ஸ்ரீ தயானந்த சுவாமிகள்
மக்கள் தெண்டே
பாரத நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் பல மகான்கள் தோன்றிய வண்ணமிருக்கிறார்கள்.
ஆனால், ஒரு திசையில் தோன்றி மற்றொரு திசையில் ஊன்றிப் புகழ்கொண்டவர்கள் அதிகமில்லை.
அந்த வரிசையில் தெற்கிலிருந்து வடக்கே சென்று தன்னுடைய ஆன்மிக உயர்வாலும்,
சமூகத் தொண்டாலும் உலகளாவிய மதிப்பைப் பெற்றவர்
சுவாமி சிவானந்தர்
தமிழகத்தில் தாமிரபரணி நதிக்கரையில்,
குப்புசாமி என்னும் பெயரில் பிறந்து,
மலேஷியாவில் மருத்துவராகச் சேவை செய்து,
இமயமலை அடிவாரத்தில் ஆசிரமம் அமைத்து,
உலகுக்கே ஆன்ம ஒளி காட்டிய மகான், சுவாமி சிவானந்தர்.
‘தன்னலமற்ற தொண்டே ஆன்மிக வாழ்வின் அடிப்படை.
அதன் மூலம் உள்ளத் தூய்மையும்,
அதனால் யோகமும், வேதாந்த ஞானமும்,
இறுதியில் ஆத்ம அனுபூதியும் பெறலாம்’ என்று அறிவுறுத்தியது மட்டுமல்லாமல்
அப்படியே வாழ்ந்தும் காட்டிய மகான்.
சிவானந்தரது வாழ்வே அவரது உபதேசம்.
மனிதநேயம் மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர்.
‘வாழ்வின் இறுதி நிமிடம் இது’ என்று வழி தெரியாமல் நின்றவர்கள்கூட,
அவரது வழிகாட்டுதலால் வாழ்க்கையின் உன்னதத்தை அறிந்து மீண்டிருக்கிறார்கள்.
தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் அழகிய கிராமம் பட்டமடை.
இக்கிராமத்தில் வசித்த ஶ்ரீ பிஸ் வெங்கு ஐயரும், ஶ்ரீமதி பார்வதி அம்மாவும் மிக சிறந்த சிவபக்தர்கள்
இவர்களுக்கு செப் 8,1887 அன்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தைக்கு குப்புசாமி என்று பெயரிட்டனர்
குப்புசாமி குடும்பத்தின் மூன்றாவது மற்றும் கடைசி மகனாவார்.
குப்புசாமி துறுதுறுப்பு, சிறந்த அறிவாற்றல், இல்லாதவர்களுக்கு உதவும் குணம்,
என அச்சிறு வயதிலே பக்குவபட்ட பையனாக உலா வந்தார்.
தனது தாய் தனக்கு கொடுக்கு தின்பண்டங்களைக் கூட தனது சகோதரர்கள், நண்பர்கள்,
இது ஏன் நாய் பூனை காகங்களுக்கு கொடுத்து அவர்கள் உண்பதை கண்டு இன்பம் அடைவார்.
அதே போல தனது தந்தை தினசரி செய்யும் சிவபூஜக்கான வில்லம் மற்றும் பூக்களை கூட
குப்புசாமி தான் சேகரித்து வந்து கொடுப்பார்.
இவர் படித்த எட்டையாபுரம் ராஜா high Schor பள்ளியிலும் படிப்பிலும் குப்புசாமி தான் அனைத்திலும் முதல் மாணவர்.
குப்பு சாமிக்கு இயல்பாகவே இனிமையான குரள் வளமும் ஞாபகத்திறனும் இருந்தது.
1901 ஆம் ஆண்டு சென்னயின் முதல் கவர்னரான Lord Ampthil
வேட்டையாடுவதற்காக குருமலை hills வந்த போது
இரயில் நிலையத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியல் சிறுவன் குப்புசாமி தான்
வரவேற்பு பாடல் பாடினார்.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் திருநெல்வேலியில் இருக்கும் SPG கல்லூரியில் பட்டம் படித்தார்.
அங்கும், படிப்பு விவாதம் மற்றும் நாடகங்களிலும் பங்கேற்பார்.
1905 ஆம் ஆண்டு கல்லூரியில் ஷேக்ஸ்பியரின் Midsummer Night’s Dream” நாடகத்தில் “Helena காதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.
