🛕 Temple History

யார் இந்த வாராஹி அம்மன்

எண்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றலாம் , ஆனால் அவை ஒவ்வொண்டிற்கும் ஒரு ரகசியம் உள்ளது. அதில் ஒரு எண்  மட்டும் நம் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது 

அந்த எண்ணுக்கும் ஒரு தெய்வத்திருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது 

யார் அந்த தெய்வம் 

அந்த என்னை பயன்படுத்தி அந்த தெய்வத்தை எப்படி அணுகுவது 

நம்முடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் எப்படி தீர்வை காண்பது இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த “ஏழு” என்ற எண்ணோடு தொடர்புடைய
மற்றொரு அதிசய வடிவம்…

ஏழு கன்னியர்கள்…
ஏழு அன்னையர்கள்…
சப்த மாதர்கள்…

ரிக் வேதம் முதல்…
மார்க்கண்டேய புராணம்…
தேவி பாகவதம் வரை…

இந்த தெய்வங்களின் மகிமை
விரிவாக கூறப்பட்டுள்ளது…

தாந்த்ரீக வழிபாட்டின்
முக்கிய சக்திகள் இவர்கள்…

கேட்டதை அளிப்பவர்கள் அல்ல…
அள்ளித் தருபவர்கள்…

ஒரு காலத்தில்…
தனி கோவில்கள்…
தனி வழிபாட்டு முறைகள்…

ஆனால்  இன்று…

சிலரால மட்டும் வழிபடப்படும்
மறக்கப்பட்ட தெய்வங்கள்…

கோவிலின் ஓரத்தில்…
சிதிலமடைந்த நிலையில்…

யாரும் கவனிக்காமல்…
அமர்ந்திருக்கும் அந்த அன்னையரை…

பலர்…
பார்க்காமலே கடந்து போகிறார்கள்

ஆனா…

இந்த ஏழு சக்திகளில்…
இரண்டு மட்டும்…

இன்னும் உயிரோடு…
இன்னும் சக்தியோடு…
இன்னும் செயல்படுகிறது…

சாமுண்டி…
மற்றும்…
வாராஹி…

இதில் சாமுண்டி கூட இன்னமும் தாந்த்ரீகத்தில் தான் வழிபட படுகிறார் 

ஆனால் வராகி குறிப்பாக குடும்பஸ்தர்களால் வழிபட படுகிறார் 

இவர்…
விஷ்ணுவின் வராஹ அவதாரத்தின்
ஆக்க சக்தி…

ஸ்ரீவித்யா பாரம்பரியத்தில்…
அவள்…ஆழ்ந்த அறிவின் உச்சம்…

அதாவது பார்க்க முடியாததை உணர வைக்கும்…
புரியாததை புரிய வைக்கும்…ஒரு பரம சக்தி…

தாந்த்ரீக மரபில்…அவளை வணங்குவது…பக்திக்காக மட்டும் இல்ல…பாதுகாப்புக்காகவும் கூட 

வாராஹி  ஒரு ராத்திரி தேவதை…

சூரியன் உதிப்பதற்கு முன்னும் மறைந்த பிறகுதான்…
அவரின்  சக்தி சிறப்பாக செயல்படும் 

அதனால்தான்…அவளை அந்த அந்த நேரங்களில் வணங்குவது சிறந்தது
அதனடிப்படையில் எந்த கிழமைகளில் என்ன பலன் தருவார் என்று தாந்த்ரீக மரபில் கூறப்பட்டுள்ளது 

