African Nations Are Struggling To Save Ready Their Wildlife
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவ பாலயோகி மகராஜ் வாழ்க்கை வரலாறு
சில யோகிகளின் படங்கள்
நாம் பார்த்த மாத்திரத்திலேயே நம் மனதில் பதிந்து விடும்
அப்படிப்பட்ட ஒரு படம் தான் இது
இவரின் பெயர் சிவபாலயோகி மஹராஜ்
தனது 14 நான்காம் வயதில் தன்னை உணர்ந்தவர்
சாதாரணமாக தனது நண்பர்களுடன் விளையாட சென்ற போது
ஒரு அதிசயம் நிகழ்ந்து யோகியாக மாறி
அன்று அப்படியே சமாதியில் அமர்ந்தவர் 4 மாத காலம் எழுத்துருக்கவில்லை
இது எப்படி சாத்தியம் என்பதற்கு முக்கிய காரணம்
இவர் தீக்ஷை பெற்றது மனிதரிடம் அல்ல ஒரு தெய்வத்திடம்
தீக்ஷை கொடுத்ததோடு நில்லாமல்
இவருக்கு துன்பம் ஏற்படும் போதெல்லாம் அந்த தெய்வம் நேரில் தோன்றி
இவரை நிலை நிறுத்தியது.
சுமார் 59 ஆண்டுகள் வாழ்ந்து இவர் புரிந்து தவங்களும் ஆன்மீக சாதனங்களும் ஆன்மீக பாதையில் பயணிக்கும் யாரையும் வியக்க வைக்கும்
இப்படிப்பட்ட யோகிகளின் வாழ்கை வரலாறு தான் நம் சனாதன தர்மத்தின் அடையாளங்களாக திகழ்கின்றன.
கவியெனக்கிடந்த கோதாவரி” என்பது கம்பன் கண்ட கோதாவரியாகும்.
அக்கோதாவரி பாயும் புண்ணிய தலம் தான் Draksharamam
மிகவும் சக்திவாய்ந்த தலமான இது
சதி தேவியின் இடது கன்னம் விழுந்த இடம் என்பதால்
அன்னையின் சக்திபீடங்களில் ஒன்றாக விளங்குகின்றது
இந்த ஊரிற்கு ஒரு மைல் தூரத்தில் ஆதிவராபுப்பேட்டா என்ற கிராமம் உள்ளது .
இந்தக் கிராமத்தில் பீமண்ணா என்ற ஏழைத் நெசவு தொழிலாளிக்கு இரண்டு மனைவியர் .
மூத்தவர் சுவர்ணம்மா இளையவர் பர்வதம்மா .
சுவர்ணம்மவிற்கு குழந்தை பாக்கியம் இல்லை
பர்வதம்மாற்கு இரண்டு ஆண் குழந்தைகள்.
அதில் இரண்டாவது பிள்ளையின் பெயர் ஸத்யராஜு,
இந்த சத்திய ராஜு தான் 1935ம் வருடம் ஜனவரி 24ம் தேதி வியாழக்கிழமை உத்தர நட்சத்திரத்தில் பிறந்த.
நமது ஸ்ரீ சிவபால யோகி மகராஜ் அவர்களாவர்
பெரிய அன்னை சுவர்ணம்மாவிற்குச் சத்தியராசுவீன் மேல் ஓர் அலாதிப் பிரியம்.
அவரை நன்றாக பார்த்து கொள்வர்
தனது கணவரிடம் சாதியராஜுவை தனக்கு தாத்து கொடுக்கும் படி அடிக்கடி கேட்பார்
ஆனால் பீமண்ணா அதற்கு ஒப்புக்கொண்டதில்லை
இப்படி இருக்கையில் பீமண்ணா திடீரெனெ மரணமடைய
மனைவி மார்கள் இருவரும் இருவரும் பிரிந்து வாழ நேரிட்டது.
பர்வதம்மாள் தன் தகப்பனாரான கோலி சத்தியம் ஊருக்கு சென்று விட்டார்
கோலி சத்தியம் ஒரு சாதாரண நெசவுத் தொழிலாளர்.
பெண்னையும் பேரப் பிள்ளைகளையும் காப்பாற்றுவது பெரும் பிரயத்தனமாக இருந்தது.
எனவே சத்யராஜூவை சுவர்ணம்மா விடம் விட்டுவிடுவது என்று முடிவு செய்யப்பட்டது
சத்தியராசுவுக்கு ஐந்து வயது நடக்கும் போது சுவர்ணம்மா அவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று வளர்த்து வந்தார்.
ஆறு மாதங் கழிந்து மகனைப் பார்க்க பர்வதம்மா வந்தபோது
தாயுடனேயே செல்லவேண்டு மென்று சிறுவன் பிடிவாதமாக இருந்தான்.
சிறுவனைத் தாய் அழைத்துச் செல்வதைத் தவிர வேறு வழி இல்லாததால்
சுவர்ணம்மாழும் ஒப்புக்கொண்டார்.
சத்தியராசு தாய் வீடு சென்றதும் ஆதிவாரபுப் பேட்டாவில் பள்ளியில் சேர்க்கப்பட்டார் .
குடும்பம் ஏழ்மை நிலையிலிருந்ததால் அதிகாலையிலேயே சத்தியராசு நித்திரை விட்டெழுந்து
காலை 10 மணி வரை நெசவுத் தொழிலில் வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு உதவி செய்வார் .
மாலை 5 மணிக்கு வீடு திரும்பியதும் மறுபடியும் உதவி செய்வான்,
மாலை 6 மணிக்கு வெளியே தோழர்களுடன் விளையாடச் சென்று
இரவு 9 மணிக்குத் திரும்புவான்
இதுதான் சத்திய ராசுவின் தினசரி வாழ்க்கையாகும்.
சத்தியராசு சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் உள்ளவன்
படிப்பு, தொழில், விளையாட்டு எல்லாவற்றிலுமே தனது திறமையை வெளிப்படுத்தினான்.
பாட்டனார் கோலிசத்தியம் ஏழ்மை நிறைந்தவரே தவிர
தன்மானம் நிறைந்த கௌரவமான மனிதர்.
அவர் சத்தியராசுவைத் தன உயிருக்கு உயிராக நேசித்தார்.
சத்தியராசு இரவு விளையாட்டு முடிந்து வீடு வந்ததும்
பாட்டனாரிடம் அன்றாட நடந்த விஷயங்கள் பற்றி ஒன்றும் தப்பாது சொல்லுவான்
தாத்தாவும் மிகச் சிரத்தையோடு கேட்பார்.
பெரியவருக்கும் பேரனுக்குமிடை யில் காரசாரமான விவாதங்கள் நடைபெறும்
தாத்தா சொல்லும் புத்திமதிகளை ஏற்று அதன்படி நடப்பான்.
பாட்டனாரின் உயர்ந்த மனப்பண்பு பேரனிடம் மனதில் ஊறிவளர்ந்தது.
“வறுமை கொடுமையானதுசான்; துரதிர்ஷ்டமானது தான்.
ஆனால் வறுமை ஒரு பாவம் அல்ல.
அதைக்கண்டு வெட்கப்பட வேண்டியதில்லை
தன்மானம் நிறைந்த மனிதன் மற்றவரிடம் பிச்சை ஏற்கமாட்டான்
பிறரிடம் கடன் படாமல் கௌரவமாகவே வாழ முயழ்வான்.
நேர்மையான வழி கடினமானதும்தான்.
ஆனால் இதுவே ஏற்றவழி.
பொய்மையும் கபடமும் தீங்கு விளைக்கும்.”
