🛕 Temple History

உஜைன் மஹாகாலர்

திருமாலுக்கும் பிரம்மனுக்கு ஜோதிப்பிளம்பாய் காட்சி கொடுத்த சிவபெருமானின் அந்த குறிப்பிட்ட ரூபத்தை நினைவு கூர்ந்து உருவாக்கப்பட்டவைதான் 

 

பன்னிரு ஜோதிர்லிங்கத்தலங்கள்

 

இவை மஹராஷ்ராவில் நான்கு கோவில்களும்,குஜராத் மத்திய பிரேசில் தலா இரண்டு கோவில்களும் உத்தராகண்ட் உத்திர பிரதேஷ், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் தலா ஒரு கோவிலும் உள்ளன.

 

இந்த 12 ஜோதிர் லிங்கங்களில் முதலில் உருவானதாக கருதப்படும் கோவில்

 

உஜைன் மஹாகாளேஸ்வர் 

 

காலத்தை அழிக்கும் கடவுள் கால பைரவர்

 

ஆனால் அந்த காலத்திற்கு அதிபதி இந்த மகாகாளர்

 

மகாகாலேஸ்வர் கோவில் அமைந்திருக்கும் தலமான உஜ்ஜயின் ஏழு மோக்ஷ நகரங்களுள் ஒன்று 

 

ஆதியில் அவந்திகா  என்று அழைக்கப்பட்ட நகரம் பின்னர் 

 

சுதன்வா என்ற செயின் அரசனால் உஜ்ஜயின்  என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது 

 

காரணம் ஒரு காலத்தில் ஜெயின் சமூகத்தினரின் முக்கிய நகரமாக உஜ்ஜயின் விளங்கியுள்ளது.

 

ஜெயினர்கள் மட்டுமல்ல குப்தர்கள் மற்றும் மௌரியர்களின் தலைநகராகத் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமும்கூட!

 

விக்ரமாதித்தின் என்றழைப்பட்ட இரண்டாம் சந்திரகுப்தன் உஜ்ஜனியின் மன்னராக இருந்தவர். 

 

தவிர பதஞ்சலி காளிதாசர் திருமங்கை ஆழ்வார் ஆகியோர் தமது இலக்கிய படைப்பில் இந்நகரத்தை புகழ்ந்து பாடல்கள் பாடியுள்ளார்கள்

 

இராமயண மஹாபாரத காலத்திலும் இந்த நகரம் சிறப்புடன் விளங்கி வந்தற்கான ஆதாரங்கள்

இடத்தின் பெயராகவும் கல்வெட்டு உதாரணமாகவும் இன்றைக்கும் விளங்கி வருகிறது.

 

மேலும் கிருஷ்ணர் பலராமருக்கு மிக நெருக்கமான ஊர் இந்த உஜ்ஜயின்

 

மேலும் கிருஷ்ணர் எங்கே வான சாஸ்திரம் கற்றதாகவும் கூறுகின்றார்கள்

 

தவிர ஸ்கந்த புராணம் இத்தலத்தை மகா கால வனம் என்று குறிப்பிடுகிறது

 

அதனைப் போலவே சிப்ராநதி புண்ணிய தீர்த்தங்களின் மிகவும் முக்கியமானது என்று அக்னி புராணம் குறிக்கிறது

 

இந்த சிப்ரா நதிக்கரையில் தான் இந்த நகரம் அமைந்துள்ளது 






உஜ்ஜயினை இரண்டாவது காசி என்றும் அழைப்பர் இதற்கு காரணம்

 

பல சாதுக்கள் சித்தர்கள், யோகிகளின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் இங்கிருக்கும் மஹாகாளர் 

 

இதற்கு ஒரு உதாரணம் தான் 

 

இங்கு தினமும் அதிகாலையில் நடக்கும் பஸ்ம ஆரத்தி 




பஸ்மம் என்ன்றால் சாம்பல் என்பதை நாம் அனைவரும் அறிவோம் 

 

