ஆதிசங்கரர்
ஆதிசங்கரர் காலத்தில் பௌத்தமே பெரும் மதமாக இருந்தது.
பௌத்தர்களின் தத்துவம் சூன்ய வாதம்.
இந்த உலகில் காணும் அனைத்தும் சூன்யமே.
ஏன் உலகமே சூன்யம் என்று பொருள்.
சூன்யம் என்பதை மாயை என்றும் கொள்ளலாம்.
ஆனால், ஆதிசங்கரர் அனைத்தும் மாயை என்றால் இந்த உலகைத் தோற்றுவித்தவர் யார்…
இந்த உடலை இயக்கும் உயிர் எது… என்ற கேள்வியை முன்வைத்து ஒரு தரிசனத்தைக் கண்டடைந்தார்.
அது, `பிரம்மம் சத்யம், ஜகன் மித்யா’ என்பது.
இந்த உலகம் மாயை அழியக்கூடியதுதான்.
ஆனால் இந்த உலகை தோற்றுவித்த – இயக்குகிற பிரம்மம் அழிவில்லாதது என்ற தத்துவத்தை அறிவித்தார்.
இந்த உலகமெங்கும் வியாபித்திருக்கும் பொருள்களில் நிறைந்திருப்பது பரப் பிரம்மமே என்று அறிவித்து பரமாத்மாவும் ஜீவத்மாவும் ஒன்றே என்று விளக்கினார்.
இதற்கு அத்வைதம் என்று பெயரிட்டார்.
அத்வைதம் என்றால் இரண்டல்ல என்று பொருள்.
இது அதுகாறும் இருந்த சிந்தனை மரபில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது.
இந்த அத்வைத சம்பிரதாயத்தை மக்களிடம் எடுத்து செல்வதற்காகவே இப்பிறவி எடுத்து
தனது குறுகிய வாழ்நாளில் ஆன்மீகத்தின் எட்டாத உச்சத்தை தொட்டவர் ஆதிசங்கரர்
சிருங்கேரி மடத்தின் ஆச்சார்யா வரிசையை கொண்டு ஆதிசங்கரர் காலம் கி.பி.788-820 என்று கணக்கிட்டுள்ளனர்.
பொதுவாக ஆய்வாளர்கள் இந்த ஆண்டையே ஏற்கின்றனர்.
ஆனால் காஞ்சி மடம் ஆதிசங்கரர் காலத்தைக் கி.மு 509 என்று கணக்கிடுகிறது.
சிருங்கேரி மடத்தைத் தவிர மற்ற மடங்கள் காஞ்சி மடம் குறிப்பிடுகிற ஆண்டையே ஏற்றுக் கொண்டுள்ளது.
அதேசமயம் ஆதிசங்கரர் முப்பத்திரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் என்பதில் எல்லா மடங்களும் ஒத்த கருத்தையே கொண்டுள்ளன.
ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய நிறைய நூல்கள் இருந்தாலும் அது அனைத்தும் அவர் மறைந்து ஆண்டுகள் பல கடந்து எழுதப்பட்டவையே.
இதனால் ஒவொன்றிக்கும் இடையே சில முரண்பாடான கருத்துகலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கேரளா மாநிலம் காலடியில் வசித்த சிவகுரு ஆரியாம்பாள் என்ற தம்பதிக்கு வெகு காலம் குழந்தை பேறு இல்லாமல் இருந்தது.
சிலரது ஆலோசனையின்படி, திருச்சூரில் உள்ள வடக்கு நாதன் சேத்திரத்திற்கு பிள்ளை வரம் வேண்டிய வழிபடச் சென்றனர்.
அங்கு அவர்களின் கனவில் சிவபெருமான் தோன்றி,
“வேண்டுதலை ஏற்று நிபந்தனைக்கு உட்பட்டு உங்களுக்குப் பிள்ளை வரம் தருகிறேன்.
நல்லறிவும், நற்குணமும் கொண்ட ஆனால் ஆயுள் குறைந்த ஒரு ஆண் குழந்தை வேண்டுமா?