இவைதான் பாட்டனாரின் புத்திமதி.
சிறுவன் இவைகளை முற்றிலும் ஏற்றுக்கொண்டான்.
சத்தியராசுவுக்குப் பாட்டனாரின் பெருமதிப்பு அவரை உள்ளத்தால் நேசித்தான்.
அவருக்காக எதுவும் செய்யத்தயாராயிருந்தான்,
இந்நிலையில் சத்தியராசுவுக்கு 8 வயதானபோது சுவர்ணம்மா மறுபடியும் வந்து பையனைத்
தன் ஊருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பள்ளியில் சேர்த்தாள்
இந்த கால கட்டத்தில் சுவர்ணம்மா புகையிலை வியாபாரம் செய்து வந்தார்.
அவரிடம் 40 கிலோ கள்ள புகையிலை இருந்தது.
எப்படியோ இது அதிகாரிகளுக்குத் தெரிந்து விட்டது.
இதனால் ‘பெரும் கஷ்டம் அடைந்தார்.
சத்தியராசுவுக்கு இது முறையற்றதாகப்பட்டது.
நேர்மைதான் முக்கியம் என்று பையன் வாதாடினான்.
கள்ள வியாபாரத்தில் ஈடுபட்டு தகாத வழியில் பணம் சேர்க்க முற்படுவதைத் தீவிரமாகக் கண்டித்தான்,
சுவர்ணம்மாவுடன் வாழ விரும்பாது
அவர் சம்மதததுடனேயே பாட்டனாரிடம் திருமபவும் சென் றான்.
கிராமம் திரும்பிய பையன் இப்பொழுது அங்கு பள்ளியில் சேரவில்லை.
இளைஞர் காங்கிரஸ் இயக்கம் தீவிரம் அடைந்து வந்த காலம் அது.
சத்தியராசு அதில் பெரும் பங்கு கொண்டான்.
தோழர்கள் அவனையே தலைவனாகக் கொண்டார்கள்.
அவனுடைய தைரியத்திற்கும், புத்திசாலித்தனத்திற்கும், ஆர்வத்திற்கும், தியாக உணர்ச்சிக்கும் கிராமத்தில் பெருமதிப்பு இருந்தது.
சத்தியராசுவுக்கு 12 வயதாயிருந்தபோது சுவர்ணம்மா கடுமையாக நோய்வாய்ப்பட்டாள்,
தனது கடைசிக்காலத்தில் தனது வளர்ப்புக் குழந்தை தன்னருகில் இருக்க வேண்டும் எனப்பெரிதம் விரும்பினாள்.
சத்தியராசு மறுபடியும் சுவர்னம்மாளுடன் வந்து வசிக்கத் தொடங்கினான்.
சுவர்ணம்மா நோய் குணமானதும் பழையபடி அவள் வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டாள்
சிறுவனுக்குப் பயந்தே வியாபாரம் நடந்தது.
மாற்றாந்தாய்க்கு மன நிம்மதி இல்லாமல் போய்விட்டது,
சத்தியராசுவை ஏன் தன்னுடன் வந்திருக்கச் சொன்னோம் என்று வருத்தினாள்.
இதற்காகச் சிறுவன் மாற்றாந்தாயின் வழிகளைச் சரியென்று ஒப்புக்கொள்ளவும் தயாராயில்லை.
சிறுவன் மறுபடியும் சொந்த ஊர் திரும்பினான்.
இம்முறை சொந்த ஊருக்கு வந்தபோது
இனிமேல் மாற்றாந்தாயிடம் செல்வதில்லை என்ற பிடிவாதத்துடனேயே வந்தான்.
ஏழைப் பெற்றோர்களுக்கு தன் கடமையை ஆற்றும் பொருட்டு தினமும் பல மணி நேரம் அயராது தறிகளில் நெய்தான்,
தாத்தா , தனது பேரன் இந்த இளம் வயதில் அதிக உழைப்பு உழைத்து உடல் இளைத்துவிடக் கூடாது என்று
பேரனை கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தார்.
யாரும் அறியமால் கடின உழைப்பு உழைத்து கையில் மீதியானதை தாயிடம் கொடுத்து மகிழுவார்.
வெயிற்காலங்களில் நெசவு நேரம் போக மற்ற நேரங்களில் குளிர்பானம் விற்றுச்சம்பாதித் தார்.
தன்தாயை ஏழ்மையிலிருந்து கரையேற்றிவிட வேண்டுமென்று அல்லும் பகலும் துடியாய்த் துடித்தார் சத்தியார்ஜு .
தாத்தா சத்தியராசுவினால் தான் குடும்பம் வளம் பெறப் போகிறது என்று நிம்மதியடைந்தார்
நெசவுத் தொழிலில் பாடுபடுவதற்கு ஏற்ற கூலி கிடைக்கவில்லை
இதனால் வாழ்க்கைத்தரம் உயராது என்பதை சத்தியராசு உணர்ந்தார்.
25 ரூபாய் முதலீடு கொண்டு தனது நண்பன் ஒருவன் பீடிக்கடை
வைத்து நல்ல உயர்ந்த நிலையில் இருப்பதை அறிந்த காலந்தொட்டு
சத்தியராசுவுக்குத்
தானும் ஒரு பீடிக்கடை முதலாளியாக வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இருந்து வந்தது.
அந்த ஆசை இப்போது வெளிப்பட்டது.
பாட்டனாரிடம் தன் கருத்தை வெளியிட்டான்.
அவருக்கு இது எண்ணவே பிடிக்கவில்லை
“நீ ஒரு துணிக்கடை முதலாளியாகவாவது வருவாய் என்றல்லவா கனவு கண்டேன்.
போயும் போயும் பீடிக்கடையா வைக்கப் போகின்றாய்?
பீடிக்கடை வைப்பது எமது குடும்ப கௌரவத்திற்கே இழுக்கு” என்று கிழவர் வாய்விட்டுக் கூறினார்.
தாத்தா எத்தனை கூறியும் சத்தியராசு தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
நாட்கள் பல உருண்டன.
சத்தியராசுவுக்கு பீடிக்கடை நினைவு மாறவில்லை.
அதே நினைவாகவே ஒருநாள் தெருவில் போய்க்கொண்டிருந்தார்.
ஒரு தாமிரக் காசை கண்டெடுத் தார்.
முகம் மலர்ந்தது.
தாமிரக் காசைக் கண்டெடுத்தல் அதிர்ஷ்டத்தின் அறிகுறியாரும்.
தனலட்சுமி தன்னை நோக்கிவந்ததாகச் சத்தியராசு உணர்ந்தார்.
எடுத்த காசை. இருகண்களிலும் ஒற்றிக்கொண்டார்.
பீடிக்கடை தொடங் குவதற்கு இது ஒரு நற்சகுனம் என முழுதாக் நம்பினார்,
சட்டைப் பையில் காசைப் போட்டுக்கொண்டு செல்லும் வழியில்
சில பையன்கள் விளையாடுவதைக் கண் டார்.
அவர்களோடு தேர்ந்து தானும் விளையாடினார்.
அதிர்ஷ்டவசமாக 5 ரூபா பெறுமதியான பரிசை ஜெயித்தார்.
இவ்வெற்றிக்குக் காரணம் தாமிரக்காசுதான் என்பதை முற்றாக நம்பினார்.
வெற்றிக்களிப்போடு நேராகப் பீமேஸ்வரர்லுக்குச் சென்றார்.