இதன் அடிப்படியில் அவரை அணுகினால் நிச்சயம் பலன் உண்டு 

ஞாயிறு…
சூரியனின் நாள்…

உயிருக்கு ஆற்றலும்…
உடலுக்கு புத்துணர்ச்சியும் தரும் நாள்…

இந்த நாளில்…
வாராஹியை மனசார வணங்கினால்…

நோய் மெதுவாக குறையும்…
உடல் தன்னம்பிக்கையோடு திரும்பும்…

சூரிய ஒளி போல…
அவள் அருள்…

உங்களை
உள்ளிருந்து மெதுவாக எழுப்பும்…

திங்கள்…
நிலவின் நாள்…

மனதுக்கு அமைதியும்…
உள்ளத்துக்கு சமநிலையும் தரும் நாள்…

இந்த நாளில்…
வாராஹியை வணங்கினால்…

வீண் கவலைகள் குறையும்…
மனம் மெதுவாக தெளிவடையும்…

நிலவு போல…
அவள் அருள்…

உங்கள் மனதை
அமைதியாக்கும்…

செவ்வாய்…
சக்தியின் நாள்…

தடைகளை உடைக்கும்…
முன்னேற்றத்தை தள்ளும் நாள்…

இந்த நாளில்…
வாராஹியை வணங்கினால்…

நிலம்… வீடு…
வழக்கு பிரச்சனைகள்…

மெதுவாக சரியாக ஆரம்பிக்கும்…

அவள் சக்தி…
நின்றதை நகர்த்தும்…

புதன்…
சமநிலையின் நாள்…

வாழ்க்கையை சீராக நடத்தும் நாள்…

இந்த நாளில்…
வாராஹியை வணங்கினால்…

கடன் சுமை குறையும்…
வாழ்க்கை மெதுவாக லேசாகும்…

அவள் அருள்…
சுமையை பகிர்ந்து கொள்ளும்…

வியாழன்…
குருவின் நாள்…

அறிவும்… வளர்ச்சியும் தரும் நாள்…

இந்த நாளில்…
வாராஹியை வணங்கினால்…

குழந்தைப் பேறு கிடைக்கும்…
பிள்ளைகள் கல்வியில் முன்னேறும்…

அவள் அருள்…
வாழ்க்கையை உயர்த்தும்…

வெள்ளி…
செழிப்பின் நாள்…

அன்பும்… வளமும் தரும் நாள்…

இந்த நாளில்…
வாராஹியை வணங்கினால்…

மாங்கல்ய பலம் அதிகரிக்கும்…
வியாபாரம் வளர்ச்சி அடையும்…

அவள் அருள்…
வாழ்க்கையை வளமாக்கும்…

சனி…
கர்மத்தின் நாள்…

நியாயம் நிலைநிற்கும் நாள்…

இந்த நாளில்…
வாராஹியை வணங்கினால்…

பில்லி… சூன்யம்…
திருஷ்டி… எதிரிகள்…

அனைத்தும் விலகும்…

அவள்…
உங்களை காக்கத் தொடங்கினால்…

யாராலும்
உங்களை தொட முடியாது

பஞ்சமி திதி நாள்களில் ஆலயங்களில் சப்தமாதர்கள் சந்நிதியில் அருளும் ஶ்ரீவராஹிக்கு பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தேன் ஆகியவற்றைப் படைத்து வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம்.

வராஹி அம்மன் கோயில்கள்!

தஞ்சை- பெரியகோயிலில், தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறாள் ஶ்ரீவராஹி. இவளது அருள் பெற்றே ராஜராஜ சோழன் தனது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினான் என்கிறது வரலாறு.

திருவானைக்கா ஶ்ரீஜம்புகேஸ்வரர் கோயிலை சக்தி பீடங்களுள் ஒன்றாக- ஶ்ரீவராஹி பீடமாகப் போற்றுவர்.

காசி நகரில் ஶ்ரீவராஹிக்கு மிகப் பெரிய கோயில் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள், அதிகாலை – சூரிய உதயத்துக்கு முன்பாகவே (5:30 மணிக்குள்) ஶ்ரீவராஹியை தரிசித்து விட வேண்டுமாம்.

இங்கு, நள்ளிரவில் துவங்கி அதிகாலை 3 மணி வரை ஶ்ரீவராஹிக்கு அபிஷேக- ஆராதனைகளும் அலங்காரங்களும் சிறப்புற நடைபெறுகின்றன. அப்போது, ஶ்ரீவராஹிக்கு மூன்று வித ஆரத்திகள் எடுத்துப் பூஜிக்கின்றனர். இதை தரிசிப்பதால், பெரும்பேறு வாய்க்கும் என்பது ஐதீகம்.



Adiguru

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

🛕 Temple History

Thiruvanamalai Girivalam- திருவண்ணாமலை கிரிவலம்

தமிழில் படிக்க கீழே செல்லவும்..  Every month, whenever we read in the newspapers that lakhs of devotees visit  Tiruvannamalai to perform 
🛕 Temple History

பூம்பாறை முருகன்

ஆன்மீக தேடலில் உள்ளஅனைவர்க்கும்  ஆதிகுரு சேனல் சார்பாக என் பணிவான வணக்கங்கள்    கடந்த பதிவில்    எவ்வளவோ தெய்வ வடிவங்கள் இருக்க, போகர் ஏன் முருகப்பெருமானின்