அல்லது
அறிவற்ற, கெட்ட குணங்களைக் கொண்ட பல குழந்தைகள் வேண்டுமா?” என்று கேட்டார்.
அதற்கு அத்தம்பதியினர் இறைவனிடம் ,
“எங்களுக்கு வேண்டியதையும், வேண்டாதவையும் அறிந்தவர் நீயே ,
உங்கள் விருப்பம் என்னவே அதுவே எங்கள் விருப்பம் என்றனர்.
அதற்கு சிவபெருமான் “சோதனையில் வென்ற உங்களுக்கு நானே என் அம்சத்தோடு மகன் பிறப்பான்” என்று கூறி மறைந்தார்.
பத்து மாதம் சென்ற பிறகு ஆரியாம்பாள் ஆண் மகவை பெற்றார்.
சிவபெருமானே குழந்தை வடிமாக வந்துள்ளதால் அந்தக் குழந்தைக்குச் சங்கரன் என்று பெயரிட்டனர்.
சங்கரன் என்பதற்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் என்று பொருளாகும்.
சங்கரன் மூன்று வயதிலேயே தன் படிப்பை துவங்கினார்.
மிக குறுகிய காலத்திலேயே தாய் மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் சங்கரன் சிறந்த தேர்ச்சி பெற்றார்.
சங்கரருக்கு நான்கு வயதை எட்டிய போது தகப்பனார் சிவகுரு இயற்கை எய்தினார்.
இந்தத் துயரத்தின் தொடர்ச்சியிலும் ஆரியாம்பாள் தமது பிள்ளையின் ஐந்தாம் வயதில் உபநயனம் செய்வித்தார்.
பூணூல் அணிந்த பின் சங்கரர் தாயைப் பிரிந்து குருகுலவாசம் சென்றார்.
அங்கு வேதம் மற்றும் பிற சாஸ்திரங்களைக் கற்றார்.
குருகுலவாசத்தின் போது பிள்ளைகள் பொதுமக்களிடம் சென்று பிச்சைப் பெற்றே உண்பர்.
அப்படி செல்கையில் ஒருநாள் ஆதிசங்கரர் ஒரு வீட்டுக்குச் சென்று பிக்ஷை கேட்டார்.
அந்த வீட்டு தலைவர் வெளியில் சென்றிருந்தார்.
வீட்டில் அவருடைய மனைவி மட்டும் இருந்தாள்.
வாசலில் வந்து பிக்ஷை கேட்ட பாலக சங்கரனைக் கண்டபோது, சாட்சாத் சிவபெருமானே பாலகன் வடிவில் வந்து பிக்ஷை கேட்பது போல் தோன்றியது.
வீடு தேடி வந்த பிள்ளைக்கு பிக்ஷையிட எதுவும் இல்லையே என்ற தவிப்புடன் வீடு முழுவதும் தேடிப் பார்த்தாள்.
ஒரு உலர்ந்த நெல்லிக்கனி மட்டுமே இருந்தது.
அன்பின் மிகுதியால் அந்த நெல்லிக்கனியை எடுத்து வந்து பாலக சங்கரனின் தட்டில் போட்டாள்.
தன்னுடைய நிலையை நினைத்து கவலை கொண்டாள்.
அந்தப் பெண்ணின் அன்பில் மகிழ்ந்த சங்கரர், அவள் வறுமை தீரவேண்டி, மகாலக்ஷ்மியை பிரார்த்தித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார்.
அவர் பாட்டுக்கு இரங்கிய மகாலக்ஷ்மி தரிசனம் கொடுத்து .
அந்த வீட்டில் தங்க நெல்லிக்கனிகளையே மழையெனப் பொழிந்தாள் என்று இந்த ஸ்லோகம் உருவான விதம் பற்றி ஞான நூல்கள் கூறுகின்றன.
குருகுலத்தில் கற்றுமுடித்த சங்கரன் வீடுதிரும்பினார்.
தமது தாயாரை அன்போடு கவனித்து கொண்டார்.
மாணவ ஆசிரமத்தை முடித்த சங்கரர் அடுத்து ஏற்க வேண்டிய இல்லற ஆசிரம்.
