🧘 Siddhas & Yogis

அகோரி யார்

அந்த இடத்தின் பெயரை கேட்டாலே…
ஒரு பயம்…
ஒரு கனத்த உணர்வு…
ஒரு விளக்கம் தர முடியாத இறுக்கம்  நம்முள் மெதுவாக எழ ஆரம்பிக்கும்…

அங்கே காற்றே வேற மாதிரி வீசும்…
அங்கே அமைதி கூட ஒரு சத்தம் போல இருக்கும்…உயிரோடு இருப்பவர்கள்…
அங்கே யாரும் நீண்ட நேரம் நிற்க மாட்டார்கள்…

 ஏனெனில்—
அது வெறும் இடம் அல்ல…அது உண்மையின் உறைவிடம் அது தான்…
சுடுகாடு.

அங்கே…
ஒவ்வொரு நொடியும்…
ஒரு வாழ்க்கையின் முடிவு நடக்கிறது…

ஒரு குடும்பத்தின் நினைவுகள்…
ஒரு மனிதனின் ஆசைகள்…
ஒரு உடலின் பயணம்…எல்லாம்…
அங்கே தீயில் கரைந்து விடுகிறது…

நாம் வாழ்க்கை முழுக்க “என்னுடைய ” என்று பிடித்துக் கொண்ட அனைத்தும்…
அங்கே ஒரு சாம்பலாக மாறி விடுகிறது…

ஆனால்…

அதே இடத்தில்…
சிலர் தியானத்தில் இருக்கிறார்கள் 

அவர்களுக்கு எந்த பயமும் இல்லை 

எந்த தயக்கமும் இல்லை

மனிதர்கள் விலகி நிற்கும் இடத்தை…
அவர்கள் தங்கள் சாதனைக்கான இடமாக மாற்றியிருக்கிறார்கள்…

மரணம் பற்றிய பயம்…
அவர்களுக்கு கிடையாது…அசிங்கம் – அழகு என்ற பாகுபாடு இல்லை…
நல்லது – கெட்டது என்ற எல்லை இல்லை…

மொத்தத்தில்—
சராசரி மனிதன் வெறுக்கும் அனைத்தையும்…
அவர்கள் விருப்பத்துடன் அணுகுகிறார்கள்…

ஏன்…?

எதற்காக இந்த மாதிரி ஒரு வாழ்க்கை…?

எதற்காக இந்த அளவுக்கு தீவிரமான சாதனை…?

இது பைத்தியமா…?
அல்லது…
மனிதன் அடையக்கூடிய உச்ச சுதந்திரமா…?

 

இந்த மர்மமான வாழ்க்கை வாழும் மனிதர்கள் தான்…
அகோரிகள்.

 

அகோரிகள் பற்றி நாம் பல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்…

அதில் சில விஷயங்கள் உண்மை…
சில விஷயங்கள் மிகைப்படுத்தப்பட்டவை…
சில விஷயங்கள் முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டவை…

ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி—அகோரிகள் பாதை என்பது…சாதாரண மனிதன் புரிந்து கொள்ள முடியாத ஒரு பயணம்.

அகோரிகள் அதிகம் வசிக்கும் ஒரு இடம் தான் காசி காரணம் மரணத்தின் கதவுகள் எப்போதுமே திறந்திருக்கும் இடம் காசி 

ஒரு காலத்தில்…

 காசி
அது ஒரு நகரம் மட்டும் இல்லை…

அது…
ஒரு உயிருள்ள ஆன்மீக மையம் 

அங்கு வீதி வீதிக்கு…
ஞானம் பெற்றவர்கள் இருந்தார்கள்…நீங்கள் தேட வேண்டிய அவசியமே இல்லை நீங்கள் எந்த வழியில் நடந்தாலும்—ஒரு ஞானியின் அருகில் நீங்கள் சென்றுவிடுவீர்கள்…

