கன்னகம்பட்டி சித்தர்
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு கிழக்கே
8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது
பழநி சித்தர் மூட்டை சாமிகளின் ஜீவ சமாதி கோவில்
அமாவாசை, பௌர்ணமி, புனர்பூசம் போன்ற நாட்களில்
குறைந்து 50000 பக்தர்கள்
இந்த ஜீவசமாதி கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகிறார்கள்
தவிர பழனி முருகனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் ,
கணக்காப்பம்பட்டியாறையும் தரிசனம் செய்தால் தான்
தங்களில் யாத்திரை பூர்த்தியடைந்ததாக நினைக்கிறார்கள்
சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல் வாதிகள் , ஐஐடி துறையில் வேலைபார்ப்பவர்கள் , விவசாயிகள் ,
என அனைத்து தரப்பு மக்களின் ஒரே நம்பிக்கை இந்த கோவில்
21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து மகாசமாதி அடைந்த உயர்ந்த முக்கியான ஆன்மீக குருமார்களில் ஒருவராகக் கருதப்படுபபவர் ‘நம் மூட்டை சுவாமிகள்.
1986 முதல் 2014 வரை சுமார் 28 ஆண்டுகள்
பழனி இடும்பன் மலை, பழனி மெயின் ரோட்டில் உள்ள காளி கோயில், கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி என பல்வேறு இடங்கள் தரிசனம் தந்து,
லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்த அவதார புருஷர்.
இவரை சிலர் ஷீரடி சாய்பாபா, ஸ்ரீ போகர் மற்றும் பழனி முருகனின் மறு அவதாரமாகவும் பார்க்கின்றனர்
பழனிக்கு அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தில்
1937 ஆம் ஆண்டு திரு திம்மன், ரெங்கம்மால் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.
பெற்றோர் அவருக்கு காளிமுத்து என்று பெயரிட்டனர்
சாமிகள் குழந்தையாக இருந்தபோது, அவரது தாயார் காலமானார்,
இதனால் அவரது தந்தையை மறுமணம் செய்து கொண்டார்.
அவருக்கு ஒரு மூத்த சகோதரியும் சிற்றணைக்கு இரு மகன்களும் இருந்துள்ளனர்
குடும்ப சூழ்நிலை காரணமாக ஏழாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்க முடிந்தது.
உடுமலைப்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது.
துரதிர்ஷ்டவசமாக, அவரது மனைவி கர்ப்பமான சில மாதத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார்
இதைத் தொடர்ந்து, கிராமத்தில் உள்ள முக்கிய விவசாயிகளின் விவசாயப் பணிகளைக் கவனித்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இப்படி இருக்கையில் 1986ல்,
அப்பகுதியில் உள்ள சிலரால் தாக்கப்பட்டு, பலத்த காயங்களுடன்,, பழனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பரிசோதித்த மருத்துவர்கள் முதலில் இறந்துவிட்டதாக அறிவித்து பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்,
போஸ்மோடர்ம் செய்யப்போகும் சமயத்தில் தான் அவர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது.
அச்சமயத்தில் பிணவறையில் அவரை சுற்றி சில விவரிக்க முடியாத நிகழ்வுகள் நடந்தது அங்கிருந்த மருத்துவர்கள் கண்டுள்ளனர்
பின்னர் மறுபடியும் வார்டுக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது
ஆனால் ஒரு சில நாட்களில் சாமிகள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மருத்துவமனையிலிருந்து வெளியேறி
பழனி தெருவுகளில் சுற்றி திரிய ஆரம்பித்துள்ளார்
ஒருநாள் அந்த மருத்துவமனையில் வேலைபார்த்து மருத்துவரின் மகள் இவரை அடையாளம் கண்டு
இவர் தானே அன்னைக்கு மறுஜென்மம் எடுத்தவர் என்று யூகித்து கொண்டு அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார்
அன்று துவங்கி அவரது அற்புதச் செயல்கள் நாடு முழுவதும் பரவிக்கொண்டே இருந்தன.
இவரது தோள்பட்டையில் ஒரு பெரிய மூட்டை எப்போதும் தொங்கிக்கொண்டு இருக்கும்.
மிகவும் கனமான மூட்டையாக காணப்படும் அம்மூட்டைக்குள் என்ன உள்ளது என்பது
இதுவரைக்கும் எவருக்கும் தெரியாத விடயமாக காணப்படுகிறது.