ஆனால் சங்கரர் சந்நியாசதை ஏற்கவே விரும்பினார்.
இதற்குத் தமது தாயிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்று தெரிந்திருந்தது.
அதனால் தகுந்த நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
இறைவனின் கிருபையால் அதற்கான நேரம் வந்தது.
ஒருமுறை தாயாரோடு சங்கரர் பூர்ணா ஆற்றில் வழக்கம் போல் நீராடிக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு முதலை அவரது ஒரு காலை கவ்வி கொண்டது.
அவர் தாயரிடம் என்னைக் காப்பாற்றுவது உனது கையில்தான் இருக்கிறது.
இந்தப் பிறவியில் முதலையால் கொல்லப்பட வேண்டும் என்பது விதி.
இந்த விதியில் இருந்து விடுபடத் தான் சந்நியாசம் ஏற்க வேண்டும்.
சாஸ்திரப்படி சந்நியாசம் என்பது மறுபிறவியாகும்.
அடுத்தப் புதிய பிறவியை எடுத்துக் கொண்டால் முதலை என்னை ஒன்றும் செய்திட முடியாது.
உயிரோடு இருந்தால் தான் உனது இறுதிகாலக் கிரியைகளைச் செய்ய முடியும்.
சந்நியாசத்தை ஏற்றாலும் உயிர் பிரிகின்ற நேரத்தில் உன்னிடம் வந்து சேருவேன்.
இறுதிகாரியங்களைப் பிள்ளை என்ற முறையில் செய்து முடிப்பேன் என்று உறுதியளிக்கிறேன் என்று தாயிடம் கூறினார்.
தாயாரும் இதற்கு ஒப்புக் கொண்டார்.
பின் சங்கரர் அங்கேயே தானே சந்நியாசம் ஏற்றார்.
குரு இல்லாமல் தானே ஏற்கும் இத்தகைய சந்நியாசத்திற்கு ஆபத் சந்நியாசம் என்று பெயர்.
முதலை வாயில் இருந்து காலை விடுவித்துக் கரைக்குத் திரும்பினார்.
சந்நியாசம் ஏற்றுக் கொண்டவர்களுக்கு பித்ரு காரியங்கள் செய்யும் அதிகாரம் கிடையாது என்றாலும்
ஆதிசங்கரர் அவரது குடும்பத்திற்கு ஒரே மகன் என்பதால் இந்த விதி அவருக்கு பொருந்ததது.
ஆபத் சந்நியாசம் செய்து கொண்டாலும் சங்கரர் குருவின் மூலம் சந்நியாச தீட்சை பெறுவதற்காக
நர்மதா ஆற்றின் கரையில் தவம் செய்து கொண்டிருந்த கோவிந்த பகவத் பாதரை சந்திப்பதற்குக் காலடியைவிட்டு கிளம்பினார்.
வெகுதூர பயணத்திற்கு பின் நர்மதை ஆற்றுக்கரையில் ஒரு குகையில் சமாதி நிலையில் இருந்த தன் குருவை சந்தித்தார்.
முன்றுமுறை அவரை வலம் வந்து குருவை நோக்கி சுலோகத்தால் வணக்கம் செலுத்தினார்.
இதுவரை ஏதற்கும் திறவாத கோவிந்தரின் கண்கள் சங்கரரின் ஸ்தோத்திரத்திற்குப் பணிந்து திறந்தது.
தாம் எதிர்பாத்த சீடர் வந்துவிட்டதாகக் கருதி
“யார் நீ?” என்று கேட்டார் குருநாதர்.
“யார் நீ?” என்று கேட்டதற்குக் கர்மநிலையைப் பின்பற்றுபவன் தனது பெயரையே கூறுவான்.
இதற்கு மாறாக ஞானநிலையை அடைந்தவன் இகலோக இருமைகளைக் கடந்த ஒருமை நிலையாகவே தன்னைக் கருதுவான்.
எனவே ஆதிசங்கரர் சீடனாகும் தகுதியை உணர்த்தும் பொருட்டு, பத்து சுலோகத்தால் குருவிற்கு பதில் அளித்தார்.