பீமேஸ்வரர் சத்தியராசுலின் குலதெய்வம்
தனது பீடிக்கடை நன்றாக நடைபெறவேண்டும் என உள்ளுர வேண்டுதல் செய்தார்.
அவ்வேண்டுதலைப் தெய்வம் ஏற்றுக்கொள்ளு முகமாகக்
கோயில் மணியும் கேட்டது.
பீடிங்கடை ஆரம்பமானது.
நல்ல வியாபாரம் கை நிறைந்த பணம்,
எதிராளியின் பீடிக்கிடை மூடும் அளவிற்கு வியாபாரம் விரிவடைந்தது.
பெற்ற லாபத்தை தாயிடமும் கொடுத்து மகிழ்ந்தார்.
ஒரு தடவை 450 ரூபாங்கள் சேமித்து தன் தயார் கையில் கொடுத்து இருவளையல்கள் செய்து அணியுமாறு கேட்டுக் கொண்டார்.
தாயாரோ 50 ரூபாவை மாத்திரம் எடுத்துக்கொண்டு மீதி யைத் தனது இரு குழந்தைகளின் கல்யாணத்திற்காக சேர்க்க முற்பட்டார்,
சத்தியராசுவின் வியாபாரம் நாலே வருடங்களில் விரிவடைந்து வேரூன்றிவிட்டது.
இப்படி ஒரு இயல்பான வாழ்கை வாழ்ந்து வந்த சிறுவனுக்கு மறுநாள் பொழுது அனைத்தையும் மாற்றி அமைத்தது
1949ம் ஆண்டு ஆகஸ்ட் மீ” 7ம் தேதி
ஆண்ட்ரியா தினம் பாட்டனார் கண் ரணசிகிச்சை ஒன்றிற்காக அயலூர் சென்றிருந்தார்.
தாயும் உடன் சென்றிருந்தாள்.
சத்தியராசு தனியாகவே கடையைக் கவனித்துக்கொண்டு வீட்டிலிருந்தார்.
அன்று ஞாயிற்றுக் கிழமை காலை ஏழு மணிக்கே வீட்டிலிருந்து தோழர்களுடன் கிளமபி விளையாடிவிட்டு
மத்தியானம் வீட்டிற்குத் திரும்பி யிருந்தார்.
தோழன் கங்கராஜு விட்டிற்கு வந்து கோதாவரிக்குக் குளிக்கவருமாறு வற்புறுத்தி அழைத்துச்சென் றான்.
ஆற்றங்கரையில் தோழர்களுடன் மறுபடியும் விளையாட்டு நடந்தது.
பின்னர் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டார்கள்.
அதன்பின்பே ஆற்றில் குளித்தனர்.
சில பையன்கள் பக்கத்திலுள்ள பனந்தோப்பிற்குச் சென்று பனம்பழம் பறித் தனர்.
சத்தியராசுவும் கங்கராசுவும் குளித்துவிட்டுப் பனந்தோப்பிற்கு வந்த பொழுது
ஒரு பனைமரத்திலிருந்து தானாகவே சில பனம்பழங்கள் அவர்கள் முன்னால் விழுந்தன.
மற்றைய பையன்கள் ஓடிச் சென்று பொறுக்கி சத்திய ராசுவிடமும் கங்கராசுவிடமும் கொடுத்தார்கள்.
சத்தியராசு தனக்குக்கிடைத்த பழத்தைக் கடித்து அதன் சாற்றை உறிஞ்சமுற்பட்டார்.
திடீரென்று உடல் முழுவதும் நடுங்க ஆரம்பித்தது.
பழத்தின் உள்ளிருந்து ஓங்காரநாதம் எழுந்தது.
இந்த வினோத ஒலியைக் கேட்டதும் சத்தியராசு திடுக்கிட்டார்.
சில வினாடிகளுக்கெல்லாம் கோடி சூரியன் ஒன்றுதிரண்டு வந்தாற்போன்று
பேரொளிப் பிழம்பு ஒன்று அவர் முன் தோன்றியது,
பனம்பழம் அந்த வெளிச்சத்தில் கலந்துவிட்டது.
கணப்பொழுதில் பழம் சிவலிங்கத்தின் உருவை அடைந்தது.
லிங்கம் இரண்டாகப் பிளந்து ஏழடி உயரமுள்ள ஒரு ஆஜானுபாகுவான மனிதன் முன்னின்றான்.
ஜ்யோதி பிழம்பிற்கும் ஆஜானுபாகுவான தோற்றத்திற்கும் நாம் சிவபெருமானையே உவகை காட்டுவோம்
இந்த மனிதர் சத்தியராசுவை உட்காருமாறு பணித்தான்.
சத்தியராசு பயந்திருந்தும் தன் தைரியத்தை எல்லாம் கூட்டி
“நான் ஏன் உட்காரவேண் டும்” என்று கேட்டவர்.
பதிலுக்குக் காத்திராமல் உட் கார்ந்துவிட்டார் .
அந்த மனிதனர் சத்தியராசுவைப் பத்மா சனத்தில் உட்காருமாறு பணித்தார் ,
தனக்கு அந்த நிலை வராது என்று கூறவே,
அந்த மனிதர் பத்மாசனம் போட்டு உட்கார்ந்து பத்த – பத்மாசன நிலையில்
எப்படி உட்காருவது என்று காண்பித்தார் .
பின்னர் தன்னுடைய நடுவிரலால் சத்தியராசுவின் இருபுறங்களுக்கு மத்தியில் தொட்டு தலையை மெதுவாகத்தட்டிக் கொடுத்தான்
சத்தியராக உடனே தன்னிலை இழந்தான்.
இதெல்லாம் நடந்த பொழுது பனம்பழம் சத்தியராசு வின் கையிலேயே இருந்தது.
பழத்திலிருந்து சாறுவழிந்து முழங்கையெல்லாம் பரவியது.
சத்தியராசு கண்ணை முடிக் கொண்டிருப்பதைக் கண்ட தோழர்கள்,
இவன் சாதுபோல் நடிக் கிறான் எனக் கேலிசெய்தனர்.
தோழர்கள் அழைத்த குரலுக்குப் பதில் கொடுக்காமையால்
சத்தியராசுவைப்
பல விதத்திலும் தொந்தரவு செய்தார்கள்.
சத்திராசுவுக்கு உணர்வும் இல்லை.
சத்தியராசு வியாபாரத்தில் முன்னேறி வருவதைக்கண்ட பையன்களில் சில ருக்குப் பொறாமை.
தமது பொறாமையை இத்தருணத்தில் சிலர் வெளிப்படுத்தினார்கள்.
சிலர் சத்தியராசுவின் பத்மா சனநிலையைக்கலைக்க முற்பட்டார்கள்,
கையால் குத்தினர்.
உ லெல்லாம் பனங்களியைப் பூசினார்கள்.
சேற்றினால் அபிஷேகம் செய்தார்கள்.
ஆளைத் தூக்கிச் சென்று ஆற்றில் போட் டார்கள்.
சத்திபராசுவுக்கு உணர்வு வரவில்லை.
இறந்து விட்டார் என்றே பையன்கள் பயந்தார்கள்,
உடலைக்கழுவி மறுபடியும் கரையில் கொண்டுவந்து இருத்திவிட்டு.
ஓடிச் சென்று உறவின் முறையினரிடம் செய்தி சொன்னார்கள்.
கிராமத்திலிருந்து ஆறேழுபேர் வந்தார்கள்.
அவர்க் ளில் கோராமல்லண்ணா என்பவர் சத்தியராசுவின் பழைய எதிரி .
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பெரிய தடி ஒன்றினால் தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டான்.