பட்ட படிப்பின் முதல் ஆண்டு தேர்வு முடிந்தவுடன் ,
திருச்சியில் இருந்த மருத்துவ கல்லூரியில் சேர்த்து மருத்துவம் படித்தார்
மருத்துவ படிப்பு அவரது அனைத்துமானது , மிக தீவிரமாக படித்தார்,
விடுமுறை நாட்களில் கூட ஊருக்கு போகாமல் ,
மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உதவுவார்
வகுப்பறையில் புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்வதை விட
மருத்துவமனையில் அனைத்தையும் நேரடியாக பார்த்து தெரிந்து கொண்டதால்
அனைத்து படங்களிலும் முதல் மதிப்பெண்ணை பெற்றார்
சொல்லபோனால் கல்லூரியில் கடைசி ஆண்டு படிக்கும் மாணவருக்கு கூட தெரியாத
விஷயங்களும் விடைகளும் இவருக்கு தெரிந்தித்தது
அந்த அளவிற்கு மருத்துவ படிப்பில் ஆளுமையோடு விளங்கினார்.
மருத்துவப்பட்டம் பெற்றபின் திருச்சியில் ஒரு மருத்துவமனையில் வேலைபார்த்தார்
அப்படி வேளை பார்த்துக்கொண்டிருக்கும் சமயத்தில் “The Ambrosia” என்ற நாளிதழை துவங்கினர்
அந்த 32 பக்க நாளிதழில் ஆரோக்கியம் தொடர்பான செய்திகள் கட்டுரைகள் இருக்கும்
இந்த நாளிதழ் துவங்குவதற்கான முதலீடான 150 ரூபாயை அவரின் தாயிடம் இருந்து தான் பெற்றுள்ளார்.
பல மாதங்களுக்கு பிறகு அவரின் தாயார் ஒரு பண்டிக்கைகாக அந்த 150 ரூபாயை கேட்ட போது
குப்புசாமி சந்தோஷத்தோடு அதனைத் திருப்பிக் கொடுத்தார்.
அந்த தொகையை தவிர நன்கொடையாக யாரிடமும் நாளிதழ் நடத்துவதற்கு பணம் பெற்றதில்லை.
இந்த காலகட்டத்தில் தான் குப்புசாமியின் தந்தை மரணடைகிறார்.
அதன் பின்னர் . டாக்டராக பணிபுரிய மலேசியாவில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது.
1913 S.S.Tara என்ற கப்பலில் மலேசியாவிற்கு பயணப்பட்டார் Dr குப்புசாமி
மிகவும் ஆச்சார அனுஸ்டானங்களை பின்பற்றும் குடும்ப பின்புலத்தை சார்ந்தவர் என்பதால்
கப்பலில் கொடுக்கப்படும் உணவை சாப்பிடுவதில் மிகவும் சிரமபட்டார்.
அவரின் தாயார் தன் கையில் செய்து கொடுத்த திண்பண்டங்கள் தான்
அவரை காப்பாற்றி கொண்டிருந்தது என்றாலும்
அவர் சிங்கப்பூரை வந்தடைந்த போது பாதி இறந்து போயிருந்தார் என்று சொல்ல வேண்டும்.
ஒரு வழியாக சிங்கப்பூரை அடைந்தவர் Dr. ஐய்யங்காரை சந்தித்து அவர் கொடுத்த சிபாசு கடிகம் மூலம்
திரு. A.G. ராபின்சன் என்பவரை சந்தித்தார்.
அவரின் estate ஆஸ்பத்திரிக்கு ஆள் தேவைப்பட்டது.
A.G. robinson மிகக் கடுமையானவர். ஆஜானுபாகுவான தோற்றத்தோடு பார்ப்பதற்கே அச்சுறுத்தும் வகையில் இருந்தார்.
குப்புசாமி சிபாரிசு லெட்டரை கொடுத்ததும்
அதை வாங்கியவர் உன் ஒருவனால் ஒரு ஆஸ்பத்திரியை நிர்வாகிக்க முடியுமா என்று கேட்ட
அதற்கு இவர் “என்னால் மூன்று ஆஸ்பத்திரியை” கூட நிர்வாகிக்க முடியும் என்றார்.
உடனே Robinson அவருக்கு மாதம் 150 dollar சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தினார்.
ஆனால் வேலை அவ்வளவு எளிதாக இல்லை , இவர் மிகவும் சிரமபட வேண்டி இருந்தது.