அத்வைதத்தை அறிந்திடும் தகுதிபெற்ற சீடனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் வகையில் அந்தப் பத்துச் சுலோகங்கள் அமைந்திருந்தன.
இதுவே “தச சுலோகீ” என்ற தனி ஸ்தோத்திரப் பாடலாக இன்று நமக்குக் கிடைத்துள்ளது.
கோவிந்த பகவத் பாதர் தமது சீடராகச் சங்கரரை ஏற்றுக் கொண்டு, மகா வாக்கியங்களைச் சங்கரருக்கு உபதேசித்தார்.
முன்பே தனக்குத்தானே தீட்சை பெற்ற சங்கரர்,
இப்போது குருவின் மூலமாகத் தீட்சைப் பெற்று தலை முடியைக் கலைந்து, கஷாயம் உடுத்தி துறவை மேற்கொண்டார்.
சீடராக சிலகாலம் குருவுடன் தங்கி இருந்தார்,.
பின்பு குருவின் விருப்பத்திற்கு இணங்க காசிக்கு சென்றார்.
எல்லாச் சித்தாந்தவாதிகளும் விவாதிக்கும் இடமாகக் காசி விளங்கியதால்,
அங்குச் சென்று பிற சித்தாந்தவாதிகளுடன் வாதம் செய்து,
அத்வைதத்தை பரப்புவதற்குக் காசியே சிறந்த இடம் என்பதனால் ஆதிசங்கரர் காசிக்கு அனுப்பட்டார்
காசியில் உள்ள விசுவனாதர் கோயிலுக்கு அருகில் மணிகர்ணிகா என்னும் இடத்தில் ஆதிசங்கரர் வசிக்கலானார்.
முக்தி மண்டபத்தில் நாள்தோறும் உபந்நியாசம் நிகழ்த்தினார்.
பலநாட்டுப் பண்டிதர்கள் அவரது உபந்நியாசத்தைக் கேட்டனர்.
அவரது போதனையில் கவரப்பட்டுப் பலபேர் ஆதிசங்கரின் சீடரானார்கள்.
காசி தவிர நாட்டின் பிறயிடங்களுக்குச் சொன்று அத்வைதத்தைப் பரப்ப ஆதிசங்கரர் எண்ணினார்.
இந்த நிகழ்வையே திக்விஜயம் என்று கூறப்படுகிறது.
பல இடங்களுக்கு சென்று பல விவாதங்களில் பங்கேற்று வெற்றி பெற்றார் .
அதில் ஒரு விவாதம் தனித்துவமும் முக்கியத்துவமும் வாய்ந்தது.
மண்டனமிச்ரரை என்பவரோடு விவாதம் செய்வதற்கு அவரை சந்திப்பதற்காக மாகிஷ்மிதி நகரை நோக்கி சென்றார்.
மண்டனமிச்ரர் வாதத்திற்கு ஒப்புக் கொண்டார்.
அதற்கு அவரது மனைவி சரஸவாணி நடுவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
வாதத்தில் மண்டனமிசரர் தோற்றால், துறவுறம் ஏற்று ஆதிசங்கரின் கொள்கையான அத்வைதத்தைப் பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் ஆதிசங்கரர் தோற்றால் பூர்மமீமாம்சத்தை ஏற்றுக் கொண்டு மண்டனமிச்ரர் வழியில் இல்லறத்தை ஏற்க வேண்டும்.
ஞானமே முக்திக்கு வழிவகுக்கும் என்று சாஸ்திரம், உக்தி, அனுபவங்கள் ஆகியவற்றால் ஆதிசங்கரர் மண்டனமிச்ரரைவ் வீழ்த்தினார்.
அவரும் தோல்வியை ஒப்புக் கொண்டு, ஞான வழியை ஏற்கத் தயாரானார்.
ஆனால் நடுவராக இருந்த சரஸவாணி தம் கணவர் துறவியாகி தம்மை விட்டுப் பிரிவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தார்.