அப்போது ஒரு அடி தவறுதலாக புருவமத்தியில் அந்த வினேத மனிதர் தொட்ட இடத்தில் விழந்ததும்
சத்தியராசு விழித்துக் கொண்டார்.
இருந்த இடத்தைவிட்டு எழுந்து பக்கத்தில் உள்ளவர்களிடம் ஒரு துண்டுத் துணியை தருமாறு கேட் டார்.
அவர்கள் கொடுத்ததும்
அதைக்கோவணமாகத் தரித்துக்கொண்டு கால்சட்டையைக் கழற்றி வீசி எறித் தார்.
சூழநின்றவர்கள் பல கேள்விகளைக் கேட்டனர்.
ஒன்றுக்குமே சத்தியராசு பதில் பேசவில்லை.
அவர்களில் இருவர் அவரை மிகவேகமாக இழுத்தும் சென்று வீடு சேர்த்தனர்.
வாசலை அடைந்ததும் சத்தியராசு கால்களை அகட்டி அசையாது நின்றார்.
கால்கள் மரம்போல் விறைத்து விட்டன.
சத்தியராசுவை வீட்டினுள்ளே கொண்டு செல்ல முடியவில்லை.
வெளித் திண்ணையில் உட்கார வைத்தார்கள்.
ஏதோ துர்த்தேவதை தான் சத்தியராசுவை ஆட்டிவைக் கிறது என்றார்கள் சிலர்.
வேறு சிலர் ஏதோ வலிப்பு நோய் என்றனர்.
இன்னும் சிலர் ஏதோ மனித அறிவிற்கு அப்பாற்பட்டது என்றனர்.
பெத்தகாமராசு என்ற ஹரி ஜன அறுபது வயதுக்கிழவர் மாத்திரம்
சத்தியராசு ஒரு யோகியாக மாறி விட்டார் என்று கூறினார்.
சத்தியராசுவைப் பார்க்கக் கிராமமே திரண்டுவந்திருத்தது.
உறவின் முறையினர் சிறிது பால் மாத்திரம் ஊட்டினர்.
இரவு ஆக ஆக கூட்டம் குறைந்தது, சத்தியராசு தனிமையில் விடப்பட்டார்,
ஆற்றங் கரையிலிருந்து ஓங்காரநாதம்
சத்தியராசு தன்னை அழைப்பது போன்று உணர்ந்தார்.
இரவு 11 மணியளவில் முன்பு இருந்த இடத்திற்கே சென்று உட்கார்ந்தார்.
இரவு பலமாக மழை பெய்தது.
மறுநாள் பிற்பகல் வரை ஓயாது பெய்து கொண்டே இருந்தது.
சத்தியராசு வைத் தேடி ஊரவர்கள் மறுநாட்காலை வீடு வந்தனர்.
அங்கு காணாமையால் ஆற்றம் கரை சென்றனர்
சத்திய ராசு மழையில் நனைந்தும் உணர்வற்றும் இருக்கக் கண்ட னர்.
அவரைத் தூக்கிச் சென்று ஆல மரத்தின் கீழ் இருத்தினர்,
மழையிலிருந்து பாதுகாக்க பனை ஓலையால். மேல் பகுதியை மறைப்புச் செய்தனர்.
இரவு 9 ணி இருக்கும் அவ்வழியால் சென்ற ஹரி ஜனச் சிறுவர்கள் ஓங்கார நாதம் கேட்டனர்.
ஓடிச்செனறு கிராமமக்களிடம் கூறினர்.
கிராமமக்கள் திரண்டு வந்தனர்
அவர்கள் வரும் போது ஓங்கார நாதம் கேட்டுக்கொண்டே இருந்தமையால் கிட்டவர அஞ்சினர்.
தூரத்திலேயே நின்று மணி நேரம் கொண்டு வேடிக்கை பார்த்தனர்.
முக்கால் மணி நேரம் ஓங்காரநாதம் நிகழ்ந்தது.
பின்னர் ஓசை அடங்கியதும்
சத்தியராசுவை நெருங்கித் தூக்கிக்கொண்டு வீடு சேர்ந்தனர்.
இரவு மாத்திரம் வீட்டில் தங்கி அதிகாலை மறுபடியும் இருந்த இடத்திற்கே சென்றுவிட்டார்.
கிராமத்து பெண் ஒருத்தி சத்தியராசுவின் முன்னால் தேங்காய்.
பழம், புஷ்பம், ஊதுபத்தி வைத்து வணக்கம் செலுத்தினாள்.
மாலை 4மணி இருக்கும்.
கிராமத்தவர் வந்து ஆலமரத்தின் கீழ் பந்தல் ஒன்று அமைத்து
அதில் இருக்குமாறு சத்திய ராசுவிடம் வேண்டினர்.
அவரும் ஒப்புக்கொண்டு வந்து தங்கினார்
அன்று மாலை ஐந்தரை மணி அளவில்,
தாயார் பர்வதம்மாவும் தாத்தா கோலிசத்தியமும் ஊர்வந்து சேர்ந்தனர்.
தன் தனயனின் நி ையைக் கேட்டு பர்வதம்மாள் அதிர்ச்சி அடைந்தாள்.
ஆலமரத்தின் கீழ் இருந்த சத்திய ராசுவின் நிலையைக் கண்டு பதறினாள்.
வீட்டுக்குத் திரும்பி விடுமாறு அழுது கதறி வேண்டினாள்.
கோலிசத்தியமோ குடும்பத்தின் தூண் என்று தான்’ நம்பியிருந்த பேரனின் மனமாறுதலால் ஏமாற்றம் அடைந்தார்.
பிள்ளை தாயாருடன் வாய் திறந்து பேசவில்லை.
சைகைகளினால் தான் வீடு திரும்ப முடியாது என்று காட்டிவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்.
இந்த நிலையைக் கண்ட கிராமத்தவர் சத்தியராசு
ஒரு பாலயோகியாக மாறிவிட்டார் என்ற தீர்மானத்திற்கு வந்தனர்.
அவரது உணர்வற்ற நிலை, சமாதி நிலை, என உணர்ந்தனர்.
14 வயது சிறுவன் ஒருவன் யோகியாக மாறுவது மிக அசாதாரணம் எனப் பேசிக்கொண்டனர்,
பாலயோகியைப் பற்றிய நல்லெண்ணம் கிராம மக்களிடையே பரவத்தொடங்கியது.
அதனால் கிராம் மக்கள் அவரை நல்வழியில் கவனிக்கவும் தொடங்கினர்.
யோகி பால் மட்டுமே அருந்தி வந்தார்.
மக்களுடைய நல்லா தரவைக்கண்ட கோரமல்லண்ணா என்ற நபர் பொறாமைகொண்டான்.
தான் பாலயோகிச்கு பக்கத்திலிருந்து அவரை நன்கு க வனிப்பதாகக் கிராமமக்களுக்குக் கூறிக்கொண்டான்.
யோகி மெளன நிலையில் இருந்தபொழுதெல்லாம்,
இவருக்காகக் கிராமத்து மக்கள் ‘வைத்துப்போன பால் பழம் எல்லாவற்றையும் தான் உண்டு தோலை மாத்திரம் யோகி முன்னால் வைப்பான்.
ஜனங்கள் யோகியார்தான் தாம்கொண்டு வந்த பழங்களை உண்டார் என்று நம்பினார்கள்.
பால் பழம் ஒன்றும் இல்லாமலே கடுந்தபசு செய்ய வேண்டுமென்று மல்லண்ணா யோகியாருக்கு புத்திமதி கூறினான்.
