சிறுவாபுரி முருகன்
திருப்புகழ் ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி
அருணகிரிநாதர் பாடிய 10000 திருபுகழ் பாடல்கள்ள நம் கைக்கு கிடைத்து இருப்பவை வெறும் ..1330 திருப்புகழ் Nதாம்.
அவற்றுள் 224 ஸ்தலங்களை பாடியுள்ளார்.
திருப்புகழ் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 9 இடங்கள் இதுவரை கண்டறியப்படாமல் இருக்கின்றன.
கண்டறியப்பட்ட 215 ஸ்தலங்களில் 35 ஸ்தலங்களைச் சிறப்பாக பாடியுள்ளார்.
8 ஸ்தலங்களில் 4 திருப்புகழ் பாடி இருக்கிறார்.
6 ஸ்தலங்களுக்கு அர்ச்சனை திருப்புகழ் பாடியுள்ளார்பாடியுள்ளார.
திருப்புகழில் பாடப்படும் நாயகனாக முருகன் இல்லாமல் 6 பாடல்களில் பாடும் நாயகனாக விநாயகப் பெருமானை பாடியுள்ளார்.
மேற்கண்ட திருப்புகழ் ஆய்வின்படி 6 அர்ச்சனைத் திருப்புகழில் ஒன்றாக சிறுவைக்கு சீதளவாரிஜ பாதா நமோ நம: என
ஒரு பாடலுடன் நான்கு திருப்புகழ் பாடிய 8 ஸ்தலங்களில் ஒன்றாக சிறுவாபுரியும், அமைந்து இருப்பது சிறப்பு.
அண்டர்பதி குடியேற என்ற முதல் திருப்புகழில் மகிமீற, மகிழ்கூர, மகிழ்வாக, மகிகூற, இன்பமுற என
ஐந்து இடங்களில் மகிழ்ச்சிப் பெருக்கு கூறப்பட்டது போல் வேறு எந்த திருப்புகழிலும் சிறப்பாக ஐந்து முறை சொல்லப்படவில்லை என்பது இன்னும் ஒரு சிறப்பு.
இந்த திருப்புகழின் ஈற்றடியில் கடைசியில் சொற்கள் ஒரு வாக்கியமாக பொருள்பட அமைந்து இருப்பதும் ஓர் அரிய சிறப்பாகும்.
அவை அருளாலே, மகிழ்வாக, எதிர்காண, வரவேணும், உயர்தோளா, வடிவேலா, முருகேசா, பெருமாளே! என ஒரு வாக்கியமாக அமைவதுபோல் வேறு எந்த ஒரு திருப்புகழிலும் அமையவில்லை.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஸ்தலத்துக்கு வருபவர் கடுமையான விரதமாக பசி பட்டினி இருந்து நோன்பு நோற்று இறைவனை அடைய வேண்டியதில்லை.
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான தண் சிறுவைதனில் மேவு பெருமாளே! என்று இவரை எப்போதும் நினைத்தாலே போதும் அடியவர்க்கு எளிமையாக முருகன் எழுந்தருளி வருவார் எனக்கூறுகிறார் அருணகிரிநாதர்.
இரண்டாவது திருப்புகழ் அர்ச்சனை திருப்புகழாக இருப்பது சிறப்பு.
பழனிக்கு நாதவிந்து கலாதி நமோ நம என்றும் திருப்புகழைப்போல் சிறுவைக்கு சீ தள வாரிஜ பாதா! நமோ நம எனும் திருப்புகழை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
அர்ச்சனை திருப்புகழ் 6-ல் சரணாகதியின் மேன்மையான முருகனின் பாத சரணத்தைக் குறித்து சிறுவைக்கு எழுதி இருப்பது சிறப்பு.
வானவர் ஊரினும் வீறாகி லீ றளகாபுரி வாழ்வினும் மேலாக திருவாழ் சிறுவாபுரி வாழ்வே சுதாரிபர் பெருமாளே எனப்பாடி
இங்கு வருபவர்கள் தேவேந்திர பட்டணத்தை காட்டிலும் வளமாக வாழ்வர் என அழுத்தம் திருத்தமாக எடுத்துச்சொல்கிறார்.
