முருகனின் உருவ ரகசியம்
முப்பத்து முக்கோடி தெய்வங்கள் இருக்க
ஏன் முருகனை மட்டும் தமிழ் கடவுள் என்றழைக்க காரணம்
தமிழ் என்ற சொல்லில் தா வல்லினம் மி. மெல்லினம் இல் இடையினம் என்று மூன்று இனங்களும் அமைந்துள்ளன
அதனைப் போலவே முருகன் என்ற சொல்லில் மு மெல்லினம் ரு இடையினம் கு வல்லினம் என்பதாக அமையபற்றுள்ளது.
அதனை போலவே
தமிழின் உயிரெழுத்துக்கள் 12 முருகனின் முருகனின் திருக்கைகள் 12
தமிழன் மெய் எழுத்துக்கள் 18 முருகனின் திருக்கண்கள் 18 கண்கள்,
அவரின் ஆறு தலைகளும் வல்லினம் இடையினம் மெல்லினம் என மூன்று பிரிவில் உள்ள ஆறு எழுத்துக்களாகும்
அவரது வேட்படை ஆயுத எழுத்தாகும்.
எழுத்துக்களே இத்தனை நெருக்கமாக அமையப்பற்றுள்ளது.
எழுத்துக்களோடு மட்டுமில்லாமல் பண்டைத் தமிழர்கள் வாழ்வியலில் முருகன் ஒன்றிணைந்துள்ளார்
காரணம் பண்டைய தமிழர்கள் நிலத்தை நான்கு பிரிவுகளாக வகுத்தனர்
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்பட்டது
அதற்குரிய கடவுளாக உமை மைந்தனை கொண்டனர்
சேயோன் மேய மைவரை உலகமும் என்பது பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியம்
மேலும் அவர்களின் வாழ்கை முறையை அகம் புறம் என வகுத்துக் கொண்டனர்
புறத்திற்கு அடிப்படை வீரம்
வீரத்தை பெரிதும் போற்றிய தமிழர்கள்
வானவர்களின் தானைத் தலைவனான முருகப்பெருமானை வீரத்தின் திருவுருவாக போற்றித் தொழுதனர்
அக வாழ்க்கையை களவியல் கற்பியள் என இரு பிரிவுகளாக கொண்டனர்
கலவியல் பண்பினை தமிழர்கள் பெரிதும் பாராட்டு மயக்கு பாராட்டியமைக்கு சங்ககால இலக்கியங்கள் சான்று வருகின்றன
எனவே அவர்கள் குமரன் வள்ளியுடன் கொண்ட கலவிகள் தொடர்பை பெரிதும் போற்றினர்
தங்களது இன்னல்களை களைய வேண்டிய காலத்தும்
தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய காலத்தும்
அவர்கள் ஆறுமுகம் அருளை எதிர் நோக்கினார்கள்
இவ்வாறு முருகப்பெருமான் தமிழர்கள் தம் வாழ்வில் இரண்டற கலந்து நின்றார்
சங்க காலத்தில் பெரிதும் வணங்கப்பட்ட இந்திரன் பல தேவன் ஆகியோரின் வழிபாடு மறைந்துவிட்டது
ஆனால் முருகன் சங்க காலம் தொட்டு தமிழர்களால் தொழப்பட்டு வருகிறார்
குப்தர்கள் ஆட்சி காலத்தில் கூட கார்த்திகேயன் தலைசிறந்த கடவுளாக வணங்கப்பட்டார் என்பர்
தமிழ் முனி எனப்படும் அகத்திய முனிவனுக்கு முருகன் தமிழ் ஆசான் என கருதப்படுகிறார்
தந்தையாகிய சிவபெருமான் மதுரை தமிழ் சங்கத்தில் தருமிக்காக நின்று நக்கீரருடன் சொற்போர் நிகழ்த்தினார்
அதே தமிழ் சங்கத்தில் முருகன் ருத்ரசன்மன் என்ற பெயரில் அமர்ந்திருந்து
இறையனார் அகப்பொருள் என்ற நூலுக்கு சங்கப் புலவர்களின் உரைகளைக் கேட்டு எது சிறந்தது என்று அறுதி இட்டு கூறினார்
அது மட்டுமா நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் குமரனின் அவதாரமாக போற்றப்பட்டார்
இறைவனிடம் காதல் கொண்டு கசிந்து உருகி கண்ணீர் மலினால் தான் அவனது அருளைப் பெறலாம் என்பர்
ஆனால் முருகனை முத்தமிழால் திட்டினால் கூட அவனது அருளை அடையலாம் என்பார் அருணகிரிநாதர்
முத்தமிழால் வயதாரை அங்கும் வாழ வைப்போன் என்பது கந்தரளங்கர பாடல்.
