🧘 Siddhas & Yogis

அருணகிரி நாதரும் நால்வரும்

அருணகிரிநாதருக்கும் தேவாரம் திருவாசகம் அருளிய நால்வருக்கும் அதீத ஒற்றுமை உண்டு 

 

இறைவனை அடைவதற்குரிய மார்க்கங்கள் நான்கு எனவும் 

 

அவை புத்திர மார்க்கம் தாசமார்க்கம் சகமார்க்கம் சிஷ்யமார்கம் எனப்படும் என்றும் 

 

புத்திர மார்க்கமாய் பிள்ளை போல அன்பு காட்டி இறைவனை அடைந்தவர் சம்மந்தர் 

 

தாசாமார்க்கமாய் அன்புடன் ஊழியம் செய்து இறைவனை அடைந்தவர் அப்பர் 

 

சக மார்க்கத்தில் நண்பனாய் அன்பு செலுத்தி இறைவனை அடைந்தவர் சுந்தரர் 

 

சிஷ்ய மார்க்கத்தில் மானக்கனாய் அன்பு செய்து இறைவனை அடைந்தவர் மாணிக்கவாசகர் என்று கூறுவர் 

 

இந்த நாள் வகை மார்க்கங்களையும் ஒறுங்கே அனுஷ்டித்தவர் அருணகிரியார் 

 

அதாவது பிள்ளை போல அன்பு செலுத்தியும் தாசனை போல ஊழியம் செய்தும் நண்பனை போல நட்பு பாராட்டியும் சிஷ்யனைப் போல உபதேசம் பெற்றவர் அருணகிரியார் 

 

உதாரணமாக எமையாலும் தகப்பன் என்றும் என் தாயும் எனக்கருள் தந்தையும் நீ என புத்திர பாவத்தை காட்டியும் 

 

குற்ற வேல் அடிமை செய்யும் வகை அருளாதோ என தாச மார்க்கத்தை வேண்டியும் 

 

எமக்க அமிர்த தோழா கடம்பமலர் அணிவோனே எனத் தோழனது நேச பாவத்தை புலப்படுத்தியும்  

 

உபதேச பொருளூட்டி என சிஷ்ய நிலையையும் காட்டியும் பாடியுள்ளார்

 

இனி பக்தி கிரியை யோகா ஞானம் எனப்படும் நாள் வகை ஆன்மீக வழிகளை பற்றி பேறு பெற்றவர்  முறையே அப்பர் சம்பந்தர் சுந்தரர் மாணிக்கவாசகர் என பெரியூர் கூறுவர் 

 

அங்கனம் அருணகிரியார் ஒருவரே இந்நால்வகை வழிகளையும் கைப்பற்றி பெருபெற்றவர்.

 

விருப்பொடுன் சிகரமும் வளம் வருகிலன் என பக்தி மார்க்கத்தையும் 

 

பாடும் பணியே பணியா அருள்வாய் என கிரியை மார்க்கத்தையும் 

 

தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடுதோன்றிய சோதியொடு சிவயோகந் தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும்வகை அருளாதோ  

 என யோக மார்க்கத்தையும் 

 

சுக ஞானக் கடல் மூழ்கத் தந்து அடியேனுக்கு அருள்

பாலிக்கும் சுடர் பாதக் குகனே  என ஞான மார்க்கத்தையும் 

 

என அணைத்து மார்கங்களையும் உள்ளடக்கி திருப்புகழில் ஓதி வைத்துள்ளார் பெருமான் அருணகிரியார்

 

தலங்களை நாடி சென்று தொழுததால் பக்தியாயாளராகவும்  

 

தளங்களில் அமர்ந்துள்ள ஆண்டவனை பாடி தொழுதுதால் கிரியையாளராகவும் 

 

முருகவேளிடம் யோக மார்க்கங்களை உபதேசம் பெற்று சிவயோக தமர்ந்திருந்த சீலர்  ஆதலால் சிவயோகியாகவும் 

 

முருகவேளிடம் சிவஞானம் பெற்று செல்வர் ஆதலால் மெய்ஞானியாகவும் அண்ணல் அருணகிரியார் விளங்கினார் 

 

முருகri டம் யோகா மார்க்கங்களை எல்லாவற்றையும் உபதேசம் வழியாக அருணகிரியார் பெற்றார் என்பது  யோகத்தா றுபதேசத் தேசிக எனவரும் திருப்புகளாலும் 

 

சிவலோகம் என்னும்

குருத்தை அறிந்து முகம் ஆறு உடை குருநாதன் சொன்ன

கருத்தை மனத்தில் இருத்தும் கண்டீர் முக்தி கைகண்டதே சொன்ன கருத்தை என வரும் கந்தர் அலங்காரத்திலும் அறிகின்றோம்

 

பின்னும் நால்வர் காட்டிய அற்புத காட்சிகள் போல அருணகிரிநாதரும் காட்டியுள்ளார். 