இது மறைமுகமாக எத்தனை குறிக்கிறது தெரியுமா 

“ஞானம் என்பது தேடி செல்ல வேண்டிய ஒன்று அல்ல…
நீங்கள் தயார் ஆனவுடன்…
அது உங்களைத் தேடி வரும்…”

அதனால்தான் பலர்…

“இந்த வாழ்க்கையில் ஞானம் கிடைக்கவில்லை என்றாலும்…
குறைந்தது ஞானியர்கள் நடமாடிய அந்த நிலத்தில் உயிர் விட வேண்டும்…”

என்று காசியை நாடினார்கள்…

ஏனெனில்…
அங்கே மரணம்  ஒரு முடிவாக பார்க்க படவில்லை மாறாக அது மனிதனின் விடுதலை என்று பார்க்கப்படுகிறது.

 

அந்த மாதிரியான ஒரு இடத்தில் தான்…
அகோரிகள் தங்கள் சாதனையை தேர்வு செய்தார்கள்…

நீங்கள் கேட்கலாம்…

எத்தனையோ சக்திவாய்ந்த இடங்கள் இருக்கும் பொது “ஏன் சுடுகாடு…?”

சாதாரண மனிதனுக்கு…

சுடுகாடு என்றால்—
பயம்…
துக்கம்…
விலகி இருக்க வேண்டிய இடம்…

ஆனால் அகோரிக்குப் பார்த்தால்…

அது—
உண்மையின் மையம்.

ஒரு மனிதன் வாழ்ந்த வாழ்க்கையின்
இறுதி சத்தியம்…அங்கே தான் வெளிப்படுகிறது…

இதனை இன்னும் ஆழமாக பார்த்தல் 

ஓரூ மனித உடல் எரியும் போது…

அந்த உடலுக்குள் இருந்த பிராண சக்தி…

வெளியேறுகிறது…

நேரம் செல்ல செல்ல 

அது மிகவும் தீவிரமாக…
மிக அதிகமாக அங்கே வெளிப்படும்…

அந்த பிராண சக்தியை நம் சாதாரண கண்கள் பார்க்க முடியாது 

ஆனால்—ஒரு அகோரி அதனை பார்க்க முடியும் அதனை உணர முடியும்…

இறந்த உடலில் இருந்து வெளிப்படும் பிராண சக்தியை பயன்படுத்தி…

தன் ஆன்மீக வளர்ச்சியை
வேகப்படுத்துவது…

அகோரியின் முக்கியான  சாதனைகளில் ஒன்று.

ஆனால் இது 

இது எளிதான ஒன்றா நிச்சமயாக இல்லை.

இது மிகவும் தீவிரமான…
மிக ஆபத்தான…
மிக கடினமான பாதை.

இந்த பாதையை தேர்தெடுக்கவே ஒரு தைரியம் வேண்டும் 

இன்னொரு மிக முக்கியமான விஷயம்…

அகோரியின் வாழ்க்கையின் மையம்—

“விருப்பு – வெறுப்பு இல்லாமை.”

நாம் எல்லோரும்…

பிடித்ததைப் பிடித்து கொள்கிறோம்…
பிடிக்காததை தள்ளி விடுகிறோம்…

 

ஆனால்…

அதுவே ஆன்மீக பாதையில் ஒரு பெரிய சிறை.

நாம் பிடித்ததை மட்டும் தேர்வு செய்தால்—
நாம் கட்டுப்பட்டவராகவே இருப்போம் 

நாம் வெறுப்பதை விட்டு ஓடினால்—
அந்த வெறுப்பு நம்மளை விடாமல் துரத்தும் 

அதனால்…

அகோரிகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா…?

 

மனிதன் பொதுவாக வெறுக்கும் அனைத்தையும்…

அவர்கள் நேராக எதிர்கொள்கிறார்கள்…

மரணம்…
சடலம்…
அழுகை…
நிர்வாணம்     

இது எதை கண்டும் அவர்கள் ஓடவில்லை…

அவர்கள் தப்பிக்கவில்லை…

அனைத்தையும் அவர்கள் அதை எதிர்கொண்டார்கள்.