சிலவேளைகளில், புளியமரத்தின் அடியில் அவர் ஓய்வு எடுக்கும்போது
மரத்தின் ஒரு கிளையில் அவரது கண்களில் படும்படி மூட்டையை தொங்க விட்டிருப்பார்.
சில நேரங்களில் எவரேனும், அந்த மூட்டையின் அருகே நெருங்கி செல்வதை கண்டால், உரக்க சப்தமிட்டு அவர்களை விரட்டி விடுவார்.
இதனால் தான் இவர் முதலில் மூட்டை சாமி என்று அறியப்பட்டார்.
பின்னர் பழநி பகுதியில் வாழ்ந்தவர் என்பதால் பழநிசாமி என்றும்
கணக்கப்பட்டியை சேர்ந்தவர் என்பதால் கணக்கம்பட்டி சித்தர் என்றும் அறியபடத் துவங்கினார்.
சாமிகள் யோகா செய்வதையே தியானம் செய்வதையோ யாரும் பார்த்தது கிடையாது
ஆனால் அவர் எந்த வெளிப்புற தாக்கமும் இல்லாமல் உள்ளுக்குள் ஒரு ஆழமான மாற்றத்திற்கு உட்பட்டார்.
இதற்கு பல காரணங்களும் சம்பவங்களும் மேற்கோள் காட்டப்படுகின்றன்.
அதில் முக்கியமான ஒன்று
கேரளாவில் உள்ள ஓமல்லூரில் சமாதி கொண்டுள்ள சிவபிரபாகர சித்த யோகியின் அருளால்
அவரது உடலில் தெய்வீகப் பிரவேசத்தை அனுபவித்தவர் என்று பலர் கூறுகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம்.
சிவபிரபாகர சித்த யோகி 1986 இல் கேரளாவில் ஜீவசமாதி அடைகிறார்.
கணக்கம்பட்டி சித்தர் 1986 இல் தால் அவதாரமாக அறியப்படுகிறார்.
ஒரு சிலரின் கூற்றுப்படி, பாம்பாட்டி சித்தரின் சீடரான ஸ்ரீ சிவபிரபாகர சித்த யோகி பதின்மூன்றாம் நூற்றாண்டில் பிறந்து,
பல்வேறு உடல்களில் வாழ்ந்து, இறுதியில் ஸ்ரீ சிவபிரபாகர சித்த யோகியாக ஓமல்லூரில் வசித்தார் என்றும்
அவரது பதினாறாவது அவதாரம் தான் கணக்கன்பட்டி பழனிசுவாமிகள் என்றும் கூறுகின்றனர்.
இது செவி வழி செய்திதான் என்றாலும் இருக்காது என்று தவிர்க்க முடியாத ஒன்று
காரணம்
ஞானிகளின் வாழ்க்கையை ஆராய முடியாதது கூடாது என்பது போலத்தான்
கனக்கம்பட்டி சித்தரின் வாழ்க்கையும் மர்மம் நிறைந்த ஒன்றாகத்தான் இருந்துள்ளது.
ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் அவரது மூட்டையை தூக்கிக் கொண்டு எங்காவது திரிவார்.
பழனி மலைக்கு எதிரில் உள்ள இடும்பன் மலையில் சில நேரம் தங்கியிருப்பார்.
பல வேளைகளில் சுவாமிகள் எங்கே இருக்கின்றார் என்பதை எவராலும் கண்டுபிடிக்க முடியாது.
உச்சி வேளையில் கொளுத்துகின்ற வெயிலில் மலைக்கு மேலே ஒரு பாறையில் அமர்ந்து இருப்பார்.
கொட்டுகின்ற மழையில் முழுக்க நனைந்த படி அதே பாறையில் படுத்திருப்பார்
இயற்கை நிகழ்வுகள் அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை அதுவும் இவரை ஏதும் செய்வதில்லை.
இவர் கணக்கன் பட்டியில், அவரது சகோதரனின் குடிசையில் வசித்து வந்தார்.
தனக்கென எவ்வித சொத்துக்களையும் அவர் இருக்கும் காலம் வரை சேர்ந்ததில்லை.
எப்போதாவது, சாப்பிடுவார். யாரும் பணம், உணவு ஏதும் கொடுக்க வந்தால் விரட்டி விடுவார்.