மூன்றாவது திருப்புகழில் மானிடப்பிறப்பின் துன்பம் எல்லாம் நீங்குவதற்கு வழிகூறுகிறார் அருணகிரி நாதர்.
நான்காவது திருப்புகழில்
ஜெயமதான நகர் அளகை போல வளமிகுந்த சிறுவைமேலி வரமிருந்த பெருமாளே என வெற்றியை தன்னிடம் அமைத்துக் கொண்ட சிறுவை நகரம் என்று சொல்கிறார்.
குபேரப்பட்டணம் என அழைக்கப்பட்ட அளகாபுரி போல்
எல்லா வளங்களும் அதிகமாகக் குடிகொண்டுள்ள சிறுவாபுரியில் குடிகொண்டு உள்ள
சிறுவை முருகன் வரம் அதிகம் தன்னிடம் இருப்பு உள்ளவன் என அருணகிரிநாதர் சொல்வது.
வரமிகுந்தவனை அடிக்கடி நாடி வந்து அவனிடம் இருப்புள்ள வரங்களைப் பெற்று செல்ல வாருங்கள் என அழைப்பதுபோல உள்ளது.
அருணகிரிநாதர் கூறியபடி வளங்களை அள்ளிதர முருகன் தயாராக இருக்கும் பொழுது
அதனை பெற்று கொள்ள நம்மை எப்படி நாம் தயார் செய்து கொள்வது என்றும்
ஒரு வழிபாடு கழப்பட்டுள்ளது.
இதனை பின்பற்றி தொழும் பக்தர்களின் வேண்டுதலை சிறுவை முருகன் நிறைவேற்றி தருவார் என்பது தின்னம்.
திருமணம் தடை பட்டாலோ அல்லது நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருந்தாலோ,
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை நாடினால் பலன் உண்டாகும்.
நம் பிரார்த்தனை நிறைவேற சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரம் ஏதாவது ஒரு கிழமையில்
அதாவது (ஆறு வாரமும், முதல் வாரம் வந்த கிழமையிலேயே தொடர்ந்து அடுத்த 5 வாரமும்) வரவேண்டும்.
வரும் நேரமும் ஒரே மாதிரியாக இருப்பது சிறந்தது
காலை என்றால் ஒவ்வொரு வாரமும் காலையிலே வர வேண்டும். மாலை என்றால் ஒவ்வொரு வாரமும் மாலையிலே வரவேண்டும்.
திருமணம் ஆகவேண்டிய பெண்கள் ஆறுவாரமும், வாரம் ஒரு நாள் என்று ஆறு தடவைகள் தொடர்ந்து வந்து சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட
திருமணம் விரைவில் அமையப்பெறும்.
திருமணம் ஆக வேண்டி ஆண்டவனிடம் பிரார்த்திக்க வருபவர்கள் வள்ளி மணவாள பெருமானுக்கு அர்ச்சனை செய்து வரவேண்டும்.
ஆறாவது வாரம் ஆறு அர்ச்சனைக்கு உரிய பொருட்களுடன் வந்து மரகத விநாயகர், மூலவர், வள்ளி மணவாளப் பெருமான், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மை, ஆதி மூலவர் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
வள்ளி மணவாளப் பெருமான் சன்னதியில் தரும் மாலையை திருமண மாலையாக எண்ணி அணிந்து ஆறுமுறை ஆலயத்தை சுற்றி வரவேண்டும்.
பின்னர் மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று திருமணம் நடைபெறும்வரை பாதுகாத்து வணங்கி வரவேண்டும்.
திருமணம் முடிந்ததும் தம்பதி சமேதராய் இத்தலம் வந்து ஆறு தெய்வ சன்னதிகளுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும்.
பழைய மாலையை கோவிலில் உள்ள தல மரத்தில் கட்ட வேண்டும்.
