செய்யூர் கந்தசுவாமி
27 நட்சத்திரங்களுக்குரிய கோவில்கள் ,தெய்வங்கள், தல விருச்சங்கள், லிங்கங்கள் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்
ஆனால் 27 நட்சத்திரங்களுக்குறிய வேதாளங்கள் இருக்கும் இருக்கும் கோவிளை பற்றி கேள்விப்பட்டுண்டா …………
பொதுவாக, எந்த சைவக் கோவிலிலும் கோஷ்ட தெய்வங்களாக நாம் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் (விஷ்ணு), பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோரைக் தரிசித்து இருப்போம்.
ஆனால் இந்த கோவிலில்,
கோஷ்ட தெய்வங்களுக்கு பதிலாக அக்கோவில் மூலவரே கோஷ்ட தெய்வங்களாக தரிசனம் தருகிறார்
இப்படி அபூர்வ தகவல்களை கொண்ட கோவில் என்றால்
அது முருகன் கோவில் அல்லது இருக்க வாய்ப்பு இல்லை தானே
ஆம் செய்யூர் கந்தசாமி கோவிலில் தான் மேல் சொன்ன விஷயங்கள் அனைத்தும் உள்ளது
Intro
காஞ்சிபுரம் மாவட்டத்தில்,
மதுராந்தகத்திலிருந்து 26 கி.மீ தொலைவிலும், மேல்மருவத்தூரிலிருந்து 23 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து சுமார் 100 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது
செய்யூர் கந்த ஸ்வாமி கோவில்
அவ்வளவாக அறியப்படாத முருகன் கோவில்களில் இதுவும் ஒன்று.
பண்டைய நாளில் இவ்வூர் ஜெயம் கொண்ட சோழ நல்லூர் மற்றும்
வீர ராஜேந்திர நல்லூர் என்றும் பெயர் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இது ஜெயம் கொண்ட சோழமண்டலத்து செம்பூர்கோட்டத்து புறையூர் நாட்டை சேர்ந்திருந்தது என்றும்
கல்வெட்டுகள் மூலம் நாம் அறிய முடிகிறது
இதனை வைத்து இது சோழர் காலத்திற்கும் முந்திய கோவில் என்றாலும்
அருணகிரிப் பெருமானும் ‘வளவாபுரி வாழ் மயில்வாகனப் பெருமாளே’ என்று இப்பெயரினைக் கொண்டே இத்தல முருகனை போற்றியுள்ளார்
எனவே இக்கோவில் அருணகிரி நாதர் காலத்திற்கும் முன்பிருந்து இருந்திருக்கிறது என்பதை உறுதியாக எடுத்து கொள்ளலாம்.
செய்யூர் கந்தசாமி கோவில் குமாரதந்திரம் என்னும் உப ஆகம முறைப்படி மிக நுணுக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறது .
குமார தந்திரம் என்பது
முருகக் கடவுளுக்கு கோயில் அமைக்கும் விதம் உருவ அமைதி, பூஜைகள், பிற கிரியைகள் ,பஞ்சகவ்யம் பஞ்சாமிர்தம் முதலிய தயாரித்தல், கும்பாபிஷேகம் ஹோமங்கள் நடத்தல்
உள்ளிட்ட 51 படலங்களைக் கொண்டுள்ளதாகும்.
இதற்கு பல சான்றுகள் உள்ளன அதனை இனி பார்க்கலாம்.
ஆகம விதிப்படி ஒரு கோவில் உருவாக்கப்படும் போது அந்நிலம் தெற்கு மற்றும் மேற்கு திசையில் உயர்ந்து இருக்க வேணடும்
அதன்படி தான் இந்த செய்யுர் கோவிலும் அமைக்கப்படுள்ளது.
காரணம் இது தெற்கு நோக்கி அமைய பெற்றிருக்கும் கோவியாக விளங்குகிறது.
