அண்ணாமலையார் கோயிலின் மறைந்திருக்கும் மர்ம சந்நிதிகள்!
அண்ணாமலையார் கோயிலின் மறைந்திருக்கும் மர்ம சந்நிதிகள்!
திருவண்ணாமலை யாத்திரையை முழுமையாக்கும் அபூர்வ தரிசனங்கள்
திருவண்ணாமலைக்கு வருடம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் போறாங்க. கிரிவலம் செய்றாங்க. அஷ்டலிங்கங்களை தரிசிக்கிறாங்க. அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் வணங்குறாங்க. அப்புறம்… யாத்திரை முடிஞ்சுடுச்சுன்னு நினைச்சு திரும்பிப் போயிடுறாங்க.
ஆனா… திருவண்ணாமலை கோயிலுக்குள்ள மறைந்திருக்கும் சில சந்நிதிகளை தரிசிக்காம திரும்பிப் போயிட்டா… அந்த யாத்திரை உண்மையிலேயே முழுமை பெறாதுன்னு ஆன்மிகப் பெரியவர்கள் சொல்றாங்க.
ரமண மகரிஷியை மௌனத்துல மூழ்கடிச்ச அந்த இருண்ட பாதாள இடம் எது?ஒரு அரசனை கனவுல மிரட்டி மாற்றிய விநாயகர் யார்?ஒரு தூண்ல இருந்து நேரடியா தோன்றிய முருகப்பெருமான் எந்த சந்நிதியில இன்னைக்கும் அருள்பாலிச்சிட்டு இருக்கார்?ஏன் ஒரு குறிப்பிட்ட இடத்துல நின்னா ஒன்பது கோபுரங்களும் ஒரே நேரத்துல தெரியுது?
மேலும்…
திருவண்ணாமலை கோயிலுக்குள்ள இருக்குற ஒரு சின்ன மண்டபத்துல உட்கார்ந்தா, அருணாசல மலையோட மனசு ஒன்றிடும்னு ஏன் சொல்றாங்க? இன்னைக்கு… பெரும்பாலான பக்தர்கள் கவனிக்காம கடந்து போற அந்த அபூர்வ சந்நிதிகளை நாம தேடிப் போகப் போறோம்.
இந்தப் பயணத்தோட முடிவுல… திருவண்ணாமலை பற்றி நீங்க இதுவரைக்கும் தெரியாத ஒரு புதிய பரிமாணத்தை பார்க்கப் போறீங்க.
திருவண்ணாமலை.வெறும் கோயில் இல்ல.வெறும் மலை இல்ல.இது ஒரு உயிருள்ள ஆன்மிக சக்தி.அதனால்தான் ஆயிரக்கணக்கான சித்தர்கள், யோகிகள், ஞானிகள் இந்த மலையைத் தேடி வந்தாங்க.
ஆனா அவங்க எல்லாரும் அண்ணாமலையாரை மட்டும் தரிசிச்சுட்டு திரும்பல.கோயிலோட ஒவ்வொரு மூலையிலும் மறைந்திருக்கும் சக்தி மையங்களைத் தேடிப் போனாங்க.அதுல முதல்ல நாம போகப் போற இடம்…சர்வசித்தி விநாயகர் சந்நிதி.
சிவகங்கை தீர்த்தத்தோட வடமேற்குக் கரையில அமைஞ்சிருக்குற இந்த அமைதியான சந்நிதியை நிறைய பேர் கவனிக்காம கடந்து போயிடுறாங்க.ஆனா பெயரே அதோட மகிமையை சொல்லிடுது.சர்வசித்தி.
அதாவது…அனைத்து வெற்றிகளையும் அருள்பவர்.பெரிய யாகங்கள் இல்ல.சிக்கலான பூஜைகள் இல்ல.எளிய மனசோட வேண்டினா போதும்னு பக்தர்கள் நம்புறாங்க.
நாம தொடங்குற காரியங்கள் வெற்றி பெறணும்.தடைகள் விலகணும்.முடியாதுன்னு தோணுற விஷயங்கள் நடக்கணும்.அப்படிப்பட்ட வேண்டுதல்களோடதான் இங்க மக்கள் வர்றாங்க.
ஆனா…இதுதான் இந்தக் videovoda மிகவும் ஆச்சரியமான பகுதி இல்ல.இந்த விநாயகர் சந்நிதிக்கு பக்கத்துலயே…ஒரு தூண்ல இருந்து தோன்றிய முருகனோட மர்மம் aduthu காத்துக்கிட்டு இருக்கு.
இன்னைக்கு நாம பார்க்குற கம்பத்து இளையனார் சந்நிதி…ஒரு அற்புத நிகழ்வோட நினைவுச் சின்னம்.பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி…அருணகிரிநாதர் வாழ்ந்த காலம்.அவரோட பக்தியும் புகழும் நாளுக்கு நாள் உயர்ந்துகிட்டே இருந்தது.