யோகியாரும் அதனை ஏற்றுக்கொண்டு பால் பழம் உண்ணுவதை நிறுத்திவிட்டார்.
பர்வதம்மா இதனைக் கண்டு பெருந்துயரடைந்தாள்.
பர்வதம்மாவைப் பால் கொண்டுவர வேண்டாமென்று கோரமல்லண்ண நிறுத்திய பிறகு,
தாயார் வந்து பார்த்தால் தவம் கெட்டுவிடும் என்று கூறித் தாயாரின் வருகைக்கும் தடைபோட்டுவிட்டான்,
யோகியாருக்கு இது தெரிந்தவுடன் உடல்வேதனையுடன் மனவேதனையும் அதிகரித்தது.
அவ்வூரில் டோரா வீரராசு என்றொருவர் வாழ்ந்து வந்தார்.
பாலயோகி ஒரு வேஷதாரி என்று எல்லோருக் கும் பறையடித்து வந்தார்.
இவருக்கு சூரண்ணா என்றொரு ஆயுர்வேத வைத்தியர் சினேகிதர்.
இருவரும் சேர்ந்து பால யோகியின் வேஷத்தை வெளிப்படுத்த திட்டம் போட்டனர்.
ஒரு நாள் இரவு ஜனங்கள் தமது இருப்பிடங்களுக்குச் சென்ற பின்
இருவரும் யோகியார் இருக்குமிடத்திற்குத் தனியயாகச் சென்றனர்.
யோகியாரின் யோகத்யைக் கலைப்பதற்கு முயன்றனர்.
பத்மாசனநிலையைக் கலைக்க முயன்று கால்களை இழுத்தவுடன்
அவைகள் இழுத்து நிருத்திய நிலையிலேயே நின்றுவிட்டன.
மூடிக்கிடந்த இமைகளை திறக்க முயன்று,
விரலால் ஓர் இமையை தூக்கி பாதி திறந்த நிலையிலேயே கண் இருந்தது.
சூரண்ணா பத்மாசன நிலையைத் திரும்பவைக்கவும்,
கண்மையை மூடிவிடவும் இரவு முழுவதும் முயன்றும் முடியவில்லை.
யோகியாரை தகுதியற்ற முரையில்;
சோதித்ததைக் கிராம மக்கள் அறிந்தால் தன்மீது பகைகொள்வார்கள் என சூரண்ணா பயந்தார்.
யோகியாரின் பாதங்களைத் தொட்டு வணங்கி மன்னிக்குமாறு கேட்டுக் காண்டார்.
யோகியாரும் புன்சிரிப் புடன் அவரை உடனே மன்னித்தார்
சூரண்ணா உடனே தாயாரிடம் சென்று உங்கள் புத்திரன் உண்மையான மகாத்மா.
அவரை நன்கு கவனித்துப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று சொல்லிச் சென்றார்.
தெய்வீக உணர்ச்சிக்குப் பிறகு இரண்டு மாதங்கள் தான் பாலயோகி ஆலமரத் தடியில் இருந்தார்.
அவருக்குக் கிடைக்கும் உபசரிப்புகளைக் கண்டு பலர் பொறாமை கொண்டு மேலும் தொல்லை கொடுக்க முற்பட்டனர்.
சிலர் திருட்டுத்தனமாக வந்து அவரை அடித்தார்கள்.
ஒருநாள் மண்ணெண்ணையில் துணியை நனைத்து தீப்பற்றவைத்து யோகியின் இடது கால் மேல் வீசிவிட்டனர்.
நெருப்புச் சுட்ட வடு யோகியாரின் காலில் பல அவருடங்கள் அப்படியே இருந்தது
கஷ்டங்கள் மேற்பட மேற்பட இடத்தை மாற்ற வேண்டுமென்று யோகியார் விரும்பினார்.
பசவபுடி என்பது பக்கத்திலே உள்ள ஒரு கிராமம்
அங்கு ஒருஆசிரமம் இருந்தது அதில் ஒரு சாது வாழ்ந்துவந்தார்.
யோகியார் அவரை நாடி சென்றார்.
தவத்தின்போது மக்களால் தனக்குக் கிடைத்த கஷ்டங்களையெல்லாம் கூறி ஆச்சிரமத்தில் தங்க அனுமதி கோரினார்.
சாது யோகியைச் சந்தேசுக் கண்கொண்டு பார்த்தார்.
எந்தவிதமான சாதனை செய்கிறீர் என யோகியாரைச் சாது சேட்டார்
“எனக்குத் தெரியாது’ என யோகி கூறினார்.
உடனே சாது
‘நான் உனக்கு ஒரு மந்திரம் உபதேசிக்கிறன்’ அதனை ஜெபம் செய்துவா என்று கூறி
‘சத்குரு’ மந்திரத்தை உபதேசித்தார்.
அடுத்த நாட்காலை மந்திரத்தை உச்சாடனம் செய்தாயா என்று சாது கேட்டார்
இல்லை என்ற பதில் யோகியாரிடமிருந்து கிடைத்தது.
இம்மறு மொழி சாதுவின் பொறுமையை இழக்கச் செய்தது.
‘உனது வழக்கமான சாப்பாடு என்று சாது கேட்டார்.
பால் என்றார் பாலயோகி.
இந்த ஆசிரமத்தில் பால் கிடைக்காது ஆன படியினால்
இங்கு தங்க இயலாது என்று சாது கூறிவிட்டார்.
பழைய ஆலமரத்தடிக்கே யோகி திரும்பி வந்து தவத்தை மேற்கொண்டார்.
காலம் உருண்டோடியது.
1945ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓர் இரவு 2.30 மணிக்கு ஓர் கொடும்புயல் பெருமழையுடன் கூடி வீசி ஜந்தரை மணிவரை பெருத்த நாசம் விளைத்தது.
மரங்கள் வேரோடு சாய்ந்தன.
வீடுகள் வீழ்ந்தன.
மகன் நிலை எப்படியோ என்று ஏங்கிய தாயார் மகனை சென்று பார்த்தார்.
ஆலமரத்தின் கீழ் யோகியார் சாந்தமாகத் தவநிலையில் இருக்கக் காணப்பட்டார்.
ஆழமரத்திலிருந்து ஒரு இலை அசையவில்லை.
நிலத்தில் விழவும் இல்லை.
செவ்வெறும்பு மாத்திரம் அவரது உடலை மொய்த்திருந்தன,
அதனைக்கண்ட தாயார் அவற்றை அகற்ற முயன்றார்.
யோகி அவ்விதம் செய்யவேண்டாம் என்று தடுத்தார்.
யோகசாதனைகள் ஆலமரத்தடியில் நிகழ்ந்து வந்தாலும் பாலயோகிக்கு நிலைத்திருப்பது கடினமாகவே தோன்றியது.
1949 நவம்பர் 18 ம் தேதி ஆலமரத்தைவிட்டு கிளம்பி கிராம எல்லையில் இருந்த இடுகாட்டைச் சரண்அடைந் தார்.
விஷமக்காரச் சிறுவர்கள் பயந்து அங்கு செல்வதில்லை
இடுகாட்டின் அமைதி அமைதி தவ வாழ்வுக்குச் சாதகமாகவே. அமைந்தது,
ஆனால் பூச்சிகள், கொசுக்களின் உபத்திரவம் தாங்க முடியவில்லை.
பல மணி நேரம் யோகியார் அசையாது இருப்பதனால் பலவிஷ ஜெந்துக்கன்
அவரை உயிரற்ற பொருள் என நினைத்து கடித்துத் தின்னத் தொடங்கின.
