வடபழனி
நம் சித்தர்களும் யோகிகளும்
இந்த மண்ணில் தெய்வத்தை மட்டுமல்ல…
அதிர்வையும் சக்தியையும் பிரதிஷ்டை செய்து சென்றவர்கள்…
அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவ விக்கிரகங்ளையும் அதே சித்த புருசேகளின் ஜீவசமாதிகள் அமைத்து இருக்கும் கோவில்கள்
அசாத்தியாமான சக்திகளையும் அதிர்வுகளையும் கொண்ட தலங்களாக விளங்கும்.
இதற்கு சான்றாக பழனி, மருதமலை, ராமேஸ்வரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த வரிசையில் அண்ணாசாமி தம்பிரான் ரத்தினசாமி தம்பிரான் பாக்கியலிங்க தம்பிரான் என்ற
மூன்று சித்த புருஷர்களின் முயற்சியால் உருவானது தான் தென் சென்னையில் அமைந்து இருக்கும் வடபழனி ஆலயம்.
சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் வடபழனி தனித்துவம் மிக்கது.
இந்த கோவில் உருவாவதற்கு முழு முதற் காரணமாக இருந்தவர் சென்னை சாலிகிராமத்தில் பிறந்தர் அண்ணா சாமிகள்.
கோவிலில் திருப்பணி செய்வதற்கு கூட அந்த தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.
திருபணிக்கே இப்படி என்றால் ஒரு கோவிலேயே உருவாக்குவதற்கு எப்பேற்பட்ட அருள் நிறைந்தவராக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு மஹா பக்தரான அன்னசாமிகளே வடபழனி கோவிலை ஸ்தாபிக்க சரியான நபர் என்று
முருக பெருமானே அவரை தேர்தெடுத்தார் என்பதை சாமிகளின் வாழ்க்கை நிகழ்வுகளை வைத்தே புரிந்து கொள்ளலாம்.
எப்படி மைசூரில் வசித்த வள்ளிமலை ஸ்வாமிகளுக்கு வயிற்று வலியை ஏற்படுத்தி
அவரை பழனியம்பதிக்கு வரவழைத்து அங்கே தன் கருணையால் ஆட்கொண்டாரோ
அப்படியே அண்ணா ஸ்வாமிகளையும் ஆட்கொண்டார் கலியுக கடவுளான கந்த பெருமான்
அன்னசாமிகள் வாழ்க்கையில் ஒரு பக்குவ நிலையை அடைந்து நன்றாக இருந்தவருக்கு திடீரென தீராத வயிற்று வலி உண்டானது.
எந்த மருந்துகளை சாப்பிட்டும் பயனிலை.
படைத்தவனை தவிர வேறு யாராலும் தன்னை குணப்படுத்த முடியாது என்பதை உணர்ந்து.
தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் கோவிலுக்கு தினமும் சென்று வழிபட்டு வந்தார்.
ஒருமுறை அங்கே சென்றவர் வயிற்று வலி தாங்காமல் கோவிலிலேயே சுருண்டு விழுந்தார்.
அந்த சமயத்தில் அங்கே வந்த துறவி ஒருவர்
தன் கைப்பையில் வைத்திருந்து விபூதியை அண்ணா ஸ்வாமிகளின் வயிற்றில் தடவி விட
சற்று நேரத்தில் வயிற்று வலியின் தீவிரம் குறைந்து கண்களை திறந்தார்.
தன் எதிரில்
உள்ளத்தில் அருளும் முகத்தில் தெளிவுடன் காணப்பட்ட துறவியின் திருவடியில் விழுந்து தன் பிரச்சனையை கூறினார்.
பிணி அனைத்தும் போக்கும் மருத்துவ கடவுளான பழனி ஸ்ரீ தண்டாயுதபாணியின் திருவடியில் பணிந்து
உன் வேதனையை அவரிடம் கூறு
அந்த ஆறுமுகனே உன் குறைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பான் என்றார்.