ஆனா…புகழ் வளரும்போது பொறாமையும் வளருது.அரசவையில இருந்த சம்பந்தாண்டான் என்ற புலவர்…அருணகிரிநாதரை வெறுத்தார்.அவரை அவமானப்படுத்தணும்னு முடிவு பண்ணினார்.
அரசர்கிட்ட போயி…”உண்மையிலேயே முருகனோட அருள் இருந்தா, அவரை நேர்ல வரவழைக்கச் சொல்லுங்க”ன்னு தூண்டிவிட்டார்.இது சாதாரண சவால் இல்ல.தோற்றா அவமானம்.வென்றா அதிசயம்.
அருணகிரிநாதர் அமைதியா முருகனை வேண்டினார்.அவரோட குரல்ல பக்தி இருந்தது.இதயத்துல முழு சரணாகதி இருந்தது.
அடுத்த கணம்…யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்தது.மயில்மேல ஆடிக்கிட்டே ஆறுமுகன் தோன்றினார்.எங்க தெரியுமா?ஒரு கம்பத்துல.ஒரு சாதாரண தூண்…தெய்வீக தரிசனத்தோட வாயிலா மாறிப்போச்சு.
அந்த நிகழ்வு நடந்த இடம்தான் இன்னைக்கு கம்பத்து இளையனார் சந்நிதி.இந்த சந்நிதியில நின்னா…ஒரு உணர்வு மனசுல எழுது.ஆபத்து நேரத்துல உண்மையா அழைச்சா…முருகன் ஓடிவருவாரா?அந்தக் கேள்விக்கான பதிலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களோட வாழ்க்கையில அனுபவிச்சிருக்கோம்னு சொல்றாங்க.
ஆனா…அருணகிரிநாதரோட வாழ்க்கையில இன்னும் பெரிய திருப்பம் ஒண்ணு நடந்தது.அது கோபுரத்தோட உச்சியில…மரணத்தோட விளிம்புல.
வல்லாள மகாராஜன் கோபுரம். இன்னைக்கு ஆயிரக்கணக்கானோர் athukku கீழ நடந்து போறாங்க.ஆனா ஒரு காலத்துல…அந்த கோபுரத்க்கு மேல ஒரு மனிதர் நின்னுகிட்டு இருந்தார்.அவர் அருணகிரிநாதர்.
சில கதைகள் அவர் வாழ்க்கையில ஆழ்ந்த வேதனை இருந்ததுன்னு சொல்றது.சிலர் அவர் தியானத்துக்காக மேல போனார்னு சொல்றாங்க.எது உண்மையோ…ஒரு விஷயம் மட்டும் உறுதி.
அந்த தருணம் அவரோட வாழ்க்கையை மாற்றிச்சு. வாழ்க்கையின் விரக்தியில் கோபுரத்துக்கு மேலே இருந்து ..குதிக்க முயற்சி பண்ணிய அந்த நொடில…முருகப்பெருமான் காட்சி தந்தார்னு கோவில் தல வரலாறு சொல்லுது
.மயில்வாகனத்துல வந்த அந்த தரிசனம்…ஒரு உயிரை மட்டும் காப்பாத்தல.தமிழ் உலகத்துக்கே திருப்புகழை கொடுத்தது.அந்த இடத்தில்தான் இன்னைக்கு கோபுரத்து இளையனார் அருள்பாலிச்சிட்டு இருக்கார்.
இந்த சந்நிதியில நின்னுக்கிட்டு இருக்கும்போது…ஒரு உண்மை மனசை உலுக்குது.ஒரே ஒரு நொடி நம்பிக்கையோடு இருந்தா…வாழ்க்கையே மாறிடும்.
ஆனா…அண்ணாமலை இன்னும் ஆழமான ஒரு ரகசியத்தை மறைச்சு வைச்சிருக்கு.அது பூமிக்கு கீழ.இருளுக்குள்ள.மௌனத்துக்குள்ள.
ஆயிரங்கால் மண்டபத்தை கடந்தா…ஒரு படிக்கட்டு கீழே இறங்குது.அங்க வெளிச்சம் குறையுது.சத்தங்கள் மங்கிடுது.மனம் தானாவே அமைதியடையுது.அதுதான் பாதாள லிங்கம்.இது வெறும் சந்நிதி இல்ல.இது ஒரு ஆன்மிக காந்தம்.
இங்கதான் இளம் வயசுல ரமண மகரிஷி ஆழ்ந்த சமாதியில அமர்ந்தார்.உலகத்தை மறந்தார்.உடலை மறந்தார்.காலத்தை மறந்தார்.
