🧘 Siddhas & Yogis

திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை

 

முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான 

 

மதுரையில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் ஒரு குடைவரை கோயில்

 

அதாவது ஒரு மலையை குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் கோவில்

 

மலையின் கீழ் பகுதியில் முருகன் தெய்வானையோடு திருமணக்கோலத்தில் விற்றிருக்கிறார்.

 

மலையின் மேல் பகுதியில் 

 

காசி விஸ்வநாதர் கோவில், வள்ளி சுனை மற்றும் 18 சித்தர்களுள் ஒருவரான மச்சமுனியின் ஜீவசமாதி என 

 

பல சக்திவாய்ந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

 

காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல மலையின் பின்புறம் கிரிவலப்பாதையில் படிக்கட்டுகள் உள்ளது.

 

பழனியில் முருகனுக்கு அபிஷேகம் தான் சிறப்பு, 

 

ஆனால் திருப்பரங்குன்றம் முருகன்  குடைவறைக் கோயிலில் இருப்பதால், அவருக்கு அபிஷேகம் கிடையாது. 

 

அவரது வேலுக்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது 

 

புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று

 

அவரின் வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். 

 

அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. 

 

சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததால், 

 

வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

 

எனவே மழைக்கு கீழே முருகன் சந்நிதி எவ்வ்ளவு முக்கியமோ அந்த அளவிற்கு மழைக்கு மேல இருக்கும் காசி விஸ்வநாதர் சந்நிதியும் முக்கியம் 

 

காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டில் ஏறி செல்லும் போது மையப்பகுதியில் வலது புறத்தில் ஒரு தர்கா உள்ளது.

 

 

காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ஹந்துக்கள் செல்வது போல

 

தர்காவிற்கு இஸ்லாமியர்கள் அவ்வப்போது சென்று வருவர்.

 

இத்தனை ஆண்டுகளாக அதில் எந்த பிரச்சனையும் அதில் வந்ததில்லை

 

ஆனால் தற்போது திடீரென இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் 

 

நாங்கள் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர்  தர்காவில் ஆடு வெட்டி உயிர்பலி கொடுக்கப்போகிறோம் என்று கிளம்பியது தான் 

 

அப்பகுதியில் பதட்ட சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

 

சொன்னதோடு மட்டுமில்லாமல் ஆண்டை தூக்கிக் கொண்டு அதனை வெட்ட அவர்கள் மலையேற முற்பட்ட போது 

 

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விட்டனர்.

 

இதனால் கோபமடைந்தவர்கள் திருப்பரப்பிக்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று அறிவிக்க போகிறோம்  என்றனர். 



சில மாதங்களுக்கு முன் சென்னிமலை முருகன் கோவிலை 

 

கல்வாரி மலையாக அறிவிப்போம் என்று கிரிஸ்துவர்களின் ஒரு பிரிவினர் ஆர்பாட்டம் நடத்திநார்கள்




சபரிமபைக்கு 10 முதல் 50 வயதுள்ள பெண்கள் செல்லக்கூடாது என்ற ஐதீகம் இருக்கும் போது

 

ரஹனா பாத்திமா என்ற இஸ்லாமிய இளம் பெண் நான் போவேன் என்று கூறி சென்றார்.

 

இதற்கு துணையாக ஒவ்வொரு ஆண்டும் அய்யப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருக்கும் சமயங்களில்

 

இங்கே தமிழ் நாட்டில் ஒரு பெண் அய்யப்பனை பற்றி அவதாராணா வார்த்தைகளில் மேடை கானா பாட்டுகளை பாடிக்கொண்டிருக்கிறார்.

 

இது போன்றவர்களின் செயலால்  பல ஹிந்துக்களின் மணம் புறப்பட்டது 

 

ஆனால் இவர்கள் மீது அரசாங்கம் எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுத்ததில்லை.