சில சமயங்கள் தன்னுடைய வேலையை இராஜினாமா செய்து விட்டு
ஊருக்கு திரும்பலாம் என்று நினைத்த போது ராபின்சன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
Dr. குப்புசாமி தன்மையான கருணை உள்ளம் கொண்ட கைராசி மருத்துவராக விளங்கினார்.
தீராத வியாதிகளும் கூட இவர் கைபட்டவுடன் குணமாகின
ஆண்டவர் இவருக்கு அற்புத சக்திகளை கொடுத்துள்ளார் என்று மக்கள நம்பினர் .
ஏழைகளுக்குத்தான் அதிகளவில் மருத்துவம் பார்ப்பார்.
அப்படியே பார்த்தாலும் அவர்களிடம் பணம் வாங்க மாட்டார்.
அவர்களுக்கு வியாதி குணமான பின் இவர் அவர்களுக்கு பணம் கொடுத்து
நல்ல சத்தான உணவுகளை வாங்கி உண்ணச் செல்வார்.
சாமானியர்களுக்கு மட்டுமல்ல சாதுக்கள், சன்னியாசிகள் பிச்சைகாரர்கள் என அனைவருக்கும் பாகுபாடில்லாமல் மருத்துவம் பார்த்தார்.
கல்யாணம் , விருந்து திருவிழாக்கள் என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தேசமாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்த போது
ஒரு புத்தகம் இவர் வாழ்க்ககை அடிப்படையையே மாற்றியமைத்தது.
ஆம் கடப்பை சச்சிதானந்த சாமிகள் எழுதிய ஜீவ பிரம்ம ஐய்க்கிய வேதாந்த ராசியம் அவருக்குள் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆன்மிக நேடல் பற்றிய விழிப்புணர்வை அவருக்குள் விதைத்தது.
பின்னர் சுவாமிரமா, விவேகானந்தர், ஆதிசங்கர், மற்றும் Theosopical Society புத்தகங்களை படிக்க துவங்கினார்.
தவிர பகவத் கீதை இராமாயணம் மகாபாரதம் பாகவதம் போன்ற புராண இதிகாசங்கள்
தங்களுக்கான ஆன்மிக பங்கை அவருக்கு கொடுத்தன
தான் படித்ததோடு மட்டுமில்லாமல் மக்களுக்காகவும் செற்பொழிவு மற்றும் கீர்த்தனைகள் நடத்தினார்.
நாள்தோறும் யோக தியானங்களும் செய்து வந்தார்.
மருத்துவத்தைச் சேவையாகப் பார்த்த அதே வேளையில்,
அவரது உள்ளத்தில் வேறொரு விநோத சிந்தனை குடி கொண்டிருந்தது.
மக்களின் உடல் உபாதைகளை என்னால் தீர்த்து வைக்க முடிகிறது.
ஆனால், இதனால் மட்டுமே அவர்களின் துயரங்கள் அனைத்தும் மறைந்துவிடவில்லை.
வாழ்வில், நிம்மதியும் ஆனந்தமும் அவர்கள் அடைவதில்லை.
ஆக வியாதிகளைக் குணமாக்குவது மேம்போக்கான தீர்வு.
உலக பந்தங்களில் கட்டுண்டு உழலும் அவர்கள் உண்மையிலேயே விடுதலை பெறவும்,
ஆனந்த வாழ்வும் அவர்களின் ஆன்ம நலத்தைப் பேணுவதே சிறந்த வழி ! எனத் தீர்மானித்தார்.
இந்தச் சிந்தனையே, அவரை மறுபடியும் இந்தியாவிற்கு அழைத்து வந்தது
1923 இந்தியாவிற்கு திரும்பினார்
திரும்பியவர் தனது சொந்த ஊருக்கு செல்லவில்லை மாறாக
சென்னையில் இறங்கியதும் தன் உடமைகளை தன் நண்பனின் வீட்டில் வைத்து விட்டு
அங்கிருந்தே தனது தீர்த்த யாத்திரையை துவங்கியவர்
முதலில் சென்ற இடம் காசி, காசியில் விஸ்வநாதரை தரிசித்து விட்டு
தலாஜ் என்ற ஊருக்கு சென்ற சமயத்தில் தான் அங்கு வசித்த போஸ்ட் மாஸ்டவரிடம் பழக்கம் ஏற்பட்டு
அவருடன் சில காலம் தங்கி இருந்தார்,
இவரின் ஆன்மிக தேடுதலை தரிந்த கொண்ட போஸ்ட் மாஸ்டர் இவரை ரிஷிகேஷிற்கு போகச் சென்னார்.