மேலும் கருவறை கிழக்கு நோக்கி அமைக்க பட்டுள்ளதால்
அனைத்து செல்வங்களையும் கொடுக்கும் கோவிலாக இத்தலம் விளங்குகிறது.
தமிழகத்தில் பல்லவராது துவக்க கால கோவில்களான குடைவரைகள் ,பஞ்ச பாண்டவ ரதங்கள் மாமல்ல கடற்கரை கோவில் முதலான இடங்களில் கோபுரங்கள் அமைக்கப்படவில்லை ,
ராஜசிம்மன் காலத்தில் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயிலில் தான்
முதல் முதலாக சிறுகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது ,
சோழர்களும் பல்லவர்களும் தான் கோபுரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர்,
இதன் படி பார்க்கும் போது செய்யூர் கோவிலுக்கும் கோபுரங்கள் இல்லை
எனவே இதன் உருவாக்கம் பல்லவ சோழர் காலத்திற்கும் முந்தையாக இருந்திருக்க வேண்டும்
அதன் பின்னர் சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் அவர்கள் இக் கோவிலுக்கு மேலும் திருப்பணிகள் செய்திருக்க வேண்டும்
கர்ப்ப கிரகத்தில் அருள்மிகு கந்தசாமி வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார்
கருவறை நுழைவாயிலின் இருபுறமும் சுவீரன் சுஜனன் ஆகிய துவார பாலகர்களுடன் சுப்பிரமணியர் காட்சி தரும் அழகு பரவசத்தை ஏற்படுத்தும்
கோவிலின் பிரதான வாயிலில் நுழைந்ததும் வெளிப்பிரகாரம் காணப்படுகிறது
வெளிப்பிரகாரத்தில் இருந்து முன் மண்டபத்தில் நுழைந்ததும்
இடதுபுறத்தில் ஸ்ரீ சோமநாதர் மீனாட்சி அம்மை சன்னதியம்
அதன் அருகில் பள்ளியறை இருப்பதையும் காணலாம் ,
பொதுவாக பள்ளியறை அம்மன் சந்திக்கு பக்கத்தில் அமைக்கப்படுவது தான் மரபு
அது தான் இந்த கோவிலும் பின்பற்ற பட்டிருக்கிறது
மேலும் இந்த சோமநாதர் லிங்கம் முருக பெருமானால் பிரதிஷ்டை செய்து வழிபட பட்டவர் என்ற செய்தியும் கூறப்படுகிறது
இச்சநீதியின் முன் நந்திதேவர் எப்போதும் போல இருந்தாலும் அதிஸ்யமாக சந்நிதி நுழைவாயிலில் துவார பாலகர்கள் போல இருபுறமும் பிரம்மாவும் விஷ்ணுவும் காட்சியளிபது ஒரு அபூர்வ அமைப்பாகும்
எனவே இக்கோவிலுக்கு வந்தால் முர்மூர்த்திகளை ஒருசேர தரிசித்த பலனை அடையலாம்
ஒரு கோயிலின் முக்கிய உறுப்புகளில் கொடிமரமும் ஒன்று
சைவக் கோவில்களில் கருவறையில் உள்ள சிவலிங்கமானது சூட்சுமிலிங்கம் என்றும்
விமான ஸ்தூல லிங்கம் என்றும்
பலிபீடம் பத்திரலிங்கம் என்றும் கூறப்படுவதை போல
கொடிமரமானது காரணலிங்கமாக கருதப்படுகிறது
இதனடிப்படையில் இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தின் கிழக்கு புறத்தில்
பிராசீன கல் தீபஸ்தம்பமும் கொடி மரமும் மூலஸ்தானத்தை நோக்கியவாறு காட்சியளிக்கின்றன
கருவறை மூலவ விக்ரகதிற்கு அடுத்த நிலையில் இருப்பது கருவறையை சுற்றியுள்ள கோஷ்ட தெய்வங்கள்
இதற்கும் ஒரு விதி உண்டு.