 

ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை 

 

காரணம் அது அவர்களின் கருத்து சுதந்திரம்

 

கருத்து சுதந்திரம் சரி சட்டத்தில் கூடவா பாரபட்சம் 

 

எப்படியென்றால் 

 

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், மடப்புரம் காளி கோவில், பாண்டி கோவில் ஆகிய கோவிக்களில் ஆடு கோழி பழி கொடுக்கும் வழிபாடு காலம் காலமாக இருந்து வந்தது.

 

பாண்டி கோவில் கடா பெட்டு என்பதின் பிரசித்தம் மதுரை சுற்றுவட்டார மக்களுக்கு எல்லோருக்கும் தெரியும்

 

அதே சமயம் இது எல்லா கோவில்களிலும் அல்ல 

 

காவல் தெய்வங்கள், உக்ர தெய்வங்கள் , குல தெய்வங்கள் போன்ற கோவிலகிலில் மட்டும் தான் பலி கொடுக்கப்பட்டு வந்துள்ளது 

 

காரணம் அந்த தெய்வங்களின் தன்மை அப்படிப்பட்டது.

 

ஆனால் 2003 ஆண்டு கோவில்கள் மற்றும் கோவில்களைச் சுற்றிலும் ஆடுகள், மாடுகள், கோழிகள் ஆகியவற்றை பலியிடக்கூடாது என்று 

 

தமிழ்நாடு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1950 மற்றும் 

 

ஒரு திருத்தச் சட்டத்தை அன்றைய அரசு கொண்டுவந்தது.

 

தென் தமிழகத்தில் முக்கியமாக மதுரை சுற்று வட்டார ஊர்க்களில் கிடா வெட்டி காது  குத்தும் பழக்கம் காலம் காலமாக இருந்து வரும் மரபு 

 

ஆனாலும்  கோவில்களில் உயிர் பலி தெடுக்க கூடாது என்று அரசு சட்டம் கொண்டு வந்த பின் 

 

அக்கோவில்கள் அனைத்திலும ஆடு கோழி பலி கொடுப்பது நிறுத்தப்பட்டது.

 

மிகவும் தடிப்பான இந்தெய்வங்களுக்கு உயிர் பலி அவசியமாக இருந்தும் 

 

அரசு சட்டத்தை ஏற்று பக்தர்கள் பலி கெடுப்பதை நிறுத்திக் கொண்டனர்.

 

ஆனால் இந்த சட்டங்கள் எல்லாம் ஹிந்து கோவில்களுக்கு மட்டும் தான் என்னும் போது  

 

நம் மண்ணிலே நமக்கு உரிமை பறிக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது 

 

சட்டமே இப்படி இருக்கும் போது 

 

எப்போதுமே உயிர் பல கொடுக்கப்படாத முருகன் சிவன் அமர்த்திருக்கும் மலைக் கோவிலில் 

 

நான் ஆடு வெட்டி பலி கொடுப்பேன் என்று சிலர் கிளம்பியிருப்பதில் 

 

எதோ அரசியல் உள்நோக்கம் உள்ளது 






நானும் மதுரையில் பிறந்து வளர்ந்தவன் 

 

எத்தனையோ முறை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் 

 

மலை மீது இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் சென்று வைத்திருக்கிறேன் 

 

ஆனால் மலை மீது இருக்கும் தர்காவை எப்போதுமே குறைத்து மதிப்பிட்டதும் இல்லை 

 

இசுலாமியர்கள் கோவில் இங்கு எப்படி வந்தது என்று தோன்றியது கூட இல்லை 

 

ஆனால் தற்போது மலை மீது இருக்கும் சிக்கந்தர் பாட்ச  தர்காவின் வரலாறு என்ன என்று ஆராய்ச்சி செய்து பார்க்கும் பொது மிக அதிர்ச்சியாக இருந்தது 

 

சிலரின் கருத்துப்படி சிக்கந்தர் பாட்சா என்பவர் அப்பகுதியால் வாழ்ந்து ஒரு துறவி 

 

சமூக தொண்டாற்றிவந்தார் அவரின் சமாதி தான் மலையில் உள்ளது என்று கூறுகின்றனர் 

 