சேஷாத்ரி சுவாமிகளும் இந்த இடத்தோட தெய்வீக அதிர்வை உணர்ந்தவர்கள்ல ஒருத்தர்.பாதாள லிங்கத்தோட முன் நின்னா…ஏதோ சொல்ல முடியாத அமைதி மனசை ஆட்கொள்கிறது.பேசணும்னு தோணாது.வெறுமனே இருக்கணும்னுதான் தோணும்.அதுதான் அந்த இடத்தோட சக்தி.
ஆனா…திருவண்ணாமலையில அமைதி மட்டும் இல்ல.எச்சரிக்குற தெய்வமும் இருக்கு.ஒரு அரசனோட வாழ்க்கையை மாற்றிய தெய்வம்.
கிளிக்கோபுரத்துக்கு பக்கத்துல இருக்குற யானை திறை கொண்ட விநாயகர்.இந்தப் பெயரே கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.அதுக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கு.
ஒரு காலத்துல…கொடுங்கோல் மன்னன் ஒருத்தர் மக்களை துன்புறுத்தினார்னு சொல்லப்படுது.மக்கள் அழுதாங்க.பிரார்த்தனை பண்ணினாங்க.நீதிக்காக காத்திருந்தாங்க.
அப்போ…விநாயகர் மன்னனோட கனவுல தோன்றினார்.வெறுமனே தோன்றல.மிரட்டினார்.எச்சரித்தார்.அதிர்ச்சியில விழித்த மன்னன்…மறுநாளே சந்நிதிக்கு ஓடிவந்தான்.தன்னோட தவறுகளை ஒப்புக்கிட்டான்.யானைகளை காணிக்கையா கொடுத்தான்.
அதனால்தான்…யானை திறை கொண்ட விநாயகர்.இந்தக் கதை உண்மையா?புராணமா?என்பதைவிட…அதோட செய்திதான் முக்கியம்.அதிகாரம் இருந்தாலும்…அகங்காரம் நீடிக்காது.
ஆனா…இதுக்குப் பின்னாடி இன்னொரு மர்மம் இருந்தது.அகங்காரத்தை உடைக்குற இன்னொரு தெய்வம்.கால பைரவர்.
பிரம்ம தீர்த்தத்தோட கரையில…எட்டுக் கரங்களோட கம்பீரமா நிற்கிறார் கால பைரவர்.அவரோட பார்வை…நேரா உள்ளத்தைத் துளைக்குற மாதிரி தோணுது.
.பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தன புராணம் சொல்லுது.அந்தப் பெருமை…அகங்காரமா மாறிடுச்சு.அப்போ சிவனோட உக்கிர அம்சமா பைரவர் வெளிப்பட்டார்.அகங்காரத்தோட ஒரு தலையை அகற்றினார்.
அந்தக் கதையோட உண்மை எதுவா இருந்தாலும்…அதோட ஆன்மிக அர்த்தம் தெளிவா இருக்கு.மனிதனை வீழ்த்துறது எதிரிகள் இல்ல.அவனோட அகங்காரம்தான்.அதனால்தான் தேய்பிறை அஷ்டமி நாட்கள்ல ஆயிரக்கணக்கானோர் இங்க வர்றாங்க.
கஷ்டங்கள் நீங்கணும்.பயம் விலகணும்.வாழ்க்கையில தெளிவு கிடைக்கணும்.அப்படின்னு வேண்டிக்கிறாங்க.
ஆனா…திருவண்ணாமலையோட பயணம் இன்னும் முடியல.இன்னும் சில மறைந்திருக்கும் அரிய சந்நிதிகள் காத்துக்கிட்டு இருக்கு.
பிச்சை இளையனார் சந்நிதி:திருவண்ணாமலை கோயிலோட மூன்றாவது இளையனார் சந்நிதியான பிச்சை இளையனார், கிளிக்கோபுரத்தோட வடப்புறத்துல அமைஞ்சிருக்கார்.வள்ளி – தெய்வானையோட அருள்பாலிக்குற பிச்சை இளையனாரை தரிசிச்சா, சகல நன்மைகளும் கிடைக்கும்னு பக்தர்கள் நம்புறாங்க. 🙏🏻
காளத்தீஸ்வரர் சந்நிதி:
அண்ணாமலை அக்னி க்ஷேத்திரமா இருந்தாலும், இங்க வாயு தலத்தோட இறைவனான காளத்தீஸ்வரரையும் தரிசிக்கலாம்.வசந்த மண்டபத்துக்கு மேற்குப் பக்கத்துல இருக்குற இந்த சந்நிதி, ஒரே தலத்துல அக்னி மற்றும் வாயு தத்துவ சக்திகளை தரிசிக்கிற அபூர்வமான வாய்ப்பை கொடுக்குது.
