🛕 Temple History

மதுரை பாண்டி முனி

மதுரை… சைவமும் வைணவமும் ஒன்றாக செழித்து விளங்கும் புனித மண்… 

மீனாட்சியும்… அழகரும்… இங்கு வாழும் மக்களின் உயிரோடு பின்னிப் பிணைந்த தெய்வங்கள்! 

ஆனால்… இதற்கும் மேல மதுரை மக்களிடம் ஒரு தனித்துவம் இருக்கிறது… 

இந்த மண்ணில் வாழும் மக்கள்… தங்களின் குலதெய்வத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்… 

கருப்பசாமி… முனீஸ்வரர்… இத்தெய்வங்கள் இவர்களுக்கு வெறும் தெய்வங்கள் அல்ல… தங்களின் குடும்ப உறுப்பினர்கள்! 

இப்படிப் தங்கள் மூதாதையரை தினமும் நினைத்து வணங்குறாங்களோ… அதேபோல… குலதெய்வத்தையும் வணங்குகிறார்கள்… 

சிக்கலான நேரம் வந்தால்… பெரும் தெய்வங்களை விட… குலதெய்வம் தான் இவர்களின் நினைவுக்கு வரும்… 

ஏனென்றால்… அந்த தெய்வம் ஒரு தாயைப் போல… கண் இமைக்காமல் தங்களின் குடும்பத்தை காத்துக்கொண்டிருக்கிறது என்பது இவர்களின் ஆழமான நம்பிக்கை… 

மதுரையில் இருக்கும் அப்படிப்பட்ட அதிசய சக்தி கொண்ட தெய்வங்களில் ஒருவர்  தான்… பாண்டி முனீஸ்வரர்… 

இன்று “பாண்டி கோயில்” என்று எல்லாராலும் அழைக்கப்படும் பாண்டி ஜடாமுனீஸ்வரர் கோயில்… 

மதுரை மேலமடையில்… இன்று வரை அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது!

நெற்றியில் தடித்த விபூதிப் பட்டை… மருட்டும் பெரிய விழிகள்… முறுக்கு மீசை… தோள்களைத் தொடும் சங்கிலிபோன்ற கூந்தல்… 

இப்படி கம்பீரமா என்று நாம் கண் எடுக்க முடியாமல் தரிசிக்க துடிக்கும் ஒரு தெய்வம் தான் பாண்டி முனி! 

பொதுவாக தெய்வ சிலைகளின் அமைப்பு தான் அந்த கோவிலின் சக்தியை பறைசாற்றும் 

பாண்டி முனி இங்கே பத்மாசனத்தில் அமர்ந்து இருக்கிறார் 

பொதுவாக காவல் தெய்வங்கள் நின்ற கோலத்தில் தான் இருப்பார்கள் ஆனால் பாண்டி முனி அமர்ந்த நிலையில் வீற்றிருப்பது தனி சிறப்பு !

மதுரை மட்டும் அல்ல… சுற்றியிருக்கும் பல மாவட்ட மக்களுக்கும்… இவர் தான் குலதெய்வம்! அதனால தான்… “பாண்டி”, “பாண்டிய ராஜ்”, “பாண்டித்துரை”… இப்படிப்பட்ட பெயர்கள் இந்த மண்ணில் இன்னும் உயிரோட வாழ்கிறது! 

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கோயில்கொண்ட இந்த பாண்டி முனி… இன்று வரை… தன்னை நாடி வரும் ஒவ்வொரு மனிதருக்கும் உடனடி தீர்வு தரும் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார்! 

நீங்கள் என்ன பிரச்சினையோட வந்தாலும்… அவர் முன்னாடி நிக்கிற நேரத்துலேயே அதற்கு பதில் கிடைக்கும் என்பது ஐதீகம்!

இவர் இந்த மதுரை மண்ணில் குடிகொண்ட வரலாறு சிறப்பானது 

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு… பெரியசாமி – வள்ளியம்மாள் என்னும் தம்பதி காட்டுவழிப்பாதையில் மதுரையை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார்கள்… 

அந்த காலத்தில் இன்று நாம் பார்க்கும் மேலமடை… மாட்டுத்தாவணி எல்லாம் பெருங்காடு தான்! 