அவருக்கு பசிக்கின்ற போது மாத்திரம் அவருக்கு பிடித்தவர்களிடம் பணம் கேட்டுப் பெற்று உணவு வாங்கி உண்பார்.
“பழனி கல்லூரி”க்கு முன் உள்ள புளியமரங்களின் அடியில் படுத்திருப்பார்.
எப்போதும் சித்தர்கள் பாஷையிலேயே அதிகளவில் உரையாடுவார்.
சில வேளைகளில் மாத்திரம் சாதாரண மக்கள் விளங்கிக் கொள்ளும் பாசையில் பேசுவார்.
சில நேரங்களில் அவரை காண வந்திருப்பவர்களை விரட்டியும் விடுவார்.
சில நேரங்களில் காண வந்த பக்தர்களை அங்கிருக்கும் கற்களை இங்கு எடுத்துவை,
மண்ணை அள்ளி குவி, சாக்கடை தண்ணீரை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றி ஊற்று என பக்தர்களுக்கு கூறுவார்.
இது ஒவ்வென்றிக்கும் ஒரு அர்த்தம் இருந்துள்ளது.
நம் அறிவு பார்வைக்கு அவை எட்டியதில்லை அவ்வளவே
ஆனால் இவற்றின் மூலம் பக்தர்களது கர்ம வினைகள்
அவர்களை விட்டு நீங்குவதை வாழ்க்கை மாறுவதை அனைத்தும் பக்தர்களும் உணர்ந்து கொண்டனர்.
இப்படி மூட்டை சாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் ஏராளம்
உண்மையிலேயே மேல் அன்பு கொண்டு வந்தவர்கள்,
இவரை பரிசோதிக்க எண்ணியவர்கள்,
எந்த நம்பிக்கையும் இல்லாது வந்து அன்பரானவர்கள்
இப்படி எல்லாம் வகையினரும் அவர் இருக்கும் இடம் தேடி வந்தார்கள்.
அவரைச் சரணடைந்து வாழ்வில் உயர்ந்தோர் ஏராளம்.
நோயால் அவதிப்பட்டு குணம் பெற்றோர் எத்தனை?
மருத்துவர்களால் கைவிடப்பட்டு சாவின் விளிம்பில் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மீட்கப்பட்டவர்கள் எத்தனை?
தீராத நோய்கள் தீர்ந்தவர்கள் எதனை ?
எண்ணற்ற பிரச்சனைகளால் உள்ளம் நொந்து துவண்டு மீண்டும் தெம்பு பெற்றவர்கள் எத்தனை ?
இப்படி ஒன்றா இரண்டா சொல்வதற்கு
பாரபட்சமில்லாது அனைவருக்கும் அருள் மழை பொழிந்த சித்தர்
March 11, 2014 அன்று
ஒரு நீர்க்குமிழி காற்றுடன் கலப்பது போல அவரின் ஆத்மாவும் காற்றோடு கலந்தது
ஆம் தன் பூத உடலில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார் கணக்கம்பட்டி சித்தர்
சித்தரின் பூதவுடல் அவர் வாழ்ந்த மோகன் தோட்டத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது
பொதுவாக காக்கம்பட்டி சித்தர் யாருடனும் அன்புடன் பேச மாட்டார் , தன்னை காண வருபவர்கலில் சிலரை அடித்து விரட்டுவர், சிலரை கோபமாக திட்டுவார் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு
ஏன் சித்தர் அப்டி நடந்து கண்டார் என்பதற்கான கேள்விக்கு
2013 ஆம் ஆண்டில் கணக்கம்பட்டி சித்தர் வாழ்ந்த காலத்தில்
சாய்குமார் செல்லப்பன் என்ற பக்தர் சித்தரை பார்க்க சென்ற போது நடந்து ஆச்சர்யமான உண்மை நிகழ்வை சாட்சி
அதனை அடுத்த பதிவில் பார்க்கலாம்
உங்களோடு பகிர்கிறேன்.
சாய்குமார் 2000 ஆம் ஆண்டுல் கரூரில் வேலை செய்து கொண்டு இருந்தார்.