இவ்வாறு இந்த ஆலயத்தில் தொடங்கப்பட்ட மணவாழ்வு உலகப்பயன்கள் அனைத்தும் பெற்று மகிழ்வுடன் தொடர இவ்வாலயம் வந்து அடிக்கடி முருகனின் அருள்வேண்டி வணங்கி செல்ல எல்லாம் சுபமாய் நடக்கும்.
திருமணம் தவிர மற்ற வேண்டுதல்களான, வீடு கட்டுவது அல்லது வாங்குவது, பிள்ளைப்பேறு, செல்வம், நோய் நிவர்த்தி ஆகியவை பெற வருபவர்கள்
மேற்படி முறைப்படி ஆறு வாரம் மூலவர் சன்னிதியில் அர்ச்சனை செய்து வரவேண்டும்.
ஆறாவது வாரம் மூலவர் சன்னிதியில் இருந்து பெற்ற மாலையை அணிந்து ஆறு முறை நம் வேண்டுதலை இறைவனிடம் முறையிட்டு வெற்றி வேண்டி ஆலயத்தை வலம் வர வேண்டும்.
இத்தலத்திற்கு பிரார்த்தனை செய்து வருபவர்கள் ஆறு வாரமும் திருப்புகழ் பாடி இறைவனை வணங்க வேண்டும்.
எண்ணியது முடிக்கும் எம்பெருமானை எண்ணி நம்மனதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
முதல் ஐந்து வாரங்களுக்கு, ஒவ்வொரு முறை வரும் போது இரண்டு தேங்காய், இரண்டு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, பூமாலை ஒன்று மற்றும் இரண்டு எலுமிச்சம் பழம் கொண்டு வணங்க வேண்டும்.
ஆறாவது வாரம் ஆண்டவனை வழிபட்டு, அர்ச்சனை அல்லது அபிஷேகம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் வந்து போகும் பொழுது நம்மிடம் கொடுக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை வீட்டிலே வைத்து பூவைத்து பூஜித்து வரவேண்டும்.
முதல் வார எலுமிச்சம் பழத்தை இரண்டாவது வாரம் எலுமிச்சம் பழம் வந்தவுடன் எடுத்து கடல், கிணறு ஏதாவது ஒர் அசுத்தம் இல்லாத இடத்தில் சேர்த்துவிட்டு தற்சமயம் பெற்று வந்த பழத்தை பூஜிக்க வேண்டும்.
இவ்வாறு ஐந்து வாரம் செய்துவிட்டு ஆறாவது வாரம் நாம் பெற்று வந்தபழத்தை ஈரம்படாது பாதுகாத்து நம்முடைய பிரார்த்தனை நிறைவேறும் வரை பூஜிக்க வேண்டும்.
இந்த பிரார்த்தனை பூஜை காலங்களில் நாம் அண்டர்பதி திருப்புகழை ஓதி வணங்க வேண்டும்.
நம் பிரார்த்தனை நிறைவேறியதும் சிறுவாபுரி வந்து ஆறு அர்ச்சனைக்கு உரிய பொருட்கள் வைத்து பாலசுப்பிரமணிய சுவாமியை வணங்க வேண்டும்.
இங்கு உள்ள இரண்டு முருகப்பெருமான் சன்னதிகளில், ஆதி மூலவரிடம் நம்முடைய குறைகளையும், தடைகளையும் நீக்கக்கோரி வணங்கி வர இன்ப வாழ்வு உண்டாகும்.
இத்தலத்தில் பிரார்த்தனை செய்து வருவோர்கள் முதல் வாரத்திலேயோ அல்லது தொடர்ந்து வரும் வாரங்களிலோ பலன் பெறுவது உண்டு.
ஒருவருடைய நம்பிக்கை மிகுந்த பிரார்த்தனை, அவரின் காரியத்தை மிக விரைவில் முடித்து வைக்கிறது என்பது ஐதீகம்.