இவர்கள் கரூருக்கு அருகில் இருக்கும் நெரூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது 

நெரூரை மறக்க முடியுமா தலை சிறந்த யோகிகளின் ஒருவரான சதாசிவ பிர்மேந்திரா ஜீவசமாதி அடைந்த இடம் 

நெடுந்தூரம் நடந்ததால் வள்ளியம்மாளுக்கு கடும் பயணக் களைப்பு… கண்கள் தானாக மூட ஆரம்பித்தது… “சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம்…” என்று சொல்லி ஒரு பெரிய மரத்தின் நிழலில் அமர்ந்தார்கள்… 

சில நொடிகளில் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிவிட்டார்…

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வள்ளியம்மாளுக்கு திடீரென்று ஒரு கனவு வந்தது… 

அந்த கனவில் ஜடாமுடியுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருந்த ஒரு யோகியை போல தோற்றம் கொன்றவர் தோன்றினார்… 

அவரை பார்த்த அந்த நொடியில் வள்ளியம்மாளின் உடம்பு முழுக்க சிலிர்த்து போய்விட்டது! 

யார் இவர்… தெய்வமா இல்லை துஷ்ட சக்தியா என்று உள்ளுக்குள் பதறினார்… 

ஆனால் அந்த யோகி ஒரு சின்ன புன்னகை மட்டும் புனைந்தார்… அந்த புன்னகை வள்ளியம்மாளின் பயத்தை ஒரே நொடியில் அகற்றியது… 

பின்னர் அவர் பேச ஆரம்பித்தார்… “பெண்ணே… நான் தான் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்… 

கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வந்த காலத்தில் அரசாட்சியை நடத்தி வந்தவன் நான்! 

அச்சமயத்தில் ஒரு பெரிய தவறு செய்தேன்… ஆராயாமல் கோவலனை தண்டனைக்கு உட்படுத்தினேன்! அது அநீதி என்று தெரிந்த அந்த நொடியிலேயே நான் என் உயிரையே விட்டுவிட்டேன்! 

பின்னர் நான் சிவலோகம் சென்றபோது சிவபெருமான் என்னிடம் ‘நீ பாவம் செய்தாய்… ஆனால் அதை உணர்ந்த கணத்திலேயே உயிர்விட்டாய்… அதனால் மீண்டும் பூமியில் பிறந்து வாழ்ந்து பின்னர் திரும்பி வா!’ என்றார்… 

ஆனால் நான் மறுபடியும் மனிதனாக பிறக்க விரும்பவில்லை… தவறு செய்பவர்களை தண்டித்து பாதிக்கப்பட்டவர்களை காப்பதற்காக இந்த பூமியிலேயே தங்கி… பூமிக்கடியில் அந்த ஈசனை நினைத்து தவம் செய்ய முடிவு செய்தேன்… 

என் தவம் இப்போது நிறைவுக்கு வந்துவிட்டது…

 நீ என்னை இந்த மண்ணிலிருந்து மேலே எடுத்து வழிபட ஆரம்பித்தால் உன்னையும் உன் குடும்பத்தையும் என்னை நாடி வரும் அனைவரையும் நான் காப்பாற்றுவேன்!” என்றார்.

அந்த வார்த்தைகள் வள்ளியம்மாளின் மனதில் இடி விழுந்தது போல ஒலித்தது!

 இது ஒரு சாதாரண கனவு அல்ல… ஒரு தெய்வ உத்தரவு! 

அசரீரி போல ஒலித்த அந்த குரலைக் கேட்டதும் வள்ளியம்மாள் திடீரென்று விழித்துக்கொண்டாள்! 

இது கனவு என்று அவள் மனம் நம்பவில்லை… அந்த இடத்தில் ஒரு சக்தி இருக்கிறது என்று அவள் உள்ளம் உணர்ந்தது… 

உடனே தன் கணவனிடம் சொல்லி ஊர்காரர்களை அழைத்துவரச் சொன்னாள்… 

அவர்கள் வந்து அந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தார்கள்… 

மண்ணுக்குள் இருந்து ஜடாமுடியுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருந்த ஒரு சிலை வெளிப்பட்டது! 

அது சாதாரண சிலை இல்லை… அவள் கனவில் கண்ட அதே உருவம்! 

அங்கேயே அந்த சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு ஆரம்பித்தார்கள்… 

அந்த நாளிலிருந்து இன்று வரை வள்ளியம்மாளின் வாரிசுகள் தான் பாண்டிமுனி கோயிலின் பூசாரிகள்!

அந்த நாளிலிருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாண்டிமுனியை தங்கள் குலதெய்வமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்… 

அவர்களை அவர் ஒரு நொடியும் விட்டு பிரியாமல் கண் இமைக்காமல் காத்துக்கொண்டிருக்கிறார்! 

அது வெறும் நம்பிக்கை மட்டும் அல்ல… பல பக்தர்களுக்கு அவர் நேரில் காட்சியும் கொடுத்திருக்கிறார்! 