சிறந்த பக்திமான்
கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கும் ஓவ்வொரு வியாழக்கிழமையும் ஷிர்டி சாய் பாபா கோவிலுக்கும் தவறாமல் செல்லும் பழக்கத்தை கொண்டிருந்தவர்
திடீரென அவர் குடும்பத்தின் ஆணிவேராக இருந்த அவரின் தந்தையார் சிவ பதம் அடைந்து விட்டவே
குடும்பமே ஸ்தம்பித்து போனது. வாழ்க்கையே இருண்டு போய் விட்டது போன்ற ஒரு சூழல்;
சுமார் நான்கு தலைமுறையாக தேவாரம் திருவாசகம், திருவருட்பா பாடி சிவனாரை வழிபட்ட அவர்கள் குடும்பம்
அவரின் தந்தையாரை இழந்த பின்பு அனைத்தையும் இழந்ததாகவே இருந்தது.
இவரது சிறு வருமானமாத்தை கொண்டு கும்பம் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தது
இப்படி இருக்கையில் இவர் கம்பெனியின் முதலாளி பழனி மூட்டை ஸ்வாமிகளின் தீவிர பக்தர்
அடிக்கடி அவரை தரித்துவிட்டு வருவார் ஒருநாள் அப்படி அவர் சென்ட்ட்று வருகையில் தன் கையில் இருந்த பழனி சாமிகளின் படத்தை சாய்குமாருக்கு கொடுத்தார்
அந்த படத்தை பார்க்கும் போதே இவருக்கு ஒரு நல்ல உணர்வு ஏற்பட்டது.
அதன் பிறகு அதை வீட்டிற்கு எடுத்து சென்று வழிபட்டு வந்துள்ளர்.
சில மாதங்கள் சென்ற பின்பு அவருடன் வேலை பார்க்கும் நண்பரின் உறவினர்
இவரது நண்பரிடம் பழனி சுவாமிகள் பற்றி கூறி உள்ளார்.
சற்குரு நாதரின் தரிசனத்தால் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் ஏற்பட்ட மாற்றத்தை பற்றி கூறி உள்ளார்.
இதனை அவர் சாய் குமாரிடம் தெரிவிக்க , நாம் ஏன் ஒருநாள் பழனிசாமிகளை தரித்துவிட்டு வரக்கூடாது என்று தொடரவே
இருவரும் சற்குரு நாதரை தரிசிப்பது என்று முடிவு செய்துள்ளனர்.
திங்கள் கிழமை போவது என்று முடிவு செய்து கொண்டு இவர் வார விடுமுறைக்கு திருச்சி சென்று விட்டார்
அவர் கரூரில் இருந்து வருவதாக தெரிவித்தார்.
இருவரும் அவர் அவர் ஊர்களில் இருந்து அதிகாலை புறப்பட்டு கனக்கன்பட்டி வந்து அடைந்தார்கள்.
சுவாமிகளுக்காக ஒரு போர்வை சாய்குமார் எடுத்து சென்றுள்ளார்..
கனக்கன் பட்டி பஸ் ஸ்டாண்ட் இல் டீ குடித்த பின்பு , சுவாமிகள் பற்றி அந்த டீ கடையில் விசாரித்துள்ளர்கள்.
சுவாமிகள் கொட்டகையில் இருக்கிறார் என்று தெரிவித்தனர் .
சுவாமிகளின் படம் அந்த டீ கடையில் இருந்தது.
சுவாமிகள் இருக்கும் கொட்டகை நோக்கி இருவரும் நடக்க துவங்கினர் .
சுற்றி எங்கும் மலை , அதி காலை பனி , தென்னை மரங்கள் , விவசாய நிலங்கள் ஒரு அருமையான சூழலாக இருந்தது.
ஒரு அரை மணி நேரம் பேசி கொண்டே நடந்து கொண்டு இருந்தார்கள்.
இவரின் மனதில் சிறு பயம் வேறு இருந்தது சுவாமிகள் பார்த்த உடன் என்ன சொல்வாரோ.
இதற்கெல்லாம் தனக்கு தகுதி உண்டா என்று மனதிற்குள் கேள்வி அவ்வபோது எழுந்து கொண்டு இருந்தது.
ஷிர்டி சாய் நாதரையும் , காஞ்சி மஹா பெரியவாவையும் வேண்டி கொண்டு நடந்து கொண்டு இருந்தார்கள்
அப்போது சிகப்பு நிற மாருதி வேன் இவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தது.
