🧘 Siddhas & Yogis

வயலூர் முருகன்

முழுமுதற் கடவுள் முருகவேல் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் முதன்மையானது வயலூர் 

 

அவருடைய நூல்களில் தனி சிறப்புடைய திருப்புகழ் அங்கு தான் பிறந்தது

 

அருணகிரிநாதர் திருவண்ணாமலையில்  திருவேல் இறைவன் திருவருள் பெற்று 

 

முத்தைத்தரு என்று அறிமுக வள்ளல் அடி எடுத்து தர 

 

அப்பாடலை பாடி மீண்டும் நிறுவிகல்ப சமாதி நிலையில் அமர்ந்தார். 

 

அருணகிரிநாதரை ஆறுமுக கடவுள் வயலுருக்கு வா என்று கட்டளையிட்டார் 

 

அருணகிரிநாதர் வயலுரை அடைந்து அங்கு முருகன் தன் வேலினால் உண்டாக்கிய சக்தி தீர்த்தத்தில் மூழ்கி திருக்கோயிலுக்கு சென்றார் 

 

முருகவேல் ஒரு திருமுகமும் நான்கு திருகரங்களுமாக காட்சியளித்து திருப்புகழை உலகம் உய்யபாடுவாயாக என்று பணித்தருளினார் 

 

அருணகிரிநாதர் ஐயனே பாடுகின்ற வன்மையை திருவண்ணாமலையில் கொடுத்தீர்  

 

அதை எவ்வாறு பாட வேண்டும் என்ற தன்மையை அருள வேண்டும் என்று வேண்டினார். 

 

கருணை நிறைந்த தமிழ் கடவுள் 

 

மயில் வாகனத்தையும் கடம்பமலர் மாலையையும் வடி வேலாயுதத்தையும் சேவக் கொடியையும் திருவடியையும் பன்னிரு புஜங்களையும் 

 

இந்த வயலுரையும் வைத்துப் பாடுக என்று திருவருள் புரிந்தார் 

 

தனக்கு இறைவன் செய்த திருவருளை மறவேன் என்ற பாடி அது முதல் எண்ணிரண்டு திருப்புகழ் பாடல்களைப் பாடி மகிழ்ந்தார் அருணகிரியார் 

 

எனவே அருணகிரிநாதருக்கு சிறப்பான திருவருள் கிடைத்த இடம் வயலூர் 

 

அங்கு அவர் பல நாள் தங்கி இருந்தார் 

 

பின்னர் அவர் எங்கு சென்று எம்பிரானை பாடினாலும் வயலுரா வயலுரா என்று வயலூர் முருகனை மறவாது பாடுகின்றார் 





வயலூர்க்கு குமார வயலூர் ஆதி வயலூர் வன்னிய வயலூர் மேலே வயலூர் அக்னீஸ்வரர் அக்னி பூஜித்த வயலூர் என்ற வேறு பெயர்களும் உண்டு 

 

அருணகிரிநாதர் இவ்வுரை வயலி வயற்பதி மேலைவயலி செய்ப்பதி வயிலி நகர் என்ற பெயர்களால் குறிப்பிட்டுருக்கிறார் 

 

அருணகிரி யார் வயலூர் வந்து குமரவேல் மீது பாடிய திருப்புகழ்களைத் தவிர 

 

திருச்சிராப்பள்ளி நாகரி விராலிமலை திருவானைக்கா திருச்செங்கோடு திருஆவினன்குடி திருப்புக் குலியூர் பேரூர் திருப்பரங்குன்றம் முதலிய ஸ்தலங்களிலும் வயலுரை வைத்துப் பாடியுள்ளார்

 

அத்தகைய அற்புதமான திருத்தலம் வயலூர்




முருகனின் அருட்படை வீடு என்றும் ஏழாம் படை வீடு என்றும் கொண்டாடப்படும் வயலூர் 

 

திருச்சியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது 

 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது 



வயலூர் ஆலயம் அடிப்படையில் சிவாலயமே ஆகும் 

 

இங்கு கொழு வீற்றிருக்கும் முருகன் சிறப்பு பெற்று விளங்குவதால் சிறந்த முருக தளமாக போற்றப்படுகிறது. 

