தை பற்றி மட்டுமே பேசினார் 

 

இளைய தலைமுறையினரோடு உதாரையாடும் போது அவர் வெளிப்படுத்துமம் கருத்துக்கள் அன்றைய காலகட்டத்திற்கு ஏற்றதாக இருக்கும் இலங்கையர்கள் ஏற்று கொள்ளும் விதத்தில் இருக்கும்  

 

அதேசமயம் அன்னையின் நகைச்சுவை கலந்த பேச்சும் புரிதலும் 

 

யாருக்கும் அவரவர் இதயத்தில் குடிகொண்டிருக்கும் கடவுளை உணரவேண்டும் என்ற ஆவளை தூண்டும் 

 

அன்னையின் இறுதி காலத்தின் கடைசி 12 வருடங்கள் மிக சூட்சுமமாக நிகழ்ந்தன என்று தான் சொல்ல வேண்டும் 

 

அவர் செய்த செயல்களும் , நடந்து கொண்ட விதமும் யாருக்கும் புரியவில்லை

 

முதலில் அன்னை தன்னை தானே தனிமை படுத்திக்கொண்டது அப்பட்டமாக தெரிய ஆரம்பித்தது 

 

அவருடைய தரிசனம் அவ்வளவு எளிதாக இல்லை , அதற்கு அன்னையின் உடல் நலமின்மை காரணமாக சொல்லபட்டது 

 

இதன் காரணமாகத்தான் அவரது தரிசனம் கிடைக்கவில்லை என்று அவருடைய பக்தர்களும் நம்பினார் 

 

இதனை பற்றி அன்னை பலமுறை இப்படி சொல்வர் , 

 

“நீங்கள்  ஏன் நோய்களை விரோதமாக உணர்கிறீர்கள்? 

 

உங்களைப் போலவே அவர்களும் இந்த உடலுக்கு வருகிறார்கள். 

 

நான் உங்களை உடலை விட்டு போகச் சொல்கிறேனா?” என்பர்

 

தனது தோழிகளின் பிரார்த்தனையை ஏற்று 

 

சில யோக கிரியாக்களை மற்றும் பிரார்த்தனைகள் மூலம் தனது நோய்களை போக்கி கொள்வர்.

 

ஆனால் கடைசி 10 வருடங்கள் அவர் தன்னை தானே குணப்படுத்தி கொள்ள விருப்பம் அவருக்கு இல்லாமல் போயிற்று 

 

ஆனாலும் அவர் பார்ப்பதற்கு நோயுற்றவர் போல இல்லாமல் அழகும் அமைதியும்கொண்டவராகவே தோற்றமளிப்பது அனைவரையும் ஆச்சர்யம் அடைய செய்யும் 

 

நாளைடைவில் அன்னையை தரிசிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்ற மனப்பான்மைக்கு பக்தர்களும் வந்தனர்

 

அவரும் மிக முக்கியமான நிகழ்ச்சிகளை தவிர வேறு மற்ற அனைத்தையும் புறக்கணித்தார் 

 

அவர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி என்றால் கான்களில் நடந்த ஆதி ருத்ர யாகம் .

 

இதுவே வேத யாகங்களில் மிகப் பெரியது

 

அன்னையின் வழிகாட்டுதலில் அந்த வேள்வி மிக சிறப்பாக நிகழ்த்தப்பட்டது 

 

இதன் பிறகு பின்னர் சிருங்கேரி, சாரதா பீடம் ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார், வருடாந்திர துர்கா பூஜையின் போது அன்னையை சிருங்கேரிக்கு அழைக்க விரும்பினார், மேலும் அவர் நோயிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று வலியுறுத்தினார். 

 

அதற்கு அன்னை தன் வழக்கமான மென்மையான குரலில் 

 

“இந்த உடம்பிற்கு ஒரு பிரச்சனையும் இல்லை, தந்தையே  அதனது மூல இருப்பிடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது , இப்பொது நீங்கள் பார்க்கும் விஷயங்கள் எல்லாமே அதனோடு தொடர்ப்ப்புடையது தான் , என்னுடைய ஆத்மா எப்போதும் உங்களுடன் தான் இருக்கும் என்று கூறி வழியனுப்பி வைத்தார் 

 

பக்தர்களின் கடிதங்களுக்கு அன்னை பதிலளித்தில்லை 

 

ஆனால் அன்னையின் இருப்பை அவர்கள் உணர்ந்து தங்களின் கேள்விக்கான விடையை பெற்றது போன்ற உணர்வுக்கு ஆளாகினர் 

 

அன்னையின் இறுதி காலம் நெருங்கியது அச்சமயத்தில் அவர் கிஷன்பூர்  ஆசிரமத்தில் தான் இருந்தார்  

 

ஆனால் ஆசிரமத்தில் சரியான நேரத்தில் வழக்கமான கண்ணியத்துடன் செய்யப்படும் எந்த நிகழ்ச்சிகளிலும் அன்னை கலந்து கொள்ளவில்லை.

