🛕 Temple History

பழனி முருகன் சிலை ரகசியம்

பழநி முருகன் சிலை சாதாரண கல் சிலை அல்ல. அது நவபாஷாணம். இதனை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த ஒரு வார்த்தைக்குப் பின்னால் எவ்வளவு பெரிய ரகசியம் இருக்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும்? (PAUSE)

ஒரு சித்தர் ஒன்பது விஷ கனிமங்களை ஒன்றாக சேர்த்தார். மனிதனுக்கு விஷமாக இருக்கக்கூடிய அந்த சக்திவாய்ந்த கனிமங்களை ஒரு அரிய ரசவாத முறையில் அவர் ஒன்றாக இணைத்தார். (PAUSE)

அவ்வாறு உருவானது ஒரு சாதாரண சிலை அல்ல… ஒரு தெய்வ உருவம். அந்த உருவம் தான் இன்று பழநி மலையின் உச்சியில் நின்று கொண்டிருக்கும் முருகப்பெருமான். (not done )

பக்தர்கள் நம்புவது என்னவென்றால் அந்த நவபாஷாண உருவம் இன்றும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மருந்தாக இருக்கிறது. (PAUSE)

ஆனால் இங்கே தான் ஒரு மிகப் பெரிய கேள்வி எழுகிறது. ஏன் போகர் இந்த சிலையை உருவாக்கினார்? இது வெறும் ஒரு சிலை மட்டுமா? அல்லது மனித வாழ்க்கையின் மிகப் பெரிய ரகசியத்தை பாதுகாத்து நிற்கும் ஒரு மர்ம வடிவமா? (PAUSE)

இந்த கேள்விகளுக்கான பதிலை புரிந்துகொள்ள நாம் சிறிது காலத்தை பின்னோக்கி செல்ல வேண்டும். பழநி மலையை நோக்கி அல்ல… ஒரு சித்தரின் வாழ்க்கையை நோக்கி. (PAUSE)

ஏனெனில் இந்த நவபாஷாண ரகசியத்தின் மையத்தில் நிற்பவர் ஒரே ஒருவர். அவர் தான் போகர் சித்தர். (PAUSE)

போகர் சித்தர் சித்தர்களின் மரபில் மிகவும் தனித்துவமானவர். அவர் ஒரு ஞானி மட்டும் அல்ல. ஒரு மருத்துவர். ஒரு ரசவாதி. ஒரு விஞ்ஞானி. ஆன்மீகத்தில் உச்சம் தொட்ட ஒரு மகான். (PAUSE)

சித்த மரபு கூறுவதன்படி போகர் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் பயணம் செய்தவர். அவரின் வாழ்க்கையில் மிகவும் மர்மமான ஒரு அத்தியாயம் உள்ளது. அது அவரின் சீன பயணம். (PAUSE)

ஆனால் ஒரு தமிழ் சித்தர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சீனாவிற்கு ஏன் சென்றார்? அங்கே அவர் என்ன செய்தார்? (PAUSE)

Until this videos over 

சித்த மரபு கூறுவதன்படி போகர் தன் குருவான காலங்கி நாதரின் ஆணைப்படி சீனாவிற்கு சென்றார். அது ஒரு சாதாரண பயணம் அல்ல. ஒரு பணி. ஒரு ஞான மரபை உலகிற்கு கொண்டு செல்லும் ஒரு ஆன்மீகப் பயணம். (PAUSE)

சீனாவில் போகர் சித்த மருத்துவம், ரசவாதம், காயகற்பம், யோக அறிவு போன்ற ஆழமான அறிவுகளை பரப்பியதாக சித்த மரபு கூறுகிறது. (PAUSE)

அங்கே அவர் ஒரு புதிய பெயரில் வாழ்ந்ததாகவும் சில மரபுகள் தெரிவிக்கின்றன. அந்த பெயர் போ-யாங். (PAUSE)

இங்கே ஒரு ஆச்சரியமான கருத்து சில ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது. அவர்கள் கூறுவது என்னவென்றால் இந்த போ-யாங் என்பவரே பின்னாளில் தாவோ மதத்தின் நிறுவனர் லாவோ ட்சு ஆக இருக்கலாம். (PAUSE)

இந்த கருத்திற்கு சில குறிப்புகள் சித்த நூல்களில் ஒன்றான சப்தகாண்டம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் இன்றும் ஒரு மர்மமான வரலாறாகவே பார்க்கப்படுகிறது. (PAUSE)

ஏனெனில் போகர் வாழ்க்கையின் பல அத்தியாயங்கள் இன்றுவரை முழுமையாக புரியாத மர்மங்களாகவே உள்ளன. (PAUSE)

ஆனால் போகர் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி தமிழ்நாட்டிலேயே நடந்தது. அங்கே தான் அவரின் ஆழமான தேடலும் மிகப் பெரிய கண்டுபிடிப்புகளும் உருவாகின. (PAUSE)