ஆனால் இதற்க்கான எந்த ஆதாரங்களுக்கும் காணப்படவில்லை





மாறாக இந்த தர்காவின் மற்றொரு வரலாறு ஆதாரஇதோடு பல் இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது/

 

ஆதாரத்தின் படி 

 

கி பி 1372 காலகட்டத்தில்  ஏர்வாடி சுல்தான் சையத் இப்ராஹிம் ஷாஹீத்  

 

மதுரையை ஆண்ட மன்னர் திருபாண்டியன் மீது போர் தொடுத்து 

 

அவரை தோற்கடித்து மதுரை மாகாணத்தை வென்று

 

மண்ணையும் மக்களையும் இஸ்லாத்திற்கு  ,அரா சொல்லி என்று கொடுமைப்படுத்த 

 

அங்கிருந்த தப்பிய மன்னன் நேராக  விஜயநகர பேரரசரி அணுகி நடந்ததை சொல்லி 

 

 உதவுமாறு வேண்டி கொண்டார்.

 

விஜயனாக மன்னரும் தனது படைகளில் ஒரு பகுதியை  பாண்டிய மன்னனுக்கு கொடுத்து சுல்தானை எதிர்க்க சொன்னார் 

 

இந்த இடைப்பட்ட காலத்தில் அலா அல்-தின் சிக்கந்தர் ஷா என்பவரை மதுரை மாகாணத்த்தை சுல்தானான் ஏர்வாடி இப்ராஹிம்   

 

சில மாதங்களுக்கு பிறகு  அடிபட்ட வேங்கையாக சென்ற பாண்டிய மன்னன் 

 

விஜயநகர பேராசரின் துணையோடு மறுபடியும் மதுரை வந்து 

 

சிக்கந்தர் ஷா மீது போர் தொடுத்து வெற்றி பெற்று ஆட்சியில் மீண்டும் அமர்ந்தார் 

 

போரில் தப்பித்து ஓடிய சிக்கந்தர் ஷா திரும்பரம்ருன்றம் மலை மீது பதங்கியிருந்தார் .

 

பல நாட்கள் தேடலுக்கு பின் சிக்கந்தர் ஷா திருப்பரங்குன்றம் மலையில் இருப்பதை அறிந்து பிடிக்க சென்ற போது நடந்த சண்டையில் சிக்கந்தர் ஷா மரணமடைந்துள்ளார் 

 

அவர் உடல் அங்கேயே புதைக்கப்பட்டு பின்னாட்களில் அது தர்காவாக மாறியது 

 

அவே தற்போது திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் சிக்கந்தர் தகவின் வரலாறு 

திருப்பரங்குன்றம் தர்கா , மதுரை sulthanate , சிக்கந்தர் சாது ஷா என்று கூகுளை இணை தலத்தில் தேடினால் இந்த சித்திகள் அனைத்தும் கிடைக்கும்.

 

இதில் ஒரு குறையும் இல்லை , நம்மை அடிமைப்படுத்தியவர் என்றாலும் கூட சிக்கந்தர்ஷாவின் மரணத்திற்கு பின் அவர் உயர்வாகவே பார்க்கப்பட்டார் 

 

அதனால் தான் பழமைவாய்ந்த முருகன் மலை மீது அவரது தர்கா அமைந்ததியார்க்கு 

 

எந்த ஹிந்து பக்தர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை 

 

மேலும் அந்த தர்காவிற்கு வழிபாடு செய்ய செல்லும் எந்த இஸ்லாமியர்களையும் 

 

ஹிந்து பக்கதர்கள் தடுத்து நிறுத்தவில்லை.  

 

காரணம் துறவிகளையும் தெய்வமாக வழிபாடும் மரபு நம்முடையது.