ஆம் இந்த மஹாகாளருக்கு தினமும் மயானத்தில் இருந்து புதிதாக எடுக்கப்பட்ட மனித உடலின் சாம்பலில்  அபிஷேகம் நடத்தப்பட்டு வந்துள்ளது 

 

ஆனால் தற்போது மனித உடல்  சம்பலுக்கு பதிலாக மாட்டின்  சாணத்தில் உருவான  சாம்பல் தான் அபிஷேகத்திற்கு பயன்படுத்தபடுவதுதான்

 

வேதனையான செய்தி 

 

சபரிமலைக்கு அணைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும் 

 

ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டுக்கும் என்றும் 

 

நம் கலாச்சார பழக்க வழக்கங்களை அழிக்க நினைகும் கும்பலின் தலையீட்டில் 

 

மஹாகாளருக்கு மனித சாம்பல் அபிஷேகம் கூடாது என்று கோரி வழக்கு தொடர

 

அதனால் இன்றைக்கு மாட்டு சாண சாம்பல் தான் அபிஷேகத்திற்கு பயன்படுத்த படுகிறது என்று சொல்கிறார்கள் 

 

மனித சாபாலுக்கு அவ்வளவு முக்கியத்துவமா என்றாள் ஆம் என்பதே பதில் 

 

அந்த பரமசிவன் மயானத்தில வசிப்பவர் என்றும் 

 

மனித உடலின் சாம்பலை தன் உடல் முழுவதும் பூசிகொள்பவர் என்பதை நாம் அறிவோம்  

 

மேலும் மனித உடல் சாம்பலுக்கும் மாட்டு சான சாம்பலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்பது தன்னை உணர்ந்தவர்களின் கருத்து.

அதிகாலை 4.30 மணிக்குக் கோயில் நடை திறக்கும் 

இந்த பஸ்மா ஆராதியில் பங்கேற்பதற்கு ஏற்கனவே முன்பதிவு செய்வது அவசியம் 

இந்த ஆரத்தியில் சாம்பலை மேலாக கெட்டாமல்   ஒரு துனியில் எடுத்து சுவாமியின் திருமேனி முழுவதும் 

தெளிக்கும்படி செய்கிறார்கள்.

நீண்ட நேரம் ஸ்வாமிக்கு பஸ்மா அலங்காரம் செய்வார்கள். 

சுற்றிலும் நெய் தீபங்கள் மட்டும் ஒளிர, அந்த வெளிச்சத்தில் இறைவனின் இந்த தரிசனத்தைக் காணும் பொது , 

கண்கள் பெற்றதன் பலனை உணர்ந்து சிலிர்த்து போவோம்  

பொதுவாக, வட இந்தியக் கோயில்களில் சிவலிங்கத் திருமேனியை அழகாய் பூவால், சந்தனத்தால், விபூதியால் அலங்காரம் செய்வர் என்றாலும், 

இங்கே ஸ்ரீ மகாகாளருக்குச் செய்யும் அலங்காரம் தனிச் சிறப்பானது.

 ‘பாங்க்’ எனும் பொருளை முதலில் ஸ்வாமி திருமேனியில் பூசி , 

அதன்மேல் முந்திரி, திராட்சை, செர்ரி, பாதாம், குங்குமப்பூ, சந்தனம் இவற்றால் 

இமை, கண், மூக்கு, வாய், நெற்றிக்கண், மீசை, விபூதிப்பட்டை எனப் அலங்காரம் செய்கிறார்கள்.

ஸ்வாமியின் இந்த காட்சியை கண்கொட்டாமல் சந்நிதிக்கு வெளியே 

இரு கூர்மையான கொம்புகள் விரிய அமர்ந்திருக்கும் வெள்ளி நந்தி தேவர் பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

 

இந்த மஹாகாளர் இங்கு எப்படி தோன்றினார் என்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது 

அதில் 

பல நூற்றாண்டுகளுக்கு முன் சிவயோகி ஒருவர் இன்றைய உஜைனில் யாகம், ஹோமம், யக்ஞம், தவம் என நியம நிஷ்டையாக இருக்க, 

அருகில் ரத்னமாலா பர்வதத்தில் துஷானன் என்ற துஷ்டன் 

மக்களைத் துன்புறுத்தி, நற்காரியங்களைத் தடுத்து வந்தான். 