பிடாரியம்மன் சந்நிதி:
வசந்த மண்டபத்துக்கு கிழக்குப் பக்கத்துல, வடக்குநோக்கி அருள்பாலிச்சிட்டு இருக்குற எல்லைப் பிடாரியம்மன் சந்நிதி இருக்கு.சப்தமாதர்கள், நிசும்பசூதனி, ரேணுகாம்பாள் ஆகியோரும் இங்க அருள்பாலிச்சிட்டு இருக்காங்க.இந்த அம்மனை தரிசிச்சா, தீவினைகள் நீங்கி மங்களமான வாழ்க்கை கிடைக்கும்னு பக்தர்கள் நம்புறாங்க.
சம்பந்த விநாயகர்:
கொடிமரத்துக்கு பக்கத்துல அமைஞ்சிருக்குற சம்பந்த விநாயகரோட திருமேனி சிவப்பு நிறத்துல காட்சியளிக்குது.அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் பூஜை நடக்குறதுக்கு முன்னாடி, முதல்ல இவருக்குத்தான் பூஜை நடக்குது.அதுதான் இந்த சந்நிதியோட சிறப்பு. 🙏🏻
மூன்றாம் பிராகாரத்துல இருக்குற மகிழ மரம்.பிள்ளை வரம் வேண்டி வர்ற தம்பதிகளோட நம்பிக்கையின் மரம்.அதுல தொட்டில் கட்டுற பழக்கம் இன்னைக்கும் தொடருது.
ஆனா…அதோட பக்கத்துல ஒரு ரகசியமான இடம் இருக்கு.நிறைய பேருக்கு தெரியாத இடம். சரியான இடத்துல நின்னு பார்த்தா…கோயிலோட ஒன்பது கோபுரங்களையும் தரிசிக்கலாம்
ஒரே பார்வையில ஒன்பது கோபுரங்கள்.ஒரே தரிசனத்துல ஒன்பது ஆசீர்வாதங்கள்நம்பபடுத்து ஆனா…இந்த யாத்திரையோட இறுதி இடம் இன்னும் இருக்கு.அது யோகிகளோட அமைதியான உலகம்.
யோகேஸ்வரர் மண்டபம்.சின்ன மண்டபம்.எளிமையான தோற்றம்.ஆனா…ஆழமான அனுபவம்.
இங்க உட்கார்ந்தா…அருணாசல மலையோட உச்சி நேரா கண்கள்ல விழுது.காற்று மெதுவா வீசுது.கோயிலோட சத்தங்கள் தொலைவுல மறையுது.மனம் மெதுவா ஒருமுகமா மாறுது.
அண்ணாமலையார் இங்க யோகியா சூட்சுமமா இருக்குறார்னு ஐதீகம் .அதனால்தான்…நிறைய பேர் இங்க அமைதியா உட்கார்ந்து தியானம் பண்ணுறாங்க.எதையும் கேட்காம.எதையும் பேசாம.வெறுமனே இருப்பதற்காக.ஏன்னா சில நேரங்கள்ல…அருணாசலத்தோட அருகில் இருப்பதே மிகப்பெரிய பிரார்த்தனை.
திருவண்ணாமலை யாத்திரைங்கறது…ஒரு கோயிலைப் பார்த்துட்டு திரும்புற பயணம் இல்ல.அது ஒரு தேடல்.ஒரு உள் பயணம்.ஒரு விழிப்பு.
கம்பத்து இளையனார் நமக்கு நம்பிக்கையை நினைவூட்டுறார்.கோபுரத்து இளையனார்…ஒரே ஒரு நொடி அருள் கூட வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதைக் காட்டுறார்.பாதாள லிங்கம்…மௌனத்தோட சக்தியை உணர்த்துது.யானை திறை கொண்ட விநாயகர்…நீதியோட அவசியத்தை நினைவூட்டுறார்.கால பைரவர்…அகங்காரத்தோட ஆபத்தை எச்சரிக்குறார்.யோகேஸ்வரர் மண்டபம்…அமைதியோட வாசலைத் திறக்குது.
அதனால அடுத்த முறை நீங்க திருவண்ணாமலைக்கு போகும்போது…அண்ணாமலையாரை மட்டும் தரிசிச்சுட்டு திரும்பிடாதீங்க.
இந்த மறைந்திருக்கும் சந்நிதிகளையும் தேடிப் போங்க.ஏன்னா…சில நேரங்கள்ல…மக்கள் கவனிக்காம கடந்து போற சின்ன சந்நிதிகள்லதான்…மிகப்பெரிய ஆன்மிக அனுபவங்கள் மறைந்திருக்கும்.