 

ஆதியில் பயிர்களை அழிக்கும் விலங்குகளை வேட்டையாட வந்த சோழ மன்னன் இங்கே வந்தபோது 

 

தாகத்தால் தவித்தான் 

 

பருக அருகில் தண்ணீர் கிடைக்கவில்லை 

 

தண்ணீரைத் தேடிக் கொண்டே வந்த போது 

 

ஒரு இடத்தில் மூன்று கிளைகளுடன் கூடிய கரும்பு செழித்து வளர்ந்து இருப்பதைக் கண்டான். 

 

அதை தின்ன ஒடிந்த இடத்தில் இருந்து குருதி வழிந்தது 

 

அதிசயம் அடைந்தவர்  காவலரையும் ஏவலரையும் அழைத்த அந்த இடத்தை ஆராயும் படி செய்தார்  

 

அவர்கள் அங்கே ஒரு சிவலிங்கத்தை கண்டு மன்னனிடம் தெரிவித்தனர் 

 

மன்னர் அகமகிழ்ந்து அங்கே அவருக்கு ஆலயம் அமைத்தார் 

 

இதுவே வயலூர் ஆலயத்தின் தோற்றம் பற்றிய செவிவழிச் செய்தி வரலாறு ஆகும் 

 

இங்க வீற்றிருக்கும் பெருமாள் கரும்படியில் முளைத்த கனல் என்பதால் ஆதியில் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார் 

 

பின்னாளில் ஆதிநாதர் என்ற பெயர் வழங்க தலைப்பட்டது 

 

அம்பிகை பூர்வஸ்திதிநாயகி அல்லது முன்னிலை நாயகி என்று அழைக்கப்படுகிறார் 

 

ஆதிநாதரையும் ஆதி நாயகி அமையையும் வழிபாடு செய்த பின் 

 

தெற்கு பிரகாரத்தின் வழியாக வந்தால் பொய்யா கணபதியை காண்கிறோம் 

 

அருணகிரிநாத சுவாமிக்கு அருள்தந்து திருப்புகழ் பாடும் திறன் தந்தவர் பொய்யாக கணபதி என்பர் 

 

பொய்யான வாழ்வை நம்பி பூமியில் திரிபவர்களை மெய்ஞான பாதைக்கு திருப்பி அருள் செய்பவர் பொய்யா கணபதி 

 

திருப்புகழ் பாடல் ஒவ்வொன்றிலும் பொய்யான வாழ்வு முற்பகுதியும் மெய்ஞான வாழ்வு பிற்பகுதியில் அருணகிரிநாதர் அமைத்து பாடியது 

 

பொய்யா கணபதிக்கு தான் காட்டிய நன்றி கலந்த அஞ்சலி என்று கருத வேண்டும் 

 

பொய்யா கணபதி சன்னதி அருகே அருணகிரிநாத ஸ்வாமிகளுக்கு வயலூரில் பீடம் அமைத்திருக்கிறார்கள் 

 

அருணகிரிநாதர் சன்னதியில் நின்று நோக்கும் போது 

 

இடதுபுறம் பொய்யா கணபதியின் சன்னதியும் 

 

எதிர் பக்கத்தில் கல்லால் மரத்தடியில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கி 

 

அடுத்ததாக மேலே சென்றால் முத்துக்குமாரசுவாமி சன்னதியை காண்கிறோம் 

 

இதில் முத்துக்குமரன் மயில்மேல் அமர்ந்த தோற்றத்தோடு ஆனந்த ஸ்வரூபமாக காட்சி தருகிறார் 

 

ராஜ கம்பீர நாடாளும் நாயகனாக வயலூரில் விளங்குபவர் இந்த முத்துக்குமார சுவாமி தான் 

 

முத்துக்குமார சுவாமி சன்னதிக்கு அடுத்திருப்பது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியின் சந்நிதி 

 

பக்தர்களை தன் பால் ஈர்க்கும் தோற்றம் 

 

வரம் தர துடிக்கும் அகரம் 

 

சுடர்வேல்  தாங்கிய கரம் 

 

தெய்வக் குஞ்சரி வள்ளியோடு எக்காலத்தும் நிறைந்து விளங்கும் பரம்பொருள் 

 

இந்த கர்ப்ப கிரகத்தினுள் ஏய்ந்து நிற்கும் காட்சி மனதை விட்டு அகலாது

 

சித்தர்கள் தேடி வந்து முக்தியைப் பெற விளையும் திருக்கோயிலாக வயலூர் முருகன் கோவில் விளங்குகிறது 