இனி சிறுவாபுரி முருகனுக்கால அ திருப்புகழ் பாடல்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
அண்டர் பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர் மன மகிழ்மீற அருளாலே
அந்தரியொடு உடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளு மகிழ்வாக
மண்டலமு முநிவோரும் எண்டிசையி லுளபேரு
மஞ்சினனும் அயனாரும் எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூறமைந்து
மயிலுடன் ஆடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா
புந்தி நிறையறி வாளவுயர் தோளா
பொங்கு கடலுடன் நாகம் விண்டு வரையிகல் சாடு பொன்பரவு
கதிர்வீசு வடிவேலா
தண் தரள மணிமார்ப செம் பொனெழில் செறிரூப,
தண்டமிழின் மிகு நேய முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில் மேவு பெருமாளே
சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சென்னைக்கு வடக்கே 34 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னை சென்ட்ரல் முதல் கும்முடிபூண்டி ரெயில் மார்க்கத்தில் 39 கிலோ மீட்டர் தூரத்திலும், கவரப்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது சிறுவாபுரி.
கிராமத்தின் நுழைவாயிலில் சப்தமாதர் கோவில் நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோவில், மேற்கே பெருமாள் கோவில், பெருமாள் கோவிலுக்குப் பின்னால் விஷ்ணு, துர்க்கை கோவில்கள், வடக்கே வாயு மூலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் கம்பீரமாக நம் கண்ணுக்கு காட்சி தருகிறது. இவ்வூரில் ராமர் கோவில், விநாயகர் கோவில், ஜைனர் 22-வது தீர்த்தங்கரர் பள்ளி என கோவில் பல இருப்பதை, அருணகிரிநாதர், ஆடகம்பயில் கோபுரம் மாமதில் ஆலயம் பலவீதியுமே நிறைவான தென்சிறுவாபுரி எனத் திருப்புகழில் பாடியுள்ளார்.
சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணி. இந்து நிலை ராஜகோபுரத்தோடு நம்மை வரவேற்கிறது உள் நுழைதாள் உயரமான கொடிமரம், கொடிமரத்துக்கு முன்னால் அழகே திருஉருவம் கொண்டதுபோல் மரகதப் பச்சைமயில் கொலுவாக வீற்று இருக்கிறது.
இதுபோல் சிறந்த வடிவமைப்புள்ள மரகத மயில் உலகிலும் வேறு எங்கும் இல்லை என உறுதியாக கூறலாம்.
மேலும் இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை.
முருகன் சிலை கூட முன்பு மரகதபச்சை கல்லில் இருந்து காலப்போக்கில் பின் நிறுவப்பட்டபோது கருங்கல்லில் செய்யப்பட்டிருக்கலாம். இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரதகப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக்கோவிலிலும் இல்லை.
சிறுவாபுரி முருகனை நினைத்தாலே போதும் நம் ஆசைகள் எல்லாம் நிறைவேறும் என்பது இங்கு வந்து குவியும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைஏ சாட்சி
சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் தோரண வாயில் (நுழைவாயில்) நம்மை வரவேற்கிறது. இந்தத் தோரண வாயிலில் இருந்து மேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் சின்னம்பேடும் எனத் தற்போது அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியப் பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.
நுழைவாயிலைக் கடந்து ஆலயம் நோக்கி செல்கையில், சாலையின் இரு பக்கமும் பசுமையான நிலங்கள், வீசியாடும் நெற்கதிர்கள், குலுங்கிக்குலை தள்ளி ஆடும் வாழைத் தோப்புகள்,கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகத கல்லில் சூரியனார் ஒளி வீசிக்கொண்டு இருக்க, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட கம்பீரமான ராஜகணபதி மரகத கல்லில் பச்சைப் பசேல் என மன்னிட மரகத விநாயகர் என்ற நாம கரணத்துடன் வேண்டுவதை, அளிக்க அழகுக் கோலத்துடன் வீற்று இருக்கிறார். பின் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரர், ஆதிமூலவர் (முன் இருந்த பாலசுப்பிரமணிய சுவாமியின் விக்ரகம்), நாகர், பைரவர், நவக்கிரகம் என பரிவார தேவதைகள் புடைசூழ சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.