அருகில் வந்தவுடன் தான் கவனித்தார்கள்
மாருதி வேன் ஓட்டுனரின் பக்கத்தில் சித்தர் எளிமையின் உருவமாக அமர்ந்து இருந்தார்.
தரிசனம் கிட்டியது ,
இவர்களை பார்த்த உடன் கையை அசைத்தவாரே கடந்து சென்றார்.
இருவருக்கும் சுவாமியை தரிசனத்தால் கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறம் இருக்க
அவரின் செய்கை ஒன்றும் புரியாததால் சற்று குழப்பத்துடன் சென்றுள்ளார்கள்..
கொஞ்ச தூரம் நடந்து அவரின் கொட்டகையில் அமர்ந்தர்கள்
அவர்களுக்கு முன்னரே அங்கு இருவர் இருந்தனர்.
அவர்கள் சித்தரை பற்றி செல்ல இவர்கள் மெய் மறந்து கேட்டு கொண்டு இருந்தார்கள்.
சாய்குமார் அந்த கொட்டகை விட்டு வெளியில் வந்து வெளியில் உள்ள மரங்களை உற்று கவனித்த போது
ஒவ்வொரு மரங்களின் கிளைகளில் நூல்களில் கட்டி தொங்க விட பட்ட பாலிதீன் பைகள் , பாட்டில்கள் இருந்தன.
அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது,
இது எல்லாம் இங்கு வரும் அடியவர்களின் பாவ மூட்டைகள் ,
இதை அவர் அவர்களின் கணக்கிற்கு ஏற்ப சுவாமிகள் தொங்க விட்டு உள்ளார் என்று கூறினர் .
அவர் அமர்ந்து செல்கின்ற வேனுக்கு பின்னாலும் பெரிய பெரிய அழுக்கு மூட்டைகள் இருக்கும் என்றே தெரிவித்தனர்.
நாங்களும் பார்த்தோம் என்றே தலை அசைத்தார்கள்.
நேரம் ஆக ஆக கூட்டம் வந்து கொண்டு இருந்தது.
எல்லோரும் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு இருந்தார்கள்.
அதே சிகப்பு நிற மாருதி வேன் கொட்டகையை நோக்கி வந்துகொண்டிருந்தது
எல்லோரும் எழுந்த நிற்க ஆரம்பித்தார்கள்
வெளியில் சென்ற சுவாமிகள் கொட்டகைக்கு வந்தார்கள்.
வேனில் இருந்து இறங்கி இவர்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்தின் அருகில் நடந்து கொண்டு இருந்தார்கள்.
அனைவரின் முகங்களை பார்த்து கொண்டு எது ஏதோ சொல்லி கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தார்கள்
சாமிகளின் பார்வை அங்கிருக்கும் அனைவரின் உள்ளத்தையும் ஊடுறுவி சென்றதை அனைவரும் உணர்ந்தனர்
பின் நம் கவலைகளை, நமக்கு இருக்கும் கஷ்டங்களை மனதிற்குள் நினைக்க சொல்லி
சற்குருவின் முகம் பார்த்து வேண்ட சொன்னார்கள் அங்கு உள்ள அடியவர்கள்.
அவ்வாறே வேண்டி கொண்டு இருந்தார் சாய்குமார்.
பிறகு சாமிகள் மீண்டும் வேனில் ஏறி சென்று விட்டார்கள்.
இப்படி வருவதும் போவதும் ஆகவே இருந்தார்கள்.
சிலசமயம் வேனில் வந்தவுடன் நிறுத்தாமல் அனைவரையும் பார்த்து விட்டு திரும்பி செல்வார்கள்.
சில நேரங்களில் இறங்கி அனைவரையும் பார்த்து கொண்டு அங்கும்மிங்கும் நடப்பார்கள் .
நேரமும் கடந்து கொண்டு இருந்தது அமர்ந்து கொண்டு பகவான் நாமத்தை சொல்லி கொண்டே இருந்தோம்.
மாலை ஆகி விட்டது.
அதற்குள் ஒரு அன்பர் சுவாமிகள் கனக்கன் பட்டி நுழை வாயிலில் கொஞ்ச தூரத்தில் உள்ள அடியவர்களுக்கு வேலை கொடுத்து கொண்டு இருக்கிறார் என்றார்கள்.