ஆனால் தன்னால் இந்த வயிற்று வலியோடு பழனி வரை பாதை யாத்திரை செல்ல முடியாதே என்று வேதனைபட்ட அன்னாசாமிகளிடம்
பழனி செல்ல முடியவில்லை என்றால் என்ன
தொடர்ந்து மூன்று கிருத்திகை ன்நட்சத்திர தினங்களுக்கு திருப்போரூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு,
நான்காவது கிருத்திகை தினத்தன்று திருத்தணிகை சென்று அங்கே
மிக உயர்ந்த காணிக்கையை
செலுத்தினால் உன் நிலைமை மாறும் என்றார் அந்த துறவி.
அண்ணா ஸ்வாமிகளும் துறவி சொன்னது போலவே முதல் கிறுதிகள் தினத்தன்று கடும் வயிற்று வலியை பொருப்பட்டுதாமல் நடை பயணமாகவே திருப்போரூர் சென்று வழிபட்டு வந்தவருக்கு அடுத்த கிருத்திகையில் சோதனை
அன்று கடுமையான மழை வெள்ளம் , ஆற்றை கடந்து அவரால் திருப்போரூர் செல்ல முடியாத நிலை
மிகுந்த மனவருத்ததோடு அன்று இரவு படுக்க சென்ற அண்ணா சாமிகளின் கனவில்
ஒரு துறவி தோன்றி
நீ வசிக்கும் இடத்திலே முருகன் குடிக்கொண்டுள்ளான்,
நீ எங்கும் அலையாமல் உன் இடத்தில் இருந்தே அவனை வழிபடலாம் என்று கூறி மறைந்தார்.
திடுக்கிட்டு எழுந்த அண்ணா சாமிகள்
கனவில் தோன்றிய உத்தரவை அந்த முருக பெருமானின் உத்தரவாகவே கருதி
அன்று முதல் தான் வசிக்கும் இடத்தில் இருந்தே தினமும் முருகனை வழிபடலானார்.
இந்த சமயத்துல நான்காவது கிருத்திகை தினம் வந்தது,
அப்போது தான்
நான்காவது கிருத்திகை தினத்தில் திருத்தணிகை வேல்வனுக்கு உயர்ந்த காணிக்கை கொடு என்ற
துறவியின் வாக்கு நினைவிற்கு வந்தது.
துறவியின் வாக்குப்படி திருத்தணிகை சென்ன்றார்,
முருகனை மனமுருகி வேண்டினார்.
ஆனால் உயர்த்த காணிக்கை கொடுக்கும் அளவிற்கு அவர் கையில் காசோ பொருளோ இல்லை.
இருந்தும் தன் அப்பனுக்கு எதாவது உயர்ந்தது கொடுத்தாக வேண்டுமே
கொடுத்தார்
தன் உடலின் உயர்ந்த பாகமான நாக்கையே அறுத்து கந்தனுக்கு காணிக்கையாகினார்
அருகில் இருந்த பக்தர்களுக்கோ ஒரே பரவசம் இப்படி ஒரு பக்தியா என்று மெய் சிலிர்த்து நின்றனர்.
பிரார்த்தனை நிறைவேறிய திருப்தியில் தன் இல்லத்திற்கு திரும்பியவர் தன் தினசரி வழிபாட்டைதொடர ர
காணிக்கை கொடுக்கப்பட்ட நாக்கும் மெதுவாக வளர ஆரம்பித்தது.
முருகனின் அருளால் திருநாக்கை பெற்ற அண்ணா சாமிகள் புகழ் திக்கெட்டும் பரவியது.
முருக பெருமானின் அருளை பெற்ற சாமிகளிடம் பல பக்தர்கள் அருள்வாக்கு கேட்பதற்காக வர துவங்கினர்.
அவர் குறி பார்த்து சொல்லும் அனைத்து அருள் வாக்குகளும் பலித்தது.
அன்று அருள் வாக்கு சொல்லப்பட்ட இடமே இன்றைய வடபழனி ஆலயம்.