பொதுவாக கருவறை சுற்று சுவற்றில் கணபதி , துர்க்கை, தட்சிணாமூர்த்தியும்
மற்றும் அர்தநாரிஸ்வரர் விஷ்ணு லிங்கோத்பவர் இவர்களில் யாரேனும் ஒருவரது சிற்பமும் வடக்கே பிரம்மாவும் வைக்கப்பட்டிருப்பர்.
ஆனால் செய்யூர் கந்தசாமி கோவிலில் இந்த கோஷ்ட தெய்வங்கள் அனைத்தும் சுப்பிரமணிய ரூபங்களாகவே காட்சியளிப்பது வியப்பாக உள்ளது.
ஆம் இக்கோயிலில் விநாயகருக்கு பதிலாக நிருத்த ஸ்கந்தரும்,
தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தில் பிரம்ம சாஸ்தாவும்,
விஷ்ணு மாடத்தில் பாலஸ்கந்தரும்,
பிரம்மாவின் இடத்தில் சிவகுருநாதனும்,
துர்க்கை இருக்கும் இடத்தில் புலிந்தரும் அதாவது (வேடர் உருவில் இருக்கும் முருகன்) காட்சியளிக்கின்றனர்..
இது வேறு எந்த கோவில்களில் காணக்கிடைக்காத ஓர் அமைப்பாகும்
மேலும் சிவ தலங்களில் காணப்படும் சண்டிகேஸ்வரரும் பைரவரும் இம்முருகு ஆலயத்தில் அவரவருக்கு உரிய இடத்தில் அமர்ந்திருக்கின்றனர்
இங்கிருக்கும் சூரியன் குகசூரியன் என்று அழைக்கப்படுகிறார்
தெற்கு நோக்கிய கோபுர வாசல் வழியாக தீபாராதனை மண்டபத்துக்குள் பிரவேசிப் போருக்கு தரிசனம் தர ஆறுமுக சுவாமியும் அமர்ந்துள்ளார்
வெளிப்பிரகாரத்தில் பிரதட்சணமாக வரும்போது முதலில் விநாயகர் சன்னதியியும்
கோவிலின் தல விருட்சம் வன்னி மற்றும் கருங்காலி மரங்கல் உள்ளன
கொடி மரத்துக்கு வடக்கில் அம்மன் சன்னதியும் அதற்கு முன் சர்வ வாத்திய மண்டபமும் அமைந்துள்ளது.
1947 ஆம் ஆண்டு வரை இம்மண்டபத்தில் திருவிழாக்களின் போது சகலவிதமான வாத்திய கருவிகளும் இசைக்கப்பட்டதுடன் நடன நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன
புஜஸ்டம்பத்திற்கு பின்னால் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி உள்ளது.
இனி மற்றோரு சிறப்பு அம்சத்தை பார்க்கலாம்.
ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
தீது ஆளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே. என்ற
கந்தர் அனுபூதி பாடலுக்கு ஏற்றவாறு
வெளிப்பிரகாரத்தை சுற்றி 27 நட்சத்திரண்களுக்குரிய வேதாளங்கள் அமைக்கப்ட்டுள்ளன
சாதாரணமாக நாம் வேதாளங்களை பற்றி விக்கிரமாதித்தன் கதையில் படித்திருப்போம்
ஆனால் இங்குள்ள வேதாளங்கள் முருகன் சூரபத்மனையும் பிற அரக்கர்களையும் வதைக்கும் போது
அவருக்கு துணை புரிந்த சிவ கணங்களாகும்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக
மொத்தம் 27 பூதகன வேதாளங்கள் இக்கோவிலில் சுற்றி அமைந்திருப்பது
ஒரு இன்றியமையாத தனி சிறப்பாகும்
இவ் வேதாளங்கள் பைரவரின் ஆணைக்கு உட்பட்டவை
எனவேதான் இக்கோயிலில் வேதாளங்கள் மட்டுமின்றி பைரவரும் காணப்படுகிறார்
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் அவரவர் நட்சத்திரத்திற்குரிய வேதாளங்களை வழிபட்டு
தம் கோரிக்கைகளை அவர் முன் வைத்தால்
அக்கோரிக்கைகளை வேதாளங்கள் பைரவர் மூலமாக முருகனிடம் கொண்டு போய் சேர்த்து அவை நிறைவேற்றப்படுவதாக ஐதீகம்
தேய்பிறை அஷ்டமி அன்று மாலை
வேதாள பூஜை
விநாயகர் சங்கல்பத்துடன் தொடங்குகிறது
பிறகு ஐந்து மணிக்கு ஒவ்வொரு நட்சத்திர வேதாளத்திற்கும் செவ்வரளி பூக்களால் பூஜையும்
மாலை 7 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம்
இரவு 8 மணிக்கு பைரவருக்கு அஷ்ட புஷ்பார் ஞ்சனையும் நடைபெறுகிறது.