இங்கு நவக்கிரகம் ஒன்பதும் வாகனத்துடன் இருப்பது சிறப்பாகும். சந்ததமும், அடியார் சிந்தையில் குடியிருக்கும் முருகப்பெருமான், நம் சிந்தையைக் கவர்கிறார்.
முக மண்டபத்தில் அருணகிரிநாதர் சிறுவை பாலசுப்பிரமணிய பெருமானை கண்ட பெருமிதத்துடன் திருப்புகழ் பாடி நிற்கும் கோல வடிவைக் காணலாம்.
முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் மரகதப்பச்சையில் கரும்பச்சை வைரம் போல் பிரகார ஜோதியாகக் காட்சி அளிக்கிறார். இத்துணை பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை.
அருணகிரிநாதர் திருவண்ணாமலைக்கு மயிலுமாடி நீயுமாடி வரவேணும் என்று பாடியதற்கு இணையாக, இங்கு மைந்துமயில் உடன் ஆடிவர வேணும் என பாடி உள்ளதால் அண்ணாமலையாரும், உண்ணமுலை அம்மையும் இங்கு எழுந்தருளி இருக்கிறார்கள். அருணாசலேசுவரர், அபீதகுஜாம்பிகை (உண்ணாமுலை) இருவருக்கும் நடுவே அற்புதத் தோற்றமாய், அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் கூடிய வள்ளிநங்கை தம் மணவாளப் பெருமான் முருகனை தைத்தலம் பற்றும் திருமண காட்சியாய் எழுந்தருளி இருக்கிறார்.
கைத்தலம் பற்றுகின்ற பொழுது இயற்கையாய் பெண்ணுக்கு ஏற்படும் கூச்சம், நாணம், பயிர்ப்பு காரணமாக வள்ளி ஒய்யாரமாக லேசாக முன் சாய்ந்து, ஒரு கண்மூடிய நிலையில் நிற்கின்ற கோலத்தைக் காணக்கண் கோடி வேண்டும். பின்புறத்திலிருந்து நோக்கும் பொழுது வள்ளி கள்ளத்தனமாக அரைக்கண் பார்வையாக முருகனை நோக்குவது போல் சிற்பி சிலையை வடித்திருக்கிறார். மிக நேர்த்தியான வேலைப்பாடு. இதுபோன்ற சிலை வடிவம் வேறு எங்கும் இல்லை. ஓவியமாக வள்ளி மலையில் இருக்கும் கோலத்தை, சிலை வடிவமாக இங்கு அமைத்து இருப்பது மிகச்சிறப்பாக வள்ளி மணவாளப்பெருமானின் அழகைக்காண கண்கோடி வேண்டும்.
இந்த ஆலய இறைவனுக்கு, ஒரு மண்டலம் (48 நாட்கள்), நெல்லி முள்ளி பொடி கொண்டு அபிஷேகம் செய்து வந்தால், தீராத நோயில் இருந்தும் விடுபடலாம். 48 நாட்களும் ஆலயத்திற்கு வரவேண்டும் என்பது இல்லை. கோவில் அர்ச்சகரிடம், அந்த பொடியைக் கொடுத்து அபிஷேகத்தில் சேர்க்க செய்தால் மட்டுமே போதுமானது.
இந்த ஆலய இறைவனான பாலசுப்பிரமணியரை மனமுருகி வேண்டி வந்தால், சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு அமையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தல மூலவரை செவ்வாய்க்கிழமை தோறும், தொடர்ந்து ஆறு வாரங்கள் வழிபாடு செய்து, வள்ளி மணவாளப் பெருமானை வணங்கி வந்தால் திருமணத் தடை நீங்கும். செல்வ வளம் பெருகும், நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். இந்த தலத்தில் உள்ள மூலவரை ஆறு முறை வலம் வரவேண்டும் என்கிறார்கள். அப்படி வலம் வந்தால், மாற்றங்கள் நிறைந்த இன்பம் வாழ்வு உண்டாகும்.