உடனே அவர் ஆதிசங்கரரை
“எனது கணவர் தோற்றது உண்மையே, கணவனும் மனைவியும் ஈருடல் என்றாலும் ஓருயிரே,
அதனால் கணவனின் பாதியாகிய என்னையும் நீங்கள் வெற்றி பெற்றால் தான் முழுமையான வெற்றிப் பெற்றதாகக் கருதமுடியும்”
என்று கூறி வாதிடுவதற்கு அழைத்தார்.
சகல கலையிலும் வல்லவரான சரஸவாணியுடன் வாதிட ஆதிசங்கரர் ஒப்புக் கொண்டார்.
ஆனால் இதில் ஒரு சூழ்ச்சி இருந்தது
ஆதிசங்கரர் எட்டுவதிலேயே துறவை ஏற்றவர்,
காமக்கலையின் நுட்பமோ, அனுபவமோ அவருக்கு ஏற்பட்டிருக்காது,
அதனால் ஆண்- பெண் உறவுபற்றிய கேள்விகளைக் கேட்டு ஆதிசங்கரரை மடக்கி விடலாம் என்று நினைத்த சரசவாணி
அது சம்பந்தமான கேள்விகளை கேட்ட,
அதன் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட சங்கரர் சிறிது காலம் அவகாசம் கொடுத்தால்
இதற்கான விடைகளை கூறுகிறேன் என்றார்.
அறிவி ஜீவியான ஆதிசங்கரர், புத்தகங்களில் இதற்கான விடைகளை தேட செல்கிறார் என்று நினைத்த சரசுவாணி அதற்கு ஒப்புக்கொண்டு ஒரு மாதம் அவகாசம் கொடுத்தார்.
ஆனால் ஆதிசங்கரரின் மனதில் வேறு எண்ணம் இருந்தது.
பின் சீடருடன் அங்கிருந்து புறப்பட்டார்.
செல்லும் வழியில் அந்த நாட்டை ஆண்ட அமாருகன் என்ற மன்னன் இறந்துவிட்ட சேதி கிடைத்தது.
உடனே சங்கரர் உடன் வந்த சீடரிடம்
“பல இளம் பெண்களை மனைவிகளாகக் கொண்ட இம்மன்னனின் உடலில் யோக சக்தியால் நான் நுழைந்து
காமக்கலைகளின் விஷயங்களை தெரிந்துகொண்டு வருகிறேன் என்று கூறி
அதுவரையில் தன் உடலை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் படி சொல்லிவிட்டு
யோகா கலைகளில் மிக நுணுக்கமான ஒரு கலையான கூடு விட்டு கூடு பாய்தல் முறையில் அந்த மன்னனின் உடலில் புகுந்து
அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு பின்
விவாதத்திற்கு சென்று சரசவாணியை போட்டியில் வென்றார்.
வாதத்தில் தோற்ற மண்டனமிச்ரர் துறவறம் ஏற்று, சுரேச்வரர் என்ற பெயரைப் பெற்று சங்கரரின் சீடரானார்.
சிருங்கேரியில் ஆதிசங்கரர் அமைத்த மடத்திற்குச் சுரேச்வரரையே தலைவராக நியமித்தார்.
இதனால் ஆதிசங்கரரது அத்வைதம் என்கிற வேதாந்தம் நாடெங்கும் பரவத் தொடங்கியது.
ஆதி பராசக்தியின் 54 சக்தி பீடங்களில் சில மூலவ மூர்த்திகள் மிகவும் உக்ரத்திடன் விளங்கினர்.
அவ்வாறான தெய்வங்கள் இருக்கும் கோவில்களில் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து அவர்களை சாந்தப்படுத்தினார் ஆதிசங்கர்.
அதிலும் குறிப்பாக வடக்கு திசை நோக்கி அமைந்திருக்கும் தெய்வகளுக்கு மட்டுமே இந்த பிரதிஷ்டை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக நான்கு திசைகளில் நான்கு மடங்களை ஏற்படுத்தினார்.
வடக்குத் திசையில் பித்ரியில் ஜியோதி பீடம்,
கிழக்குத் திசையில் பூரியில் கோவர்தன பீடம்,
தெற்கு திசையில் சிருங்கேரியில் சாரதா பீடம்,
மேற்கு திசையில் துவாரகையில் துவாரகா பீடம்.