 

இஸ்லாமியர்கள் அவரை துறவியாக பார்க்கிறார்கள் அவரிடம் வேண்டிக்கொண்டால் இசுமாமியாகலரின் பிராத்தனை நிறைவேறுகிறது 

 

என்பதாள் தர்காவை ஹிந்து பக்தர்களால்  உயர்வாகவே பார்க்கப்பட்டு வந்தது 

 

இன்றைக்கும் கூட மதுரையில் இருக்கும் பல பள்ளி வசல்களில் ஹிந்து குழந்தைகள் மந்திரித்து தாயத்து வாங்கி கட்டிக்கொள்கின்றனர்.

 

ஆனால் இங்கே ஹிந்து மக்கள் திருப்பரங்குன்றம் மலை மீதிருக்கும் தர்காவை புனிதமாக பார்க்கும் பொது 

 

இஸ்மாலெயர்கள் முருகன் மலை மீது ஆடு வெட்டி பலி கொடுப்பேன்  என்பது கிளம்புவது தான்  இந்து முழு பிரச்சனிக்கும் காரணம்.

 

மதுரையில் இருக்கும்  கோவில்களுக்கு எல்லாம் தலைமை கோவிலாக விளங்கும் மீனாக்ஷி அம்மன் கோவில் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ  

 

அதற்கு கொஞ்ச கூட குறையாத சிறப்புகளை கொண்டது 

 

அதே மதுரையில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

 

மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு வரும் அதனை பக்தர்களும் தவறாமல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் செல்வார்கள் 

 

இது தான் மதுரை மக்களின் மரபு.

 

அதே போலெ திருப்பரங்குன்றம் மலையின் வயதை கணக்கிட முடியாது

 

காரணம் முருக அவதாரத்திற்கு முன்பிருந்தே அம்மலை அங்கே இருக்கிறது

 

இதற்கான சான்று  கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது 

 

அப்படியிருக்கும் பொது பெரும் 14 நூற்றாண்டின் வாழ்ந்தவரின் தர்கா அங்கே இருப்பதால் அது எங்களுக்கு தான் சொந்தம் நாங்கள் ஆடுகள் மாடு பாலி கொடுப்போம் 

 

என்று திருப்பரங்குன்றத்தின் புனிதஹே கெடுக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம் 

 

மேலும் தமிழ் கடவுளாம் முருக பெருமானுக்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் 

 

முருகனுக்கு திருமணம் நடந்த இடம் இந்த திருப்பரங்குன்றம் 

 

அதே திருமணக்கோலத்தில் தான் கீழே முருகன் தெய்வானையோடு வீற்றிருக்கிறார் 

 

அவரின் தலைக்கு மேல் அவரின் வாகனமான ஆட்டை பலிகொடுப்பேன் 

 

என்பதெல்லாம் யாராலேயும் ஏற்றுக்கொள்ளவே முடியாது ஒரு அக்கிரமம் 



இதனை விட மற்றொரு அடக்குமுறையும் அங்கே நிகழ்த்தப்படுகிறது 

 

முருகனையும் கார்த்திகை தீபத்தையும் பிரிக்கமுடியுமா , 

 

திருவண்ணாமலை மகாதீபம் போலவே திருப்பரங்குன்றத்தில் மகாதீபம் ஏற்றப்படுகிறது 

 

ஆனால் அது முழுமையானது அல்ல 

 

ஆதி தொட்டே 

 

கார்த்திகை தீப நன்னாளில் மலை உச்சியில் இருக்கும் காசி விஸ்வநாத கோவில் தீப தூணிலும் மகா தீபம் ஏற்றப்பட்டு வந்துள்ளது 

 

ஆனால் 1967 முதல் அங்கே தீபம் ஏற்றப்படுவதில்லை 

 

மாறாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே மட்டுமே தீபம் ஏற்ற அனுமதி உண்டு 

 

காரணம் இடையில் அமைதகிருக்கும்  சிக்கந்தர் தர்கா 

 

மலைக்கு  மேலே தீபம் ஏற்றினால் இஸ்லாமியர்கள் கோவில் அவமதிக்கப்படுவைத்து போல இருக்கும் என்பதால் 

 

உச்சி பிள்ளையார் கோவில் அருகே மட்டும் தீபம் ஏற்றப்படுகிறது 



ஆறு திருப்பதியில்‌ வளர்‌ பெருமானே? என்று அருணகிரிநாதரும்‌

 

உள்ளமுவந்து ஆறு திருப்பதிகண்‌டு ஆறெழுத்தும்‌ அன்பினுடன்‌

கூறுமவர்‌ சிந்தைகுடி கொண்டோனே

 

என்று குமரகுருபரரும்‌ 

 

 “பரங்குன்றில் பன்னிருகைக் கோமான்

தன் பாதம் கரம்கூப்பி கண்குளிரக்கண்டு – 

சுருங்காமல் ஆசையால் நெஞ்சே! 