போகர் மருத்துவத்தில் அற்புதமான கண்டுபிடிப்புகள் செய்தார். பஸ்பங்கள், காயகற்பம், மூலரசங்கள், குளிகைகள் போன்ற பல மருந்துகளை அவர் உருவாக்கினார். (PAUSE)

உடல் நோய்களை குணப்படுத்த அவரிடம் அற்புதமான அறிவு இருந்தது. (PAUSE)

ஆனால் இந்த எல்லா அறிவுகளின் நடுவிலும் ஒரு நாள் போகர் ஒரு ஆழமான உண்மையை உணர்ந்தார். (PAUSE)

மருந்து உடல் நோய்களை குணப்படுத்தலாம். ஆனால் மனிதர்களின் உண்மையான நோய் உடலில் இல்லை. அது பிறப்பில் எழுதப்பட்டுள்ளது. (PAUSE)

உடல் ஊனம், கஷ்டம், வியாதி — இவை எல்லாம் கர்மத்தின் விளைவுகள். எந்த மருந்தாலும் இந்த கர்மத்தின் விளைவுகளை முழுமையாக தடுக்க முடியாது என்பதை அவர் புரிந்துகொண்டார். Not done

இந்த உண்மை அவரை ஆழமாக சிந்திக்க வைத்தது. ஆனால் இந்த எண்ணம் திடீரென்று அவருக்கு தோன்றவில்லை. அப்படி சிந்திக்க சில நிகழ்வுகள் அவரை சுற்றி நடந்தன. (PAUSE)

ஒரு நாள் சில பக்தர்கள் போகர் அருகே வந்து நின்றார்கள். அவர்கள் மருந்து தேடி வந்தவர்கள். ஆனால் அவர்கள் கேட்ட கேள்விகள் போகர் மனதை ஆழமாகத் தொட்டன. (PAUSE)

ஒருவர் கேட்டார் “சித்தரே முதுமை வராமல் இருக்க ஒரு வழி சொல்லுங்கள்.” மற்றொருவர் கேட்டார் “எப்போதும் இளமையாக இருக்க மருந்து இருக்கிறதா?” 

இன்னொருவர் கேட்டார் “சிற்றின்பம் நிலைத்திருக்க ஏதாவது மருந்து இருக்கிறதா?” அந்த கேள்விகள் போகர் மனதில் ஒரு விசித்திரமான உணர்வை உருவாக்கின. 

ஏனெனில் அவர்கள் தேடியது ஆரோக்கியம் மட்டும் இல்லை. அவர்கள் தேடியது நிலையான இன்பம். அந்த கூட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் தான் வேறு கேள்வி கேட்டனர். 

அவர்கள் கேட்டது மருந்து பற்றி இல்லை. அவர்கள் கேட்டது ஆன்மீகம் பற்றி.“இறைவனை அடைவது எப்படி?” “தியானம் செய்வது எப்படி?” “ஒரு சாதகனின் உண்மையான குறிக்கோள் என்ன?” (PAUSE)

இந்த கேள்விகள் போகரை ஆழமாக சிந்திக்க வைத்தது. (PAUSE)

அவர் அந்த கூட்டத்தை அமைதியாக பார்த்தார். அவருக்கு ஒரு விஷயம் மெல்ல புரிந்தது. பெரும்பாலானவர்கள் விடுதலையை தேடவில்லை. அவர்கள் தேடியது இன்பம். 

வாழ்க்கையின் துன்பங்களை புரிந்துகொள்ள அல்ல, அவற்றிலிருந்து தப்பிக்க மட்டுமே.கர்மவினையை அகற்ற யாரும் முயற்சி செய்யவில்லை. அதை மேலும் பெருக்க முயற்சி செய்கிறார்கள். (Not Done)

இந்த உண்மை போகர் மனதில் ஒரு ஆழமான வருத்தத்தை உருவாக்கியது. அவர் தன்னுள் ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டார். 

“நான் கண்டுபிடித்த இந்த எல்லா மருந்துகளும் உடல் நோய்களை குணப்படுத்தலாம். ஆனால் மனிதர்களின் மிகப் பெரிய நோய் பிறவி. அந்த பிறவி என்ற நோய்க்கு மருந்து என்ன?” (PAUSE)

இந்த கேள்வியோடு போகர் ஆழ்ந்த தவத்தில் அமர்ந்தார். அவரின் இஷ்ட தெய்வமான அன்னை புவனேஸ்வரியை தியானித்து அவர் தவத்தில் முழுகினார். (PAUSE)

Until this videos done

நாட்கள் கடந்தன. மாதங்கள் கடந்தன. (PAUSE)

ஒரு நாள் அந்த தவத்தின் நடுவில் அவருக்கு அன்னை புவனேஸ்வரியின் தரிசனம் கிடைத்தது. (PAUSE)