இனி அந்த அந்த நட்சத்திரத்திற்க்கான வேதாளங்களின் பெயர்களை பார்க்கலாம்
அஸ்வினி நட்சத்திரத்திற்கு நாகாயுதபாணி பூத
பரணி நட்சத்திரத்திற்கு வஜ்ரதாரி பூத
கிருத்திகை நட்சத்திரத்திற்கு வைராக்கிய பூத
ரோகிணி நட்சத்திரத்திற்கு கட்கதாரி பூத
மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு ஞான பூத
திருவாதிரை நட்சத்திரத்திற்கு தோமர பூத
புனர்பூச நட்சத்திரத்திற்கு வக்ரதன்த பூத
பூசம் நட்சத்திரத்திற்கு விசால நேத்திர பூதா
ஆயில்ய நட்சத்திரத்திற்கு ஆனந்த பைரவ பக்த பூத
மகம் நட்சத்திரத்திற்கு ஞான ஸ்கந்த பக்த பூதா
பூரம் நட்சத்திரத்திற்கு தர்ப்பகர பூதா
உத்திரம் நட்சத்திரத்திற்கு வீரபாகு சேவக பூதா
ஹஸ்தம் நட்சத்திரத்திற்கு சூரபத்ம சம்ஹார பூதா
சித்திரை நட்சத்திரத்திற்கு தாரகாசுர இம்ச பூதா
ஸ்வாதி நட்சத்திரத்திற்கு ஆனந்த குக பக்தபூதா
விசாக நட்சத்திரத்திற்கு சூர நிபுண பூத
அனுஷ நட்சத்திரத்திற்கு சண்டகோப பூத
கேட்டை நட்சத்திரத்திற்கு சிங்க முகாசுர இம்ச பூதா
மூல நட்சத்திரத்திற்கு பராக்கிரம பூத
பூராடம் நட்சத்திரத்திற்கு மகோதர பூத
உத்தராட நட்சத்திரத்திற்கு ஊத்துவ சிகாபந்த பூத
திருவோண நட்சத்திரத்திற்கு கதாபரணி பூதா
அவிட்டம் நட்சத்திரம் சங்கரபாணி பூத
சதயம் நட்சத்திரத்திற்கு பேருண்ட பூத
பூரட்டாதி நட்சத்திரத்திற்கு கோரரூப பூத
உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு ருரு பைரவ சேவக பூத
மற்றும் ரேவதி நட்சத்திரத்திற்கு குரோதன பைரவ பக்த பூத ஆகும்
கோவிலுக்கு வர முடியாதவர்கள் தேய்பிறை அஷ்டமி தினத்தில் உங்கள் நட்சத்திரத்திக்கு உண்டான வேதாளத்தின் பெயரை மனதில் நினைத்து வீட்டில் இருந்தே வணங்குவதும் நல்ல பலனை பெற்று தரும்
மேலும் இக்கோவிலில் பெரியாண்டவர் பூஜையும் அனுஷ்டிக்கப்படுகிறது
கோவிலுக்கு வெளியே நவ சந்தியில் நவக்கிரகங்கள் பூஜித்த விநாயகர் காணப்படுகிறார்
இதுவும் இக்கோவிலில் ஒரு தனி சிறப்பாகும்
இக்கோவிலுக்கு மேற்கே செட்டிகுளம் என்று திருக்குளம் உள்ளது
செட்டி என்பது முருகனின் ஒரு திருபெயர் இக்குளம் ஆலயத்திற்கு சொந்தமானது
ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில்