பல பாம்புகள் கடித்து வலியுண்டாக்கின:
யாரும் கவனிக்காத பொழுது யோகி நள்ளிரவில் ஆற்றிற்குச் சென்று குளித்துவருவது வழக்கம்.
உடல் முழுவதும் பூச்சிகளால் கடியுண்ட புண், குளிக்கும் பொழுது மீன்கள் அப்புண்களைக் குத்தும்
சில சந்தர்ப்பங்களில் உடல் முழுவதுயுமே எறும்புகள் மொய்த்திருக்கும்.
ஒருநாள் இரவில் அவருடைய வழக்கமான நள்ளிரவுக் குளியலுக்காக யோகி சென்று கொண்டிருந்த பொழுது
ஒரு விஷப்பாம்பு அவருடைய காலில் கடித்துவிட்டது,
அதைக் கவனியாது சென்று குளித்துவிட்டுத் திரும்பினார்.
விஷம் தேகம் முழுதும் பரவ நீல நிறம் அடைந்தது.
வலி சகிக்க முடியாது உடல் முழுதும் எரிச்சல் எடுத்தது.
இந்த நிலை யில் பாலயோகி அழ ஆழம்பித்தார்.
அப்பொழுது அவருக்கு வயது வெறும் பதினான்கே ஆகியிருந்தது.
இந்த அதிசய வாழ்க்கை ஆரம்பித்து நான்கே மாதங்கள் மாத்திரம் ஆகியிருந்தன.
எதற்கு இப்படி துன்பப்பட வேண்டும்
இந்த யோக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைத்திட்டு வீடுதிரும்பி விடலாமா என்று யோசித்தான்.
வீடுதிரும்பி மற்றவர்களைப்போன்ற வாழ்க்கையை ஆரம்பித்தால் என்ன? என்று மனம் பேதலித்தது.
யோக வாழ்வை அவராக நாடி ஆரம் பிக்கவில்லை.
அவரையும் அறியாத சக்தி ஒன்றல்லவோ ஆட்கொண்டது.
யோகி செய்வதறியாது துவண்டு போனார்
இந்த இக்கட்டான நிலையில் யோகியை ஆட்கொண்ட யோகபுருஷர் யோகிமுன் தோன்றினார்,
வீட்டுக்குத் திரும்பாமல், தொடர்ந்து யோகவாழ்வில் இருக்கப்பணித்தார்.
யோக வாழ்வில் தேர்ந்தவனாக, யோகப்பிரதிஷ்டனாக.
யோகியின் குழப்பங்கள் அனைத்தும் நீங்கி மனம் தெளிவு பெற்றது
தேகவேதனை பொறுக்கமுடியாமல் இருந்த யோகிக்கு எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைத்தது.
தக்க சமயத்தில் தோன்றிய யோக புருஷர் தைரியம் ஊட்டிய தோடு, தேக உபாதைகளை குறைத்ததற்கான மந்திர உப தேசமும் செய்தார்.
மந்திரத்தை ஜபிக்க, ஜபிக்க உடம்பின் விஷவேகம் தணிந்து வந்தது.
வீடு திரும்புவதற்கு அல்லாமல்
யோசு மார்க்கத்திலேயே தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொள்ள யோகியார் தீர்மானித்தார்.
உடலிலுள்ள வேதனையும் நீங்கிவிட்டது.
இடுகாட்டில் சர்ப்பம் தீண்டியனாலுண்டான விஷம் பாலயோகியைச் சிறிதும். தாக்கவில்லை என்ற செய்தி ஊர் முழுவதும் பரவியது
இச் செய்தியை கிழக்கு கோதாவரி ஜில்லா அதிகாரியும் அறிந்தார்.
இவர் சமயப் பற்றுடைய வர்.
ஆத்மீக சாதனகளில் ஈடுபட்டவர்.
பாலயோகியைக் காண ஆவல் கொண்டு வந்தார்.
பாலயோகி வெறுமனே கட்டாந்தரையிலே இருக்கக் கண்டார்.
மனிதனுடைய தேகசக்தியைப் பூமி இழுத்து விடுகிறது.
ஆதலினால் தாம் இருந்து தவம் செய்வதற்கு மான்தோலோ அன்றிப் புலித் தோலோ ஒன்று அனுப்பிவைக்கு மாறு யாகியார் அதிகாரியிடம் கேட்டார்.
அதிகாரி மறுநாளே இராமச்சந்திரபுரம் தாசில்தார் நரசிம்ம மூர்த்தி மூலமாகப் புலித்தோல் ஒன்று அனுப்பி வைத்தார்.
யோகியார் இருந்த இடம் ஈர மாக இருந்ததால் அதில் தோலைப் போட்டு உட்கார்ந்தால் மணம் வீசும் என்றறிந்த நரசிம்ம முர்த்தி
பலகை ஒன்று எடுப்பித்து அதன் மேல் தோலைப் போட்டு உட்காரச் செய்தார்.
அந்த மரமேடைக்கு மேல் பனை ஓலையினாலான பந்தல் ஒன்றையும் அமைக்கச் செய்தார்.
இவையெல்லாம் யோகியின் தவத்திற்கு அநுசரணையாக அமைந்தது.
ஜில்லாக் கலெக்டருக்குவேலை மாற்றம் கிடைத்த பொழுது, யோகியாரைக் காண வந்திருந்தார்.
அவருடன் அவருடைய உதவியாளர் சத்தியநாராயணரான் அவர்களும் வந்திருந்தார்.
ராவுக்கும் பாலயோகியிடம் பெரும் பக்தி ஏற்பட்டிருந்தது.
அடுத்த நாளே தாசில்தார் நரசிம்பி மூர்த்தியைப் பார்த்து பாலயோகிக்கு ஒரு சிறு கோயில் கட்டிக்கொடுக்கும் விஷயமாக ஆலோசித்தார்.
இடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஜமீந்தாரின் நிலத்தில் கோயில் கட்டுவதாக தீர்மானிக்கப்பட்டது.
அவர்களுடைய ஆசைப்படி 1950 ஒக்டோபர் மாதத்திற்குள் 12க்கு 12 என்ற அளவில் கோயில் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது.
கோயில் கட்டி முடிந்த்தும் கோயிலுக் குள் மரமேடையமைத்து பாலயோகியை ஆசனம் கலையாமல் அதன் மேல் தூக்கி வந்து உட்கார்த்தி விட்டனர்,
அக்காலத்தில் யோகியார் தன் கால் கை உபயோகிக்கும் சக்தியை இழந்திருந்தார்.
நடக்கவும் முடியாது.
கால்களும் கைகளும் மரத்துப்போயிருந்தன,
பால் தவிர வேறெதுவும் உண்பதில்லை.
பாலயோகியின் நிஷ்டைக்கு யாதொரு இடையூறும் நிகழாவண்ணம் கோயில் கதவைப் பூட்டி சாவியை யோகியின் தாயாரிடம் கொடுத்துவிட்டார்கள்.
காகிநாடாவில், பித்தாபுரம் சாலைக்கருகில், விஷ்ணு சேவாஸ்ரம் என்ற ஆச்சிரமத்தில் தபஸ் வீஜி மகாரஜ் என்ற மகான் இருந்தார்.
வட நாட்டவர்; ஒழுக்கசீலர்:
பாடியாலா ராஜ குடும்பத்தில் அவதரித்தவர்.