சரி அப்படியே பார்த்து விட்டு செல்லலாம் என்று முடிவு எடுத்து இவர்கள் கிளம்பினார்கள்.
அங்கு சென்றவுடன் ஒருவர் சற்குருவின் கால்களை அமுக்கி விட்டு கொண்டு இருந்தார் ,
நிறைய பேர்களை மண் வெட்டி போட சொல்லி கொண்டி இருந்தார்கள்.
மற்றும் சிலரை பார்த்து கற்களை தூக்கி வேறு இடத்தில் வைக்க சொல்லிக்கொண்டு இருந்தார்கள்,
வேறு சிலரை குப்பை மேட்டினை கரைக்க சொல்லி கொண்டு இருந்தார்கள்.
இவர்கள் இருவரும் சென்று அருகில் நின்று போது.
சாய்குமாரின் கூட வந்தவரை மண்ணை அள்ளி போட சொன்னார்கள்.
இவர் கையில் கொண்டு வந்த போர்வை அவரிடம் கொடுப்பதற்காக அவர் அருகில் சென்றார்.
இவரை பார்த்துடன் பெரும் கோபத்துடன் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டார் சாமிகள்
இவருக்கு அழுகையே வந்துவிட்டது. அழுதும் விட்டார் .
கைகளை நீட்டி மேற்கே போ என்றார்கள்.
கை காட்டிய இடத்தில் போய் இவர் நிற்க .
திரும்பவும் கைகளை நீட்டி தெற்கே போ என்றார்கள்.
காலையில் இருந்து ஒரு வேலையும் செய்யாமல் இருக்கிறான் என்றார்கள்.
அந்த வார்த்தை சாய்குமாரை மிகவும் பாதித்தது.
அனைவர் முன்னிலையிலும் சாமிகளை தன்னை மட்டும் திட்டியது இவரை மிகவும் பாதித்தது.
யாருக்கும் மனதளவில் கூட தீங்கு நினைத்தது இல்லையே என்று அழுகையை அடக்க முடியாமல் அங்கு இருந்து சென்றார் சாய்குமார்..
தனக்கு ஏற்பட்டதை எண்ணி தான் வணங்கிய அனைத்து தெய்வங்களையும் திட்டி தீர்த்து விட்டார்
மீண்டும் மீண்டும் அவர் சொன்ன அந்த வார்த்தைகள் இவரின் மனதிற்குள் ஒலித்து கொண்டு இருந்தது.
கொஞ்சம் தூரம் நடந்து வந்து அங்கு ஒரு மாட்டு கொட்டகைக்கு அருகில் நின்று கொண்டு அழுது கொண்டு
தன்னுடன் வந்தவருக்காக காத்து கொண்டு இருந்தார்.
சிறிது நேரம் கழித்து நண்பரும் வந்தார்.
அவருடன் சேர்த்து அங்குள்ள அனைவரும் வந்தனர்.
நண்பரை பார்த்த உடன் மறுபடியும் அழுதார்
நண்பர் ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்த பொது
ஒரு வயதான பாட்டி இவர் அருகில் வந்து
உன்னை சுவாமி திட்டியதற்காக வருத்த படதே தம்பி .
ஏன் என்றால் அவர் முன்பு திட்டி பின்பு அணைத்து கொள்வார்கள்
அவர் திட்டியதால் எதாவது அர்த்தம் இருக்கும் அது நம்மக்கு எல்லாம் விளங்காது
என் வாழ்விலும் அதுவே நடந்தது என்று ஆறுதல் சொன்னார்கள்.
பிறகு தன்னுடன் வந்தவரிடம் தனக்கு மனதிற்கு கவலையாக உள்ளது பழனி சென்று முருகனை தரிசித்து விட்டு வருகிறேன் என்று கூறி
இவர் மட்டும் தனியாக பழனிக்கு பஸ்சில் சென்றார்
வழி நெடுக அதே எண்ணங்கள்,
பஸ்சில் இருந்த சிலர் சுவாமிகளிடம் வந்தவர்கள்
அவர்கள் இவரை ஒருவாறு பார்க்க
இவருக்கு வெட்கமும் அழுகையாக வந்தது.
அதே கவலையுடன் பழனி ஆண்டவர் கோவிலுக்கு சென்றார்
பக்தர்களின் கூட்டம் அதிகமாக இல்லை.