அணிமுருகு ஆற்றுப்படையைப்  பூசையாக் கொண்டே புகல்.”

நக்கீரர் பெருமானும் போற்றி பாடிய 

நம் திருப்பரங்குன்றத்திக்கு தான்  இந்த  நிலைமை 



அவரவர்களுக்கு அவரவரே நம்பிக்கையும் வழிபாடுகளும் முக்கியம் 

 

அதற்காக  அடுத்த மதத்தை கீழ்மைப்படுத்தி தன் மதத்தை உயர்த்த நினைப்பதற்கு பெயர் பகுத்தறிவு அல்ல அறியாமை 

 

இதற்கு துணை போகிறவர்கள் மதச்சார்பற்றவர்கள் அல்ல மதவாதிகள் 






சூரபத்மன் வத்திற்கும் முந்தைய வரலாறு இது 

 

ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் நடந்த போட்டியில் ஆதிசேஷன் பிடிக்கயில் இருந்த மேரு மலையயை 

 

தன் வலிமையால் வாயு மோதிய போது மேரு மலையின் பாகங்கள் பல இடங்களில் பொய் விழுந்தன 

 

அப்படி வந்து ஒரு பாகம் தான் தற்போதைய திருப்பரங்குன்றம் மலை 

 

300 அடி உயரமுள்ள இம்மலை லிங்க வடிவில் இருந்ததால் மக்கள் அதனை சிவபெருமான காவே கருதி வழிபட்டு வந்தனர்.

 

அதனால் தான் இது பரண் குன்றம் அதாவது சிவன் மலை என்று அழைக்கப்பட்டு பின்னர் திருப்பரப்பிக்குன்றம் என்றானது 

 

அப்போது முருகன் அவதாரம் நிகழவில்லை பின்னர் 

 

மஹிஷாசுரன் என்ற அரக்கனை துர்கை வடிவம் எடுத்து அன்னை  பார்வதி வதம் செய்தது நாம் அறிந்ததே.

 

கொல்லப்பட்டவர் அரக்கன் என்றாலும் கொன்றவர் தெய்வம் என்றாலும் கூட இந்த தோஷம் அவர்களை பிடித்து கொள்ளும்.

 

இதனை அறிந்த துர்கை இதில் இருந்து விடுபட சிவ பெருமானிடம் ஆலோசனை கேட்டார் 

 

அதற்கு சிவபெருமான் , தான் லிங்க வடிவத்தில் மலையாக அமர்ந்திருக்கும் திருற்பங்குன்றத்துக்கு சென்று தவம் இயற்றுமாறும் 

 

தவத்தின் பயனால் வதத்தின் கர்மவினை அகலும் பொது தான் காட்சிகொடுப்பதாக கூற 

 

அன்னை துர்கை , தற்போதய திருப்பரங்குன்றம் மலைக்கு வந்து கிரிவலம் மேற்கொண்டு 

 

அடிவாரத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவத்தில் மூழ்கினார்.

 

சிவபெருமான் கூறியது போலவே தவத்தின் பயனால் அன்னையின் கர்மவினைகள் கரைத்தும் அவருக்கு காட்சி கொடுக்க 

 

துர்கையின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.