ஐந்து வய திலேயே வானப் பிரஸ்தாச்சிரமம் அடைந்து உதாசி மரபுப் படி சந்நியாசம் வாங்கிக்கொண்டு
12 வருட தபசும் பின்பு பஞ்ஜாக்கினி தபசும் 12 வருட காலம் செய்தவர்
கங்காநதிக் சரையில் ரிஷிகேஷத்தில் 2 வருடங் களுக்கு வேறு தபசும் செய்தவர்.
அது மட்டுமல்ல சுமார் 187 வருடங்கள் வாழ்ந்தார்.
அவருக்குப் பங்ளூரிலும் காகிநாடாவிலும் ஆச்சிரமங்கள் இருந்தன.
1955 அக்டோபர் 12ல் ஜான்சியில் அவர் மகாசமாதி அடைந்தவர்
ஒரு தடவை, இவர் காகிநாடா ஆச்சிரமத்தில் தங்கி யிருந்தபோது, பாலயோகியைப்பற்றிக் கேள்விபட்டு அவரைக் காண ஆவல்கொண்டார்.
அப்பொழுது அவருக்கு கேள்வியுற்று வயது 180 பாலயோகிக்கோ 16.
1951 ஜனவரியில் காங்கிரஸ் சேவகர் புலுசு சாம்பமூர்த்தியுடன் பாலயோகியைத் தரிசிக்க வந்தார்.
பாலயோகி ஆழ்ந்த சமாதியில் இருந்த பாலயோகி தபஸ்வீஜி வந்திருந்ததை அறிய முடியவில்லை.
ஆனால் தபஸ்வீஜி யோகியாரை கண்டவுடனேயே அவரின் ஆத்ம ஆன்மிக நிலையை தெரிந்து கொண்டுவிட்டார்,
புஷ்பங்கள் கொண்டுவரச் யோகியின் பாதங்களில் வைத்தார்.
அரைமணி முன்னிருந்துவிட்டு காகிநாடா திரும்பினார்
இந்த முதல் சந்திப்பின்போது தபஸ் வீஜியின் ஒரு சிஸ்யரும் கூட இருந்தார்.
இந்த நிகழ்ச்சியின் பின்பு தபஸ் வீஜி அடிக்கடி பால யோகியை தரிசிக்க வந்தார்.
பாலயோகி எப்பொழுதும் சமாதியிலேயே இருந்ததாவ் இருவரும் பேசிக்கொள்ள முடியவில்லை
ஒரு முறை பாலயோகி சமாதியிலிருந்து விழித்துக்கொண்ட பொழுது தபஸ் வீஜி பலமுரை வந்ததைக் உடனிருந்தவர் கூறினார்.
யோகியும் அவருக்கு தரிசனை கொடுக்க இசைந்தார்.
தபஸ் வீஜி செய்தி கேள்விப்பட்டதும் உடனே வந்தார்.
இருவரும் பேசிக்கொண்டனர்.
இருவரதும் சந்திப்பு தனித்தன்மை வாய்ந்தது.
இச்சந்திப்பு இருவரதும் பூர்வீகத் தொடர்புகளினாலேயே ஏற் பட்டதெனலாம்.
யோகியோ தெலுங்கு தவிர வேறு எந்த மொழியும் அறியாதவர் தெலுங்கில்தான் பேசினார்.
தபஸ் வீஜியின் மொழியோ ஹிந்தி தெலுங்கு அறியாதவர்
ஒருவரை ஒருவர் பூரணமாகப் புரிந்து கொண்ட னார்
ஒரு ஆத்மா இன்னொரு ஆத்மாவைப் புரிந்து கொண் டது.
பாலயோகி யோக வாழ்க்கைக்குப் புதியவர்.
யோசு சாதனையில் இடர் பாடுகளை அனுபவித்துக் கொண்டிருந் தார்.
தபஸ் வீஜியோ தவசித்தி பெற்றவர்.
யோகவாழ்க் கையின் கஷ்டங்களை அறிந்தவர்.
இடர்பாடுகளுக்கு மாற்றுகள் சொன்னார்.
ஒருமுறை தபஸ்வீஜி பெங்களூரில் நந்திமலையில் இருந்தார்.
பாலயோகி சாதனையிலீடுபட்டிருந்த போது உட லெல்லாம் திடீரென்று எரிச்சல் எடுத்து பெரிதும் துன்பம் அனுபவித்தார்.
தபஸ்வீஜி இதனைத் தன் ஞானதிருஷ்டி யால் அறிந்து
அவரது உடல் எரிச்சல் நீக்கத்தக்கதான எண்ணெய் ஒன்றைத் தயாரித்துக் கொண்டு சென்று நேரில் கொடுத்தார்.
அந்த எண்ணெயை யோகியின் உடம்பில் அவர் தேய்த்த உடனே எரிச்சல் அடங்கிவிட்டது.
விறைத்தி ருந்த கால் கைகளும் அசைக்கக் கூடியனவாக அமைந்தன.
யோகியின் உடம்பிலிருந்து வந்த துர்நாற்றமும் இந்த எண்ணெயின் சக்தியால் மறைந்தது.
வெறுப்பினால் யாரோ யோகியின் மேல் கெட்ட மந்திர சக்தியை ஏவி விட்டிருந்தார்கள் என்றும்
இதனால்தான் யோகி இந்த உபாதைகளை அனுபவிக்க வேண்டி வந்ததென்றும் தபஸ் வீஜி விவரித்தார்.
தேகத்தில் உபாதை கூடும் சமயங்களில் தாம் உண்டு வந்த சிறிதலவான பாலையும் நிராகரித்துவிட்டு விரதமிருந்து தன் தவத்தைக் கடுமையாக்கிக் கொண்டிருந்தார்.
இதனால் தேக உபாதை மேலும் அதிகரித் தது.
இதனை அறிந்த தபஸ் வீஜி, யோகியார் தினமும் ஓரளவு பால் தவறாது அருந்தி வரவேண்டும் என்று கண் டிப்பாக பணித்தார்.
தபஸ் வீஜீ தாமே ஒரு பசுவை வாங்கி யோகியாரின் தாயாரிடம் கொடுத்து தவறாமல் பால் வழங்க ஏற்பாடு செய்தார்.
1951ம் வருடம் கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று யோகியாளுக்கு தபஸ்வீஜியின் மந்திரோபதேசம் கிடைத்தது.
மந்திர ஜெபத்தினாலும் தபஸ்வீஜியின் மருந்தெண்ணெயின் பலத்தினாலும், விறைப்புற்றிருந்த யோகியாரின் கை விரல் களை அசைக்க முடிந்தது.
அவருடைய கால்கள் அவருக்கு உபயோகமற்றிருத்தன.
கால் வழங்காமையினால் பல நாட்கள் இரவுக் குளியலை நிறுத்தியிருந்தார்.
இது பெரும் அசௌகரியமாக இருந்தது,
ஓர் இரவு அந்த தெய்வீக புருஷர் திடீரென யோகி முன் தோன்றி யோகியாரின் கால்களைக் கைகளினால் தடவி விட்டார்,
உடனேயே கால் கள் அவருக்கு வசமாகி விட்டன.
தவம் செய்த கோயில் குடீரத்தில் காற்றுக்கான ஜன்னல்கள் இருக்கவில்லை.
இதனால் உஷ்ண காலத்தில் தவம் தடைப்பட்டது.
தபஸ்வீஜி யின் ஆலோசனைப்படி கோயில் குடிலின் மேல் ஸ்தூபம் போன்ற கோபுரம் அமைக்கப்பட்டது.
ஒரு யோகி 12 ஆண்டுகள் இடவிடாமல் தவம் செய்தல் யோக தபஸ் எனப்படும்.