 

சன்னதியில் நின்று கண்கொண்ட மட்டும் முருகனை காணலாம் 

 

அய்யன் திருவடியை ஆழ்ந்து அனுபவிக்கலாம் 

 

தன் அடியார்கள் அனைவரும் தன்னை நெருங்கி வந்து வழிபடவும் 

 

தன் அடியார்களை நெருக்கத்தில் வைத்து அருள் வழங்கவும் தான் 

 

தந்தையின் பின்னால் நெருக்கமான இடத்தில் வயலூர் முருகன் வேண்டுமென்றே அமர்ந்தாரோ என்று கருத வேண்டும் 



முருகன் வடிவங்களில் வலது புறம் இருக்கும் தெய்வானையை நோக்கியவாறு நிற்கும் மயில் முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் தலங்கள் குறையவே 

 

வயலூர் பதியில் தெய்வக் குஞ்சறியின் பக்கம் மயில் முகம் வைத்திருக்கிறது 

 

முத்தி பேரு விரும்பும் அடியார் போற்றி வணங்க வேண்டிய முருகன் வயலூர் வடிவேலன் திருவடியாகும் 

 

அதனால் முக்தியை விரும்புபவர்கள் இப்பெருமானை தேடி வந்து வணங்குகின்றனர் 

 

முருகன் வயலூரில் ஒரு உண்மையை நமக்கு உணர்த்துகிறார் 

 

முருகப்பெருமான் தந்தையையும் தாயையும் முன்னிறுத்தி அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம் என்பதை நமக்கு புகட்ட 

 

அன்றாடம் தாய் தந்தையர் தாள் பணிந்து பூசணி அருள் பெற்ற பாலகராக காட்சி தருகிறார் வயலூர் முருகன் 

 

தன் வேலால் சக்தி தீர்த்தம் அமைத்து தாய் தந்தையரை தேவரும் மூவரும் காண ஆத்ம பூஜை செய்து 

 

அகில உலகிற்கும் அருள் தந்து காக்கும் கற்பகமாக காமதேனுவாக வரம் பெறுகிறான் வயலூர் முருகப்பெருமான் 

 

மற்ற இடங்களில் தனித்து நின்று பூஜை செய்யும் முறை தெய்வ குஞ்சரி வள்ளியோடு சேர்ந்து பூசை செய்கின்ற தனி சிறப்பு பெற்று திகழ்கின்றார். 

 

திருமணம் ஆனவர் சகபத்தினியோடு தான் கர்மாக்கள் செய்ய வேண்டும் என்ற விதிமுறை தவறாது 

 

தன் குடும்பத்தோடு  முருகப்பெருமான் பூஜை செய்கின்றார் என்பதே வயலூர் பதியின் தனி சிறப்பாகும் 

 

வயலூர் வள்ளலை வணங்கிய பின் மறக்காமல் வலது மூலையில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமியை வணங்கி 

 

அவளது கடைக்கண் பார்வை பெறவேண்டும் 

 

முருகனை வணங்கி வருகின்றவர்களுக்கு மகராசி லட்சுமி வாரி வழங்குகின்றார் 

 

வயலூர் திருக்கோயிலின் கிழக்கு பக்கத்தில் சக்தி தீர்த்தக் கரையில் கல்லால மரத்தடியில் வேல் வடிவான தோற்றத்தை இடும்பன் கோயில் என்றும் கிராம தேவதை கோயில் என்றும் சொல்கின்றனர் 

 

கல்லாள மரத்தடியின் ஞான சொரூபமாக வீற்றிருக்கும் தென்முக கடவுளும் 

 

கல்லால மரத்தடியில் ஞானவேல் வடிவமாக திகழும் நேரடியான கோயிலும் சிந்திப்பவர் சந்தைக்கு விருந்தாக அமையும் 

 

வயலூர் திருக்கோயிலின் தலவிருட்சம் வன்னிமரம் இது ஏறக்குறைய இன்னொரு 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மரம் 



பல சோழர் காலத்து கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளது

 

அக்காலத்தில் அருணாகியர் என்றால் பிற்காலத்தில்  அருளாளர் வாரியார் சுவாமிகள் 

 

எங்கும் நிறைந்த முருகப்பெருமான் வயலூர் தளத்தில் தமக்கு அருள் புரிந்தான் என்று 

 