 

துர்கை அம்மன் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை திருப்பரங்குன்றம் கருவறையில் இன்றைக்கும் நாம் தரிசிக்கலாம் 

 

இதற்கு  இவருக்கு தேவி லிங்கம் என்று பெயர்

 

மேலும் துர்க்கை அம்மனுக்கு சிவன் விமோசனம் தந்த போது சோமஸ்கந்தராக காட்சி தந்தாராம் 

 

அதாவது சிவன் பார்வதி இருவருக்கும் இடையில் முருகன் அமர்ந்திருக்கும் கோலம் 

 

அதன் அடிப்படையில் இங்கே கருவறையில் சிவலிங்கத்திற்கு பின்புறம் சிவன் பார்வதி மற்றும் முருகனுடன் சோமஸ்கந்தர் ஆகவே காட்சியளிக்கிறார்.

 

இனி 

 

இப்படி ஒரு சிவத்தலமாக விளங்கிய இந்த பரங்குன்றம் எப்படி முருகன் ஆறுபடை வீடுகளில் ஒன்றானது என்ற வரலாற்றை பார்க்கலாம்  

 

அன்னை பார்வதிக்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்து கொண்டிருந்தபோது 

 

அன்னையின் மடியில் அமர்ந்து முருகனும் அதை கேட்டுக் கொண்டு இருந்தார் 

 

ஒரு குருவிடமிருந்து சரியான முறையில் மந்திர உபதேசம் பெறாமல் , இப்படி தனது  தந்தை தன் தாய்க்கு கூறிய மந்திரத்தை 

 

கேட்டதால் அது தவறு என்று உணர்ந்த  முருகன் சிவனிடம் வழி  கேட்க 

 

துர்கை தவம் இருந்து சாப விமோசனம் பெற்ற இடமான திருப்பரங்குன்றத்துக்கு சென்று தவம் இருக்கும் படியும்  

 

ஒரு குறிப்பிட்ட நாள் தான் கட்சி கொடுபதாக கூற முருகனும் 

 

கயிலையில் இருந்து புறப்பட்டு திருப்பங்குன்றத்தில் அடைந்தார்



இங்கே ஒரு குறிப்பிட்ட காலம் அவர் தவத்தில் இருந்தபோது  ஒரு தைப்பூச தினத்தன்று சிவபெருமான் பார்வதி அன்னையுடன் முருகனுக்கு காட்சி கொடுத்தார்.

 

முருகப்பெருமானுக்கு சிவன்  தைப்பூசத்தன்று காட்சி கொடுத்த காரணத்தால் 

 

இன்றைக்கும் திருப்பரங்குன்றத்தில் தைப்பூசம்  வெகு விமரிசையாக கொண்டாடப்படுது.

 

முருகனுக்கு காட்சி கொடுத்து சிவபெருமான் திருபரங்குன்றம் சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அமர்ந்து இருக்கிறார்..

 

திருப்பரங்குன்றம் செல்பவர்கள் முதலில் ஆதிசொக்கநாதரை வணங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

 

இது நடந்தது முருகன்  சிறுவனாக சமயத்தில் , 

 

முருகன் குமாரனாக வளர்ந்து சூரபத்மனை திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்வதற்கு முன்னர் தன படைகளோடு தங்கிய இடமும் இதே திருப்பரங்குன்றம் தான் ,

 

பின்னர் சூரனை திருச்செந்தூரி வதம் செய்து தெய்வானையை திருமணம் முடித்து இந்த திருப்பரங்குன்றத்தில்

 

பின்னர் இது. ஆறுபடை வீடுகளில் ஒன்றாக ஆனதை பார்க்கலாம்

 

சிவபக்தரான நக்கீரர், 

 

சிவனை எதிர்த்து வாதம் செய்த பாவம் நீங்க, 

 

திருப்பரங்குன்றத்தின் உச்சயில் தவம் இருந்தார்.

 

அப்போது 

 

ஒரு பிரம்ம ராட்சச அவரை சிறைபிடித்து ஒரு குகையில் அடைத்தது. 

 

அதனிடம் இருந்து தன்னை காப்பற்றும்படி முருக பெருமானை நினைத்து திருமுருகாற்றுப்படை பாடல்களை பாடினார் நக்கீரர். 