பின்னர் பழனிக்கு சென்று ஸ்ரீ தண்டாயுதபாணியை தரிசித்து வர ஆர்வம் கொண்டு
பாதையாத்திரையாக பழனி சென்று பெருமானை தரித்து கீழே வந்தவரின் கண்களில்
முருக பெருமானின் அழகிய திருவுருவபடம் ஒரு கடையில் தென்பட்டது.
அதை வாங்கி தான் குறி சொல்லும் வீட்டில் வைத்து பூஜிக்க வேண்டும் என்று மிகுந்த ஆவல் கொண்டார் ,
ஆனால் அந்த படத்தை வாங்கும் அளவிற்கு அவரிடம் பணம் இல்லை,
அன்று இரவு வருத்தத்தோடு அந்த கடைக்கு அருகில் இருந்த ஒரு நெல்லிமரதடியில் படுத்தி உறங்கினார்.
மறுநாள் காலை அவர் கண்விழித்து போது அந்த அதிசயம் நிகழ்ந்து.
நேற்று தான் வாங்க நினைத்த அந்த முருகன் படத்தோடு ஒருவர் நின்று
நேற்று இரவ தன் கனவில்
தன் கடையில் இருக்கும் இந்த முருகன் படத்தை உங்களிடம் ஒப்படைக்கும் படி ஒரு உத்தரவு வந்தது
இதை நீங்கள் தயவு செய்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்று அன்போடு கொடுத்து சென்றார்.
சாமிகளுக்கு கண்களில் கண்ணீர் வந்ததே தவிர நன்றி சொல்ல வார்த்தைகள் வரவில்லை.
பக்தர்களின் துன்பங்கள் அனைத்தையும் கவனித்து
அவர்களுக்கு அருள் புரிகிறான் அப்பன் முருகன் என்பதை உணர்ந்து ஊர் திரும்பினார்.
தான் குறி சொல்லும் கோடம்பாக்கம் மேடையில் ஒரு குடிசை போட்டு அதனுள் இந்த படத்தை வைத்து .
தென் பழனியில் இருந்து வந்த நீ இன்று முதல் வடபழனி ஆண்டவர் என்று அழைக்கப்படுவாய் என்ற திருநாமத்தை சூட்டினார்.
அன்று முதல் மக்கள் அவரை அண்ணாசாமி தம்பிரான் என்று அன்போடு அழைக்க ஆரம்பித்தனர்.
இந்த சமயம் ரத்தினசாமி என்ற அன்பர் அண்ணாசாமி தம்பிரானின் பெருமையை கேள்விப்பட்டு,
தன் வாழ்வியல் பிரச்சனைகளை அவரிடம் சொல்லி குறி கேட்க வந்தவர்
பின்னாட்களில் சாமிகளின் அன்பிற்கு பாத்திரமாகி அவரை தினசரி தரிசித்து அவருடைய நித்திய பூஜைக்கான தொண்டுகளை செய்துவந்தார்.
ஒரு நாள் அண்ணா சாமிகள் ரத்தின சாமியை அழைத்து
வடபழனி ஆண்டவர் பல நாட்களாக கீற்று கொட்டகையில் முடங்கி கிடக்கிறார்.
இவருக்கு ஒரு சிறிய கோவில் கட்டவேண்டும் அதற்கு நீ உதவ முடியுமா என்று கேட்க ,
முருகப்பெருமானுக்கு கோவில் கட்டும் பாக்கியம் எனக்கா என்று பரவசப்பட்ட இரத்தின சாமிகள் ,
ஆன்மீக அன்பர்களின் உதவியோடு திருப்பணிக்கு பணம் வசூலித்தார்.
1865 ஆம் ஆண்டு இன்றைக்கு வடபழனி ஆண்டவர் குடி கொண்டிருக்கும் மூலஸ்தான பகுதிக்கு
முதலில் கட்டிடம் எழும்பியது.
பின் வடபழனி கோவிலுக்காக ஒரு மூலவ விக்ரகம் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டையும் செய்யப்பட்டது.