ஆடி கிருத்திகை கந்த சஷ்டி சூரசம்ஹாரம் கார்த்திகை தீபம் தைப்பூசம் பங்குனி உத்திர திருக்கல்யாணம் வைகாசி விசாகம் ஆகியவை
ஏராளமான ஜனத்திரகளுக்கு நடுவே கொண்டாடப்படுகின்றன
சஷ்டியின் மூன்றாம் நாள் வேல் வாங்கும் விழா பூராட நட்சத்திரத்திற்குரிய மகோதர வேதாளத்திற்கு பின்புறம் கொண்டாடப்படுகிறது
செய்யூர் கந்தசுவாமி பெருமானை பாடி
அந்தக கவி வீரராக முதலியார் இயற்றிய செய்யூர் முருகன் பிள்ளைத்தமிழ் சேயூர் கலம்பகம் சேரை கவிராஜப் பிள்ளையின் செய்யூர் முருகன் உலா ஸ்ரீ முருகதாஸ் சுவாமிகளின் செய்யூர் முருகன் பதிகக் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் நெஞ்சுவிடு தூது ஆகிய நூல்கள் தோன்றியுள்ளன
மிக முக்கியமாக இத்தலம் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற ஒரு தளமாகும்
இத்தல முருகனை புகழ்ந்து அருணகிரிநாதருக்கு தீபாராதனை மண்டபத்தில் சிலையும் அவர் பாடிய பதிகங்கள் இன் கல்வெட்டுகளும் காணப்படுகிறது
முகில் ஆம் எனும் வார் குழலார் சிலை
புருவார் கயல் வேல் விழியார் சசி
முகவார் தரள(ளா)ம் எனவே நகை புரி மாதர்
முலை மால் இணை கோபுரமாம் என
வடம் ஆடிடவே கொடி நூல் இடை
முது பாளித சேலை குலாவிய மயில் போல்வார் .
அகிசேர் அல்குலார் தொடை வாழையின்
அழகு ஆர் கழல் ஆர்தர ஏய்தரு
அழகார் கன நூபுரம் ஆடிட நடை மேவி …
அ(ன்)னமாம் என யாரையும் மால் கொள
விழியால் சுழலா விடு பாவையர்
அவர் பாயலிலே அடியேன் உடல் அழிவேனோ …
ககனார் பதியோர் முறை கோ என
இருள்கார் அசுரார் படை தூள் பட
கடல் ஏழ் கிரி நாகமும் நூறிட விடும் வேலா …
கமல ஆலய நாயகி வானவர்
தொழும் ஈசுரனார் இடம் மேவிய
கருணாகர ஞான பராபரை அருள் பாலா …
மகிழ் மாலதி நாவல் பலா கமுகு
உடன் ஆட நிலா மயில்கோகில(ம்)
மகிழ் நாடு உறை மால் வ(ள்)ளி நாயகி மணவாளா …
மதி மா முகவா அடியேன் இரு
வினை தூள்படவே அயில்ஏவிய
வளவாபுரி வாழ் மயில் வாகன பெருமாளே. …
இதுவே இத்தல திருப்புகழ் பாடலாகும்.
ஆகம விதிப்படி மிக நுணுக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் செய்யூர் கந்தசாமி கோவில் தரிசித்தால்
வாழ்கையில் நல்ல மாற்றம் ஏற்படும் என்பது உறுதி