ஏன்…?

ஏனெனில்…

நாம் அதை எதிர்கொண்டால் தான் அதனை கடலை முடியும் 

அது ஒரு உளவியல் புரட்சி…
டிஹாற்கு அசாத்திய தன்னம்பிக்கை வைராக்கியம் தேவைப்படும்

 

அதனால் தான் அவர்கள் வாழ்க்கையில்…

அழகு – அசிங்கம் இல்லை…
நல்லது – கெட்டது இல்லை…
புனிதம் – அசுத்தம் இல்லை…

 

அவர்கள் பார்க்கும் உலகில்—

எல்லாமே ஒரே மாதிரி.

அந்த நிலை தான்…

சிவ நிலை அல்லது எல்லாம் சிவ மயம்

அந்த நிலையை அடைய தான்…அகோரிகள் முயற்சி செய்கிறார்கள்…

அவர்கள் பற்றிய இன்னொரு விஷயம்…

நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்…

“அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள்…”

உண்மை என்ன தெரியுமா…?

அதை எல்லா அகோரிகளை செய்வது இல்லை

சிலர் படும் பயன்படுத்துகிறார்கள் அதுவும் போதை சுகத்திற்காக அல்ல 

 

சில அகோரிகளுக்கு அவர்களின் உள்ளுள்ள சக்தி…

மிகவும் தீவிரமாக இருக்கும்…

அந்த சக்தியை உடல் தாங்க முடியாத அளவுக்கு இருக்கும்…

அதை சமநிலைப்படுத்த…

இதுபோன்ற சில வழிகளை  பயன்படுத்தப்பட்டிருக்கலாம்…

 

ஆனால்—

அதை நாமும் பின்பற்ற வேண்டும் என்று நினைத்தால்…

அது ஆன்மீகம் இல்லை…

அது— அடிமைத்தனம் .

ஏனெனில்…

அகோரி என்பது வெளியில் தெரியும் செயல்கள் அல்ல…

அது—ஒரு உள்ளார்ந்த நிலை.

உண்மையில் யார் அகோரி தெரியுமா 

ஒரு மனிதன்…

எதையும் பார்த்தாலும்…

அதற்கு பெயர் வைக்காமல்…

நல்லது – கெட்டது என்று தீர்ப்பு சொல்லாமல்…

அதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடிந்தால்…

அவன்—அகோரி.

அப்படிப்பட்ட நிலைக்கு வந்துவிட்டால் 

அவன் சுடுகாட்டில் இருக்க வேண்டிய அவசியமே இல்லை…

அவன் எங்கிருந்தாலும்…

அந்த நிலை இருந்தால் போதும்.

அதனால்…

அகோரிகளை பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை…

அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றவும் வேண்டாம்…

அவர்களின் பாதை…

மிக தீவிரமான பாதை…

ஆனால்…

அந்த பாதையை புரிந்து கொள்வதே…

ஒரு பெரிய விழிப்புணர்வு.

ஏனெனில்…

இறுதியில்—

வாழ்க்கை…
மரணம்…
அழகு…
அசிங்கம்…
இன்பம்…
துன்பம்…

இவை எல்லாம்…

நாம் கொடுத்த பெயர்கள் மட்டுமே…

உண்மையில்—

அனைத்தும் ஒன்றே.

அதை உணர்ந்தவனே…

உண்மையான சுதந்திரத்தை அடைகிறான்…



Adiguru

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

🧘 Siddhas & Yogis

Sri Seshadri Swamigal- ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

தமிழில் வாசிக்க கீழே செல்லவும்  Sri Seshadri Swamigal – The Saint Once Called Mad, Later Revered by the World Was He
🧘 Siddhas & Yogis

We believe Apple Will announce iPhone.

பகவான் ரமணர் அற்புதங்கள்!   மகான்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ,    தனக்கென வரையறைகள் வகுத்து கொண்டு ஒரு குறுகிய வட்டத்தில் வாழாமல்    ஒரு மனிதனின்