டாக்டர் குப்புசாமி 8th of May, 1924 அன்று ரிஷிகேசை அடைந்தார்.
தனக்கான குருவை தேடி பயனப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் தான்
கைலாஷ் ஆசிரமத்தின் தலைமை குருவான சுவாமி விஷ்வானந்த சரஸ்வதியை சந்தித்தார்.
முதல் சந்திப்பிலே உள்ளுணர்வு பரிமாற்றங்கள் நிகழ்ந்தன
மருத்துவர் துறவிக்குள் ஒரு குருவை கண்டார் குரு மருத்துவர்குள் ஒரு சிஷ்யனைக் கண்டார்.
அவருக்கு சன்னியாச தீட்டை கொடுத்து சுவாமி சிவானந்த சரஸ்வதி என்ற திருநாமமும் கொடுத்தார்.
அன்றிலிருந்தே தன் சந்தியாச வாழ்க்கையை துவங்கினர் சிவானந்தர்.
மலேசியாவில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து விட்டு
ஒரு ஷனத்தில் அனைத்தையும் துறந்து –
ஒரு சிறிய குடிசையில் தனது தீவிர சாதனைவில் ஈடுபட்டார்.
பல நாட்கள் விரதம் சில நாட்கள் ரெட்டியும் கங்கை நீருமே அவருக்கு உணவு.
நடுங்கும் குளிரில் கங்கையில் இடுப்பளவு தண்ணில் இறங்கி சூரியின் வரும் வரை ஜெபம் செய்வார்.
ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தியானம் செய்வார்.
இருந்தும் ஏழைகளுக்கும் சாதுக்களுக்கும் மருத்துவம் பார்பதை தொடர்ந்து செய்து வந்தார்.
சாதுக்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது தானே பிக்சை எடுத்து அவர்களுக்கு உணவளிப்பார்.
அவர்களுக்கு உடல்நிலை மிக மோசமானால் தனது முதுகில் அவர்களை சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு செல்வார்.
அவருக்கு கிடைத்த இன்சுரன் தொகையை வைத்து லெட்சுமன் ஜீலா என்ற இடத்தில் 1927 ல் சிறு மருத்துவமனையை துவங்கி
சாதுக்கள் யாத்ரீகர்களுக்கு மருத்துவமும் பார்த்தார்.
தீவிரமான சாதனா அபரிதமான தொண்டு மணப்பான்மை இது இரண்டும் சிவானந்தரை நிர்விகல்ப சமாதி நிலைக்கு கொண்டு சென்றது.
பின்னர் ஒரு தேசாந்திரியாக திரிந்து இந்திய தேசத்தின் பல புனித தலங்களுக்கு சென்றார்.
மகான்களையும், சாதுக்களையும் சந்தித்தார்.
பின்னர் தென்னிந்திய பயணம் மேற்கொண்டர்,
அச்சமயத்தில் ராமேஸ்வரம், புதுக்சேரி அரவிந்தர் ஆசிரமம், திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்திற்கும் சென்றார்
சிவாநந்தர் ரமணரை முதல் முதல் தரிசித்த தினம் ரமனரின் பிறந்த தினம்
அன்று ரமணரின் பக்தர்களுக்கு முன் பஜனை பாடி சிவானந்தர் பரவசநிலையை அடைந்தார்.