யோகசாஸ்திரத்தின்படி 12 வருடங்கள் ஒரு யுகம் அல்லது பருவம் எனப்படும்.
அந்த பனிரெண்டு வருடத்தில் ஒவ்வொரு திக்கையும் நோக்கி நின்று புரியும் தவம் முடிவடைந்தால் அது ‘திக் சித்தி” என்று சொல்லப்படும்.
ஒவ்வொரு திக்கையும் நோக்கி நின்று தவம் செய்யும் பொழுது
உரிய திக்குக்காக ஏற்பட்ட மந்திரத்தை உரிய முறையில் செபம் செய்தல் வேண்டும்.
இவ்வாறு திக் சித்தி அடையும் ஒருவர் ‘ரிஷி’ எனப்படுவார்.
இந்த தவத்தை துவங்கினர் யோகியார்.
1949 கிழக்கு நோக்கிய தவத்தை ஆரம்பித்து 1953 அக்டோபர் 23ம் தேதி பூர்த்தி செய்தார்
1953 மேற்கு நோக்கிய தாவரம் ஆரம்பமானது
மேற்கு நோக்கிய தவம் மிகமிகக் கடுமை யானது என்பது பரமசாதுக்களின் அபிப்பிராயமாகும்.
இக்காலத்தில் யோகியாருக்குச் சோதனைகள் அதிகமானதால் தம்மைக் குடிலில் வைத்துப் பூட்டிவிடுமாறு தன்னைச் சேர்ந்தவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
பக்தர்கள் மாதம் ஒருமுறைதான் சந்திக்கச் சம்மதம் கொடுத்தார்,
உள்ளத்திலும் அமைதி தோன்றவில்லை.
உடல் எல்லாம் பற்றி எரி வது போன்ற ஒரு உணர்வையும் பெற்றார்.
பின்னர் 1957 மே மாதம் தெற்கு நோக்கிய தவம் ஆரம்பமாகி .
1961 ஆகஸ்ட் 7 ம் திகதி திங்கட்கிழமை தவத் தைப் பூர்த்தி செய்து கொண்டார்.
இப்பொழுது அவர் தவம் நிறைந்த முனிவர்.
ஸ்ரீ சிவபால யோகியாகத் திகழ்ந் தார்.
12 ஆண்டுகளும் நடைபெற்ற தவசாதனை கசப்பான வையும் பயங்கரமானவையுமாகும்.
தவத்தின் வேகம் அதிகரிக்க அதிகரிக்கச் சோதனைகளும் கூடியேவந்தன.
யோகமுத்திரையிலிருக்க யோகி தன் இரு கைகளையும் கோர்த்து வைத்துக்கொள்ளவேண்டியிருந்தது.
நகங்கள் வளர்ந்து மாமிசத்தை துளைத்தன.
விரல்கள் மரத்துப் போய் விறைத்திருந்த படியினால் தனித்தனியே பிரிக்க முடி யாமல் போய்விட்டன.
மயிர்க்கால்களினூடாக இரத்தம் வியர்வைத் துளிகள் போலக் கசிந்தன.
உடம்பெல்லாம் கொப்புளங்கள் இருந்தமையினால் யோகி உண்ணாவிரதம் இருந்தார்.
1961 ஜனவரியிலிருந்து 1961 ஆகஸ்ட் 7ம் திகதி வரை பூரண உபவாசம் இருந்தார்.
ஆகஸ்ட் 6ம் திகதி மாலை 7 மணிக்கு யோகி அமைதிமிக்க உயர் பேருவகை கொண்ட சமாதி நிலை அடைந்தார். .
இந்த நேரத்தில்தான் யோகிக்குத் தியானமூர்த்தியைப் பரிபூரணமாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
மறுநாள் காலை சுமார் 2 மணி வில் சமாதியினின்று மீண்டார்.
இந்த நிமிடத்தில் தான் பார்வதி பரமேஸ்வரர் யோகியின் உடம்பில் : லயித்துக் கலந்த உணர்வு ஸ்ரீ சிவபால யோகிக்கு ஏற்பட்டது.
அவர் அர்த்தநாரீஸ்வரராகப் பலருக்குத் தென்பட்டார்
யோகியார் தவம் செய்து வந்த கோயில் குடிலின் சிகரம் பேரொளிப் பிளம்பாக விளங்கி நின்றதை
அவரது பக்தர்கள் பலர்கண்டு அனுபவித்தனர்.
13 வருட தவம் முடிந்த நாள் காலை 8 மணிக்கு யோகி
இனிமையான குரலில் ஓங்காரத்தைப் பாடி தன் மௌ னத்தைக் கலைத்தார்.
அவருடைய தரிசனத்திற்காகக் கூடியிருந்த பெருங் கூட்டத்தினருக்கு குடில்கோயிலின் கதவு கள் திறந்துவிடப்பட்டன.
உடல் மெலிந்திருந்தாலும் முக விலாசம் பளபளப்புடையதாக இருந்தது.
பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் தொலை தூரத்திலிருந்தும் 3 லட்சத்திற்கு அதிகமான மக்கள் யோகியைத் தரிசிக்கக் கூடியிருந்தனர்.
பிற்பகல் 3 மணிக்கு யோகி சில வார்த்தைகள் மக்களுக்கு ஒரு செய்தி போலவே பேசினார்.
மூன்று தசாப்தங்களாக ஸ்ரீ சிவபாலயோகி இந்தியாவிலும் இலங்கையிலும் விரிவாகப் பயணம் செய்து, லட்சக்கணக்கான மக்களை தியானத்தில் ஈடுபடுத்தினார்.
1987 முதல் 1991 வரை, அவர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார்.
பொது நிகழ்ச்சிகளின் போது அவர் அமைதியாக இருந்தபோதிலும்,
ஸ்ரீ சிவபாலயோகி தனது சீடர் சீனுவுக்கு ஆழமான பழமொழிகள், கதைகள் மற்றும் பல வழிகளில் கற்பித்தார்.
ஜங்கம தியானம் என்று அழைக்கப்படும் ஒரு பண்டைய மற்றும் உலகளாவிய தியான முறையை அனைவருக்கும் கற்பித்தார்
பாகுபாடுகள் இல்லாமல் ஒரு நண்பரை போல் பலருக்கும் தீடீஸை வழங்கினார்
அவர் ஒரு நண்பராக, பாகுபாடு அல்லது குற்றச்சாட்டு இல்லாமல் ஒரு தனித்துவமான வழியில் தொடங்கினார்.
பக்தர்கள் அவரது ஆன்மீக தத்துவத்தைப் பற்றி விசாரித்தபோது, ஸ்ரீ சிவபாலயோகி அதை யோகா வசிஷ்ட என்றார்
யோக வசிஷ்ட என்பது ஒரு உரையாடலாகும்,
அதில் மனதின் அனைத்து காட்சிகளும் எண்ணங்களும் வெறும் மாயைகள் என்றும்
சுயத்தின் தூய உணர்வு மட்டுமே யதார்த்தம், நித்தியம், எங்கும் நிறைந்தது மற்றும் அனைவரிடத்தும் உள்ளது என்று பொருள்.
இப்படி பலருக்கும் புரியாத ஆன்மீக பாதைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ஸ்ரீ சிவபாலயோகி மகாராஜ் மார்ச் 28, 1994 அன்று மகாசமாதி அடைந்தார்.
அவரின் ஸ்தூல உடல் தான் மறைந்துவிட்டதே தவிர அவரின் இருப்பும் சற்றும் குறையாமல் அனைவரும் உணரும் வண்ணம் இருக்கிறது