முருகப்பெருமானது ஆறுமுகங்களையும் பகுத்தறிவு உள்ளிட்ட ஆறு அறிவுகளாக கொண்டால் தமிழ் இலக்கிய மரபுப்படி அவரை அறிவின் திருவுருவம் எனலாம்
அதாவது அவர் யாவையும் உணர்ந்தவர் என்பதாகிறது
ஆங்கிலத்தில் இறைவனது இப்பன்பினை ஆம்னி சென்ட் என்பர்
ஆறுமுகங்களில் ஐந்து முகங்களை மண் காற்று நீர் நெருப்பு ஆகாயம் என்று ஐம்பெரும் பூதங்களாகவும்
ஆறாவது முகத்தை அவற்றை இயக்கும் பகுத்தறிவாகவும் கொள்ளலாம்
ஐம்பெரும் பூதங்கள் இன்றி இவ்வுலகில் எப்பொருளும் இல்லை
எனவே ஐந்து முகங்களும் ஐம்பெரும் பூதங்களாக கொல்லப்படுவதால் அவர் உலகமெங்கும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பது பொருளாகிறது
இதை ஆங்கிலத்தில் ஆம்னி பிரசன்ட் என்பர் .
மனிதன் தன் பகுத்தறிவால் ஐம்பெரும் பூதங்களை ஓரளவு ஆக்கும் பணிக்கும் அழிக்கும் பணிக்கும் பயன்படுத்துகிறான்
எனவே முருகப்பெருமானது ஆறாவது முகம் பகுத்தறிவு எனப்படுவதால் அவரை உலகை இயக்கும் மாபெரும் சக்தியாக கொள்ளலாம்
இதனை ஆங்கிலத்தில் ஆம்னி போடன்ட் என்பர்
இவ்வாறு முருகனது திருவுருவமமானது இயறகையின் பல சூட்சுமங்களை
தன் கைத்தே கொண்டுள்ளது.
சிவபெருமானது வாமதெய்வம் தட்பருடம் ஈசானம் அகோரம் மற்றும் சத்ய ஜாதகம் என்ற ஐந்து முகங்களையும் பராசக்தியின் கீழ்நோக்கிய அதோ முகத்தையும் குறிப்பதால் முருகன் சிவசக்தி வடிவமாக போற்றப்படுகிறார்
முருகப்பெருமான் வானவர் தானைத் தலைவன் எனவே அவன் பேராற்றல் மிக்கவன் இதனை உணர்த்தவே அவனுக்கு 12 கைகள் அமைந்துள்ளன
இவருக்கு உகந்தது கடம்ப பூ
இதனால் இவன் கடம்பன் என்று அழைக்கப்படுகிறார்
கடம்பம் கார்காலத்து மலரும் தன்மையுது
அதை மாலையாக அணிந்து அவர் கடம்ப மரத்தில் உறைவது அவரது அருள் திறத்தை சுட்டிக் காட்டுகிறது
அவரது கொடியான சேவல் நாத தத்துவத்தையும்
ஊர்தியான மயில் விந்து தத்துவத்தையும் உணர்த்துகிறது
அழகு மிக்க முருகப் பெருமானுக்கு அழகில் சிறந்த மயில் ஊர்தியாக அமைந்துள்ளது சாலப்பொருத்தமே
அந்த மயிலின் வாயில் பாம்பு காணப்படுகிறது
பாம்பு சக்தியை குறிக்கிறது
அது மயிலுக்கு அடங்கியுள்ளது
மயில் வேட்படையானுக்கு அடக்கம்
எனவே எல்லா சக்திகளும் கந்தவேலுக்கு அடக்கம் என்பது ஆகிறது
முருகனின் வேலின் நுனி கூர்மையாகவும் நடுப்பகுதி அகலமாகவும் கடைசி பகுதி ஆழமாகவும் உள்ளன
அது போன்று அறிவு யாவற்றையும் விரைவில் புரியும் வகையில் நுண்ணியதாகவும்