தனது தீர்த்த யாத்திரையை முடித்துக்கொண்டு 1936 ஆம் ஆண்டு மறுபடியும் ரிஷிகேசை அடைந்தார் ,
அன்று தான் The Divine Life Society என்ற அமைப்பு உருவாவதற்கான விதை புனித கங்கைநதியின் கரையில் விதைக்கப்பட்டது
அமைப்பை உருவாவதற்கான இடம் தேடிகொண்டிருந்த சமயத்தில்
யாரும் பயன்படுத்தாத ஒரு பழைய மாட்டு கொட்டகை சிவனந்தரின் கண்ணில் பட்டது
அதுவே சிவநாதருக்கு போதுமானதாக இருந்தது ,
அது நான்கு araigal கொண்ட கொட்டகை
ஒரு அறையில் மாடுகளுக்கான வைக்கோல் அனைத்தும் வைக்கப்பட்டிருந்தது
மற்றவை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன
பக்தர்களை கொண்டு அந்த இடத்தை தூய்மைப்படுத்தி முதலில் ஒரு அறையில் தன வகுப்புகளை துவங்கினார் சிவானந்தர் ,
நாளடைவில் பக்தர்களில் கூட்டம் பெறுக பெறுக சரியாக ஒரு வருடம் கழித்து
அந்த நான்கு அறைகளும் பயணப்பாட்டிற்கு எடுத்துக்கொண்டார்
இன்றைக்கு பெரிய ஆழ விருட்சமாக நிற்கும் The Divine Life Society இப்படி உருவானது தான்
பிறகு, மெள்ள மெள்ள சிகிச்சைகள், மருந்தகங்கள், ஆலயங்கள், தியான மையங்கள், ஆன்மிகப் பத்திரிகை அச்சகங்கள்,
புத்தக வெளியீட்டு மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புனித வாழ்க்கை சங்கம் எனும் மிகப் பெரிய ஆன்மிகத் தொண்டு நிறுவனமாக அது வளர்ந்தது.
சுவாமி சிவானந்தர் எழுதிய சுமார் 296 நூல்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலக மக்களுக்கு வழிகாட்டுகின்றன.
ஆஸ்ரமத்துக்குக் கிடைக்கிற நன்கொடைகளை, மருத்துவச் சேவை, அன்னதானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுத்தி, பொருளாசையின்றி வாழ்வது குறித்து வாழ்ந்து காட்டினார்.
சுவாமிகள், தன்னை அறிந்துகொண்டு, விடுதலை பெறு, நல்லதைச் செய், அதை உடனே செய் எனும் எளிய போதனைகளால் மக்களின் மணம் கவர்ந்தார்.
சாமானிய மக்களுக்கு இலவசமாக ஆன்மீக ஞானத்தை கொடுக்க வேண்டும் என்பதே சிவனந்தரின் நோக்கமாக இருந்தது
1938 ஆம் ஆண்டு தி டிவின் லைப் என்ற நாளிதழையும் துவங்கினர்
உலகம் இரண்டாம் உலகப் போரின் பிடியில் சிக்கித் தவித்த நிலையில்,
மக்களின் துயரமடைந்த மனங்களுக்கு உதவுவதற்காக, அவர் டிசம்பர் 3, 1943 அன்று அகண்ட மகாமந்திர கீர்த்தனையான
(ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே; ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, என்ற நாமாவளியை
24 மணி நேர பஜனை தொடங்கினார்,
சுவாமி சிவானந்தா மனித துன்பங்களைப் போக்குவதிலும் யோகாவின் பங்கு அளப்பரியது என்று நம்பினார்.
ஸ்வர்காஷ்ரமத்தில் தனது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களிலிருந்தே, அலோபதி சிகிச்சை அவரிடமிருந்தும் சமூகத்திலிருந்தும் பிரிக்க முடியாததாக இருந்தது.
இப்போது அரிய இமயமலை மூலிகைகளிலிருந்து உண்மையான ஆயுர்வேத தயாரிப்புகளுடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்தார்.
எனவே 1945 இல் சிவானந்தா ஆயுர்வேத மருந்தகத்தை நிறுவினார்,
அது இப்போது பன்மடங்கு பெருகியுள்ளது.
டிசம்பர் 28, 1945 அன்று அனைத்து உலக மத கூட்டமைப்பையும்,
பிப்ரவரி 19, 1947 அன்று அனைத்து உலக சாதுக்கள் கூட்டமைப்பையும் நிறுவினார்.
1947 ஆம் ஆண்டு சங்கத்தின் செயல்பாடுகளில் பெரும் விரிவாக்கத்தைக் கண்டது.
1948 ஆம் ஆண்டு யோக-வேதாந்த வன அகாடமி நிறுவப்பட்டது,
அங்கு வசிக்கும் சாதகர்களுக்கு முறையான ஆன்மீகப் பயிற்சி அளிக்கவும், ஆன்மீக தேடுதலோடு வருபவர்களுக்கு பயனளிக்கவும் இது நிறுவப்பட்டது.