 

உதாரணமாக சம்மந்த பெருமான் இறைவனிடம் தாளம் பெற்றது போல அருணகிரியார் இறைவனிடம் ஜெபமாலை பெற்றார்

 

அப்பர் கடலிற் கல்லே  தெப்பமாக மிதந்து பஞ்சபூதங்களில் ஒன்றான நீர் தாங்க உயர்ந்தது போல 

 

அருணகிரியார் கோபுரத்திலிருந்து விழுந்தும் இரவாது பஞ்சபூதங்களில் ஒன்றான நிலத்தாக உயர்ந்தனர் 

 

திருமறை காட்டில் இருந்த நாவக்கரசரை திருவாய் மூருக்கு வாய் என சிவபெருமான் அழைத்தது போல 

 

வயலூரில் இருந்த அருணகிரிநாதரை முருகப்பெருமான் விராலிமலைக்கு வா என அழைத்தார் 

 

அப்பரும் சம்பந்தரும் சிவபெருமானிடம் படிக்காசு  பெற்றது போல அருணகிரியார் முருகவேரிடம் படிக்காசு பெற்றார் 

 

சோமாசி மாற நாயனாரது யாகத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது நண்பர் சோமாசி மாற நயனாருக்காக சிவபெருமானை வரவழைத்து காட்டியது போல 

 

அருணகிரி யாரும் ராஜசபையில் தமது நண்பர் பிரபுட  தேவராஜனுக்காக முருகவேளை வரவழைத்து காட்டினார் 

 

மாணிக்கவாசகர் புத்தர்களை ஊமையாய்க்கி வாது வென்றது போல 

 

அருணகிரியார் வில்லிபுத்தூராரையும் சம்பந்தாண்டனையும்  வாதத்தில் அடக்கி வென்றார் 

 

மேலும் மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் உபதேசம் பெற்றது போல அருணகிரியார் முருகவேளிடம் உபதேசம் பெற்றார் 

 

இங்கனம் அருகின கிரி ஆர் ஒருவரே எம்பிரான் முருகவேலுக்கு நால்வராய் திகழ்ந்தனர் 

 

மேலும் சம்பந்தமூர்த்தி நாயனார் போல 16,000 பாடல்கள் பாடியது போல அருணகிரிநாதரும் 

 

 

தேவாரம் போல இசைத்தமிழ் திருப்புகழையும் 

திருவாசகம் போன்று செந்தமிழ்ச் சுவை கொட்டும் கந்தல் அலங்காரத்தையும் திருக்கோவையார் போன்ற அகப்பொருள் துறைக்கு விளங்கும் கந்தர் அந்தாதியும் பாடி 

 

தமிழ் உலகில் பாவேந்தரா பொலிவுற்று விளங்கியவர் அருணகிரியார் 

 

இங்கனம் சிவபெருமானுக்கு நால்வர் ஆற்றிய தொண்டினை போலவே 

 

அவர் புதல்வர் முருகப்பெருமானுக்கு அருணகிரிநாதர் தொண்டுகள் பல செய்து அவரோடு ஐக்கியமானார் 



 

Adiguru

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

🧘 Siddhas & Yogis

Sri Seshadri Swamigal- ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

தமிழில் வாசிக்க கீழே செல்லவும்  Sri Seshadri Swamigal – The Saint Once Called Mad, Later Revered by the World Was He
🧘 Siddhas & Yogis

We believe Apple Will announce iPhone.

பகவான் ரமணர் அற்புதங்கள்!   மகான்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ,    தனக்கென வரையறைகள் வகுத்து கொண்டு ஒரு குறுகிய வட்டத்தில் வாழாமல்    ஒரு மனிதனின்