பழனி முருகனின் அர்த்தஜாம அபிஷேகம் முடிந்து தீபாராதனை காட்டினார்கள் .
முருகனை பார்த்த உடன் தன்னை அறியாமல். கதிறி விட்டார்
அருகில் இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்க்க அழுகையை அடக்கி கொண்டார்.
தரிசனம் முடிந்து வலம் வந்து கொண்டு இருந்த போது
அவரை அறியாமல் அங்கு வயது உள்ள இரண்டு நண்பர்களிடம் நடந்ததை விவரித்தார்.
இவர் என்ன மன நிலையில் அப்படி சொன்னார் என்று அவருக்கே தெரியவில்லை.
அவர்கள் இவரை ஆறுதல் படுத்தி
நீங்கள் பழனி அடிவாரத்தில் பழனி சித்தர் ஒருவர் இருக்கிறார்
அவரை சென்று பாருங்கள் என்று சொன்னார்கள்.
இவருக்கு பயம் வேறு
இப்பொழுது தான் ஒருவரிடம் திட்டு வாங்கினேன்.
மீண்டும் என்றால் தன் மனம் தாங்காது என்றார் .
அதற்கு அவர்கள் அவர் யாரிடமும் பேச மாட்டார் தைரியமாக செல்லுங்கள் என்று சொன்னார்கள்.
மனதை தேற்றி கொண்டு சென்றார் .
அவர் இருக்கும் இடத்தை விசாரித்து கொண்டு மெல்ல அவர் இருக்கும் இடம் நோக்கி சென்றார் .
நீண்ட தெரு ஓரத்தில் ஒரு சிறிய குடிசை ஒருவாறு ஒருக்களித்து உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள்.
அவரை பார்த்துடன் ஒரு ஓரத்தில் சித்தரை பார்த்த மாதிரி இவர் உட்கார்ந்தார
சித்தர் இவரை என்னை வேகமாக திரும்பி பார்த்தார்.
அவரின் நீண்ட தலை முடியெல்லாம் பறந்து அவரின் முதுகில் விழுந்தது.
இவரை கூர்ந்து பார்த்தார்கள்.
அவரின் அந்த பார்வையில் இவர் நடுங்கி விட்ட்டார்.
பிறகு மீண்டும் சுய நிலைக்கு வந்து மனதிற்குள் அன்று காலையில் இருந்து அன்று இரவு முழுவதும் நடந்தவை அனைத்தையும் மனதிற்குள் அவரிடம் சொன்னார் .
அதன் பின்பு தன் கஷ்டங்களை மனதிற்குள் நினைத்து வேண்டினார்.
ஒரு கால் மணி நேரம் கடந்து இருக்கும்
அப்போது சித்தர் தரையை தன் கைகளால் ஓங்கி அடித்தார்.
தீடிரென்று அவரின் செய்கையால் சற்றே நடுங்கி விட்ட்டார்.
அதற்குள் அங்கு இருந்த டீ கடை காரர் இவரை பார்த்து
இந்நேரம் பழனி சித்தர் தூங்கி இருப்பார்கள்
ஆனால் வெகு நேரம் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள் ஏன் என்று தெரிய வில்லை .
யாரோ தரிசனத்துக்காக இன்று வர போகிறார்கள் நினைத்து கொண்டு இருந்தோம்
ஏன் என்றால் நான் எப்போதே அவருக்கு போர்த்திகொள்ள போர்வை வைத்து விட்டேன் இருந்தும்
வெகு நேரம் உட்கார்ந்து இருந்தார்கள்
பார்த்தால் நீ வந்து நிற்கிறாய் என்றார்
அப்போது தான் சாய் குமாருக்கு மனதிற்குள் இதமான மாற்றத்தை உணர முடிந்தது.
உடனே போர்வை ஞாபகம் வந்தது .
அவரிடம் நடந்தவற்றை விவரித்தார்.
சரி நீ கவலை படாதே என் கூட வா என்று கூட்டி சென்று
உள்ளே வந்து சுவாமிகள் பக்கத்தில் இருக்கும் திரு நீறு எடுத்து பூசி கொள்ள சொன்னார்.
சித்தரின் அருகில் செல்லும் முன் அவர் சொன்னார்
பாவிகள் யாரவது உள்ளே வந்தால் அடிப்பார் என்றார்.
மீண்டும் மனதிற்குள் பயங்கர கலக்கம்.