தமிழ் கூறும் நல்லுலக முழுவதும் சென்று 40 ஆண்டுகளுக்கு மேலாக முழங்கி வந்ததை எல்லோரும் அறிவார் 

 

வயலூரின் பெருமை பற்றி தமிழ் மக்கள் அறியும் படி செய்தவர் வாரியார் தான் 

 

அன்றாடம் வழிபட்டு வரும் முருகப்பெருமான் திருவடிகளை வணங்கி பேச்சை  தொடங்குகிறேன் என்று

 

 முன்னுரை மொழிந்தே வாரியார் சுவாமிகள் சொற்பொழிவை தொடங்குவார்கள் 

 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களை ஒன்று திரட்ட வாரியார் சாமி எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்பல 

 

அருணகிரி ஆறில் அமுத தமிழுக்கு பதிவுரை தெளிவுரை கருத்துரை ஆகியவற்றை திருப்புகழ் அமிர்தம் எனும் பத்திரிக்கையில் வாரியார் சுவாமிகள் வெளியிட்டு வந்துள்ளார்கள் 

 

அருணகிரி சுவாமியை வயலூர் முருகனையும் நமக்கெல்லாம் ஆற்றுப் படுத்தியவர் வாரியார் சுவாமிகள் தான் 



வயலூர் முருகன் அருள் பெற்ற வாரியார் தன் முயற்சி ஒன்றையே மூலஸ்தானமாக வைத்துத் தொடங்கிய ராஜகோபுரத்து பணி வாரியாருடன் ஒன்றுபட்ட அன்பர்கள் அனைவரது ஒத்துழைப்புடன் 1937 இல் நிறைவு பெற்று திருக்குடம் முழுக்கு நடைபெற்றது 

 

அன்று முதல் வயலூர் திருக்கோயில் திருப்பணிக்கு வாரியார் சுவாமி நிரந்தர தலைவர் என்பது பிரசித்தம் ஆகிவிட்டது 

 

அதன் பின்னர் கோயில் ராஜகோபுரத்திற்கும் முன்பக்கம் அற்புதமான மண்டபம் அமைக்க பெற்று 

 

முதல் கோபுரம் ஒன்றும் அலுவலகம் ஒன்றும் அமைக்கப்பெற்றது 



தீராத வினை தீரும் இடம் வயலூர் 

 

தீவினைகள் ஆடாமல் தடுக்க உதவும் இடம் வயலூர் 

 

அறியாமல் செய்த பாவம் அகற்றும் இடம் வயலூர் 

 

அன்னை தந்தையரை வழிபட்டு அமர வாழ்வு என்று அறிவுறுத்தும் இடம் வயலூர் 

 

மங்காத புகழ் மணக்கும் தங்க திருப்பதி வயலூர்பதி என்பது அனுபவிப்பதற்கு மட்டுமே விளங்கும்

 

வயல் ஊரின் அமைப்பையும் சிறப்பையும் கண்டோம். 

 

கலியுக வரத நான் கந்தன் வற்றாத அருள் வாரி தியாக வீற்றிருக்கும் தன்மையே இன்றி 

 

சிவபெருமானும் மகிழ்ந்து வாசம் செய்யும் சிவஸ்தலமாக விளங்குகின்றது என்பதையும் 

 

அருணகிரி யாருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்த திருப்புகழ் பாடுமாறு பணித்த பெருமையும் கொண்ட ஆதி வயலுரை அவசியம் சென்று தரிசித்து வணங்குதல் முருக பக்தர்களின் கடமை என்று கூறுவதில் தவறேதும் இல்லை 

 

திருப்புகழ் உள்ள வரை அருணகிரிநாதர் புகழும் வயலூர் புகழும் நின்று நிலைக்கும் என்பதில் ஐயமில்லை 

Adiguru

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

🧘 Siddhas & Yogis

Sri Seshadri Swamigal- ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

தமிழில் வாசிக்க கீழே செல்லவும்  Sri Seshadri Swamigal – The Saint Once Called Mad, Later Revered by the World Was He
🧘 Siddhas & Yogis

We believe Apple Will announce iPhone.

பகவான் ரமணர் அற்புதங்கள்!   மகான்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ,    தனக்கென வரையறைகள் வகுத்து கொண்டு ஒரு குறுகிய வட்டத்தில் வாழாமல்    ஒரு மனிதனின்