 

உடனே முருகன் அவருக்கு காட்சி தந்த பிரம்ம ராட்சசை சம்ஹாரம் செய்து, நக்கீரரை மீட்டார்.

 

அப்போது நக்கீரர் முருகனிடம்

 

தன் தவம் பாதியில் கலைந்ததால், அந்த பாவத்தை போக்க ஒரு தீர்த்தத்தில் நீராட வேண்டும் என்றுகூற 

 

உடனே முருகன் தன் வேலை பாறையில் ஊன்றி ஒரு நீர் ஊற்றை உருவாக்கினார். 

 

நக்கீரரும் அதில் நீராடி தன் பாவம் நீங்கப்பெற்றார். 

 

அதுவே மலை உச்சியில் இருக்கும் காசி தீர்த்தம். 

 

இங்கே நக்கீரருக்கும் சன்னிதி உள்ளது. 

 

நக்கீரர் அடைக்கப்பட்டு இருந்த பஞ்சாட்சர குகை சரவணப்பொய்கைக்கு  அருகில் உள்ளது .

 

இந்த காசி தீர்த்தை மச்சமுனி தீர்த்தம் என்றும் மக்கள் அழைக்கின்றனர். 

 

அதே போல சித்தர் மச்சமுனியும் இந்த மலை உச்சியில் தான் ஜீவசமாதி அடைந்துள்ளதாகவும், சில செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது  

 

பழனியில் முருகனுக்கு அபிஷேகம் தான் சிறப்பு, 

 

ஆனால் திருப்பரங்குன்றம் முருகன் 

 

குடைவறைக் கோயிலில் இருப்பதால், அவருக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது 

 

புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று

 

இந்த வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். 

 

அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. 

 

சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததால், 

 

வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

 

இது தான் திருப்பரங்குன்றத்தின் சுருக்கமான வரலாறு 

 

இனி இந்த சிக்கந்தர் தர்கா மலையில் எப்படி வந்தது. என்று பார்ப்போம்.






இந்த தர்காவில் தான் ஆடு வெட்ட கிளம்பியுள்ளார்கள் 

 

இதனை நூற்றாண்டுகளாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத நிலையில் 

 

திடீரெனெ திருப்பரங்குன்றம் மலை எங்களுக்கு சொந்தம் 

 

அதின் மேல் ஆடு வெட்டி பலிகொடுப்போம் என்பது எவ்விதத்தில் நியாயம் 





திரு அண்ணாமலையார் வீற்றிருக்கும் திருவண்ணாமலை எப்படி மழையே லிங்கவடிவமாக வணங்கப்பட்டு 

 

பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கானோர் கிரிவலம் செல்கிறார்களோ 

 

அதனை போலவே திருப்பரங்குன்றம் மழையும் லிங்கவடிவமாகவே பார்க்கப்பட்டு இங்கும் 

 

பௌர்ணமிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்கின்றனர் 

 

இந்த மலையின் மேலும் கிழம் மிக மிக பழமையான ஹந்து கோவில்கள் உள்ளது.

 

இப்படி இருக்கும் போது  மலையின் மீது ஆட்டை வெட்டி உயிர்பலி கெடுக்க போகிறோம் அனுமதிக்கவில்லையென்றால் 

 

கந்தர்  மலையை சிக்கந்தர் மலையை என்று அறிவிப்போம் என்று 

 

யாருடைய தூண்டுதலின் பேரில் இப்படி நடந்து கொள்கிறார்கள் .

Adiguru

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

🧘 Siddhas & Yogis

Sri Seshadri Swamigal- ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

தமிழில் வாசிக்க கீழே செல்லவும்  Sri Seshadri Swamigal – The Saint Once Called Mad, Later Revered by the World Was He
🧘 Siddhas & Yogis

We believe Apple Will announce iPhone.

பகவான் ரமணர் அற்புதங்கள்!   மகான்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ,    தனக்கென வரையறைகள் வகுத்து கொண்டு ஒரு குறுகிய வட்டத்தில் வாழாமல்    ஒரு மனிதனின்