நான்கு வேதங்களை விளக்குவதற்கு நான்கு மடங்களை அதிசங்கரர் அமைத்தார் என்று கூறுவது வழக்கம்.
வர்ணங்களின் அடிப்படையில் இருந்த பாகுபாடுகள் தீர்க்கப்பட வேண்டியது ஆன்மிக எழுச்சிக்கு அவசியம் என்பதை சங்கரர் உணர்ந்தார்.
அதற்கு அடிப்படையாக அவர் வாழ்வில் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் ஒன்றைக் குறிப்பிடுவது உண்டு.
ஈசனே ஆதிசங்கரர் முன் தோன்றி இந்த உலகில் பிறப்பால் பேதமில்லை என்பதை உணர்த்தினார்.
இதை ஆதிசங்கரர் நாடெங்கும் எடுத்துரைத்தார்.
ஏற்கெனவே பிரிந்திருந்த ஷண்மதங்களையும் அதன் வழிபாடுகளையும் ஒன்றிணைத்தார்.
சைவ வைணவ ஒற்றுமைக்கு அடிகோலினார்.
லலிதாம்பிகையின் உபாசகராக விளங்கிய சங்கரர் விஷ்ணு சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதினார்.
பிரம்ம சூத்திர பாஷ்யம்.
விவேக சூடாமணி முதலிய பாஷ்யங்களையும்
பஜ கோவிந்தம், ஸௌந்தர்ய லஹரி, மனிஷா பஞ்சகம், கனகதாரா ஸ்தோத்திரம், காலபைரவாஷ்டகம், சுப்ரமணிய புஜங்கம் போன்ற ஸ்தோத்திரங்களையும் எழுதினார்
பத்ரிநாத் வரலாற்று முக்கியத்துவமானது ஏனென்றால் இங்கிருக்கும் ஆலயம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டது.
அவரது பிறந்த மண்ணின் மக்களையே அவர் விரும்பியவாறு உருவாக்கம் செய்தார்.
காலடியிலிருந்து பத்ரிநாத் வரை, நடைப்பயணம் மேற்கொள்வது என்பது,
மூன்றாயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கொண்டது. ஆதிசங்கரர் அவ்வளவு தூரங்களையும் நடந்தே பயணித்தார்.
இன்றைக்கும்கூட, அவர் உருவாக்கிய நம்பூதிரிகள் எனப்படுபவர்களின் குடும்ப வழித்தோன்றல்கள்தான் பாரம்பரியமாக, பத்ரிநாத் கோவிலின் பூசாரிகளாக இருக்கின்றனர்.
திருச்செந்தூர் உள்பட பல ஆலயங்களில் கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரிகள் அர்ச்சகர்களாக இருந்து பூஜை செய்யும் முறை ஆதிசங்கரர் உருவாக்கியதே
அதைபோலவே ராமேசுவரம் கோவிலில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிராமணர்கள் பூஜை செய்ய வேண்டும் என்ற முறையை கொண்டு வந்ததும் ஆதிசங்கரரே.
ஒருமுறை, ஆதிசங்கரர் வடக்கே மலையில் இருந்தபோது, அவரது தாய் மரணித்துக்கொண்டிருந்ததை உள்ளுணர்வில் அறிந்துகொண்டார்.
தாய் மரணிக்கும் தருவாயில், ஆதிசங்கரர் தாயுடன் இருப்பதாக உறுதியளித்தபிறகே,
பன்னிரண்டு வயதில் சந்நியாசம் மேற்கொள்வதற்கு அவரின் தாய் அனுமதியளித்திருந்தார்.
ஆகவே அவரது தாய் நோயுற்றிருப்பதை அவர் உணர்ந்ததும்,
அவரது தாயின் மரணப்படுக்கையில் அவரருகில் இருப்பதற்காகவே அவ்வளவு நெடுந்தொலைவிலிருந்து நடந்து கேரளாவுக்கு வந்தார்.
அவரது தாயுடன் ஒரு சில நாட்கள் கழித்தார்.