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சிவயோகியிடம் வந்து முறையிட்டனர். 

துஷ்டனிடம் இருந்து மக்களை காப்பற்ற ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து 

சிவனை வேண்டி ஒரு வேள்வி நடத்தினார் சிவயோகி , 

அந்த வேளையில் அங்கு வந்த தூஷணன் 

வேள்வியை நிறுத்தி அனைவரையும் துன்புறுத்த துவங்கியபோது 

சிவபெருமான் சிவயோகி பிரதிஷ்டை செய்திருந்த லிங்கத்தை பிழந்து கொண்டு வெளிப்பட்டு 

தூஷனை அழித்தார். 

அந்த ரூபமே மகாகாளர் என்றும் 

அவரே இன்று நாம் தரிசிக்கும் லிங்க மூர்த்தி என்றும் செல்லப்படுகிறது

ஸ்லாமிய படையெடுப்பில் எப்படி அயோத்தி ராமர் கோவிலை இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதோ

அதனைப் போன்றே உஜ்ஜயின மகாகாளர் கோவிலும் இஸ்லாமயி மன்னரால் இடிக்கப்பட்டு

அதே இடத்தில் மசூதி கட்டப்பட்டு கோவில் இருக்கும் இடமே தெரியாமல் போனது.

ஆம் பல மன்னர்கள் பக்தி செய்து செலுத்திய பலவகை திருப்பணிகள் செய்த செல்வம்  நிறைந்த இக்கோயிலைக் 

1234 ஆம் ஆண்டு இசுலாமிய படையெடுப்பில் சுல்தான் ‘இல்டுமிஷ்’, மஹாகாளர் கோவிலை இடித்து லிங்கத்தைப் பெயர்த்து, கோடி தீர்த்தத்தில் விட்டெறிந்து, கோயிலையும் இடித்து, மசூதி எழுப்பினான். 

ஆலயம் இருந்த இடம் தெரியாமல் 500 ஆண்டுகள் கழிந்தன. 

பின்னர் 1732 மராத்தியர்கள் ஆட்சிக்கு உட்பட்டு உஜைன் வந்த பொது 

மஹாகாளர் கோவில் அழிக்கப்பட்ட  செய்தியறிந்த மராட்டியத் தலைவன் ‘ரானோஜி ஷிண்டே 

கோடி தீர்த்தத்தில் மகாகாளரை மீட்டெடுத்து, நவநிர்மாணம் செய்து பிரதிஷ்டை செய்தார்.

சுமார் 500 ஆண்டுகளாக ஸ்ரீமகாகாளர் ‘ஜலவாசம்’ செய்த கோடி தீர்த்தம் கோவிலுக்குள் தான் இருக்கிறது 

பின்னர் மத்தியில் ஆளும் பாஜாகா அரசு  இந்த அற்புதமான திருத்தலத்தைப் புதுப்பிக்கும்  திட்டம் தீட்டப்பட்டு ரூ. 316 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

 

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் மகாகாளர் வளாகத்தை 

 

கடந்த  2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிசத்தார் 

இந்த நகரில் பரம்பரையாக வாழும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, ‘ஜெய் மகாக்காள்’ என்றே வணக்கம் கூறிக்கொள்கிறார்கள். 

அந்த அளவுக்கு, அவர்கள் ரத்தத்தில் கலந்த, பாசமும் நேசமும் பெற்றவராக இருக்கிறார் ஸ்ரீமகாகாளர்.