கோவில் கட்டப்பட்ட சில நாட்களிலே அண்ணாசாமி தம்பிரான்
ஆவணி அமாவாசை
மகநட்சத்திர தினத்தில் அந்த வடபழனி ஆண்டவனின் திருவடியில் ஐக்கியமாகிவிட்டார்.
சாமிகளின் பூத உடல் கோவிலுக்கு அருகே சமாதி செய்யப்பட்டு சமாதி திருக்கோவிலும் கட்டப்பட்டது.
தன் குருவின் முக்திக்கு பின் அவரின் ஆன்மீக பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று நினைத்த இரத்தின சாமிகள் ,
குடும்பத்தை துறந்து துறவறம் பூண்டு ,
ஒரு கிருத்திகை தினத்தில் தன் குருவை போலவே திருத்தணி ஆண்டவனுக்கு தன் நாக்கை காணிக்கையாக்கி விட்டு
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வடபழனியில் தன் ஆன்மீக தொண்டினை தொடர்ந்தார்.
இந்த சமயத்தின் இரத்தின சாமிகளின் கருணையால் ஆட்கொள்ளப்பட்ட பாக்கியலீங்க தம்பிரான் அவரிடம் சரணடைந்தார்.
தன் குருவின் பணியை தன் காலத்திற்கு பின் தொடர ஒரு சரியான சிஷ்யன் கிடைத்துவிட நிம்மதியில்
1886 ஆம் ஆண்டு
மார்கழி சஷ்டி திதி
சதய நட்சத்திர தினத்தில் வடபழனி ஆண்டவரின் திருவடியில் சேர்ந்தார் ரத்தினசாமி தம்பிரான் .
அண்ணா சாமிகள் திருப்பல்லிபடுத்தப்பட்ட இடத்திற்கு அருகிலேயே இரத்தின சாமிகளுக்கு திருசமாதி கோவில் கட்டப்பட்டது.
தன் குருவின் மஹாசமாதிக்கு பின் பாக்கிய லிங்க தம்புராணும்
தன் நாவினை திருத்தணி முருகனுக்கு காணிக்கை கொடுத்து விட்டு தன் குருவின் ஆன்மீக பணிகளைதொடர்ந்தார்.
இவரின் காலத்தில் தான் வடபழனி கோவில் தனி புகழை பெற்றது.
வடபழனியில் தற்போதுல்ல மூலவர் கருவறையும் முதல் உட்பிரகார திருசுற்றும்
பாக்கிய லிங்க தம்பிரானின் திருத்தொண்டினால் உருவானது தான்.
இப்பிடி கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் வடபழனி கோவிளுக்காகேவே தன் வாழ்நாளினை அர்ப்பணித்த பாகியலீங்க தம்பிரான்
1931 ஆம் ஆண்டு
புரட்டாசி மாதம், தசமி திதியில் வடபழனிஆண்டவரின் திருவிடையில் சரணடைந்தார்.
தன் குருமார்களின் திரு சமாதிக்கு அருகிலேயே தானும் குடிக்கொண்டார்.
இவர்களின் காலத்திற்கு பிறகு குறி சொல்லும் வழக்கம் சரியான சீடர்கல் கிடைக்காததால் அப்படியே நின்றுபோது என்றாலும்
அந்த வடபழனி ஆண்டவனின் அருள் மழை தொடர்கிறது.
இந்த மாபெரும் சித்த புருஷர்களின் கடுமையான உழைப்பினால் உருவான வடபழனி கோவிலை
அங்கே குடிகொண்டிருக்கும் அந்த வடபழனி ஆண்டவரே பொறுப்பேற்ற நடத்துவது போல
தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பல அற்புதங்கள் நடத்தி வருகிறார்.
சென்னை மக்களின் பிரதானம் தெய்வமாக விளங்கி வரும் இந்த வடபழனி ஆண்டவரை தரித்து
அருகிலேயே இந்த ஆலயம் அமைவதற்கு காரணமான மூன்று சித்தர்களின் திருசமாதிகளையும் தரிசித்தால்
நாமும் நம் குடும்பமும் நல்ல நிலைக்கு உயரலாம் என்பது உறுதி