அவர் இறந்தபிறகு, ஆதிசங்கரர் மீண்டும் வடக்கு நோக்கித் திரும்ப நடந்தார்.
அவரது வாழ்வின் இறுதிக் கட்டங்களில்,
ஆதிசங்கரர் அவரது பண்பாடு, அவரது பிராமண வாழ்க்கைமுறை மற்றும் அவருடைய வேத பாண்டித்தியம் போன்றவற்றில் அதிகம் நிலைத்திருந்ததால்,
அவர் அடிப்படைகளை முறையாகப் பார்க்கவில்லை.
ஒருநாள், அவர் ஒரு கோவிலுக்குள் நுழைந்துகொண்டிருக்க,
வேறொரு நபர் கோவிலில் இருந்து வெளியே நடந்துகொண்டிருந்தார்.
அந்த நபர் கீழான சாதியைச் சேர்ந்தவராக இருந்தார், ஆனால் ஆதிசங்கரர் தூய்மையிலும் தூய்மையான பிராமணராக இருந்தார்.
ஆகவே அவர் கோவிலுக்குள் நடந்து செல்லும்பொழுது, கீழ் சாதி நபரைக் காண நேர்ந்ததால், அதனை ஒரு கெட்ட நிமித்தமாக அவர் கருதினார்.
அவர் அந்த நபரைப் பார்த்து, “விலகிச் செல்”, என்றார்.
அந்த நபர் அங்கேயே நின்றபடி,
“எது விலகிச் செல்லவேண்டும், நானா அல்லது என் உடலா?” அவர் கேட்டதெல்லாம் அதுதான்.
இது ஆதிசங்கரரை மிகக் கடுமையாகத் தாக்கியதுடன், அவர் பேசிய கடைசி நாளும் அதுவாகவே இருந்துவிட்டது.
அவர் அதற்குப் பிறகு ஒருபோதும் வேறு எந்த போதனையும் வழங்கவில்லை.
அவர் அப்படியே நேராக இமயமலைகளுக்கு நடந்துவிட்டார்.
மீண்டும், எப்போதும் அவரை ஒருவரும் பார்க்கவில்லை.
ஆம் தனது 32 வயதில் ஈசன் உறையும் இமாலயத்திற்குச் சென்று கேதாரத்தில் மஹாசமாதி அடைந்தார்.
விநாயகர் முதல் ஆஞ்சநேயர் வரை அனைத்து கடவுள்கள் மீதும் சங்கரர் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்..
பத்ரிநாத், அதிசய யோகியாக வாழ்ந்த ஆதிசங்கரர்.
ஏன் 32 வருடங்கள் மட்டுமே வாழ்ந்தார் ஆதிசங்ககர்
இறைவனை போல அதீத சக்தி கொண்ட ஒரு அவதாரம் போல வாழ்ந்தவர் ஆதிசங்கரர்.
வெறும் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் அவர் வழிவகுத்து கொடுத்து சென்ற ஆன்மீக சம்பிரதாயங்கள் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும்
இன்றும் அதே உயிர்ப்போடு உள்ளது என்றால் அதுவே ஆதிசங்கரரின் சக்தி.
மிக உயர்ந்த ஞானியாகவும், அசாத்திய திறமைகள் கொண்ட யோகியாகவும், ஓரு தாய்க்கு மகனாகவும் வாழ்ந்த ஆதிசங்கரரின் வாழ்க்கை மிக உயர்ந்த ஒன்று.
அவரின் சரிதத்தை கேட்பதும், அவர் அவதரித்த ஊரான காலடிக்கு சென்று வழிபடுவதும் நமக்குள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
நன்றி.
ஆதிசங்கரரின் சொல்லப்படாத வரலாறு
SUBSCRIBE
LOGIN
ஸ்ரீ சக்கரம் பற்றிய 20 அரிய தகவல்கள்!!
kumudam bookmark line | BAKTHI| Updated: Jun 12, 2020
ஸ்ரீ சக்கரம் பற்றிய 20 அரிய தகவல்கள்!!
நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். ஸ்ரீ சக்கரம் பற்றிய 20 அரிய தகவல்களை அறிவோம்.