நம் பாரத மண்ணில் நடக்கும் திருவிழாக்களில் கும்பமேளா தனித்துவம் வாய்ந்தது  

 

பாற்கடலைக் கடைந்து அமுதம் கிடைத்ததும், 

 

அதைப் பறிக்க வந்த அசுரர்களிடமிருந்து குரு, சந்திர, சூரியர்கள் கலசத்தைக் காத்து, 

 

மாற்றி மாற்றி எடுத்துச் செல்கையில் 

 

ஹரித்வார், நாசிக், ப்ரயாக், உஜ்ஜயினி ஆகிய இடங்களில் அமிர்தம் தளும்பிச் சிதறியது. 

 

அவ்வாறு அமிழ்தம் சிதறிய இடங்களில் உள்ள நதிகளில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்றும் 

 

அதிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவின் போது புனித நீராடுவது நம் முந்தியை உறுதி செய்யும் என்பது ஐதீகம் . 

 

அவ்வாறு உஜ்ஜயினியிலும் கும்பமேளா சிறப்பாகக் கொண்டாடப்படும். 

 

இங்கு நடைபெறும் கும்பமேளாவுக்கு ‘ஸிம்ஹத் மேளா’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு

 

இப்படி நடந்த ஒரு கும்பமேளாவில் ராமபிரானும் கலந்து கொண்டு நீராடியுள்ளதாக செய்திகள் உள்ளன

 

அதனை உறுதியப்படுத்தும் வகையில் இன்றும் கும்ப மேல நாடாகும் பகுதிக்கு ராமகட் என்றே பெயர் 

 

மகாகாளர் கோவிலை நமக்கும் சடங்குகள் எல்லாமே விசித்திரமாவைதான்.

 

பொதுவாக கோவிலில் ஒரு தடவை பூஜித்த பொருள்களை நிர்மாள்யம் என்பார்கள் 

 

நிர்மல்யத்தை கலைந்து புதிதாக அலங்கரிப்பது மரபு 

 

ஆனால் இந்த வழக்கத்தை இந்த ஜோதிலிங்கத்தை பொறுத்தவரை அனுஷ்டிப்பதில்லை 

 

பிரசாதத்தையும் வில்வம் போன்ற தலைவர்களையும் மீண்டும் உபயோகிப்பது வழக்கமாக இருக்கிறது 





உஜ்ஜெயினில் மகா காலர் கோயில் இருப்பது போலவே மகாகாளி கோயிலு சிப்ரா  நதி கரையில் உள்ளது 

 

இது உஜ்ஜயினி காளி மந்திர் என்று அழைக்கப்படுகிறது. 

 

விக்ரமாதித்தனுக்கு அருளாசி வழங்கிய அதே அன்னை தான் இவர்

 

அது மட்டுமா தன் வாய் தாம்பூலத்தை ஆட்டிடையன் வாயில் உமிழ்ந்து, 

 

அவனை உலக மகாகவி ‘காளிதாஸ்’ ஆக்கியவள் இந்தத் தாய். 

 

செந்தூரம் பூசிய அழகிய குண்டுக் கன்னங்களுடன் உருண்டை முகம், 

 

சிறிய கிரீடத்தில் கருணையும் அன்பும் பொங்கித் ததும்பும் மிக அழகான கண்களுக்குச் சொந்தக்காரியாகத் திகழும் இவளைத் தரிசிக்கும்போது, 

 

அவளின் தீட்சண்யத்தில் நாம் ஒவ்வொருவரும் அந்தக் காளியின் தாஸனாகிப் போவோம்.





இவ்விரண்டு கோவில்களை தவிர மேலும் சில முக்கிய கோவில்கள் உஜைனில் உள்ளன அதில் 

முதலில், சாந்தீபனி ஆஸ்ரமம். 

இந்த முனிவரிடம்தான் ஸ்ரீகிருஷ்ணர், பலராமர் ஆகியோர் கல்வி கற்றனர். 

மூவாயிரம் வருடப் பழைமை வாய்ந்த ஓவியங்களை இங்கே உள்ளன 

அடுத்ததாக நாம்  சொல்லவேண்டியது  சித்தவட் எனும் இடம். 