 

கடைசி சில மாதங்கள் உணவு உட்கொள்வதை முழுவதுமாக தவிர்த்தார் 

 

சில நேரங்களின் ஆஸ்ரம பெண்கள் கொடுக்கும் சிறுது தண்ணீரை மட்டும் பருகுவார் 

 

27, ஆகஸ்ட் 1982 இரவு எட்டு மணிக்கு சிவாய நாம என்ற கடைசி வார்த்தையோடு 

 

இந்த உலகத்தின் ஸ்தூல தொடர்பை நிறுத்திக்கொண்டார்

 

ஓட்டு மொத்த சாதுக்கள் அமைப்பும் அன்னையின் நல்லடக்க பொறுப்பை ஏற்றுகொண்டர்

 

மிகச்சிறப்பான மரியாதையோடு ஆயிரத்துக்கும் அதிகமான கார்கள் அணிவகுக்க 

 

அன்னையின் உடல் டெஹ்ராடூனில் இருந்து காண்ட்கள் ஆஸ்ரமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது 

 

ஸ்ரீ மா கூறியது போல, அவர்  அனைவருக்கும் சொந்தமானவர் , எனவே 86 ஆண்டுகளாக தங்கள் அன்பான அம்மாவைத் தாங்கிய மனித உடலுக்கு அணிஅவரும் இறுதி மரியாதையை செய்தனர் 

 

இந்தியாவும் மற்ற நாடுகளும் பல நெருக்கடிகளை கடந்து வந்த நேரத்தில் ஸ்ரீ மா வாழ்ந்தார். 

 

அவர் மக்களில் ஒருவராக இருந்தார், 

 

அவர்களுக்கு முழு, நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்து, 

 

அன்னிய தாக்கங்களில் இருந்து நமது பாரம்பரியத்தின் பழமையான கொள்கைகளை நிலைநிறுத்தினார். 

 

அறிவியலில் கோலாச்சி புரியும் இந்த கலாட்டத்திலும் புராண யுகத்தில் இருந்ததைப் போலவே கடவுள் இருக்கிறார் என்பது தான் அன்னை இவுலகிற்கு விட்டு சென்ற செய்தி 



புனிதத்துவம் வாய்ந்த நம் பாரத மண்ணில் எண்ணென்ற குருமார்கள் தோன்றி மறைந்துள்ளனர் 

 

ஆனால் வானத்தின் விஸ்தாரத்தை போலவும்  பூமியின் கரிசனத்தை போலவும், காலத்திற்கு உட்பட்டு அதே நேரம் காலா வரையைக்குள் சிக்காமல் இரு வெவேறு துருவங்கள் ஒன்றாக இணைந்தது போலவும் மனித எல்லைகளை தாண்டி முழு அருளுடன் இந்த பிரபஞ்சத்தில் தோன்றியவர் தான் ஸ்ரீ மா ஆனந்தமாயி 



அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லை நம்மில் சில பிறந்திருக்க கூட இல்லை 

 

ஆனால் மானசீகமாக அன்னையை பற்றினாள் இன்றைக்கும் அவரின் இருப்பை நாம் உணர முடியும் 

 

” நான் இங்கே தான் இருக்கிறேன், நீ கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது?”

 

என்ற அன்னையின் அழியாத வார்த்தைகளின் வடிவத்தில் அவர் எப்போதும் நம்முடன் தான் இருக்கிறார் 

 

Adiguru

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

🧘 Siddhas & Yogis

Sri Seshadri Swamigal- ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

தமிழில் வாசிக்க கீழே செல்லவும்  Sri Seshadri Swamigal – The Saint Once Called Mad, Later Revered by the World Was He
🧘 Siddhas & Yogis

We believe Apple Will announce iPhone.

பகவான் ரமணர் அற்புதங்கள்!   மகான்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ,    தனக்கென வரையறைகள் வகுத்து கொண்டு ஒரு குறுகிய வட்டத்தில் வாழாமல்    ஒரு மனிதனின்