1950 ஆம் ஆண்டு சுவாமி சிவானந்தா தனது தெய்வீக செய்தியை நாடு முழுவதும் பரப்புவதற்காக (இலங்கை) சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
மக்களின் இதயங்களில் ஒழுக்கம் மற்றும் ஆன்மீக உணர்வை கொண்டு சென்றார்
அதன் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது
அப்போதிருந்து ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடியது
1953 ஆம் ஆண்டு சிவானந்தர் சிவானந்தாஸ்ரமத்தில் உலக மதங்களின் பாராளுமன்றத்தை கூட்டினார்.
சுவாமி சிவானந்தரிடமிருந்து பிரிக்க முடியாத சிறிய மருந்தகம் மெதுவாக வளர்ந்து எக்ஸ்-ரே மற்றும் பிற வசதிகளைக் கொண்ட வழக்கமான மருத்துவமனையாக மாறியது.
சிவானந்தா கண் மருத்துவமனை 1957 டிசம்பரில் முறையாகத் திறக்கப்பட்டது.
முதலில் உள்நோயாளிகளுக்காக 10 படுக்கைகள் இருந்து பின்னர் 30 படுக்கைகள் கொண்டதாக விரிவுபடுத்தப்படுகிறது.
சிவனந்தரின் செய்திகள் கருத்துக்களை உலக மக்கள் அனைவரும் அவரவர் மொழயில் படித்து புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கல்
1959ஆம் ஆண்டில் சிவானந்தா இலக்கிய ஆராய்ச்சி நிறுவனஉருவாக்கப்பட்டது
சங்கத்தின் வெள்ளி விழா 1961 இல் கொண்டாடப்பட்டது,
அந்த நேரத்தில் குரு தனது சொந்த வாழ்நாளில் பணி கொஞ்சம் கொஞ்சமாக நிறைவடைந்து வருவதை கண்டார்
உலகின் பல்வேறு மத மொழி இனத்தை சேர்ந்த மக்கள் சிவனந்தரின் சீடர்கலானார்கள்
அவரின் யோகா வகுப்புகள் கர்மா யோகா ஞானயோகம் matum பக்தியோகம் சார்ந்த ஒரு தொகுப்பு யோகாவாக பார்க்கப்பட்டது
இத்தோடு வாழ்கை முடிந்தது என்று நினைத்த பலர் மனிதர்களின் வாழ்கையில்
ஒரு புதிய ஒளியை பாய்ச்சியவர் சுவாமி சிவானந்தர்.
அதில் நம்மின் பலருக்கும் முனிசதாரணமாக விளங்கிய முன்னால் குடியரசுத் தலைவர் APJ Abdul Kalan அவர்களும் ஒருவர்.
அப்துல் கலாமின் சிறு வயது கனவு விமானியாக வேண்டும் என்பது.
ஆனால், விமானப் படையின் பைலட் தேர்வில் தோற்றதால் விரக்தி அடைந்தார்.
வாழ்நாள் கனவு சிதைந்து போனதை ரிஷிகேஷம் சென்று சுவாமி சிவானந்தரிடம் கூறினார்.
“நீ படைக்கப்பட்டது விமான ஓட்டியாவதற்கு அல்ல. வேறு எதற்காகவோ நீ படைக்கப்பட்டிருக்கிறாய். அதை நோக்கிச் செல்” என்று அறிவுரை கூறினார் சிவானந்தர்.
`அந்தத் தருணம்தான் என் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணம்’ என்று கலாம் அடிக்கடி குறிப்பிடுவார்.
பாரதத்தின் முன்னால் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம்.
உள்ளிட்ட வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த பலருக்கும் வாழ்வில் ஆன்மிக ஒளி ஏற்றியவர் சுவாமி சிவானந்தர்.
இப்படி மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சுவாமி சிவானந்த சரஸ்வதி,
1963-ஆம் வருடம், ஜூலை 14-ஆம் தேதி, கங்கைக் கரையில், இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.
உடலை உறுதிசெய்வது,
உள்ளத்தை ஒழுக்கத்தின் மூலம் தூய்மை செய்வது,
ஊர் நலனுக்காக உழைப்பது,
உலகைப் படைத்துக் காக்கும் பரமனின் நினைப்பில் வாழ்வது…
இது தான் அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை.
கங்கை நதி ஓடும் வரையிலும்,
சுவாமி சிவானந்தரின் புகழைப் பாடித்தான் சலசலத்துக் கொண்டிருக்கும்.