இப்பொழுது தான் திட்டு வாங்கி வந்து இருக்கிறேன்.
அடி வேறு வாங்கி விட்டால்
அதற்கு மேல் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை என்றே நினைத்து தயங்கினார் .
அவர் விடா பிடியாக கூட்டி சென்றார்.
ஒரு வித தயக்கத்துடனே உள்ளே சென்ன்றார்.
அந்த டீ கடைக்காரர் பயபடாதே உள்ளே வா என்று இவரது அச்சத்தை கலைத்தார்.
உள்ளே வந்த திருநீறு அள்ளி பூசி கொள்ள சொன்னார்.
மனதிற்குள் சித்தரை நன்றாக வேண்டி கொண்டு திருநீற்றினை அள்ளி பூசி கொண்டார் .
சித்தர் இவரை தன் பார்வைகளை கூர்மையாக்கி என்னை உற்று நோக்கினார்கள்.
அப்பொழுதே இவருக்குள் ஒரு பெரிய மாற்றத்தை உணர்தார்
பிறகு வெளியில் வந்தார்கள்
சித்தர் உறங்குவதற்காக படுத்துக் கொண்டார்கள்.
போர்வை பற்றி கூறியதும்.
தன்னிடம் இருந்து போர்வையை வாங்கி கொண்டு
டி கடைக்காரர் சொன்னார் நான் இதை அவர் மீது போர்த்தி விடுகிறேன்
போர்த்தி கொண்டால் நல்லது
விசிவிட்டால் வீட்டிற்கு எடுத்து சென்று வழிபடு என்று கூறினார்.
அவர் போர்த்தி விட்டார் .
அவர் இரண்டவது கூறியதே இறுதியில் நடந்தது.
சித்தர் அதை எடுத்து விசி விட்டார்கள்.
பிறகு அவர் இவரிடம் சொன்னார்
பராவில்லை தம்பி நீ கொடுத்து வைத்தவன் தான்
ஏன் என்றால் சுவாமிகள் உடம்பின் மீது போர்த்திய போர்வையை நீ வீட்டில் வைத்து வழிபட உனக்கு கிடைத்ததே பெரும் பாக்கியம் அல்லவா என்று கூறினார் .
இவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அதே மகிழ்ச்சொயோடு ஊருக்கு திரும்பினார்
அப்போர்வையை வீட்டுக்கு கொண்டுவந்துஞ் தினமும் சிதறி நினைத்து வழிபட ஆரம்பித்தார்
நடந்த சம்பவத்தை எண்ணி வாழ்க்கைய நகர்த்தி கொண்டு இருந்தார் .
சில மாதங்கள் சென்றது.
பிறகு ஒரு நாள் பழனி சித்தர் இவர் கனவில் வந்து
உன் நல்லதுக்கு தாண்டா தரையில் ஓங்கி அடித்தேன் என்று கூறினார்.
உடனே கண்விழித்து எழுந்தவரின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர்
எல்லாம் விளங்கியது
பழனி மூட்டை சுவாமிகள் தன்னை திட்டியர்தற்கான காரணமும்
அதனால் ஏற்பட்ட பழனி சித்தர் ஆசிர்வாதமும் சாய்க்க குமாருக்கு பரம திருபித்தியை அளித்தது.
இங்கே அவர் புரிந்து கொண்ட விஷயம் என்னவென்றால்
மற்றவர்கள் பார்வைக்கு பழனி மூட்டை சுவாமிகள் தன்னை திட்டியதன் நோக்கம்
அப்போது தான் தனக்கு பழனி சித்தரின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று காரணத்தால் தான்
அதன் பிறகு இவரின் வாழ்கையில் படிப்படியான முன்னேற்றங்கள்.
சாய் குமாரின் தங்கைக்கு திருமணம் பழனியில் நடந்தது.
இவருக்கு வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது.
இவரின் தந்தையர் வாங்கி இருந்த கடனையும் பெருமளவு அடைத்து விட்டார்
இப்பொழுது பழனி மூட்டை சுவாமிகள் மற்றும் பழனி சித்தர் அருளால் நன்றாக இருக்கிறார்
இவை அனைத்தும் அன்று இவரை வழி நடத்திய சற்குரு பழனி சுவாமிகளையும், பழனி சித்தரையும் சேரும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.