இங்குள்ள ஆலமரம் புகழ்பெற்றது. 

பல நூற்றாண்டுகளாக இந்த மரம் இங்கே இருப்பதாகவும் 

அதில் மஞ்சள் கயிற்றைச் சமர்ப்பித்து, எடுத்துக் கட்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம் 

அடுத்து பார்க்க வேண்டியது  ஹரிகுஹா. 

இந்த குகைக்கும் நம் தமிழகத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு 

நம் பட்டினத்தார் தலயாத்திரை செய்து கொண்டிருந்த காலத்தில் 

உஜ்ஜைனி மாகாளபுரத்திற்குச் சென்று மாகாளேசுவரரை வணங்கி விட்டு 

ஊருக்கு வெளியே காட்டுப் பிள்ளையார் கோவில் ஒன்றில் நிஷ்டையில் அமர்ந்திருந்தார்.

உஜ்ஜைனி அரண்மனையில் கொள்ளையிட்டு வந்த கள்வர்கள் 

ஒரு முத்துமாலையை அந்தக் காட்டுப் பிள்ளையாருக்குக் காணிக்கையாகத் தூக்கி எறிய 

அது நிஷ்டையில் இருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. 

கள்வர்களை விரட்டிக் கொண்டு வந்த வீரர்கள் முத்து மாலையுடன் இருந்த பட்டினத்தாரை, 

அரசன் பத்திரகிரியின் முன் சென்று நிறுத்த 

அவன் தீர விசாரிக்காமல் அவரைக் கழுவிலேற்ற ஆணையிட்டான்.

பட்டினத்தார் ஒருபாடல் பாட அந்தக் கழுமரம் தீப்பற்றி எரிந்தது. 

அந்தக் கணமே ஞானம் பெற்றான் மன்னன் பத்திரகிரி. 

தன் அரச போகங்களைத் துறந்து பட்டினத்தாரின் சீடனார் 

இவர்  தவம் செய்து ஆராதித்த சிவன், இங்கே குகை ஒன்றினுள் கோயில் கொண்டுள்ளார். 

தொடர்ந்து, கால பைரவ் மந்திர் கோயிலில் அதிசய பைரவரைத் தரிசிக்க வேண்டும் 

அதன் பின்   செவ்வாய் பிறந்து வளர்ந்து, கிரக பதவி பெற தவமிருந்து வழிபட்ட 

சிவன் குடிகொண்ட மங்கள்நாத் மந்திர். 

இங்குள்ள மண்ணும் செவ்வாய் கிரக மண்ணும் ஒரே தன்மையுடையது என்று சொல்கிறார்கள். 

இங்குள்ள சிவபெருமானை தரிசித்தால் செவ்வாய் தோஷம் நீங்கும என்பது ஐதீகம் 

பின்னர் செல்ல வேண்டியது , ‘படாகணேஷ்’. ஆலயம் பெயருக்கு ஏற்றாற்போல் ‘படா’வான அவரின் உருவம்

சிப்ரா  நதியில் மூழ்கி மகா காலரை வணங்கி காளி தரிசனம் செய்தால் 

 

கல்வியும் அறிவும் பெருகும் அசுர குணம் மறையும் என்பது அனுபவ உண்மை

Adiguru

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

🛕 Temple History

Thiruvanamalai Girivalam- திருவண்ணாமலை கிரிவலம்

தமிழில் படிக்க கீழே செல்லவும்..  Every month, whenever we read in the newspapers that lakhs of devotees visit  Tiruvannamalai to perform 
🛕 Temple History

பூம்பாறை முருகன்

ஆன்மீக தேடலில் உள்ளஅனைவர்க்கும்  ஆதிகுரு சேனல் சார்பாக என் பணிவான வணக்கங்கள்    கடந்த பதிவில்    எவ்வளவோ தெய்வ வடிவங்கள் இருக்க, போகர் ஏன் முருகப்பெருமானின்