அன்னை போகர் நோக்கி கூறினாள் “போகா… உன் நோக்கம் மிக உயர்ந்தது. நீ கண்டுபிடித்த அறிவு வீணாகாது.” (PAUSE)“ஆனால் ஒரு விஷயம் செய். உடல் நோய்களுக்கு நீ மருந்து கண்டுபிடித்தாய். ஆனால் பிறவி என்ற நோய்க்கு ஒரு மருந்தை உருவாக்கு.” (PAUSE)அந்த மருந்து சாதாரண மருந்தாக இருக்கக்கூடாது. அது ஒரு சக்திவாய்ந்த தெய்வ வெளிப்பாடு ஆக இருக்க வேண்டும். (PAUSE)

அதற்காக அன்னை கூறினாள் “நவகோள்களின் சக்தியை ஒரே உருவத்தில் ஒருங்கிணை. அதற்காக நவபாஷாணங்களை பயன்படுத்து.” (PAUSE)நவபாஷாணம் என்பது ஒன்பது மர்ம கனிமங்கள். ஒவ்வொன்றும் ஒரு கோளின் சக்தியை பிரதிபலிக்கும். ஒன்பது கோள்கள், ஒன்பது பாஷாணங்கள். (PAUSE)அந்த சக்திக்கு சரியான வடிவம் முருகன் என்று அன்னை கூறி மறைந்தாள். (PAUSE)

இந்த நிகழ்வு ஒரு புராணக் கதை மட்டும் அல்ல. அதற்கான சில சாட்சிகள் இன்றும் பழநியில் இருக்கின்றன. (PAUSE)

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலின் தென்மேற்கு பிரகாரத்தில் போகர் சித்தரின் ஜீவசமாதி உள்ளது. (PAUSE)

அங்கே போகர் வழிபட்டதாக கூறப்படும் புவனேஸ்வரி அம்மன் திருவுருவம் இன்றும் உள்ளது. (PAUSE)

அந்த அன்னையின் அருளுடன் தான் போகர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார். (PAUSE)

அதன் பிறகு போகர் ஒரு மிகப் பெரிய முடிவை எடுத்தார். (PAUSE)அவர் உருவாக்கிய அந்த சிலை சாதாரண சிலை அல்ல. அதன் உள்ளே ஒரு சக்தி நிலை என்றும் நிலைத்திருக்க வேண்டும். (PAUSE)அதற்காக அவர் ஒரு அரிய யோக முறையை தேர்ந்தெடுத்தார். (PAUSE)

அவர் இந்த உலகத்தை விட்டு விலகிச் செல்லவில்லை. (PAUSE)அதற்கு பதிலாக அந்த நவபாஷாண முருகன் சிலையின் அருகிலேயே தன் உடலை துறந்து ஜீவசமாதி அடைந்தார். (PAUSE)ஜீவசமாதி என்பது சாதாரண மரணம் அல்ல. அது ஒரு யோகியின் உயிர் சக்தி தியான நிலையில் பூமிக்குள் நிலைத்திருக்கும் ஒரு அரிய நிலை. (PAUSE)பழநியில் இன்றும் இருக்கும் போகர் சித்தரின் ஜீவசமாதி அந்த மகத்தான முடிவின் சாட்சியாக நிற்கிறது. (PAUSE)

சித்த மரபு கூறுவது என்னவென்றால் போகர் இன்றும் அங்கேயே தியான நிலையில் இருந்து பழநி தண்டாயுதபாணியின் சக்தியை காத்துக் கொண்டிருக்கிறார். (PAUSE)

அதனால் தான் சித்தர்கள் ஒரு ஆழமான உண்மையை கூறுகிறார்கள். (PAUSE)

உடல் நோய்களுக்கு மருந்து பல இருக்கிறது. ஆனால் பிறவி என்ற நோய்க்கு ஒரே ஒரு மருந்து. (PAUSE)

அது… பழநி தண்டாயுதபாணி. (PAUSE)

ஏனெனில் அவர் உடல் நோய்களை மட்டும் அல்ல மனிதனின் உள்ளிருக்கும் அஞ்ஞானத்தை அழிக்க வந்த ஞான சக்தி. (PAUSE)பயம், கர்மம், இருள் — இவற்றை ஒளியாக மாற்றும் ஒரு சக்தி. (PAUSE)அந்த உண்மையை புரிந்தவர்களுக்கு பழநி ஒரு கோவில் மட்டும் அல்ல. அது ஒரு ஞான மையம். ஒரு சக்தி மையம். மனித வாழ்க்கையின் ஆழமான ரகசியத்தை நினைவூட்டும் ஒரு தெய்வீக நினைவிடம். (PAUSE)




Adiguru

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

🛕 Temple History

Thiruvanamalai Girivalam- திருவண்ணாமலை கிரிவலம்

தமிழில் படிக்க கீழே செல்லவும்..  Every month, whenever we read in the newspapers that lakhs of devotees visit  Tiruvannamalai to perform 
🛕 Temple History

பூம்பாறை முருகன்

ஆன்மீக தேடலில் உள்ளஅனைவர்க்கும்  ஆதிகுரு சேனல் சார்பாக என் பணிவான வணக்கங்கள்    கடந்த பதிவில்    எவ்வளவோ தெய்வ வடிவங்கள் இருக்க, போகர் ஏன் முருகப்பெருமானின்