பல பொருட்களை அறிந்து பறந்தும் உள்ளது
பொருட்களை மேலெழுந்த வாரியாக நோக்காது ஆழ்ந்து நோக்க வேண்டும்
இறைவனது மூன்று சக்திகளில் இது ஞான சக்தியாம்
வல்லியம்மை இச்சார் சக்தி தெய்வானை கிரியா சக்தியாக கொள்ளப்படுகிறார்கள்
முருகப்பெருமானுடைய பல்வேறு திருவருவங்களும்
அவற்றுக்கான விதிகளும் ஆகமங்களின் கூறப்பட்டுள்ளன
அதில் குமார தந்திரம் எனும் நூலில் 16 திருவருவங்கள் கூறப்பட்டுள்ளன
சக்திதரன் ஒரு தலை இரண்டு கைகளை கொண்டவர் இடக்கையில் சக்தி என்ற படைக்களம் இருக்கும்
கந்தன் ஒரு தலை இரண்டு கைகளை உடையவர் இவ்வடிவம் கோவணம் அணிந்திருக்கும்
சேனாபதி ஆறு தலைகள் 12 கைகள் உடையவர் மடியில் தேவி உட்கார்ந்து இருப்பார்
சுப்பிரமணியன் இரண்டு கைகள் அல்லது நான்கு கைகள் கொண்டவர் ஒரு கையில் தாமரை மலர் இருக்கும்
கஜவாகன ஒரு தலை நான்கு கைகளுடன் யானை மீது அமர்ந்து காணப்படுவார்
L
சரவண பவர் ஆறு தலைகள் 12 கைகள் கொண்டவர்
கார்த்திகேயனுக்கு ஆறு தலைகள் ஆறு கைகள் இருக்கும்
குமரனுக்கு நான்கு கைகள் இருக்கும்
சண்முகன் ஆறு தலைகள் 12 கைகள் கைகளும் மயில் மீது உட்கார்ந்துள்ள திருவுருவத்தில் இருப்பார்
தாரகாரி என்ற வடிவிற்கு 12 கைகள் இருக்கும் .
கிளெஞ்ச பேதன் ஆறு தலைகள் எட்டு கைகள் உள்ள திருவுருவம்
சோனாணிக்கு 12 கைகள் இருக்கும்
பிரம்மசாஸ்தா வடிவம் நான்கு கைகளை உடையது அதன் பின் கைகளால் அக்கம் ஆலயம் கமண்டலமும் இருக்கும்
சசி வாகனன் ஒரு தலை நான்கு கைகளுடன் மயில் மேல் இருப்பார்
பாலசாமி என்பது குழந்தை வடிவம் தாய் தந்தையருக்கு இடையில் சோமஸ்கந்தராக இருப்பார்
சுந்தர வடிவம் வள்ளியம்மைக்கு வள்ளியம்மையை திருமணம் புரியும் திருவருவு
இது தவிர தத்துவ நீதி என்ற நூலில் மேலும் ஆறு வடிவங்கள் கூறப்பட்டுள்ளன
அக்னி ஜாதசுபிரமணியர் இவருக்கு இருதலைகள் எட்டு கைகள் இருக்கும்
சௌரபேய சுப்பிரமணியருக்கு நான்கு தலைகள் எட்டு கைகள் அமைந்திருக்கும்
காங்கேய சுப்ரமணியனுக்கு ஒரு தலை நான்கு கைகளுடன் மகர மீன் மீது நின்று கொண்டிருப்பார்
சுப்பிரமணியருக்கு ஒரு தலை நான்கு கைகளுடன் தேவியும் காணப்படுவார்
பிரம்மச்சாரி சுப்பிரமணியருக்கு உச்சந்தலையில் குடுமியும் இடுப்பில் புல்லாலான ஆடையும் கோவணமும் இருக்கும்
தேசிக சுப்பிரமணியருக்கு ஒரு தலை ஆறு கைகளுடன் மயில் மீது அமர்ந்து தந்தைக்கு ஓங்காரப் பொருளை கூறும் வடிவமாக இருக்கும்