கவலையோடு கோயிலுக்கு வரும் சிலரிடம் ஒரு வயதான மனிதர் போல வந்து பேசுவாராம்… 

அவர்கள் செய்ய வேண்டியவற்றை சொல்லி வழி காட்டுவாராம்… அந்த சில நிமிட பேச்சுக்குப் பிறகு பக்தர்களின் கவலை மறைந்து விடுமாம்… ஆனால் திரும்பிப் பார்த்தால் அந்த வயதானவர் அங்கே இருக்க மாட்டாராம்… 

பலருக்கும் நடந்த அதிசயம் இது! இதோடு முடிவில்லை… 

இரவு நேரங்களில் பாண்டிமுனி உலா வரும்போது சங்கிலி சத்தம் கேட்குமாம்… 

அதனால் இன்றும் அச்சமயத்தில் அந்த வழியாக இரவில் செல்லும் மக்கள் பயபக்தியோடு செல்கிறார்கள்!

பாண்டிமுனி ஆலயத்தில் விநாயகர், சுப்பிரமணியர், ஆண்டிச்சாமி மற்றும் சமையன் கருப்பசாமிக்கும் சந்நிதி உள்ளது! 

வெள்ளையர்கள் காலத்தில் மக்கள் சமையன் கருப்பசாமியிடம் குறி கேட்கும் வழக்கம் இருந்தது… 

ஒரு நாள் ஒரு வெள்ளைக்கார அதிகாரி “நான் வேட்டைக்கு போகிறேன்… எத்தனை விலங்குகள் கிடைக்கும்?” என்று கேட்டான்… 

ஆனால் பதில் கிடைக்கவில்லை…வெறுப்பில்  வேட்டைக்கு சென்றான்… ஆனால் ஒரு விலங்கும் கிடைக்கவில்லை! 

கோபத்தில் திரும்பி வந்து கருப்பசாமியின் சிலையை சேதப்படுத்தினான்!

ஆனால் அவன் காட்டை விட்டு வெளியேறும்போது… அவனும் அவன் குதிரையும் கல்லாக மாறிவிட்டது! 

அது கருப்பசாமியின் கோபம் என்று அனைவரும் புரிந்துகொண்டனர்… 

அதன் பிறகு சமயம் கருப்பைக்கு தனி சந்நிதி அமைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்! 

சமையன் கருப்பன் துடியான சாமி… இந்த ஆலயத்தில் பலி இவருக்குத்தான்! 

ஆனால் பாண்டிமுனிக்கு சைவ படையல் மட்டுமே… ஆண்டிச்சாமிக்கு வெண்பொங்கலும் மாம்பழங்களும் நிவேதனம்!

இந்த ஆண்டிச்சாமி முருக பெருமான் என்று சொல்பார்வைகளும் உண்டு 

பாண்டிமுனியை நாடி வந்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை! 

துஷ்ட சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் இந்த ஆலயத்திற்கு வந்தாலே போதும்… அனைத்தும் விலகி ஓடும்… 

குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் கட்டி வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்! 

தொழில் நஷ்டம்… நோய்… எதிரி பிரச்சினை… எதுவாக இருந்தாலும் அவரை வணங்கினால் நிவாரணம் கிடைக்கும்!

அதனால் தான் இன்று வரை பல தலைமுறைகளாக மக்கள் பாண்டிமுனியை நம்பிக்கையோடு நாடி வருகின்றனர்! 

மதுரை மாநகரின் அடையாளமாக உயர்ந்து நிற்கும் பாண்டி கோயில்… ஒரு சாதாரண ஆலயம் அல்ல… 

நம்பிக்கையோடு  தேடி வரும் ஒவ்வொரு மனிதருக்கும் பாதுகாப்பு தரும் தெய்வ நிலையம்! 

ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சென்று பாருங்கள்… 

அந்த சக்தியை நீங்களே உணருவீர்கள்! 

பாண்டிமுனி தூரத்தில் இருக்கும் தெய்வம் அல்ல… 

உங்களோடு கூடவே நடந்து கண் இமைக்காமல் காக்கும் தெய்வம்! 

அவரது அருள் எப்போதும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்கட்டும்!

 

Adiguru

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

🛕 Temple History

Thiruvanamalai Girivalam- திருவண்ணாமலை கிரிவலம்

தமிழில் படிக்க கீழே செல்லவும்..  Every month, whenever we read in the newspapers that lakhs of devotees visit  Tiruvannamalai to perform 
🛕 Temple History

பூம்பாறை முருகன்

ஆன்மீக தேடலில் உள்ளஅனைவர்க்கும்  ஆதிகுரு சேனல் சார்பாக என் பணிவான வணக்கங்கள்    கடந்த பதிவில்    எவ்வளவோ தெய்வ வடிவங்கள் இருக்க, போகர் ஏன் முருகப்பெருமானின்