- பண்டைக்காலத் தாந்ரீக தத்துவ போதனைப்படி, பழைய சடங்கு முறைகளை கடைப்பிடித்து ஒழுகுவதில் நம்பிக்கை கொண்ட மக்கள் இந்த சக்கரத்தை பயன்படுத்தி வந்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
2.தாந்ரீக பிரபஞ்சோற்பத்தி மட்டுமின்றி, மனோ தத்துவம், உடலின் ஒப்பற்ற தத்துவம் இவைகளின் கருத்துக்களை உருவகப்படுத்தும் சித்திரமாகவும் ஸ்ரீசக்கரம் சொல்லப்படுகிறது.
- ஸ்ரீ சக்கரத்தின் சித்திரம் கி.மு. ஓராயிரம் ஆண்டு காலத்துக்கு முந்தியதாகும்.
- ஸ்ரீசக்கரம் வெறும் கோடுகளால் ஆனவை என்று எண்ணி விடக் கூடாது. உயர் அட்சரக் கணிதம் மற்றும் சேஷாத்திரக் கணிதம் மட்டுமின்றி விஞ்ஞான அறிவு பூர்வமாக பெற்றவர்கள், மற்றும் இத்துறைகளில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர்களால் தான் இந்த ஸ்ரீ சக்கரத்தை வரைய முடியும். அப்போது தான் முழுமையான பலன் பெற முடியும்.
5.ஒருசமயம் அகிலாண்டேசுவரியான காமாட்சிதேவியின் சக்தியானது மிகவும் உக்கிரமாக இருந்தபோதும் சாந்தடையச் செய்ய வேறு வழி தெரியாமல், அம்பிகையின் எதிரில் ஸ்ரீ சக்கரத்தை நிறுவி ஆகர்சித்து பின்சாந்தமுறச் செய்தனர்.
6.ஒன்பது கட்டுகள்கொண்ட இந்த ஸ்ரீ சக்கரம் தான் அம்பாள் உறையும் இடமாகும். சாதாரண கோடுகளும் முக்கோணங்களும் தான் நம் கண்களுக்கு தெரியும். ஆனால் இதில் தான் அனைத்து சக்திகளும் அடங்கியிருக்கின்றன.
- ஸ்ரீ சக்கரத்தில் ஆவரணங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது சுற்றுக்கள் இருக்கின்றன. இவற்றின் நடுவில் திரிகோணத்தின் மத்தியில் தான் ஸ்ரீ சக்கர நாயகி என்று போற்றப்படும் பராசக்தியானவள் பிந்து என்கிற புள்ளியாகக் காட்சித் தருகிறாள்.
8.சப்தத்திற்கும் ஒரு உருவம் உண்டு. எனவே, ஒலிக்கும் ஒலிகள் அனைத்தையும் முறையாக ஒழுங்குப் படுத்தி சீராக்கி – வடிவமாக ஓம் என்பது தான் ஸ்ரீ சக்கரமானது.
இங்கே தாய் மொழி என்று கூறியவுடன், காடிலயில் இன்று பேசப்படுகிற மலையாளத்தையே குறிப்பதாகப் பலரும் எண்ணுகின்றனர்.
உண்மையில் ஆதிசங்கரர் பிறந்த போது அங்கே தமிழ்தான் பேசப்பட்டது என்ற கருதும் நிலவுகிறது
காரணம் மலையாளம் என்கிற மொழி தோன்றி கிட்டதட்ட ஆயிரம் ஆண்டுகள் தான் ஆகிறது.
ஆதிசங்கரர் மலையாளம் தோன்றுவதற்குக் கிட்டதட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவர்.
அதனால் அவரது தாய் மொழி தமிழேயாகும். தமிழ் மூவேந்தர்களில் சேர அரசர்கள் ஆண்டப் பகுதியாகத்தான் காலடி பலகாலமாக இருந்தது என்று
ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆர்.பி.வி.எஸ்.மணியன் அவர்கள்,
சங்கரர் தமிழ்தான் பேசியிருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்று அவரது நூலில் எழுதியுள்ளார்





